Thursday, February 26, 2015

பிரபல எழுத்தாளர் திருமதி உஷா சுப்ரமணியன் பல ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு அற்புதமான தொடரை நமது சென்னை தூர்தர்ஷனில் வழங்கினார்
தமிழக இசை மகான்கள் என்ற தலைப்பில் தமிழகத்தில் கி பிமூன் றாம் நூற்றாண்டு முதல் வாழ்ந்த அத்தனை இசை மேதைகளை பற்றிய குறிப்புகள் அடங்கிய இந்த 13 வார தொடர் வெளிவந்தபோது கர்நாடக இசை பிரியர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தபதிமுன்று வார தொடரை ஒரு 3 மணிநேர DVD ஆக தயாரித்து வெளியிட்டபோது இசை ரசிகர்கள் மட்டுமல்ல மற்றவர்களிடமும் இது பெரும் பாராட்டுகளைப் பெற்றது இதில் குன்னக்குடி வைத்யநாதன் மகராஜபுரம் சந்தானம் TMS , PBS வாணிஜெயராம் சுஜாதா விஜயராகவன் பிரமிளா குருமூர்த்தி வேதவல்லி மற்றும் பலர் கர்நாடக சங்கீதத்தை பற்றியும் அந்தந்த காலகட்டங்களில் வாழ்த்த இசை மகான்கள் பற்றியும் அற்புதமாக பேசியுள்ளார்கள் எலோரும் அவசியம் பார்க்க வேண்டிய ஒன்று
அதன் TRAILER உங்களுக்காக

https://www.youtube.com/watch?v=D9m4m1M-DqA&feature=youtu.be


Tuesday, February 24, 2015


Teleplays direct to home DVD/VCD  


2005 ஆண்டிலேயே நான் தொலைக்காட்சி படங்கள் தயாரிக்க ஆரம்பித்துவிட்டேன்
இவை யாவுமே எந்த சேனலிலும் வெளிவராத DVD/VCD க்கென்றே பிரத்யேகமாக தயாரிக்க ப்பட்டவை
இவற்றில் சண்டை காட்சிகள் கிடையாது பாடல்கள் கிடையாது மற்றபடி ஒரு comedy அல்லது SOCIAL படங்களுக்கான எல்லா அம்சங்களும இதில் உண்டு
பல வெளிநாடுகளில் இது போன்ற பல படங்களை சினிமா அரங்கத்திற்கும் இல்லாமல் சானல்களுக்கும் இல்லாமல் நேரடியாக வீடுகளில் பார்ப்பதற்கு என்றே தயாரிக்கின்றார்கள்

இதைத்தான் நான் சுவிகரித்துக்கொண்டு நான்கு படங்களை தயாரித்தேன்
இந்த CONCEPT பற்றி பல பத்திரிகைகள் பாராட்டி எழுதின
ஆகையால் படங்கள் நேரடியாக உங்கள் வீட்டிற்கு என்ற concept புதிது கிடையாது
என்ன நான் மண் பாத்திரம் எடுத்து சென்று காசு கேட்டேன் இப்போது மற்றவர்கள் தங்க தாம்பாளம் ஏந்தி கேட்கிறார்கள் இரண்டும் ஒன்றுதான்
இரு வீடு ஒரு வாசல்
மாமா விஜயம்
அப்புசாமியும் ஆப்பிரிக்க அழகியும்
ஆட்சி மாற்றம்
போன்றவை நான் தயாரித்த படங்கள்
இவை பற்றிய பத்திரிக்கை குறிப்புகளில் சில இங்கு இணைக்கப் பட்டுள்ளது









Tuesday, February 17, 2015


ஒரு தமிழனின் கனவு 




பொன்னியின் செல்வன் பார்த்திபன் கனவு ஒலிப்புத்தகம் வெளியீட்டு விழாக்கள் முடிந்து கடல்புறா ஒலிப்பதிவிற்காக வேளசேரியிளிருந்து வடபழனி நோக்கி காரில் போய்கொண்டிருந்தேன்
காலை 9 3௦ மணிக்கு கிளம்பி பத்து மணிக்குள் வடபழனி studio விற்கு போய்விடவேண்டும்
பீனிக்ஸ் மால் தாண்டுவதற்குள் 1௦ ஆகிவிட்டது
எனக்கோ அவசரம்
அன்று எடுக்க வேண்டிய பகுதிகள் பற்றி யோசித்துக்கொண்டே போய்கொண்டிருந்தேன்
காரில் இருந்த ரேடியோவில் சோதனை மேல் சோதனை என்று நேரம் தெரியாமல் TMS பாடிக்கொண்டிருந்தார்
கத்திபாரா தாண்டும் பொது ரேடியோவில் செய்தி வாசிப்பாளர் ஜாபர்கான்பெட்டை அருகே பெரும் போக்குவரத்து நெரிசல ஏற்பட்டுவிட்டதாகவும் அறிவித்து இன்னும் என்னை எரிச்சல் மூட்டி என் BP TABLET அதிகரிக்க வழிசெய்தார்
பொறுமையாக அறிவிப்பினை கேட்டபோது இந்தமுறை வழக்கத்திற்கு மாறாக மாணவர்களுக்கு பதிலாக பெற்றோர் மறியல் செய்துவருகிர்ரர்கள் என்றும் அவர்கள் அரசாங்கத்திற்கு மகஜர் மேல் மகஜராக அளித்தும் எந்த பயனும் ஏற்படாததால் இன்று மறியல் என்றும் விவரித்துக்கொண்டிருந்தார்
கிட்டதட்ட சம்பவ இடத்திற்கு அருகே வந்து விடடேன் காரிலிருந்து இறங்கி மெல்ல கூட்டத்திற்குள் புகுந்து பேச்சில் கலந்தும் கொண்டேன்
அவர்கள் பக்கத்து நியாயத்தை சிலர் ஆதரித்து பேசிக்கொண்டிருந்தார்கள் இதற்கான சட்டம் இயற்றா விட்டால் எதிர்கால சமுதாயமே வேலை வாய்ப்புகள் குறைந்து அவதிக்கு உள்ளாகலாம் என்றும் பல தொலைக்காட்சி நிலையங்களுக்கு இந்தத் சட்டா திருத்தம் பெரிய வரமாக இருக்குமென்றும் சிலர் பேசிக்கொண்டனர்
சற்று இடது பக்கம் திரும்பினேன் இரண்டு மூன்று முந்தைய தலை முறையினர் எதிர் கருத்து தெரிவித்தனர்
இந்த சட்ட மாறுதல் கொண்டு வந்தால் அது பெரும் நாசத்தை தமிழ் நாட்டிற்கு விளைவிக்கும் என்றும் இதற்கு முழு காரணமும் ஆரம்ப பள்ளி ஆஸிரியர்களின் கவனக்குறைவே என்றும் வாதிட்டனர்
காவல் துறையினர் TEARGAS பயன்படுத்தலாமா அல்லது LATHICHARGE செய்யலாமா அல்லது சமாதான உடன்படிக்கை செய்து கொள்ளலாமா என்று தெரிந்து கொள்ள மந்திரியை தொடர்பு கொள்ள முயன்றனர்
மந்திரி முதன் மந்திரியை கேட்பதாக சொன்னதாக பேசிக்கொண்டார்கள்
பெற்றோர்கள் நகருவதாகவே தெரியவில்லை போக்குவரத்து பெரிதும் ஸ்தம்பித்து தாம்பரம் வரை நிற்பதாக பேசிக்கொண்டார்கள்
எல்லோரும் இந்த மெட்ரோ ரயில் எப்போது வரும் என்று ஆதங்கப்பட்டு பேசிக்கொண்டார்கள்
இறுதியில் பெர்ய SIREN ஒலி கேட்க ஆம்புலன்ஸ் வந்தால் எப்படி போக முடியும் ஒரு உயிரை எப்படி காப்பாற்ற முடியும் என்று நான் கவலைப்பட்டு கொண்டிருக்கையில் அது ஆம்புலன்ஸ் அல்ல ஒரு மந்திரியின் பாதுகாப்புக்கான போலீஸ் வண்டியின் ஒலி என்று அறிந்து கொஞ்சம் நிம்மதி அடைந்தேன்
வழி வழி என்று கத்திக்கொண்டே காவலர்கள் எங்கள் எல்லோரையும் ஓரம் கட்டி விட்டு மந்திரிக்கு வழி அமைத்துக் கொடுத்தார்
மந்திரியும் நேராக மறியல் செய்து கொண்டிருப்பவர்களை அணுகி
“உங்கல் பிரச்னையை இந்த அரசாங்கம் நன்கு உணர்ந்து கொண்டது
எங்கல் அரசாங்கம் மத்திய அரசோடு கலந்து ஆலோசித்தது உங்கல் கோரிக்கைகலை முழுவதுமாக ஏற்று கொண்டுல்லது என மிகவும் மகில்ச்சியோடு அறிவிக்கிறேன்
தயவு செய்து உங்கல் போராட்டத்தை கைவிடுங்கல்”
என்று வேண்டிக்கொள்ள போராட்டத்தினர் உற்சாகமாக கோஷமிட்டுக்கொண்டே தங்கள் கையிலிருந்த கோரிக்கைகள் அடங்கிய காகித கட்டுக்களை வேகமாக மேலே விசிறி அடிக்க அதில் ஒன்று பறந்து வந்து என் கையில் விழ எடுத்து பிரித்து படித்தேன்
1.எங்கள் குலந்தைகலுக்கு வல்லின மெல்லின் இடையி உச்சரிப்பு சரியாக வராதாதல் இந்த மூன்றையுமே தமில் மொலியிலிருந்து அகற்றி ஒரே “”ல”” வாக கொண்டு வரவேண்டும்
2.மேலும் இந்த உச்சரிப்புகலை சரியாக பேசத் தெரியாதவர்கலையும் தொலை காட்சியில் செய்தி வாசிப்பவர்கல் மற்றும் தொகுப்பாலர்கலையும் கேலி செய்பவர்கலையும் குறிப்பாக சென்ற தலைமுறையை சேர்ந்தவர்கலையும் தமில் ஆர்வலர்கலையும் கடுமையாக தண்டிக்க வேண்டுமென சட்டம் இயற்றவேண்டும்
3.இந்த உச்சரிப்பு சரியாக வராதத்வர்கலுக்காக இட ஒதுக்கிடு செய்து தொலைக்காட்சி மற்றும் வானொலியில் முன்னுரிமை அலித்து இவர்களை முந்தி சென்றவர்கலுக்கு இணையாக இவர்களை வேலையில் அமர்த்த வேண்டும்.
மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது
கையிலிருந்த காகிதம் பறந்து செல்ல வேறொரு காகிதம் பறந்து வந்து என் முகத்தோடு ஒட்டிக்கொள்ள திடுக்கிட்டு விழித்தேன்
என் பேரன் அன்றைய HINDU பத்திரிக்கையை கிழித்து அசந்து தூங்கிக் கொண்டிருந்த என் முகத்தில் அப்பி “தா தா”” எழுந்திரு எனக் குரல் கொடுத்தான்.
ஒருமுறை....
;
.
;
;
;
;
;
இந்த கனவு பலித்து விடக்கூடாதே என்று ஆண்டவனை பிரார்த்தித்துக்கொண்டு RECORDING STUDIO போகத் தயாரானேன்.
அன்புடன் அழைக்கிறோம் எல்லோரும் கலந்து கொள்ளுங்கள்
Bombay Kannan Kannan's photo.
·
Bombay Kannan Kannan's photo.
·