Friday, August 19, 2016

காதல் 2016
சிறு கதை

வழக்கம் போல சாப்பாடு டப்பாக்கள் கை மாறின
ஷில்பா, திலீப்பின் வட்ட டப்பாவை திறந்து தயிர்சாதத்தையும் எலுமிச்சை ஊறுகாயையும் பார்த்து நாக்கில் எச்சில் ஊற “வாவ்” என்று கத்தினாள்
சமயத்தில் இந்த பெண்கள் என் இப்படி வாவ் என்று வாவ் என்று குலைக்கிறார்கள் என்று புரியாமல் திலிப் விழித்தான்
அவளது மூன்றடுக்கு கேரியரில் இருந்த சப்பாத்தியும் புலவும் பன்னீர் மசாலாவும் ஒரு PIZZA வும் திலிப்பிற்கு சொந்தமாகின (PIZZA என்றாலே அவனுக்கு கொஞ்சம் பயம் தான் அந்த படம் வெளி வருவதற்கு முன்பிருந்தே)
நம்ம ரெண்டு டிபன் டப்பாவிலேயே இவ்வளவு அந்தஸ்து வித்தியாசம் தெரியுதே நம்ம கல்யாணம் நடக்கும்னு நினைக்கிறே?
என்றான் ஒரு ஏக்க பெருமூச்சுடன் அவளைப்பார்த்து
அப்பா.....ஆரம்பிசிட்டயா? VELLENTINE DAY ம் அதுவுமா காதலை பத்தி மட்டும் பேசு கல்யாணத்தை பத்தி அப்புறமா பேசலாம்
என்று கண் சிமிட்டினால் அவள்
திலீப் எதுவும் பேசாமல் இருக்கவே அவன் கையை மெல்ல அவளது கன்னத்தில் வைத்து கொண்டு
திலீப் நான் உன்னை லவ் பண்ணறேன் எந்த சக்தியினாலும் நம்மை பிரிக்க முடியாது
என்று சொல்லி செல்லமாக அவன் தலையை வலது கையால் கோதி விட்டாள்
திலீப்பிற்கு திடீரென 10 வயது கூடி விட்டது போல முடி வெள்ளை ஆனது
எல்லாம் அவனால் வந்த வினை தான் அவன் கொண்டு வந்த தயிர்சாதம் தான் காரணம்
என்ன இவள் பேசறதும் அந்தகால சினிமா மாதிரி பேசறா ACTION ம் அப்படியே இருக்கே என்று நினைத்து கொண்டான் திலீப்
இந்த இடத்தில நாம் கொஞ்சம் இவர்களைப்பற்றி சுருக்கமாக தெரிந்து கொள்வது அவசியம்
திலீப் சுமாரான மிடில் கிளாஸ் ரகம்
ஷில்பா மேல்தட்டு மக்கள் என விமர்சிக்கப்படும் ஒரு தொழிலதிபரின் மகள்
இவர்களுக்குள் காதல் வந்தது எப்படி என்று நாம் யோசிக்க வேண்டியதில்லை
தமிழ் திரைப்படங்களை பார்த்தால் போதும்
கொஞ்ச நேரம் அங்கே அமைதி நிலவியது
அவள் அவன் ஏதும் பேசவில்லை
அவரவர் கவலை அவரவர்களுக்கு
திடீரென ஷில்பா
“ஏன்திலீப் உங்களை மாதிரி குடும்பங்கள் எல்லாம் எத்தனை தலைமுறை ஆனாலும் எப்படி அப்படியே மிடில் கிளாசாவே இருக்கீங்க MIDDLE கிளாஸ்ங்கிறது நீங்க வாங்கின பட்டமா
என்று பாலு தேவரை அண்ட சிறுவன் கேட்டது போல கேட்டு விட்டு ஒரு கிளு கிளு சிரிப்பை உதிர்த்து விட்டு தொடர்ந்தாள்
உங்கப்பா எதுவும் பிசினஸ் பண்ணலையா?
ம் பண்ணாரு ஆன பிசிநெஸ்லே “BIG MONEY MAKES BIG MONEY SMALL MONEY MAKES NO MONEY” இதை எங்கப்பாவுக்கு யாரும் சொல்லித்தரலை அதனாலே ஒவ்வொண்ணா முயற்சி பண்ணிட்டு அங்கியே புறப்பட்ட இடத்துலயே ஏன் கொஞ்சம் பின்னாடியே தங்கிட்டாரு
என்று சொல்லி அவன் பங்கிற்கு அவனும் அசட்டுதனமாக் சிரித்து விட்டு தொடர்ந்தான்
ஆனா ஒண்ணு ஷில்பா எங்கப்பாவோட தம்பி....என் சித்தப்பா அவரு இப்பவும் பெரிய BUSINESSMAN அவருக்கு விதிச்சது அப்படி கல்யாணமே பண்ணிக்காமே வியாபாரம் வியாபாரம்......ஒரு நாளைக்கு 25 மணி நேரம் உழைச்சு கோடிக்கணக்குலே சொத்து சேத்திட்டாரு
(ஒரு நாளக்கி 24 மணி நேரம் தானேன்னு கேக்கபடாது அவ்வளவு உழைச்சாருன்னு புரிஞ்சிக்கணும்)
எங்களோட எல்லாம் அதிகமா பேச கூட மாட்டாரு எங்க விட்டுக்கெல்லாம் வரமாட்டாரு......
அப்படியா என்ன பிசினஸ்?
LEATHER EXPORT வயசு கூட அதிகமில்லை
35 க்குள்ளதான் இந்த வயசிலேயே 100 கோடி ரூபாய் bank கடன் இருக்குன்னா பார்த்துக்கயேன்
பேரு?
சிவானந்தம்.
அதன் பிறகு மறுபடியும் சற்று நேரம் அவர்கள் இடையே மௌனம் நிலவியது கொஞ்சநேரம்கழித்து பிரியா விடைபெற்றார்கள்
சில நாட்கள் ஷில்பாவை பார்க்க முடியாமல் போய்விட்டது திலீப்பிற்கு
அவளும் எதோ பரீட்சைக்கு படித்துகொண்டிருக்கிறாள் என்று நினைத்தான் அவன்
அவனுக்கும் வெட்டியாக பொழுது போக்க கொஞ்சம் அலுப்பாக இருந்தது
ஷில்பா ஒரு நாள் போனில் அழைத்தாள்
வழக்கமான இடத்தில சந்திப்பதாக சொன்னாள்
திலீப் அவளுக்காக காத்திருந்தான்
கார் வந்து நின்றது
கார் கண்ணாடி தடங்கலே இல்லாமல் வழுக்கிக்கொண்டு கிழே இறங்கியது
பட்டன் சிஸ்டமாமே
கொஞ்சம் கொஞ்சமாக ஒரு CLOSEUP SHOT ல் முகம் தெரிய ஆரம்பித்தது
முதலில் கண்கள் அப்புறம் அழகிய முக்கு அப்புறம் அவளது உதடுகள் புன்முறுவல் காட்ட.......
திலீப் கார் அருகே சென்றான்
ஹாய் திலீப்
ஹாய் ஷில்பா
நீண்ட நாள் கழித்து சந்திப்பதில் அவனுக்கு ரொம்பவே மகிழ்ச்சி அது அவன் முகத்திலே பிரதிபலிக்க அவளருகே சென்று கார் கதவை அவனே வேகமா திறந்தான்
ஷில்பாவும் கிழே இறங்கி அவனுடன் நடந்தாள்
ரொம்பவும் அழகாக சூட் அணிந்த ஒருவர் காரை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு வெளியே வந்து அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தார்
நான் மனசை மாத்திகிட்டேன் திலீப் இவர்தான் என் WOULD BE அடுத்த மாசம் எங்க கல்யாணம்....
.
அவள் பேசுவதை கவனிக்காமல் வருபவரையே
உற்று நோக்கிக் கொண்டிருந்தான் திலீப்
சித்தப்பா!!!!!!!
SWITZERLAND லே HONEMOON......
இவர் பேரு சிவானந்தம்.....
என்று ஷில்பா சொல்லிக்கொண்டே போக......
அருகில் வந்த சிவானந்தம்
டேய் உங்க சித்தியை மீட் பண்ணுடா!!
என்று ஷில்பாவை அறிமுகம் செய்து வைத்தார்

Thursday, August 18, 2016

என்னுடைய நண்பர்களில் சிலர் மதம் மாறி விட்டார்கள் கிறிஸ்தவ மதத்திற்கு போய் விட்டார்கள்
இவர்கள் பெரும்பாலும் கலை உலகத்தைசேர்ந்தவர்கள்
வாழ்க்கையில் எதோ பெரிதும் எதிர்பார்த்து் அது கிடைக்காமல் போனதால் மதம் மாறிவிட்டார்கள்
...
ஒருவர் அம்மன் பக்தர்
வெள்ளிக்கிழமை தோறும் அம்மன் கோவிலுக்கு போவதும் வீட்டிலேயே அம்மன் விக்ரகத்தை வைத்து அபிஷேக ஆராதனை செய்வதும் இவர் வழக்கம் இவர் நன்கு வசதியாக வாழ்ந்தவர்தான்
திடிரென வாழ்க்கையில் ஒரு பின்னடைவு இதற்காக இவர் போகாத கோவில் இல்லை செய்யாத பரிகாரம் இல்லை
எல்லாவற்றையும் செய்து விட்டு எந்த பலனும் இல்லாததால் நம் கடவுள் மிது கோபம் கொண்டு விக்ரங்களை தூக்கி எறிந்து விட்டு அந்த அணிக்கு தாவி விட்டார்
அதோடு நில்லாமல் ஒரு மத பிரசாரகராகவும் மாறி விட்டார் ரொம்ப வசதியாக இருப்பதாகவும் எல்லாவற்றிற்கும் காரணம் யேசுப்பாதான் தான் என்று அடிக்கடி கூறுவார்
நம்ம சாமி என்ன செஞ்சுதுன்னு குறை பட்டுக்கொள்வார்
சமிபத்தில் சந்தித்த போது மறுபடியும் வாழ்க்கையில் கொஞ்சம் பின்னடைவு என்று சொல்லிக் கொண்டார்
மற்றறொரு நண்பர் இவரும் கலை உலகை சேர்ந்தவர்தான் நெற்றியில் குங்குமமும் விபூதியும் இல்லாவிட்டால் நிர்வாணமாக நடப்பது போல் இருப்பதாக சொல்லிக்கொள்வார்
சமிபத்தில் கேள்விப்பட்டேன் இவரும் மதம் மாறிவிட்டதாக அவரது பிரச்சனைகளுக்கு அது ஒரு புகலிடம் என்று தோன்றி இருக்கும்
இவர்களிடம் நான் சொல்ல நினைப்பது ஒன்றுதான்
நீங்கள் மதம் மாறாவிட்டாலும் உங்களுக்கு நல்லது நடக்க வேண்டிய கால கட்டத்தில் அது நடந்தே திரும் அது நீங்கள் எந்த மதத்தில் இருக்கிறிர்கள் என்று பார்த்து நடப்பதில்லை
நீங்கள் எந்த மதத்தில் இருந்தாலும் உங்களுக்கு நல்லது நடக்க கூடாது என்று இருந்தால் நிச்சயம் நடக்க போவதில்லை
அதை எதற்காக உங்கள் மதத்தை மாற்றி சோதித்து பார்க்கிறிர்கள்?
இந்த இடத்தில என் அனுபவம் ஒன்றையும் குறிப்பிட ஆசைபடுகிறேன்
ஒரு நாடக நடிகர் வட நாட்டிலிருந்து வந்தார் தமிழர்தான்
ஒரு ஒலி நாடகத்தில் நடிக்க வேண்டுமென என்னை அழைத்தார் இவரை எனக்கு ஒரு பிரபலமான நண்பர் அறிமுக படுத்தியதால் ஒப்புக்கொண்டு போனேன்
இவர் பெயர் கூட ஹிந்து பெயராக இருந்ததால் இவர் ஒரு தீவிர கிறிஸ்தவர் என்று எனக்கு முன்பே தெரியவில்லை
காலையில் ஒலிப்பதிவிற்கு சென்ற போது இவர் கொடுத்த ஸ்க்ரிப்ட்டை வாங்கி படித்தேன்
அப்போதுதான் புரிந்தது இவர் ஒரு தீவிரமான கிறிஸ்தவர் என்று
அவர் எழுதிய கதையில் பிராமணர்கள் கிறிஸ்தவராக வாழ்வது போலவும் ராமர் christ க்கு பிறகு வந்த அவருடைய அவதாரம் என்றும் அவரும் ஒரு கிறிஸ்தவர் தான் என்றும் கதை போனது
ஸ்க்ரிப்ட்டை அவரிடம் திருப்பி கொடுத்து விட்டு என் மனம் ஒப்புக்கொள்ளத ஒரு கதையில் நான் நடிக்க தயாரில்லை என்று கூறிட்டு வெளியேறிவிட்டேன்
கொஞ்சம் காசு பாத்திருக்கலாம் நடிப்புதானே என்று யோசித்து இருந்தால்
இருந்தும் மனசாட்சி இடம் தரவில்லை வந்து விட்டேன்
ஒருமுறை இப்படி கதையை கேட்காமல் ஒரு டிவி நாடகம் ஒன்றில் நடித்து ( ஒரு தனியார் சேனலில் வந்தது) நான் பட்ட அவஸ்தைகளை வேறு ஒரு சந்தர்பத்தில் எழுதுகிறேன் அந்த நேரத்து ஆர்வ கோளாறுதான் காரணம்
ஒரு திரைப்படம் வெளி வந்தவுடன் அந்தபடம் boxoffice ல் எவ்வளவு வசூல் செய்தது எந்தெந்த ஊர்களில் அது வெற்றி கொடிகட்டியது அது படம் பிடிக்கப்பட்ட வெளி நாடுகள் எவை ஒரு பாடல் காட்சிக்கு அந்த தயாரிப்பாளர் எவளவு செலவுசெய்தார் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு அவர்கள் அந்த திரைப்படத்தை வெளி நாடுகளில் சென்று படம்பிடித்தார்கள் அதில் உள்ள புதுமையான (பேத்தலான)சண்டை காட்சிகள் எப்படி இருக்கின்றன கதாநாயகன் அறிமுக நாயகன் என்றால் அவரிடம் எப்படியெல்லாம் இயக்குனர் வேலை வாங்கினார் போன்ற பல நமக்கு தேவை இல்ல...ாத விஷயங்களை பற்றி யோசித்து பேசி கேட்டு விவாதித்து மகிழ்கிறோம் இதையேதான் நமது மீடியாக்களும் பயன் படுத்தி தொலை காட்சி நேரத்தை நிரப்புகின்றன
பொதுவாக அந்த படம் நல்லகதை அம்சம்கொண்டிருக்கிறதா நடிப்பு எப்படி வெளிப்படுகிறது சொல்ல வந்த கதையை தொய்வில்லாமல் சொல்லிஇருக்கிறார்களா சண்டை காட்சிகள் என்ற circus...... பாடல் கட்சிகள் என்றபெயரில் காட்டப்படும் ஆபாசங்களும்.......கிராபிக்ஸ் என்றபெயரில் தேவை இல்லாமல் பயன் படுத்தபடும் தொழில் நுட்பங்களும் இல்லாமல் இரண்டு மணி நேர உபயோகமான பொழுது போக்காக இருக்கிறதாஎன்று மக்கள் யோசிக்க ஆரம்பித்தாலே போதும் நல்ல திரைப்படங்கள் தானாகவே வரத் துவங்கி விடும் நீங்கள் பார்கிறீர்கள் கொடுக்கிறோம்...... கொடுக்கிறிர்கள் பார்க்கிறோம் என்ற விவாதத்திற்கு இடமில்லாமல் போய்விடும்

Wednesday, August 17, 2016

எங்களது ஒலிப்புத்தகங்கள் பற்றி ஒரு விண்ணப்பம் இருமுறை எழுதியிருந்தேன் அதற்கு நணபர் ஒருவரின் பதில் இது
சார், நீங்க சொன்ன பயணாளிகள் வரிசையில நான் முதலிடத்திலுள்ளேன். ிதுவரை நாம் சந்தித்ததில்லை, ஒருவரை ஒருவர் அறிந்ததில்லை. ஆநால், பேராசிரியர் திவாகர் சாரும், ஞானகுரு சாரும் தங்களை அறிமுகப்படுத்தினார்கள். திவாகர் சாரின் உதவியால், நீங்க பார்த்திபன் கனவு ஒலிப்புத்தகம் வெளியிட்ட அன்றே என்னால் ஒலிப்புத்தகத்தை வாங்கி கேட்க முடிந்தது. ஆங்கிலத்தில, "got the money's worth" என ஒரு வாக்கியம...ுண்டு. ஆனால், நான் புத்தகத்தை வாங்க கொடுத்த 200 ரூபாய்க்கு நூறு மடங்கு அதிக பலனை அனுபவித்ததாய் உணர்கிறேன். அறிவுக்கு விலை மதிப்புண்டோ. hats of to you. அதைவிட முக்கியம், எனக்கு வந்த பிறந்தநாள் பரிசுகளில், 2014 ஆமாண்டு பொன்னியின் செல்வன் ஒலிப்புத்தகத்தை எனது பேராசிரியர் வாங்கி பரிசளித்தார். அதன் மதிப்பு அப்போதைக்கு புரியவில்லை, தற்போது மூன்றாவது முறையாய் பொன்னியின் செல்வனை கேட்டுவரும்போது தான் தெளிவானது. நான் ஒரு புத்தக பைத்தியம்.. தமிழில் கேட்க போதய ொலிப்புத்தகங்களில்லை, அதைவிட பிறர் வாசித்துக்கேட்பதில் அவ்வளவு பயனும் கிடைப்பதில்லை. உங்களோட இந்த முயற்சியின் பலனென்ன என்பது, நானறிந்தவரையில் இன்னும் உங்களால் கூட கணிக்க இயலாதென்றே நினைக்கிறேன். ஆங்கில புத்தகங்களில் மூழ்கியிருந்த என்னைப்போன்றோரை, தமிழின்பால் தள்ளிவிட்டது உங்களுடைய பொன்னியின் செல்வன் மற்றும் பார்த்திபன் கனவு. பொன்னியின் செல்வன் போன்ற தலைசிறந்த படைப்பை, உங்களோட ஒலிப்புத்தகமில்லன்னா என்னால படிச்சிருக்கவே முடியாது. நான் தற்போது indian administrative service (IAS) தேர்வு பயிற்சியிலிருக்கிறேன். நான் வெற்றிபெரும் பட்சத்தில், கல்யான்ஜீயின் குறலே எனது மானசீக குரு. அனிருத்த பிரம்மராயர் நான் அதிகம் விரும்பும் கதா பாத்திரம். குறிப்பாய், மூன்றாம் பாகம் அத்தியாயம் 26, 27 மற்றும் 28 நான் அடிக்கடி கேட்கக்கூடியவை. சுந்தர சோழர் மற்றும் சிவனடியாருக்கான குறல் என்னைப்பொருத்தளவில் "A legendary voice." உங்கள் சார்பில் நானும், அனைவரையும் இந்த ஒலிப்புத்தகங்களை வாங்கி கேட்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மிக்க நன்றி Bala Nagendran
என்னுடைய பால பருவத்தில் என் தாத்தா (அவர் ஒரு வக்கீல்) ஒரு நகைச்சுவை கதை ஒன்று சொல்லுவார்
ஒருவரை மற்றவர் செருப்பால் அடித்து விட்டார் என்பது வழக்கு
வழக்கு நீதிபதி முன்னால் விசாரணைக்கு வந்தது
...
வாதியின் வக்கீல் தனது வாதத்தை முடித்து கொண்டு நீதி வழங்க வேண்டு மென கேட்டுக்கொண்டு அமர்ந்து விட்டார் இப்போது எதிர் கட்சி பிரதிவாதியின் வக்கீலுக்கு விசாரணையை ஆரம்பிக்க வேண்டிய நேரம்
செருப்படிபட்ட வாதியிடம் சில கேள்விகள் கேட்க விரும்பினார் நீதிபதியும் அனுமதிக்கவே அவர் நேரடியாக அவரிடம் விசாரணை தொடங்கினார்
வக்கீல்
உங்களை இவர் செருப்பால் அடித்தார் என்று சொன்னிர்களே எத்தனை முறை செருப்பால் அடித்தார் என்று சொல்லமுடியுமா
வாதி
ஒரு முறை
வக்கீல்
வலது பக்கத்துலே செருப்பால அடித்தார இடது பக்கத்துலே செருப்பால அடித்தரா
வாதி
வலதுபக்கம்
வக்கீல்
அவர் செருப்பால அடிச்சது புது செருப்பாலயா பழைய செருப்பாலயா
வாதி
பழையது
வக்கீல்
பழைய செருப்புன்னா பிஞ்ச செருப்பால அடிச்சாரா இல்லை பிய்யாத செருப்பால அடிச்சாரா
வாதி
பிய்யாதது
வாக்கில்
அவர் உங்களைசெருப்பாலஅடிச்சபோது மணி எத்தனை இருக்கும்
வாதி
ஆறு இருக்கும்
வக்கீல்
காலை ஆறு மணிக்கு செருப்பால அடிச்சாரா இல்ல மாலை ஆறு மணிக்கு செருப்பால அடிச்சாரா
வாதி
மாலை
வக்கீல்
பொம்பளை செருப்பால அடிச்சார அல்லதுஆம்பளை செருப்பால அடிசாரா
வாதி
அது அது பொம்பளை செருப்புன்னுதான் நினைக்கிறேன்
வக்கீல்
அவர் உங்களை செருப்பால அடிச்சாபொது ரொம்ப வலிச்சுதா இல்லை பொறுத்துகற மாதிரி வலிச்சுதா
வாதி
பொறுதுக்கற மாதிரித்தான் இருந்தது
வக்கீல்
அவர் உங்களை செருப்பால அடிச்சபோது......
வாதி
(கை எடுத்து கும்பிட்டு)
ஐயா ஜட்ஜ் ஐயா உங்களை கை எடுத்து கும்பிட்டு இந்த வழக்கை வாபஸ் வாங்கிக்கறேன் அவன் என்னை ஒருதரம்தான் செரூப்.......(வேண்டாம்) அடிச்சான் ஆனா இந்த வக்கீல் இத்தனை.பேருக்கு முன்னாலே இத்தனை தடவை செருப்பாலேஅடிச்சானா அடிச்சானா எனக்கேட்டு ரொம்ப அசிங்க படுத்திட்டாரு அந்த அடியைவிட இது ரொம்ப வலிக்குது என்னைவிட்டிடுங்க
என்று காலில் விழ ஜட்ஜ் வழக்கை தள்ளுபடி செய்தார்
இந்த கதை இப்போது ஏன் ஞாபகம் வந்தது என்று தெரியவில்லை
1995 ம் வருடம் தொலை காட்சி தொடர்கள் பிரபலமாக இருந்த நேரம் இப்போதும்தான்
ஆனால் அப்போது newbroom
ஒரு சில நாடகங்கள் தவிர மீதி நாடகங்களுக்கு மக்கள் வருவது வெகுவாக குறைந்து போய் விட்டது
யாரை கேட்டாலும் தொலை காட்சி நிகழ்சிகள் தான் காரணம் என்று சொன்னார்கள்
ஆனால் இந்த நிலைமைக்கு நாங்களும் ஒரு காரணம் என்று பலர் உணரவே இல்லை
சபாக்கள் எல்லாம் ஒன்றொன்றாக விடை பெற்றுக் கொள்ளத் துவங்கிவிட்டன நாடக அரங்குகளில் கொஞ்சம் வரும் மக்கள் கூட 50 வயதை தாண்டிய பழைய ரசிகர்களாகவே இருந்தனர் இப்பொது அவர்களுக்கு 60 க்கு மேல் ஆகிவிட்டது
70 களில் 130 ஆக இருந்த சபாக்கள் 20 ஐ எட்டிக் கொண்டிருந்தன
நமது மக்களுக்கோ நாடகங்களுக்கு டிக்கெட் வங்கி பார்க்கும்பழக்கம்அறவே போய்விட்டது நான் இந்த இடத்தில சில வர்த்தக ரீதியான குழுக்களையோ சபாக்களையோ பற்றி பேசவில்லை
நாடகம் நடத்தினால் ஒரு சில சபாக்கள்தவிர மற்றவர்கள் நாடக் குழுக்களிடம் பேரம் பேசினார்கள் சில இடங்களில் இலவசமாக நாடகம் போடாவேண்டிய அவலம் வேறு
நடிகர்கள் வேண்டுமானால் இலவசமாக நடிக்கலாம்
ஆனல் தொழில் கலைஞகள் தங்கள் சேவைக்கான தொகையை அதிகப்படுத்திக் கொண்டே போனார்கள்
இந்தநிலைமையில் நாடகம் போடுவது எ௩ந்பது வீட்டில் விவாகரத்துக்கான ஒரு காரணம் போலவே உருவாகிப் போனது
அப்போது ஒவ்வொரு தொலைகாட்சி தொடரும் [பணத்தை அள்ளிக்குவித்தன
ஆனால் அதில் காட்டப்படும் தொடர்கள் (ஓரிரண்டை தவிர) camera முன்னால்நடதப்படும் நாடகமாகவே இருந்தனவே ஒழிய பெரிய வித்தியாசம் இல்லை இதனாலேயே அந்த நிகழ்சிகள் நாடகங்கள் என்று அழைக்கப்பட்டன
ரசிகர்கள் இலவசமாக கிடைக்ககூடிய அந்த நாடகங்களின் பால்தங்கள் கவனத்தை திருப்பினர் அதே நடிகர்கள்
அதே துணுக்குகள் அதேபோல மடிசார் மாமிக்களும் ஹிந்துபேப்பர் படித்துக் கொண்டு காபியில் பினாயில் வாடைஅடிப்பதாக ஜோக்அடிக்கும் மாமாக்களும் மருமகளுடன் சண்டை போடும் மாமியார்களும் அத்திம்பேர்களும் பாசமழைகளும் பழிவாங்குதலும் பட்டி மன்ற தலைப்பு போன்ற விவாதங்கள் அடங்கிய நாடகங்களும் பெரிய மேடைகளிருந்து சிறிய பெட்டிக்குள் சுருங்கி போயின
இதே விவகாரத்தை ஆட்டோ பெட்ரோள் செலவு செய்து நகரின் புறநகர்களுக்கு குடிபெயர்ந்த மயிலாப்பூர் மாம்பலம் வாசிகளும் எதற்கு வீண் செலவு என்று வாரம் ஒரு முறை சரவணா பவனில் சாப்பிட்டு விட்டு தங்கள் OUTING ஐ முடித்து கொண்டனர்
பலர் 6 மாதம் அமெரிக்கா 6 மாதம் இந்தியா என்பதால் தங்கள் சபா MEMBERSHIP ஐ ரத்து செய்து விட்டு டிசம்பரில் மட்டும் கச்சேரி கேட்டு ரசிக்க பர்முடாஸ் டி ஷர்ட் போட்டுகொண்டு வலம் வர ஆரம்பித்தனர்
இதெல்லாம் என்ன பீடிகை என்கிறிர்களா?
நாம எப்படி நாடகம் போட்டு இவர்களை அரங்கிற்கு வரவழைப்பது என யோசித்தேன்
அதன் விளைவுதான் என்னுடைய இறுதி முயற்சிதான் இது
இவர்கள் பார்க்கும் டிவி பெட்டியை பிரியாமல் இருக்க அந்த டிவி பெட்டியையே அரங்கிற்கு கொண்டு வந்து விட்டால் ஒருவேளை மனம் மாறி அந்த மயக்கத்தில் இங்கு வந்து விடுவார்களோ என யோசித்தேன் அதற்காக உருவாக்கப்பட்டதுதான் இந்த டிவி பெட்டி (இதைப்பற்றிய ஒரு குறிப்பு இணைப்பில் உள்ளது)
மேடையில் டிவி பெட்டி போல செட் போட்டால அதை டிவி காட்சி என்று நம்பி விடுவார்களா என்ன என்று சிலர் என்னை கேட்டார்கள்
படுதா ஆடும் பாற்கடலையும் பறந்து வரும் புஷ்பக விமானங்களையும் பாய்ந்து செல்லும் அம்புகளையும் பிளிரும் யானைகளையும் நம்பும் இவர்கள் நிச்சயமாக இதையும் ஒரு டிவி தொடர் என்று நம்பி விடுவார்கள் என்ற அசட்டு துணிச்சல் எனக்கு
சரி இன்னும் என்னென்ன செய்யலாம் என்று யோசித்தேன் டிவி தொடர்களில் என்னென்ன வருகிறது என்று பார்த்து..........ர்த்தக இடைவேளை எனப்படும் பூஸ்ட் ஹோர்லிக்ஸ் சோப்பு விளம்பரங்களுக்கான நேரம் ஒன்று இருக்கிறதல்லவா (இந்த நேரத்தில் பெரும்பாலும் பெண்கள் நறுக்கிய காய்களுக்கு தாளித்து கொட்டுவார்கள்) அந்த பகுதியை சேக்கலாம் என்று எண்ணினேன்
அதற்கு முன்னால் நாடகத்தை 20 நிமிட பகுதிகளாக பிரித்து கொண்டேன் நாடகம் என்பது உயிரோட்டமுள்ள ஒரு நிகழ்வு பிம்பமல்ல அல்லவா
அதனால் இந்த விளம்பரங்களும் மேடையில் நடிகர்களால் உண்மையாகவே நடத்தபடவேண்டுமேன்று தீர்மானித்து அதற்காக ஒத்திகை தனியாக நடந்தது
இதற்கான அரங்க அமைப்பிற்கு மட்டும் 95 ல் 25000 வரை செலவு
இவ்வளவு செய்தபின் இதையே கொஞ்சம் வர்த்தக ரீதியாக செய்தால் என்ன என்று தோன்றியது உண்மையிலேயே விளம்பரங்கள் வெளியிட்டால் பணமும் கிடைக்கும் நாடக காட்சிகளும் அதிகரிக்குமே என்று எண்ணி ஒரு மாதம் விடுமுறை எடுத்துக்கொண்டு ஏறி இறங்காத கம்பெனி இல்லை விளம்பர AGENCY கள் இல்லை
5 நிமிட நேர விளம்பரத்திற்கு நான் கேட்ட தொகை வெறும் 500 மட்டுமே
ஆனால் வங்கியில் நாடகமா வேலையா என்று முடிவெடுத்தால் நன்றாக இருக்கு மென என் காது பட பேசிக்கொண்டது தவிர வேறு பலன் எதுவும் இல்லை
நாடகத்தில் விளம்பரங்கள் இடம்பெற வேண்டுமே என்பதற்காக ஒரு கம்பனி வியாம்பதையும் எங்கள் வங்கியும் விளம்பரத்தை மட்டும் சேர்த்து கொண்டேன்
இதில் இன்னொரு இடைஞ்சலும் ஏற்பட்டது
நாடகக்காரர்கள் கொஞ்சம் சம்பாதிப்பது வெளியூர்களில் நாட்டகம் நடத்தும் போது மட்டும்தான் உள்ளூர் நஷ்டத்தை ஈடு கட்டுவது அங்கேதான்
ஆனால் 70 கள் போல மனோகர் போல நாங்கள் அரங்க பொருட்களை லாரியில் ஏற்றி செல்ல வசதிகள் இல்லை ஆகையால் விட்டையும் காட்டையும் அலுவலகத்தையும் பூங்காவையும் துணியாக மடித்து எடுத்து சென்றால்தான் அவர்கள் கொடுக்கும் பணத்திற்கு நஷ்டமில்லாமல் நாடகம் நடத்த முடியும்
இந்த டிவி பெட்டியோ படுதாவினாலோ சட்டங்களாலோ செய்யப்பட்டது அல்ல இவை ஆபீஸ் PARTITION செய்ய பயன்படும் HARDBOARD செய்யப்பட்டது அப்படியேதான் லாரியிலேயோ VAN லேயோ கொண்டு போக வேண்டும்
அதற்கு செலவு செய்யும் தொகையில் சென்னையில் மூன்று காட்சிகள் நடத்தி விக்டலாம்
ஆகையால் பெரும்பாலான நகரங்களில் இந்த நாடகம் நடத்த முடியாமல் போய் விட்டது எனக்கு அந்த நாளில் ஆதரவு தந்தவர் பெங்களூர் கிருஷ்ணன் மட்டுமே என நாடகத்தை பார்த்து விட்டு எவ்வளவு செலவானாலு பரவயில்ளை செட் எடுத்துக்கொண்டு வா என சொல்லி தனியாக பணம், கொடுத்தவர்
அமரர் ஆகிவிட்ட அவருக்கு இங்கிருந்து உரக்க நன்றி சொக்ல்கிறேன்
ஆகையால் இந்த நாடகம் 25 முறை சென்னையில்; மட்டும் நடந்தது
மேலும் சுவாரசியம் கூட்ட இதில் ஒரு போட்டியும் வைத்து பரிசுகளும் உண்டு என்று நானே அறிவிப்பும் மேடையிலேயே செய்வேன்
இதைதவிரே நாடகம் ஆரம்பிப்பதற்கு முன்னால் ஒரு எதிரொலி நிகழ்ச்சி நடத்தி இந்த நாடகத்தை பற்றி வந்துள்ள விமர்சனகளையும் கடிதங்களையும் பற்றி விவாதிக்கும் ஒரு நிகழ்ச்சியும் உண்டு
நாடகத்தில் நடிப்பவர்கள் பெயர்கள் SCROLLING ல் செல்லும்
இப்படி உருவானதுதான் எ னுடைய SHERLUCK சர்மாஜி என்ற துப்பறியும் நான்கு எபிசொட் நாடகம்
Bombay Kannan Kannan's photo.
இன்னும் கலைப்பூர்வமாக சொல்லப்போனால் இதில் CLOSE UP காட்சிகள் உண்டு MIDSHOT உண்டு LONGSHOT உண்டு அவற்றிற்காக பார்வையாளர்களின் கற்பனைக்கு விட்டு விடும்படி உல் அரங்கை நிர்மானித்தது மட்டுமில்லாமல் ஒத்திகையும் நடந்தது
இந்த உழைப்பிற்கு எனக்கு கிடைத்த ஒரே ஆறுதல் பரிசு MYULAPORE அகாடமி வழங்கிய BEST ALL ROUNDER விருதுதான்
இந்த திட்டத்தை யாரவது பயன்படுத்த விரும்பினால் என்னிடம் COPYRIGHT இல்லை என்றாலும் ஒரு வார்த்தை சொல்லி கலந்து ஆலோசித்தல் நலம்

அப்பா கொடுத்த சீதனம்

சிறுகதை

எங்கப்பா எனக்காக விட்டுப்போன ஒரே சீதனத்தை பற்றி தெரிந்து கொள்வதற்காக மாம்பலத்திலிருந்து நுங்கம்பாக்கம் நோக்கி போய்க் கொண்டிருந்தேன் என் மனம் பல வருடங்கள் பின்னோக்கி நகர்ந்து flashback கொட்டியது
எங்கப்பா ஒண்ணும் அவ்வளவு பெரிய பணக்காரர் இல்லைதான் அவர் பெரிதும் எந்த சொத்தும் சேர்த்து வைக்கவில்லை
அவர் வேலைபார்த்த காலத்தில் அவருக்கு கிடைத்த சொற்ப பணத்தில் மாதம் காசு மிச்சம் பண்ணுவது என்றாலே பிச்சைகாரர்களுக்கு போடக்கூட காணாது
இருந்தும் மற்ற அப்பா மார்களை கவனிக்கும் போது.......
எப்படியோ கடனை வாங்கி அங்கே இங்கே என எதோ ஒரு நிலத்தை வாங்கி போட்டு மறந்து விடுகிறார்கள்
அது பல வருடம் கழித்து தான உயிர்பெறும்
அங்கே ஒரு நாள் போய் பார்த்தால் சுத்தி வீடுகள் வந்திருக்கும் ஒரு IT கம்பெனி வந்திருக்கும்
சென்னை சில்க்ஸ் சரவணா ஸ்டோர்ஸ் இல்லைன்னா குறைந்த பட்சம் ஒரு PIZZA HUT ஆவது வந்திருக்கும்
அங்கே நிலத்தோட விலை எக்க சக்கமாக ஏறிப்போயிருக்கும்
அந்த மாதிரி கூட இவர் எதுவும்ம் வாங்கி போடவில்லை
இத்தனைக்கும் அவருக்கு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது கொஞ்சம் வெத்திலை பாக்கு புகையில போடுவாரு கொஞ்சம் சிகரெட் பிடிப்பாரு கொஞ்சம் தண்ணி போடுவாரு அவ்வளவுதான்
அந்த காலத்து ஸ்டான்டர்ட்க்கு இதெல்லாம் பெரிய கெட்டப் பழக்கங்கள் அதனாலே தெரு முக்கிலே போய் நின்றுதான் அவரோட 60 வயசு வரைக்கும் தம் அடிப்பார்
எனக்கு கூட ரொம்ப வருத்தம் தான்
அப்பா நமக்குன்னு ஒண்ணும் வைக்காம போய்விட்டாரே என்று
இப்பதான் தெரிஞ்சுது அவர் எனக்குன்னு ஒரு சீதனம் வச்சிட்டு போயிருக்காருன்னு அது கூட அவர் அப்பா கொடுத்த சீதனமாம்
கொஞ்சம் கஷ்டமாதான் இருந்தது இருந்தாலும் அப்பா ஞாபகமா இருக்கட்டுமே என்று சந்தோஷமா என்னை சமாதானப்படுத்திக் கொண்டு விட்டேன்
இன்னிக்கு தான் அது சம்மந்தமான PAPERS வாங்கதான் போறேன்
அப்புறம் எப்படி பராமரிக்கணும்னு சொல்லுவாங்களாம்
இறங்க வேண்டிய ஸ்டாப்[ வந்து விட்டது
இறங்கி நடந்தேன்
பெரிய கட்டிடம்தான்
என்னை போலவே அப்பா கொடுத்த சீதனத்தை வாங்கிக்க பலர் உக்காந்து கிட்டு இருந்தாங்க
அழகா இருந்த அந்த பொண்ணுகிட்ட என் நம்பரை கொடுத்திட்டு உக்கார்ந்தேன்
அப்படியே கொஞ்சம் அயர்வா கண்ணசந்து விட்டேன்
திடிர்னு என் பேரை சொல்லி கூப்பிட்டாங்க
உள்ளே போங்கன்னு சொன்னாங்க
மெல்ல அறை கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தேன்
பெரிய மேஜை பின்னாலே இருந்தவர்
உக்காருங்க
என்று சொன்னார்
ரொம்ப TENSION ஆ இருக்கீங்க போலிருக்கு கவலைப்படாதிங்க இப்ப எல்லாம் ரொம்ப சகஜம் இனிமே இது இல்லாமே நீங்க இருக்க முடியாது என்ன..... எல்லா சொத்தையும் போல இதையும் நீங்க சரியாய் பராமரிச்சிங்கன்னா போதும் சந்தோஷமா ஆரோக்கியமா இருக்கலாம்
எனக்கு எப்படி இது?
இதென்ன மலேரியாவா டெங்குவா கொசு கடிச்சு வரதுக்கு இது பரம்பரை சொத்து சார் உங்கப்பா தாத்தா பாட்டி யார் கொடுத்ததோ
எங்கப்பா தான.... இப்ப இன்னிக்கு என்ன VALUE ன்னு தெரிஞ்சிக்கலாமா
VALUE என்ன சார் VALUE லட்சமா கோடியா ரொம்ப ஒண்ணும் அதிக மில்லை சப்பாட்டுக்கப்புறம் 300 இருக்கு மருந்து சாப்பிட்டா போதும் உங்க SUGAR LEVEL ஐ CONTROL க்கு கொண்டு வந்து விடலாம் அப்புறம் கொஞ்சம் உடற்பயிற்சி அப்புறம் சாப்பாட்டுலே என்னென்ன.............
என்று டாக்டர் பராமரிப்பு பற்றி அடுக்கி கொண்டே போனார்
நான் மெல்ல என் அப்பா கொடுத்த சீதனம் பற்றி யோசித்தவாரே.......
அந்த டாக்டரிடமிருந்துவிடைபெற்றுக்கொண்டேன்