்:
அமரர் கல்கி எழுதிய இரண்டு நாவல்களை, ஒலிநூலாக்கி வழங்கி என்போன்றவர்களை ஒரு புதிய உலகிர்க்கே அழைத்துச் சென்று விட்டார், பெறும் பாராட்டிற்கும், போற்றுதலுக்கும் உரிய திரு பாம்பே கண்ணன். ஏற்கனவே அவர் தயாரித்த சிவகாமியின் சபதம் கல்கியின் ரசிகர்களிடையே அமோக வரவேற்பினைப் பெற்றிருக்கலாம். அதன் அடுத்த படிநிலையாக பொன்னியின் செல்வன் வந்திருக்கின்றது.
ஏறக்குறைய மூன்றரை ஆண்டுகாலம் பத்திரிகையில் வெளியான அந்த நாவலினை, வந்தியத்தேவனுடய வாழ்க்கையின் எட்டு மாத நிகழ்வுகளைப் பேசுகின்ற அந்த நாவலினை அவர் ஒன்றரை ஆண்டுகாலம் முயன்று ஒலிப்புத்தகமாக மாற்றிஇருக்கின்றார்.
அந்த ஒலிப்புத்தகத்தினை படித்து முடிக்க, எனக்கு ஆறு மாத காலம் பிடித்தது. அந்த ஆறு மாதகாலமும் நான், நெடிய தூரம் பயணிப்பதனைப் போன்ற உணர்வினைப் பெற்றேன். என்னோடு பயணித்தவர்கள் யார்யார் என்று தெரியுமா? திரு பாம்பே கண்ணனும், அவரது பரிவாரங்களும் தான். நான் போகும் இடங்களிலெல்லாம் என்னோடுகூட, திரு பாம்பே கண்ணனும், அவருடைய பரிவாரங்களான, வந்தியத்தேவன், அருள்மொழிவர்மர், ஆழ்வார்க்கடியான், பூங்குழலி, இவர்கள்; இல்லை இல்லை! இவர்களுடய ஒலித்தோற்றத்தினை, தம்முள்ளே புணைந்து கொண்டவர்கள்தான்.
காட்சியினால் மட்டும் தான் அழகினைச் சொல்ல முடியும், அல்லது, காட்சி ஊடகத்தினால் மட்டும் தான் கதைக்கான ஏதுக்களை விளக்கிச் சொல்ல முடியும் என்று காலம் காலமாக நம்பிக் கொண்டிருப்பவர்களை வாய்மூடச் செய்து, ஒரு நாளும் இல்லை! என்று கூறி, ஒலி ஊடகத்தின் வாயிலாகவே, மேற்கூறிய அனைத்தையும் சாத்தியப் படுத்தி இருக்கின்றார்கள் நமது பொன்னியின் செல்வன் கலைஞர்கள்.
குதிரை மேல் ஏறிச் செல்லும் வந்தியத் தேவனை நம்மால் பின் தொடர முடிகின்றது. வீர நாராயண ஏரிக் கரையில் நின்று, அங்கு நடக்கும் ஆடித் திருநாள் விழா நிகழ்வுகளைக் காட்சி ஊடகம் ஏதும் இன்றியே, நம்மால் காணமுடிகின்றது.
கொள்ளிடக்கரையில் படகில் ஏறி பயணிக்கும் உணர்வினை நாமும் பெருகின்றோம்.
பூங்குழலி வந்தியத்தேவனுக்கு கொள்ளிவாய்ப் பிசாசுகளைத் தமது காதலர்கள் என்று இனம் காட்டுகிறாளே, அந்தக் காதலர்களை காட்சி ஊடகமின்றியே, நாமும் காண்கிறோம்.
சுழிக் காற்றில் சிக்கிக் கொண்ட வந்தியத் தேவனோடு நாமும் சிக்கிக் கொள்கிறோம். பொன்னியின் செல்வரையும் வந்தியத் தேவனையும் காப்பாற்றும் பூங்குழலி, நம்மையும் காப்பாற்றிக் கரைசேர்க்கிறாள்.
மூர்க்க குணவானாக விளங்குகின்ற ஆதித்த கரிகாலரை நெருங்குவதற்கு நாமும் அஞ்சுகிறோம்.
எங்கே மாயக்காரி நந்தினியின் மோகவலையில் நாமும் சிக்கிக் கொள்வோமோ என்று பயப்படுகிறோம். நந்தினியின் வெகுண்ட பார்வை நம்மையும், கதிகலங்கடிக்கிறது.
24 போர்க்களங்களில், 64 போர் காயங்களைப் பெற்ற பழுவேட்டரையரின் வீரத்தைக் கண்டு மெச்சுகிறோம். அதே பழுவேட்டரையர் நந்தினியிடம் சிக்கிக் கொண்டு தனது கடமைகளிலிருந்து பிறழும்போது, பரிதாபப் படுகிறோம்.
ஒற்று வேலை செய்யும் ஆழ்வார்க்கடியானின் கெட்டிக்காரத்தனத்தினை கண்டு மெய் சிலிர்த்துப் போகிறோம். பள்ளிப் படைக்கு அருகில் அவர் படும் பாட்டினைக் கண்டு நாமும் அச்சம் கொள்கிறோம்.
அமைச்சர் அனிருத்த பிரம்மராயரின் மதி நுட்பம் கண்டு வியந்து போகிறோம்.
பாண்டியர்களின் ஆபத்துதவிகளான, இரவிதாசன், சோமன்சாம்பவன், இடும்பன்காரி, தேவராளன் என்னும் பரமேச்சுவரன் முதலானோர்களின் சதிச் செயல்களைக் கண்டு நாமும் அவர்களின் மீது கோபம் கொள்கிறோம்.
மகளாக, சகோதரியாக, வானதியின் அன்புத் தோழியாக, அமைச்சரே கண்டு வியந்து போகும் மதியூகியாக, வந்தியத்தேவனின் உள்ளம் கவர்ந்த தேவதையாக -- இப்படி பலகோணங்களைத் தன்னகத்தே கொண்டுள்ள குந்தவை பிராட்டியின் நற் செயல்கள் யாவும் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றது.
நண்பனை
துரோகி என்று தவராகப் புரிந்துகொள்ளும் கந்தன்மாறனைக் கண்டு முதலில் நமக்குக் கோபம் வருகின்றது. அவனே, பிந்நாளில் திருந்தி, வந்தியத் தேவனிடம் மன்னிப்புக் கேட்கும்போது, அவன் மீது நமக்கு கருணை தோன்றுகிறது.
"இனியபுனல் அருவிதவழ்
இன்பமலைச் சாரலிலே
கனிகுலவும் மரநிழலில்
கரம்பிடித்து உகந்ததெல்லாம்
கனவுதானோடி-சகியே
நினைவுதானோடி!”
புன்னைமரச் சோலையிலே
பொன்னொளிரும் மாலையிலே
என்னைவரச் சொல்லி அவர்
கன்னல் மொழி பகர்ந்ததெல்லாம்
சொப்பனந்தானோடி - அந்த
அற்புதம் பொய்யோடி!
கட்டுக்காவல் தான் கடந்து
கள்ளரைப்போல் மெள்ளவந்து
மட்டில்லாத காதலுடன்
கட்டி முத்தம் ஈந்ததெல்லாம்
நிகழ்ந்ததுண்டோடி - நாங்கள்
மகிழ்ந்ததுண்டோடி!"
என்று, மணிமேகலை, நீராழி மண்டபத்தில் வந்தியத்தேவன், ஆதித்த கரிகாலர், நந்தினி ஆகியோருடன் மகிழ்ச்சியான தருணத்தில் பாடும்போது நாமும் உள்ளத்தில் உவகை கொள்கிறோம். அதே மணிமேகலை இறுதி கட்டத்தில், சோகம் ததும்ப யாழிசைத்துப் பாடியபோதும், இறுதியாக அவள் வந்தியத்தேவன் மடியில் படுத்துக்கொண்டு, உயிர் துறக்கும்போதும், மணிமேகலையை எண்ணி வந்தியத்தேவன் கலங்கும்போதும், உண்மையாகவே நமது கண்களில் இருந்தும், தாரை தாரையாகக் கண்ணீர் பெருகுகிறது!.
இப்படி, பல கதை மாந்தர்களைப் பற்றிச் சொல்லிக்கொண்டே போகலாம். சொல்லப்பட்ட அத்தனை உணர்வுகளும் ஒலிக்குறிப்பின் ஊடாகவே நமக்குப் புலனாகின்றன. என்பதை மீண்டும் அழுத்தமாகச் சொல்லியே ஆகவேண்டும்.
கதைக் களத்தைப் பிரதிபலிக்கும் பின்னணி இசை
இவை மட்டும் தானா? கதை நிகழ்ச்சிகளைப் புரிந்துகொள்ளவும், இந்த ஒலிப் புத்தகம் நமக்கு துணை புரிகின்றது.
அருள்மொழிவர்மரும், வந்தியத்தேவனும் துவந்த யுத்தம் செய்யும் காட்சி மிக பிரம்மாண்டமான பின்னணி இசையுடன் ஒலிப்பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.
“இந்தக் கதைக்குப் பெயர் அளித்த அரசிளங் குமாரரை, தமிழகத்தின் சரித்திரத்திலேயே இணை யாரும் சொல்ல முடியாத வீராதி வீரரை, சோழ மன்னர் குலத்தை அழியாப்புகழ் பெற்ற அமரர் குலமாக்கினவரை, பின்னால் இராஜராஜர் என்று பெயர்பெறப்போகும் அருள்மொழிவர்மரை, இவ்விதம் சமயமில்லாத சமயத்தில் அசந்தர்ப்பமான நிலைமையில், இராஜகுல சின்னம் எதுவும் இல்லாமல் நேயர்களுக்கு அறிமுகம் செய்துவைக்கும்படி நேர்ந்துவிட்டது. இது நேயர்களுக்குச் சிறிது மனக் குறை அளிக்கக் கூடியது இயற்கைதான்! ஆயினும் என்ன செய்யலாம்? நம் கதாநாயகனாகிய வந்தியத்தேவனே இப்போதுதான் அவரை முதன் முதலில் சந்தித்திருக்கிறான் என்றால், நாம் எப்படி அவரை முன்னதாகப் பார்த்திருக்க முடியும்!”
[பொன்னியின் செல்வன் பாகம் 2 அத்தியாயம் 30 துவந்த யுத்தம்]
இந்த கட்டங்களில், சரியான பின்னணி இசையினை ஒலிக்கச் செய்து, நம்மின் உடல் முழுதும் மயிர் பூச் சொரியும்படி செய்திருக்கிறார்கள்.
இன்னொரு காட்சி:
“இளவரசர் அருள்மொழிவர்மரும், ஆழ்வார்க்கடியானும், வந்தியத்தேவனும் அநுராதபுரத்தின் வீதியில் நிலா வெளிச்சத்தில் நடந்து கொண்டிருந்தார்கள். ------------ "நம்மில் யார் வயதானவர், யாருடைய பிராயம் முடியப்போகிறது என்பது யாருக்குத் தெரியும்?" இப்படி அவர்கள் பேசியபோது வீதியின் ஓரமாக ஒரு பழைய மாளிகையின் சமீபம் போய்க் கொண்டிருந்தார்கள். வீதிக்கு எதிர்ப் புறத்தில் யாரோ கையைத் தட்டும் சப்தம் கேட்டது. சப்தம் கேட்ட இடத்தில் ஓர் உருவம் நின்று கொண்டிருந்தது. "இப்படி வாருங்கள்!" என்று கூறி, இளவரசர் அந்த உருவத்தை நோக்கி வீதியைக் கடந்து போனார். மற்றவர்களும் தொடர்ந்து போனார்கள். அவர்கள் பாதி வீதியைக் கடந்து கொண்டிருந்தபோது பின்னால் பெரிய தடபுடல் சத்தம் கேட்டது; திரும்பிப் பார்த்தார்கள். அவர்கள் எந்த வீட்டின் ஓரமாகப் போய்க் கொண்டிருந்தார்களோ அதன் மேல் மாடத்தின் முகப்பு இடிந்து விழுந்து கொண்டிருந்தது! அவர்கள் அங்கே வீதியைக் கடக்கத் திரும்பியிராவிட்டால் அவர்கள் தலைமேலே விழுந்து கொன்றிருக்கும்! ஒரு கண நேர வித்தியாசத்தில் மூன்று உயிர்கள் பிழைத்தன. அதுவும் எப்பேர்ப்பட்ட உயிர்கள்! 'நம்மில் யாருக்குப் பிராயம் முடியப் போகிறது என்று யாருக்குத் தெரியும்?' என்று பொன்னியின் செல்வர் கூறியது எவ்வளவு உண்மையான வார்த்தை?' இப்படி எண்ணி வந்தியத்தேவன் நடு வீதியில் நின்று பார்த்துக்கொண்டிருக்க, இருவரும் அப்பால் சென்றார்கள்.”
[பொன்னியின் செல்வன் பாகம் 2 அத்தியாயம் 35 இலங்கைச் சிங்காதனம்]
இந்த காட்சியினை, ஒலிப் புத்தகத்தின் வழியாகக் கேட்கும் பொழுது, அந்த மாளிகை இடிந்து விழுவதனை நமது அகக் கண்கள் நன்றாகக் காண்கின்றன. நான் இந்தக் காட்சியினைக் கேட்டுக்கொண்டிருந்த போது என்னையும் அறியாமல், “அம்மா!” என்று உரத்தக் குரலில் சத்தமிட்டேன்.
அமரர் கல்கி, தனது புதினத்தின் மூலம் வாசகர்களின் இதையத்தில் எத்தகைய உணர்வுகளை தோற்றுவிக்க நினைத்தாரோ? அவ்வளவு உணர்வுகளையும் கிட்டத்தட்ட இந்த ஒலிப் புத்தகம் நிறைவு செய்திருக்கின்றது.
பாத்திரம் புனைந்த நற்கலைஞர்கள்:
புத்தகத்தைப் பற்றி மட்டும் பேசிக்கொண்டிருக்கிறோமே, இவ்வளவு சிறப்பாக இந்தப் புத்தகம் பேசப்படுவதர்க்கு காரணம், இதில் பங்கேற்ற பாத்திரங்களான கலைஞர்களல்லவா? அவர்களின் சிறப்புக்களை எடுத்துச் சொல்லாமல் இருக்க முடியுமா? கல்கி இக்கதையில் முதலில் நமக்கு அறிமுகம் செய்வது வந்தியத்தேவனைத் தானே! நாமும் அங்கிருந்து தொடர்ந்தால்தானே ஆற்றொழுக்காக இருக்கும்.
வந்தியத்தேவன் பாத்திரத்தைத் தாங்கி வலம் வரும், திரு இளங்கோ அவர்கள் மிக நேர்த்தியாக நடித்திருக்கின்றார். கதையின் ஆரம்பத்தில் இவரது குரல், அந்த பாத்திரத்துக்கு பொருந்துமா? என்ற கேள்வி நம் மனத்தில் எழுவதென்னவோ, உண்மைதான். ஒரு மாபெரும் வீரனாக, சில இடங்களில் கோமாளியாக, தண்ணீரைக்கண்டு அஞ்சும் பயங்கொள்ளியாக! இப்படி பல பரிமாணங்களில்; அமரர் கல்கி அவர்கள் வந்தியத்தேவன் பாத்திரத்தைப் படைத்திருக்கிறார் என்பதை உணரும்போது, இந்த பாத்திரப்படைப்பிர்க்கு, திரு இளங்கோ முற்றிலுமாகப் பொருந்தி இருக்கிறார் என்பதை நாமும் நன்கு புரிந்துகொள்வோம்.
ஆதித்தகரிகாலராக வரும் திரு வெற்றி விக்னேஷ் அவர்களை,ஏற்கனவே, சிவகாமியின் சபதம் ஒலிப்புத்தகத்தில், நரசிம்மவர்மராக நாம் பார்த்திருக்கிறோம்.
அந்த பாதிப்பு, பொன்னியின் செல்வனைக் கேட்கும்பொழுது நம் மனக்கண்முன் நிழலாடினாலும் கூட, இவரைத் தவிர வேறு யாரும் ஆதித்த கரிகாலராக நடித்தாலும் நம் மனம் ஏற்றுக் கொள்ளாது.
அருள்மொழிவர்மராக வலம் வரும், திரு அநந்தன் அவர்களின் குரல், இளவரசரின் வாலிப வயதுக்கு ஏற்றதாக அமைந்திருக்கிறது.
சிவகாமியின் சபதத்தில் ஆயனசிற்பியாக நடித்த திரு கல்யாண்ஜி, மகேந்திர வர்மப்பல்லவராக வலம்வரும் திரு s.k ஜெயக்குமார், புலிகேசியாக பாத்திரமேற்ற திரு வேலுச்சாமி, பரஞ்சோதியாக உலா வந்த திரு ஜெய் இவர்கள் நால்வரும் பொன்னியின் செல்வனில் முறையே அனிருத்த பிரம்ம ராயர், சுந்தரசோழர், பெரிய பழுவேட்டரையர், கந்தன்மாறன் ஆகிய பாத்திரங்களைத் தாங்கி நடித்துள்ளனர். இந்த ஒலிப்புத்தகத்தில் இவர்கள் நால்வரும் தங்களது நடிப்பில், புதிய பரிமாணங்களை வெளிப்படுத்தியுள்ளனர்.
பாரிய தோற்றம் கொண்டவராக கல்கியால் படைக்கப்பட்ட பாத்திரம்தான், ஆழ்வார்க்கடியான். அந்த பாரிய தோற்றத்தினை தமது குரல்மூலமாகவே நமது மனக்கண்முன் நிறுத்துகின்றார்; அந்தப் பாத்திரத்தைத் தாங்கி நடித்த திரு ரமேஷ் அவர்கள். உண்மையைச் சொன்னால், அவருடைய பெயரேகூட நமது நினைவில் இருக்குமா? என்று தெரியவில்லை. வந்தியத்தேவனுக்கு பயணத்தில் துணையாக வரும்போதும் சரி, பாண்டிய ஆபத்துதவிகளின் கூட்டு சதிகளை ஒற்றரியும்போதும் சரி, தமது குருவுடன் சேர்ந்து அளவளாவும்போதும் சரி! சூழலுக்கேற்ற நடிப்புகளை வெளிப்படுத்தி இருக்கின்றார் நம்ம ஆழ்வார்க்கடியான் சார்.
அட, யாருங்க அது? கடலில் படகு தள்ளிக்கொண்டிருக்கிறது? ஓ! நம்ம சமுத்திரக்குமாரியா? இவர்களை மறக்கமுடியுமா? பூங்குழலியாகப் பாத்திரமேற்ற, ஸ்ரீவித்யா அவர்கள். அப்படியே பூங்குழலியை நம் அகக் கண்முன் கொண்டுவந்திருக்கிறார்.
பொன்னியின் செல்வனைப் புத்தகமாகப் படித்தபோது, நான் அதிகம் காதலித்த பெண் பூங்குழலி தான். அந்தப் பாத்திரத்திற்கு, முழுமையாக உயிர் கொடுத்திருக்கிறார் ஸ்ரீவித்தியா அவர்கள்.
கல்கியின் கற்பனயில் உதித்த பூங்குழலி இப்படித்தான் இருப்பாளோ என்று எண்ணும் அளவிற்கு இவருடய நடிப்பு அமைந்திருந்தது.
அழகான தோற்றம், தன்னைப் பார்க்கும் ஆடவர்களை தன் மோக வலையில் விழவைக்கும் ஆற்றல், தன்னை வஞ்சித்தவர்களைப் பழிவாங்கும் குணம். இப்படி பலவகைப்பட்ட கோணங்களில் வலம்வரும் நந்தினிக்கு, திருமதி ஃபார்த்திமா பாபு அவர்கள், மிகவும் பொருத்தமாக அமைந்திருக்கிறார். பழுவேட்டரையரிடம் பேசும்போது சாந்தமாகவும், மந்திரவாதியுடன் பேசும்போது ஆவேசத்துடனும் பேசும் நந்தினி, வந்தியத்தேவன், கந்தமாரன், பார்த்திபேந்திரன் இவர்களுடன் பேசும்போது, மயக்கும் மொழியைப் பயன் படுத்துவாள். இந்த பரிமாணத்தை சரியாக உள்வாங்கிக்கொண்டு நடித்திருக்கிறார் திருமதி ஃபார்த்திமா பாபு அவர்கள். காட்சி ஊடகத்தில் நடித்துப் பழக்கப்பட்டவராக இருந்தாலும், ஒலிக்குறிப்பின் வாயிலாகவும் தமது நடிப்பாற்றலை வெளிப்படுத்தி இருக்கும் விதம் பாராட்டிற்குரியது.
நான் மேலே குறிப்பிட்டதுபோல், மகளாக, சகோதரியாக, வானதியின் அன்புத் தோழியாக, அமைச்சரே கண்டு வியந்து போகும் மதியூகியாக, வந்தியத்தேவனின் உள்ளம் கவர்ந்த தேவதையாக. இப்படி பலகோணங்களைத் தன்னகத்தே கொண்டுள்ள, குந்தவை பாத்திரத்தினை ஏற்று நடித்துள்ள கீர்த்திக்குறியவர், கீர்த்தி அம்மையார். அவரது குரலினை சாதனை உள்ளிட்ட பல திரைப்படங்களில் கேட்டிருக்கிறோம். இயல்பாகவே அவர் ஒரு பின்னணிக் குரல் கலைஞர் என்பதால், அவருக்கு இதெல்லாம் சர்வ சாதாரணம் தான். வானதியைப் பார்த்து, அடி, கள்ளி! என்று கூறும்போதெல்லாம், நம் உள்ளமெங்கும் ஒரே தேன் மழைதான்.
பயங்கொள்ளியாக படைக்கப்பட்ட வானதிக்கு, சரியான குரல் தேர்வு, வித்தியா சக்தி. யானைப் பாகனை அழைக்கும் விதம் அருமை! அவருக்கு நம் பாராட்டுகள்.
செம்பியன்மாதேவியாக நடித்த கீதா, வானமாதேவியாக வலம் வந்த பரிமளா ராஜகுமாரன், மணிமேகலையாக பாத்திரமேற்ற மித்ரா, ஆகியோரின் பங்களிப்பினை நாம் கண்டிப்பாக பாராட்டியே ஆகவேண்டும்.
பாண்டிய ஆபத்துதவிகளான இரவிதாசன், சோமன்சாம்பவன், இடும்பன் காரி, தேவராளன் ஆகிய பாத்திரங்களைத் தாங்கி நடித்த, நேத்தாஜி, வில்ஸன்ட், k.b குமார், இரவிஷங்கர் ஆகியோர், கதை அமைப்போடு ஒன்றி நடித்துள்ளனர். இந்த இணை, வில்லத்தனத்திர்க்கு சரியாகப் பொருந்தி இருக்கிறது.
பார்த்திபேந்திரப்பல்லவராக குரல்கொடுத்த t.m.c கிருஷ்ணா, மலையமான் பாத்திரம் தாங்கிய போத்திலிங்கம், பூதி விக்ரமகேசரியாக வலம்வந்த சபாபதி, சின்னப் பழுவேட்டரையராக தஞ்சை கோட்டையைக் காவல் புரிந்த, ராஜேஷ்கண்ணா, சம்புவரையராக நடித்த பூங்குன்றன், சேந்தன் அமுதனாக நடித்த முத்துக்குமார், மதுராந்தகனாக நடித்த சத்தீஷ், விஜயாலைய சோழராக நடித்த நம்மால் பெயர் தெரிந்துகொள்ள இயலாப் பெரியவர். இவர்கள் அனைவரும் இந்த ஒலிப்புத்தகத்தில் தங்களுடைய நடிப்புத்திறத்தைத் திறம்பட வெளிப்படுத்தி இருக்கின்றார்கள்.
இன்னும் பலரை நாம் இங்கு குறிப்பிடாமல் விட்டிருக்கலாம், அதர்க்குக் காரணம், எமது மறதியே தவிர, வேரொன்றுமில்லை.
பாடலும் இசையும்:
இந்த ஒலிப்புத்தகத்தில் பாடல்களைப் பாடியவர்கள் பாடிய பாடல்கள் அனைத்தும் அருமை! குறிப்பாக; ‘அலைக்கடல்தான் ஓய்ந்திருக்க’, ‘இனியபுனல் அருவிதவழ்’ என்ற இரு பாடலையும் மிகவும் அருமையாகப் பாடி இருக்கிறார்கள் அந்தப் பாடல்களைப் பாடிய கலைஞர்கள்.
நன்கு வடிவமைக்கப்பட்ட பின்னணி இசை நம் நெஞ்சை அள்ளுகின்றது. குறிப்பாக, நந்தினி இடம் பெரும் காட்சிகளில் ஒலிக்கும் ஒரு திகிலூட்டும் இசை, இரவிதாசன் எழுப்பும் ஆந்தையின் குரல், பூங்குழலி வருகின்றபோது இடம்பெரும் ஒரு பின்னணி இசை, மந்தாகிணிதேவி எழுப்பும் வினோதக் குரலிசை. ஆகியவை சிறப்பித்துச் சொல்லத்தக்கன.
பொதுவாக, ஒலிப்புத்தகம் என்றால் ஒருவர் படித்து ஒலிப்பதிவு செய்து வழங்குவதுதான் வழக்கம். அப்படி இல்லாமல், ஒவ்வொரு கதாப்பாத்திரத்திர்க்கும் ஒவ்வொருவரைக்கொண்டு நடிக்கச்செய்து, உரிய இடங்களில் பின்னணி இசையினை வடிவமைத்து, இடம், காலம், களம் ஆகியவற்றை கதைப்போக்கி ஊடாகவே நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்தி இருக்கிறது இந்தப்புத்தகம்.
இந்தப் புத்தக உருவாக்கத்திர்க்கு பொருள் செலவிட்ட,
திரு c.k வெங்கட்ராமன், திறம்பட இப்புத்தகத்தினை வடிவமைத்த திரு பாம்பே கண்ணன் ஆகியோருக்கும் நமது நெஞ்சார்ந்த பாராட்டுகளும், நன்றிகளும். திரு பாம்பே கண்ணன் அவர்களை “ஒலி தமிழ் வேந்தன்” என்று அழைக்கத் தோன்றுகின்றது.
இறுதியாக:
மேற்கூறிய கருத்துகளின் வழியாக இப்புத்தகம் எவ்வளவு உழைப்பினை வாங்கி இருக்கிறது என்று நிச்சயமாக நாம் தெரிந்துகொண்டிருப்போமல்லவா? இனியாவது இதர்க்குரிய பொருளைச் செலவழித்து, நாம் இந்தப் புத்தகத்தினை படிக்க முயலலாமே! ஒரே ஒரு 600 ரூபாய் செலவழித்தால் போதும்! பொன்னியின் செல்வன் என்ற ஒலிதமிழ்ச் சுரங்கம் இதோ, உங்களைத் தேடிவரும். ஒரு 78 மணி நேரம் உங்கள் வாழ்வில் பொன்னான நேரமாக மாறும்.
நல்லப் புத்தகங்களை பொருட் செலவிட்டு படிப்போம், நல்லுழைப்பிற்கு உரிய நன்மதிப்பினை அளிப்போம்.
மிக்க நன்றி திவாகர் அவர்களே

இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்.!
ReplyDeleteஒலிப்புத்தக அறிமுகத்துக்கு நன்றிகள்.