Thursday, August 28, 2014

்:

அமரர் கல்கி எழுதிய இரண்டு நாவல்களை, ஒலிநூலாக்கி வழங்கி என்போன்றவர்களை ஒரு புதிய உலகிர்க்கே அழைத்துச் சென்று விட்டார், பெறும் பாராட்டிற்கும், போற்றுதலுக்கும் உரிய திரு பாம்பே கண்ணன். ஏற்கனவே அவர் தயாரித்த சிவகாமியின் சபதம் கல்கியின் ரசிகர்களிடையே அமோக வரவேற்பினைப் பெற்றிருக்கலாம். அதன் அடுத்த படிநிலையாக பொன்னியின் செல்வன் வந்திருக்கின்றது.
ஏறக்குறைய மூன்றரை ஆண்டுகாலம் பத்திரிகையில் வெளியான அந்த நாவலினை, வந்தியத்தேவனுடய வாழ்க்கையின் எட்டு மாத நிகழ்வுகளைப் பேசுகின்ற அந்த நாவலினை அவர் ஒன்றரை ஆண்டுகாலம் முயன்று ஒலிப்புத்தகமாக மாற்றிஇருக்கின்றார்.
அந்த ஒலிப்புத்தகத்தினை படித்து முடிக்க, எனக்கு ஆறு மாத காலம் பிடித்தது. அந்த ஆறு மாதகாலமும் நான், நெடிய தூரம் பயணிப்பதனைப் போன்ற உணர்வினைப் பெற்றேன். என்னோடு பயணித்தவர்கள் யார்யார் என்று தெரியுமா? திரு பாம்பே கண்ணனும், அவரது பரிவாரங்களும் தான். நான் போகும் இடங்களிலெல்லாம் என்னோடுகூட, திரு பாம்பே கண்ணனும், அவருடைய பரிவாரங்களான, வந்தியத்தேவன், அருள்மொழிவர்மர், ஆழ்வார்க்கடியான், பூங்குழலி, இவர்கள்; இல்லை இல்லை! இவர்களுடய ஒலித்தோற்றத்தினை, தம்முள்ளே புணைந்து கொண்டவர்கள்தான்.
காட்சியினால் மட்டும் தான் அழகினைச் சொல்ல முடியும், அல்லது, காட்சி ஊடகத்தினால் மட்டும் தான் கதைக்கான ஏதுக்களை விளக்கிச் சொல்ல முடியும் என்று காலம் காலமாக நம்பிக் கொண்டிருப்பவர்களை வாய்மூடச் செய்து, ஒரு நாளும் இல்லை! என்று கூறி, ஒலி ஊடகத்தின் வாயிலாகவே, மேற்கூறிய அனைத்தையும் சாத்தியப் படுத்தி இருக்கின்றார்கள் நமது பொன்னியின் செல்வன் கலைஞர்கள்.
குதிரை மேல் ஏறிச் செல்லும் வந்தியத் தேவனை நம்மால் பின் தொடர முடிகின்றது. வீர நாராயண ஏரிக் கரையில் நின்று, அங்கு நடக்கும் ஆடித் திருநாள் விழா நிகழ்வுகளைக் காட்சி ஊடகம் ஏதும் இன்றியே, நம்மால் காணமுடிகின்றது.
கொள்ளிடக்கரையில் படகில் ஏறி பயணிக்கும் உணர்வினை நாமும் பெருகின்றோம்.
பூங்குழலி வந்தியத்தேவனுக்கு கொள்ளிவாய்ப் பிசாசுகளைத் தமது காதலர்கள் என்று இனம் காட்டுகிறாளே, அந்தக் காதலர்களை காட்சி ஊடகமின்றியே, நாமும் காண்கிறோம்.
சுழிக் காற்றில் சிக்கிக் கொண்ட வந்தியத் தேவனோடு நாமும் சிக்கிக் கொள்கிறோம். பொன்னியின் செல்வரையும் வந்தியத் தேவனையும் காப்பாற்றும் பூங்குழலி, நம்மையும் காப்பாற்றிக் கரைசேர்க்கிறாள்.
மூர்க்க குணவானாக விளங்குகின்ற ஆதித்த கரிகாலரை நெருங்குவதற்கு நாமும் அஞ்சுகிறோம்.
எங்கே மாயக்காரி நந்தினியின் மோகவலையில் நாமும் சிக்கிக் கொள்வோமோ என்று பயப்படுகிறோம். நந்தினியின் வெகுண்ட பார்வை நம்மையும், கதிகலங்கடிக்கிறது.
24 போர்க்களங்களில், 64 போர் காயங்களைப் பெற்ற பழுவேட்டரையரின் வீரத்தைக் கண்டு மெச்சுகிறோம். அதே பழுவேட்டரையர் நந்தினியிடம் சிக்கிக் கொண்டு தனது கடமைகளிலிருந்து பிறழும்போது, பரிதாபப் படுகிறோம்.
ஒற்று வேலை செய்யும் ஆழ்வார்க்கடியானின் கெட்டிக்காரத்தனத்தினை கண்டு மெய் சிலிர்த்துப் போகிறோம். பள்ளிப் படைக்கு அருகில் அவர் படும் பாட்டினைக் கண்டு நாமும் அச்சம் கொள்கிறோம்.
அமைச்சர் அனிருத்த பிரம்மராயரின் மதி நுட்பம் கண்டு வியந்து போகிறோம்.
பாண்டியர்களின் ஆபத்துதவிகளான, இரவிதாசன், சோமன்சாம்பவன், இடும்பன்காரி, தேவராளன் என்னும் பரமேச்சுவரன் முதலானோர்களின் சதிச் செயல்களைக் கண்டு நாமும் அவர்களின் மீது கோபம் கொள்கிறோம்.
மகளாக, சகோதரியாக, வானதியின் அன்புத் தோழியாக, அமைச்சரே கண்டு வியந்து போகும் மதியூகியாக, வந்தியத்தேவனின் உள்ளம் கவர்ந்த தேவதையாக -- இப்படி பலகோணங்களைத் தன்னகத்தே கொண்டுள்ள குந்தவை பிராட்டியின் நற் செயல்கள் யாவும் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றது.
நண்பனை
துரோகி என்று தவராகப் புரிந்துகொள்ளும் கந்தன்மாறனைக் கண்டு முதலில் நமக்குக் கோபம் வருகின்றது. அவனே, பிந்நாளில் திருந்தி, வந்தியத் தேவனிடம் மன்னிப்புக் கேட்கும்போது, அவன் மீது நமக்கு கருணை தோன்றுகிறது.
"இனியபுனல் அருவிதவழ்
இன்பமலைச் சாரலிலே
கனிகுலவும் மரநிழலில்
கரம்பிடித்து உகந்ததெல்லாம்
கனவுதானோடி-சகியே
நினைவுதானோடி!”

புன்னைமரச் சோலையிலே
பொன்னொளிரும் மாலையிலே
என்னைவரச் சொல்லி அவர்
கன்னல் மொழி பகர்ந்ததெல்லாம்
சொப்பனந்தானோடி - அந்த
அற்புதம் பொய்யோடி!

கட்டுக்காவல் தான் கடந்து
கள்ளரைப்போல் மெள்ளவந்து
மட்டில்லாத காதலுடன்
கட்டி முத்தம் ஈந்ததெல்லாம்
நிகழ்ந்ததுண்டோடி - நாங்கள்
மகிழ்ந்ததுண்டோடி!"
என்று, மணிமேகலை, நீராழி மண்டபத்தில் வந்தியத்தேவன், ஆதித்த கரிகாலர், நந்தினி ஆகியோருடன் மகிழ்ச்சியான தருணத்தில் பாடும்போது நாமும் உள்ளத்தில் உவகை கொள்கிறோம். அதே மணிமேகலை இறுதி கட்டத்தில், சோகம் ததும்ப யாழிசைத்துப் பாடியபோதும், இறுதியாக அவள் வந்தியத்தேவன் மடியில் படுத்துக்கொண்டு, உயிர் துறக்கும்போதும், மணிமேகலையை எண்ணி வந்தியத்தேவன் கலங்கும்போதும், உண்மையாகவே நமது கண்களில் இருந்தும், தாரை தாரையாகக் கண்ணீர் பெருகுகிறது!.
இப்படி, பல கதை மாந்தர்களைப் பற்றிச் சொல்லிக்கொண்டே போகலாம். சொல்லப்பட்ட அத்தனை உணர்வுகளும் ஒலிக்குறிப்பின் ஊடாகவே நமக்குப் புலனாகின்றன. என்பதை மீண்டும் அழுத்தமாகச் சொல்லியே ஆகவேண்டும்.

கதைக் களத்தைப் பிரதிபலிக்கும் பின்னணி இசை
இவை மட்டும் தானா? கதை நிகழ்ச்சிகளைப் புரிந்துகொள்ளவும், இந்த ஒலிப் புத்தகம் நமக்கு துணை புரிகின்றது.
அருள்மொழிவர்மரும், வந்தியத்தேவனும் துவந்த யுத்தம் செய்யும் காட்சி மிக பிரம்மாண்டமான பின்னணி இசையுடன் ஒலிப்பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.

“இந்தக் கதைக்குப் பெயர் அளித்த அரசிளங் குமாரரை, தமிழகத்தின் சரித்திரத்திலேயே இணை யாரும் சொல்ல முடியாத வீராதி வீரரை, சோழ மன்னர் குலத்தை அழியாப்புகழ் பெற்ற அமரர் குலமாக்கினவரை, பின்னால் இராஜராஜர் என்று பெயர்பெறப்போகும் அருள்மொழிவர்மரை, இவ்விதம் சமயமில்லாத சமயத்தில் அசந்தர்ப்பமான நிலைமையில், இராஜகுல சின்னம் எதுவும் இல்லாமல் நேயர்களுக்கு அறிமுகம் செய்துவைக்கும்படி நேர்ந்துவிட்டது. இது நேயர்களுக்குச் சிறிது மனக் குறை அளிக்கக் கூடியது இயற்கைதான்! ஆயினும் என்ன செய்யலாம்? நம் கதாநாயகனாகிய வந்தியத்தேவனே இப்போதுதான் அவரை முதன் முதலில் சந்தித்திருக்கிறான் என்றால், நாம் எப்படி அவரை முன்னதாகப் பார்த்திருக்க முடியும்!”
[பொன்னியின் செல்வன் பாகம் 2 அத்தியாயம் 30 துவந்த யுத்தம்]
இந்த கட்டங்களில், சரியான பின்னணி இசையினை ஒலிக்கச் செய்து, நம்மின் உடல் முழுதும் மயிர் பூச் சொரியும்படி செய்திருக்கிறார்கள்.

இன்னொரு காட்சி:
“இளவரசர் அருள்மொழிவர்மரும், ஆழ்வார்க்கடியானும், வந்தியத்தேவனும் அநுராதபுரத்தின் வீதியில் நிலா வெளிச்சத்தில் நடந்து கொண்டிருந்தார்கள். ------------ "நம்மில் யார் வயதானவர், யாருடைய பிராயம் முடியப்போகிறது என்பது யாருக்குத் தெரியும்?" இப்படி அவர்கள் பேசியபோது வீதியின் ஓரமாக ஒரு பழைய மாளிகையின் சமீபம் போய்க் கொண்டிருந்தார்கள். வீதிக்கு எதிர்ப் புறத்தில் யாரோ கையைத் தட்டும் சப்தம் கேட்டது. சப்தம் கேட்ட இடத்தில் ஓர் உருவம் நின்று கொண்டிருந்தது. "இப்படி வாருங்கள்!" என்று கூறி, இளவரசர் அந்த உருவத்தை நோக்கி வீதியைக் கடந்து போனார். மற்றவர்களும் தொடர்ந்து போனார்கள். அவர்கள் பாதி வீதியைக் கடந்து கொண்டிருந்தபோது பின்னால் பெரிய தடபுடல் சத்தம் கேட்டது; திரும்பிப் பார்த்தார்கள். அவர்கள் எந்த வீட்டின் ஓரமாகப் போய்க் கொண்டிருந்தார்களோ அதன் மேல் மாடத்தின் முகப்பு இடிந்து விழுந்து கொண்டிருந்தது! அவர்கள் அங்கே வீதியைக் கடக்கத் திரும்பியிராவிட்டால் அவர்கள் தலைமேலே விழுந்து கொன்றிருக்கும்! ஒரு கண நேர வித்தியாசத்தில் மூன்று உயிர்கள் பிழைத்தன. அதுவும் எப்பேர்ப்பட்ட உயிர்கள்! 'நம்மில் யாருக்குப் பிராயம் முடியப் போகிறது என்று யாருக்குத் தெரியும்?' என்று பொன்னியின் செல்வர் கூறியது எவ்வளவு உண்மையான வார்த்தை?' இப்படி எண்ணி வந்தியத்தேவன் நடு வீதியில் நின்று பார்த்துக்கொண்டிருக்க, இருவரும் அப்பால் சென்றார்கள்.”
[பொன்னியின் செல்வன் பாகம் 2 அத்தியாயம் 35 இலங்கைச் சிங்காதனம்]
இந்த காட்சியினை, ஒலிப் புத்தகத்தின் வழியாகக் கேட்கும் பொழுது, அந்த மாளிகை இடிந்து விழுவதனை நமது அகக் கண்கள் நன்றாகக் காண்கின்றன. நான் இந்தக் காட்சியினைக் கேட்டுக்கொண்டிருந்த போது என்னையும் அறியாமல், “அம்மா!” என்று உரத்தக் குரலில் சத்தமிட்டேன்.
அமரர் கல்கி, தனது புதினத்தின் மூலம் வாசகர்களின் இதையத்தில் எத்தகைய உணர்வுகளை தோற்றுவிக்க நினைத்தாரோ? அவ்வளவு உணர்வுகளையும் கிட்டத்தட்ட இந்த ஒலிப் புத்தகம் நிறைவு செய்திருக்கின்றது.
பாத்திரம் புனைந்த நற்கலைஞர்கள்:
புத்தகத்தைப் பற்றி மட்டும் பேசிக்கொண்டிருக்கிறோமே, இவ்வளவு சிறப்பாக இந்தப் புத்தகம் பேசப்படுவதர்க்கு காரணம், இதில் பங்கேற்ற பாத்திரங்களான கலைஞர்களல்லவா? அவர்களின் சிறப்புக்களை எடுத்துச் சொல்லாமல் இருக்க முடியுமா? கல்கி இக்கதையில் முதலில் நமக்கு அறிமுகம் செய்வது வந்தியத்தேவனைத் தானே! நாமும் அங்கிருந்து தொடர்ந்தால்தானே ஆற்றொழுக்காக இருக்கும்.
வந்தியத்தேவன் பாத்திரத்தைத் தாங்கி வலம் வரும், திரு இளங்கோ அவர்கள் மிக நேர்த்தியாக நடித்திருக்கின்றார். கதையின் ஆரம்பத்தில் இவரது குரல், அந்த பாத்திரத்துக்கு பொருந்துமா? என்ற கேள்வி நம் மனத்தில் எழுவதென்னவோ, உண்மைதான். ஒரு மாபெரும் வீரனாக, சில இடங்களில் கோமாளியாக, தண்ணீரைக்கண்டு அஞ்சும் பயங்கொள்ளியாக! இப்படி பல பரிமாணங்களில்; அமரர் கல்கி அவர்கள் வந்தியத்தேவன் பாத்திரத்தைப் படைத்திருக்கிறார் என்பதை உணரும்போது, இந்த பாத்திரப்படைப்பிர்க்கு, திரு இளங்கோ முற்றிலுமாகப் பொருந்தி இருக்கிறார் என்பதை நாமும் நன்கு புரிந்துகொள்வோம்.
ஆதித்தகரிகாலராக வரும் திரு வெற்றி விக்னேஷ் அவர்களை,ஏற்கனவே, சிவகாமியின் சபதம் ஒலிப்புத்தகத்தில், நரசிம்மவர்மராக நாம் பார்த்திருக்கிறோம்.
அந்த பாதிப்பு, பொன்னியின் செல்வனைக் கேட்கும்பொழுது நம் மனக்கண்முன் நிழலாடினாலும் கூட, இவரைத் தவிர வேறு யாரும் ஆதித்த கரிகாலராக நடித்தாலும் நம் மனம் ஏற்றுக் கொள்ளாது.
அருள்மொழிவர்மராக வலம் வரும், திரு அநந்தன் அவர்களின் குரல், இளவரசரின் வாலிப வயதுக்கு ஏற்றதாக அமைந்திருக்கிறது.
சிவகாமியின் சபதத்தில் ஆயனசிற்பியாக நடித்த திரு கல்யாண்ஜி, மகேந்திர வர்மப்பல்லவராக வலம்வரும் திரு s.k ஜெயக்குமார், புலிகேசியாக பாத்திரமேற்ற திரு வேலுச்சாமி, பரஞ்சோதியாக உலா வந்த திரு ஜெய் இவர்கள் நால்வரும் பொன்னியின் செல்வனில் முறையே அனிருத்த பிரம்ம ராயர், சுந்தரசோழர், பெரிய பழுவேட்டரையர், கந்தன்மாறன் ஆகிய பாத்திரங்களைத் தாங்கி நடித்துள்ளனர். இந்த ஒலிப்புத்தகத்தில் இவர்கள் நால்வரும் தங்களது நடிப்பில், புதிய பரிமாணங்களை வெளிப்படுத்தியுள்ளனர்.
பாரிய தோற்றம் கொண்டவராக கல்கியால் படைக்கப்பட்ட பாத்திரம்தான், ஆழ்வார்க்கடியான். அந்த பாரிய தோற்றத்தினை தமது குரல்மூலமாகவே நமது மனக்கண்முன் நிறுத்துகின்றார்; அந்தப் பாத்திரத்தைத் தாங்கி நடித்த திரு ரமேஷ் அவர்கள். உண்மையைச் சொன்னால், அவருடைய பெயரேகூட நமது நினைவில் இருக்குமா? என்று தெரியவில்லை. வந்தியத்தேவனுக்கு பயணத்தில் துணையாக வரும்போதும் சரி, பாண்டிய ஆபத்துதவிகளின் கூட்டு சதிகளை ஒற்றரியும்போதும் சரி, தமது குருவுடன் சேர்ந்து அளவளாவும்போதும் சரி! சூழலுக்கேற்ற நடிப்புகளை வெளிப்படுத்தி இருக்கின்றார் நம்ம ஆழ்வார்க்கடியான் சார்.
அட, யாருங்க அது? கடலில் படகு தள்ளிக்கொண்டிருக்கிறது? ஓ! நம்ம சமுத்திரக்குமாரியா? இவர்களை மறக்கமுடியுமா? பூங்குழலியாகப் பாத்திரமேற்ற, ஸ்ரீவித்யா அவர்கள். அப்படியே பூங்குழலியை நம் அகக் கண்முன் கொண்டுவந்திருக்கிறார்.
பொன்னியின் செல்வனைப் புத்தகமாகப் படித்தபோது, நான் அதிகம் காதலித்த பெண் பூங்குழலி தான். அந்தப் பாத்திரத்திற்கு, முழுமையாக உயிர் கொடுத்திருக்கிறார் ஸ்ரீவித்தியா அவர்கள்.
கல்கியின் கற்பனயில் உதித்த பூங்குழலி இப்படித்தான் இருப்பாளோ என்று எண்ணும் அளவிற்கு இவருடய நடிப்பு அமைந்திருந்தது.

அழகான தோற்றம், தன்னைப் பார்க்கும் ஆடவர்களை தன் மோக வலையில் விழவைக்கும் ஆற்றல், தன்னை வஞ்சித்தவர்களைப் பழிவாங்கும் குணம். இப்படி பலவகைப்பட்ட கோணங்களில் வலம்வரும் நந்தினிக்கு, திருமதி ஃபார்த்திமா பாபு அவர்கள், மிகவும் பொருத்தமாக அமைந்திருக்கிறார். பழுவேட்டரையரிடம் பேசும்போது சாந்தமாகவும், மந்திரவாதியுடன் பேசும்போது ஆவேசத்துடனும் பேசும் நந்தினி, வந்தியத்தேவன், கந்தமாரன், பார்த்திபேந்திரன் இவர்களுடன் பேசும்போது, மயக்கும் மொழியைப் பயன் படுத்துவாள். இந்த பரிமாணத்தை சரியாக உள்வாங்கிக்கொண்டு நடித்திருக்கிறார் திருமதி ஃபார்த்திமா பாபு அவர்கள். காட்சி ஊடகத்தில் நடித்துப் பழக்கப்பட்டவராக இருந்தாலும், ஒலிக்குறிப்பின் வாயிலாகவும் தமது நடிப்பாற்றலை வெளிப்படுத்தி இருக்கும் விதம் பாராட்டிற்குரியது.
நான் மேலே குறிப்பிட்டதுபோல், மகளாக, சகோதரியாக, வானதியின் அன்புத் தோழியாக, அமைச்சரே கண்டு வியந்து போகும் மதியூகியாக, வந்தியத்தேவனின் உள்ளம் கவர்ந்த தேவதையாக. இப்படி பலகோணங்களைத் தன்னகத்தே கொண்டுள்ள, குந்தவை பாத்திரத்தினை ஏற்று நடித்துள்ள கீர்த்திக்குறியவர், கீர்த்தி அம்மையார். அவரது குரலினை சாதனை உள்ளிட்ட பல திரைப்படங்களில் கேட்டிருக்கிறோம். இயல்பாகவே அவர் ஒரு பின்னணிக் குரல் கலைஞர் என்பதால், அவருக்கு இதெல்லாம் சர்வ சாதாரணம் தான். வானதியைப் பார்த்து, அடி, கள்ளி! என்று கூறும்போதெல்லாம், நம் உள்ளமெங்கும் ஒரே தேன் மழைதான்.
பயங்கொள்ளியாக படைக்கப்பட்ட வானதிக்கு, சரியான குரல் தேர்வு, வித்தியா சக்தி. யானைப் பாகனை அழைக்கும் விதம் அருமை! அவருக்கு நம் பாராட்டுகள்.
செம்பியன்மாதேவியாக நடித்த கீதா, வானமாதேவியாக வலம் வந்த பரிமளா ராஜகுமாரன், மணிமேகலையாக பாத்திரமேற்ற மித்ரா, ஆகியோரின் பங்களிப்பினை நாம் கண்டிப்பாக பாராட்டியே ஆகவேண்டும்.
பாண்டிய ஆபத்துதவிகளான இரவிதாசன், சோமன்சாம்பவன், இடும்பன் காரி, தேவராளன் ஆகிய பாத்திரங்களைத் தாங்கி நடித்த, நேத்தாஜி, வில்ஸன்ட், k.b குமார், இரவிஷங்கர் ஆகியோர், கதை அமைப்போடு ஒன்றி நடித்துள்ளனர். இந்த இணை, வில்லத்தனத்திர்க்கு சரியாகப் பொருந்தி இருக்கிறது.
பார்த்திபேந்திரப்பல்லவராக குரல்கொடுத்த t.m.c கிருஷ்ணா, மலையமான் பாத்திரம் தாங்கிய போத்திலிங்கம், பூதி விக்ரமகேசரியாக வலம்வந்த சபாபதி, சின்னப் பழுவேட்டரையராக தஞ்சை கோட்டையைக் காவல் புரிந்த, ராஜேஷ்கண்ணா, சம்புவரையராக நடித்த பூங்குன்றன், சேந்தன் அமுதனாக நடித்த முத்துக்குமார், மதுராந்தகனாக நடித்த சத்தீஷ், விஜயாலைய சோழராக நடித்த நம்மால் பெயர் தெரிந்துகொள்ள இயலாப் பெரியவர். இவர்கள் அனைவரும் இந்த ஒலிப்புத்தகத்தில் தங்களுடைய நடிப்புத்திறத்தைத் திறம்பட வெளிப்படுத்தி இருக்கின்றார்கள்.
இன்னும் பலரை நாம் இங்கு குறிப்பிடாமல் விட்டிருக்கலாம், அதர்க்குக் காரணம், எமது மறதியே தவிர, வேரொன்றுமில்லை.

பாடலும் இசையும்:
இந்த ஒலிப்புத்தகத்தில் பாடல்களைப் பாடியவர்கள் பாடிய பாடல்கள் அனைத்தும் அருமை! குறிப்பாக; ‘அலைக்கடல்தான் ஓய்ந்திருக்க’, ‘இனியபுனல் அருவிதவழ்’ என்ற இரு பாடலையும் மிகவும் அருமையாகப் பாடி இருக்கிறார்கள் அந்தப் பாடல்களைப் பாடிய கலைஞர்கள்.
நன்கு வடிவமைக்கப்பட்ட பின்னணி இசை நம் நெஞ்சை அள்ளுகின்றது. குறிப்பாக, நந்தினி இடம் பெரும் காட்சிகளில் ஒலிக்கும் ஒரு திகிலூட்டும் இசை, இரவிதாசன் எழுப்பும் ஆந்தையின் குரல், பூங்குழலி வருகின்றபோது இடம்பெரும் ஒரு பின்னணி இசை, மந்தாகிணிதேவி எழுப்பும் வினோதக் குரலிசை. ஆகியவை சிறப்பித்துச் சொல்லத்தக்கன.
பொதுவாக, ஒலிப்புத்தகம் என்றால் ஒருவர் படித்து ஒலிப்பதிவு செய்து வழங்குவதுதான் வழக்கம். அப்படி இல்லாமல், ஒவ்வொரு கதாப்பாத்திரத்திர்க்கும் ஒவ்வொருவரைக்கொண்டு நடிக்கச்செய்து, உரிய இடங்களில் பின்னணி இசையினை வடிவமைத்து, இடம், காலம், களம் ஆகியவற்றை கதைப்போக்கி ஊடாகவே நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்தி இருக்கிறது இந்தப்புத்தகம்.
இந்தப் புத்தக உருவாக்கத்திர்க்கு பொருள் செலவிட்ட,
திரு c.k வெங்கட்ராமன், திறம்பட இப்புத்தகத்தினை வடிவமைத்த திரு பாம்பே கண்ணன் ஆகியோருக்கும் நமது நெஞ்சார்ந்த பாராட்டுகளும், நன்றிகளும். திரு பாம்பே கண்ணன் அவர்களை “ஒலி தமிழ் வேந்தன்” என்று அழைக்கத் தோன்றுகின்றது.
இறுதியாக:
மேற்கூறிய கருத்துகளின் வழியாக இப்புத்தகம் எவ்வளவு உழைப்பினை வாங்கி இருக்கிறது என்று நிச்சயமாக நாம் தெரிந்துகொண்டிருப்போமல்லவா? இனியாவது இதர்க்குரிய பொருளைச் செலவழித்து, நாம் இந்தப் புத்தகத்தினை படிக்க முயலலாமே! ஒரே ஒரு 600 ரூபாய் செலவழித்தால் போதும்! பொன்னியின் செல்வன் என்ற ஒலிதமிழ்ச் சுரங்கம் இதோ, உங்களைத் தேடிவரும். ஒரு 78 மணி நேரம் உங்கள் வாழ்வில் பொன்னான நேரமாக மாறும்.
நல்லப் புத்தகங்களை பொருட் செலவிட்டு படிப்போம், நல்லுழைப்பிற்கு உரிய நன்மதிப்பினை அளிப்போம்.

மிக்க நன்றி திவாகர் அவர்களே

Photo: தமிழ் பேராசிரியர் DR திவாகர் (ராணி மேரி கல்லுரி) அவர்கள் என்னுடைய பொன்னியின் செல்வனை ஒலிப்புத்தகம் கேட்டுவிட்டுத் எழுதிய விமர்சனம் உங்கள் கவனத்திற்கு முடிந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்

பொன்னியின் செல்வன் என்னும், ஒலிதமிழ்ச் செல்வம்:

Wednesday, August 27, 2014

நாடக அனுபவங்கள் 3 ம் பகுதி

நான் நாகப்பட்டினத்தை விட்டு பள்ளிப்படிப்பு முடிந்து புறப்பட்ட போது நான் இழந்தவை 3 விஷயங்கள்

ஒன்று சமஸ்க்ரிதம்

என் தாத்தா நான் சமஸ்க்ரிதம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று எவ்வளவோ பிரயத்தனப்பட்டார் அதற்காக என்னை மகாதேவா சர்மா என்னும் சமஸ்க்ரத பண்டிதரிடம் டியூஷனுக்கு அனுப்பினார் எனக்கு ராம சப்தம் வரவில்லை என்பதால் அவர் முகம் மூஞ்சுருபோல் இருக்கிறது என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன்

அடுத்தது ஹிந்தி....

1965 ம் வருடம் அது hindi எதிர்ப்பு தீவிரமாக நடந்து கொண்டிருந்த காலகட்டம் இந்த அரசியல் வாதிகளின் வார்த்தைகளில் மயங்கி ஹிந்தி எதோ தீண்டத்தகாத மொழி என்று நினைத்து அதையும் படிக்காமல் விட்டேன்! இந்த நேரத்தில் தமிழை ப்பற்றி வேறு ஏதாவது ஒரு அரசியல்வாதி அப்படி சொல்லியிருந்தால் இளம் மாணவர்கள் அதற்கும் மயங்கி இருப்பார்களோ என்னவோ யார் கண்டது?

மூன்றாவது சரித்திரம்

இதற்கு நானே தான் பொறுப்பு

சரித்திர காலநிகழ்வுகளை நினைவில் வைத்துக்கொள்ள சோம்பல் பட்டு சரித்திரம் சமுகம் பூகோளம் எதுவும் வேண்டாமென்று பத்தாம் வகுப்பில் பொறியியல் பிரிவு எடுத்து படித்து பின்னால் அதையும் தொடராமல் தாவரயியல் படித்தவன் நான்

சரி இதற்கும் நாடக அனுபவங்களுக்கும் என்ன சம்மந்தம் என்றுதானே கேட்கிறிர்கள்?
பின்னால் ஒரு காலகட்டத்தில் இவற்றின் அருமையை நான் நடிப்பில் கற்றுக்கொண்டது பற்றி சில காலம் கழித்துவரும் பகுதிகளில் விளக்கமாக கூறுகிறேன்

இப்போது

நாகை விட்டு வந்து கல்லூரியில் நாடகம் பற்றி சொல்லிக்கொண்டிருந்தேன் அல்லவா

அங்கே மீன்டும் வருவோம்

sharma விடம் நான் அந்த வேடத்தில் நடிக்கிறேன் என்று சொன்னவுடன் அவர் மகிழ்ச்சியுடன் என்னை ராயப்பேட்டையில் உள்ள கௌடியா மடத்துக்கருகே ஒரு வீட்டிற்கு அழைத்துசென்றார்.

அங்கே ஒரு தாடி வைத்த ஒரு இளைஞர் எங்களை வரவேற்றார்

அவர் என்னை உற்றுப்பார்த்தார்

அவர் பெயர் நாராயண சாமீ என்றும் அவர் சைதன்யா டியூஷன் சென்டர் நடத்தி வரும் ஒரு ஆசிரியர் என்றும் அவர்தான் நாங்கள் போடப்போகும் நாடகத்திற்கு கதாசிரியர் இயக்குனர் என்றும் அறிந்து கொண்டேன்

அவருடைய வலது கையில் ஆள்காட்டி விரல் மட்டும் எப்போதும் யாரையோ சுட்டிக்காட்டி கொண்டிருந்தது!!

மற்ற விரல்கள் மடங்குவது போல அது மடங்கவில்லை.
எனக்கென்னவோ ஒழுங்கா நடிக்கலைன்னா கொன்னுடுவேன்னு சொல்லற மாத்ரி இருந்தது

அவர் என்னைப்பார்த்துவிட்டு குறிப்பாக என் கண்களைப்பார்த்துவிட்டு மிகப்பொருத்தம் என்றார்
ஒத்திகை துவங்கி விட்டது

ஷர்மாவிற்கு ஒரு விஞ்ஞானி வேடம் மிக உணர்ச்சிகரமாக நடிக்க வேண்டிய பாத்திரம் அது

இந்த பாத்திரத்தில் நடிக்கும் போதுதான் நாரயணசாமி சார் உணர்ச்சிவசப்பட்டு மேஜையை குத்த மேஜைமேல் இருந்த சில கண்ணாடி குடுவைகள் உடைந்து அவர் கையில் கண்ணாடி துண்டுகள் புகுந்து கைவிரலின் நரம்பு வெட்டப்பட்டு இந்த எச்சரிக்கை முத்திரையில் நிரந்தரமாக தங்கிவிட்டது என கேள்விப்பட்டேன்

(இவர்தான் பின்னாளில் ஒரு விரல் நாராயணசாமி என்றும் தாடி நாராயணசாமி என்றும் எதிரொலி நாராயணசாமி என்றும் சென்னை தொலைக்காட்சியில் வெகு பிரபலமாக விளங்கி ய திரு T S NARAYANASWAMY அவர்கள்)

ஓஹோ!! இன்னும் எனக்கு என்ன வேடம் என்ற suspense விஷயத்தை உடைக்கவில்லை இல்லையா?

நீங்களெல்லாம் எதிர்பார்த்த அளவிற்கு ஒண்ணும் பெரிய மர்மம் இல்லை

அந்த நாடகத்தின் கதாநாயகி நான்!!!!

அவ்வளவுதான்!!

கிண்டி பொறியியல் கல்லுரி மாணவர்கள் நாடகங்கள் நடக்கும்போது விசிலடித்து ஆர்பாடம் செய்து கிண்டலடித்து மகிழ்வதில பெயர் போனவர்கள்

பெண்கள் கல்லூரியிலிருந்து வரும் நாடகம் என்றால் கேட்க வேண்டாம் ஒரு பெண் மேடையில் தோன்றி நடித்துவிட்டு எல்லா வசனத்தையும் பேசிவிட்டு உள்ளே வந்து விட்டாளானால் அவளுக்கு oscar பரிசே கொடுக்கலாம்

அப்படிப்பட்ட இடத்திற்கு ஒரு நாடகத்த்தில் பெண்வேடம் ஒரு ஆண் என்றால் யோசித்துபாருங்கள்

அதை செய்யவும் ஒருவன் துணிந்து விட்டால் அவனை என்னவென்று சொல்வது என்ன செய்வது??

விவேகானந்தா கல்லூரியில் பெண்களுக்கு அப்போது நோ entry
ஒப்புக்கொண்ட என்ன விட ஷர்மாவுக்கு அவனே புடவை அணிந்து நடிக்க போவதுபோல....ஒத்திகையின் பொது அடிக்கடி பாத்ரூம் போய் வந்தான்

அடிக்கடி என்னை பரிதாபமாக பார்த்தான்

மீண்டும் ஒருமுறை நாடகத்தை cancel செய்து விடலாமா என யோசித்தான்

ஆனால் நாராயணசாமிக்கு என்ன பதில் சொல்வது என்று புரியவில்லை

அவன் என்னைப்பார்க்கும் போதேல்லாம் டாக்டரால் கைவிடப்பட்ட நோயாளியை பார்பதுபோலவே இருக்கும்

ஆனால் எனக்கு இதெல்லாம் எதுவுமே தோன்றவில்லை நாம் நடிக்கப்போகிறோம்

அதுவும் சென்னை மேடையில்

அதுவும் guindy engineering college ல்

நான் ஒத்திகையில் கலந்துகொண்டு வசனம் பேசி பெண் போல நடிக்க ஆரம்பித்தேன் அந்த நாளும் வந்தது.........
(மறுபடியும் சந்திப்போம்)
  • நாடக அனுபவங்கள் பகுதி 2

    அது என்னவோ என்னுடடைய நடிப்பு ஆர்வம் என்பது பூர்வ ஜன்ம பந்தமா அல்லது ஏதாவது genetic கோளாறா தெரியவில்லை

    ஏனென்றால் இது தொட்டில் பழக்கம் போல மிக சிறிய வயதிலேயே என்னை பற்றிக்கொண்டது இது எந்த அளவுக்கு பரவியது என்றால்.......

    எனக்கு தெரிந்தது இரண்டே விளையாட்டுகள்தான்:
    ஒன்று ஒரு கிருஷ்ணர் விக்ரகத்தை வைத்துக்கொண்டு வீட்டிலிருக்கும் பால் தயிர் சந்தனம் முதலியவற்றை வைத்து அபிஷகம் செய்து மூன்று கட்டு வீட்டைசுற்றி ஊர்வலமாக தூக்கி செல்வது......

    .மற்றொன்று கையில் கிடைத்த பவுடர் எடுத்து பூசிக்கொண்டு கட்டபொம்மன் வசனம் பேசுவது

    என் நடிப்பு ஆசை எந்த அளவுக்கு முற்றி போனது என்றால் அவ்வப்போது சென்னைக்கு விடுமுறைக்கு வரும்போது என் சித்தப்பா விட்டில் தங்குவது வழக்கம் எல்லோரும் சென்னை வந்தால் MARINA போவர்கள் MUSEUM போவர்கள் ஆனால் நான் என் அண்ணன்மார்களை தொணப்பி எடுத்து எங்கே கூட்டிபோகசொல்வேன் தெரியுமா??

    அவர்கள் சைக்கிள் ஓட்ட நான் பின் சீடடில் அமர்ந்து மாம்பலத்தில் உள்ள ஒவ்வொரு சினிமா நடிகன் வீடாக சென்று அந்தந்த GATE களைப் பார்த்து விட்டு மகிழ்ச்சியாக திரும்புவேன்.....
    1965 ம் வருடம்

    சென்னையில் விவேகானந்தா கல்லுரி
    பல நடிகர்கள் படித்த கல்லுரி
    அங்கே எனக்கு PUC ல் இடம் கிடைத்தது அப்பாவுக்கு ஆந்திராவில் வேலை என்பதால் HOSTEL வாழ்க்கை..

    மயிலாப்பூர் வாசம்

    அருகிலேயே காமதேனு கபாலி திரை அரங்குகள் கேட்கவேண்டுமா?

    PUC ல் MINIMUM MARK வாங்கி பாஸ் செய்து அங்கேயே BOTANY மாணவனாக தொடர்ந்தேன்
    நான் படித்த அதே நேரத்தில் தான் எங்கள் கல்லுரியில் GV ANANDA PICTURES SURESH போன்றவர்கள் படித்தனர்

    ‘சோ’ வின் VIVEKA FINE ARTS உருவானது இங்கேதான்
    எங்கள் HOSTEL க்கு எதிரில் அமைந்துள்ளது MFAC அரங்கம்
    ஒவ்வொரு முறை நாடக அரங்கேறும்போதும் முதல் நாள் GRAND REHEARSAL நடைபெறும்,

    அதற்கு AUDIENCE யார் தெரியுமா
    விடுதி மாணவர்களாகிய நாங்கள்தான்
    யார் வருகிறார்களோ இல்லையோ நான் சாப்பாடு முடிந்தவுடன் அங்கே போய் விடுவேன்

    அப்போதெல்லாம் இந்த இறுதி ஒத்திகைக்கு அரங்கம் நிறைந்து இருக்கும் இப்போ தெல்லாம் இந்த ஒத்திகைக்கு நடிப்பவர்களை விட குறைவாகத்தான் அரங்கில் ஆட்களைப்பார்க்க முடியும்
    ஏன் சில சமயம் நாடத்திற்கே அந்த நிலைமைதான்!!

    சோ வின் நாடகங்களுக்கு குறிப்பாக எங்களை HOSTEL ல் வந்து மாணவர்களை அழைப்பார்கள்
    கூட்டமாக செல்வோம்
    என் உள்ளே நாமும் இப்படி ஒரு நாள் சென்னையில் மேடை ஏற மாட்டோமா என்ற ஏக்கம் துளிர் விட்டது

    இதைத் தவிர சென்னையில் பிரபலமான குழுக்களாக ராகினி RECREATION. UAA, நேஷனல் THEATRES, என்று பல குழுக்கள் இருந்தன

    எனக்கென்னவோ அன்றையிலிருந்தே UAA (UNITED AMATEUR ARTISTE) எனப்படும் YGP குழுவின் மேல் ஒரு கண்

    சென்னையில் நடக்கும் நாடகங்களைப் பார்த்து மேடை ஏற மாட்டோமா என்று இருத்த எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது
    எங்கள் கல்லூரியிலேயே கிடைத்தது

    கிடைத்தது என்று சொல்வதை விட நான் ஓடிப்போய் பறித்துக் கொண்டேன் என சொல்லலாம்
    சென்னை கல்லுரிகளுக்கிடையேயான நாடகப் போட்டி கிண்டி பொறியியல் கல்லூரியில் நடக்கும்
    இந்த போட்டி நாடகத்திற்கு முதலில் எழுதி உருவானவர்கள்தான் மௌலி, crazy mohan போன்றவர்கள்

    எங்கள் கல்லூரியும் அதில் பங்கெடுத்துக்கொள்ளும்..
    நான் என் நடிப்பு ஆர்வத்தை பற்றி நண்பர்களிடம் அடிக்கடி சொல்வதுண்டு அதனால் என் நண்பன் ஒருவன் ஒருநாள், நாடக போட்டிக்கு கல்லூரியில் நாடகம் தயாராகிறது என்றும் ஒத்திகை நடக்கிறதென்றும் சொன்னான்

    யாரோ sharma எண்ணும் மாணவன்தான் அதற்கான ஏற்பாடுகளை செய்வதாக கூறினான்

    ஓடிபோய் ஷர்மாவைப்பார்த்தேன் எல்லா பாத்திரங்களுக்கும் ஆட்கள் வந்துவிட்டதாகவும் நாடகத்திற்கு இன்னும் இரண்டே நாள்தான் இருக்கும் நிலைமையில் ஒரே ஒரு பாத்திரத்திற்கு யாருமே நடிக்க தயாராக இல்லாததால் நாடகமே நின்று போய்விடும் நிலைமை என்று கண்ணிர் மல்க தெரிவித்த போது நான் தயார் என்று (கூறினேன்) கூவினேன்

    எனக்குதான் எப்படியாவது நடித்தால் போதுமே!!!
    Sharma என்னைக் கட்டித்தழுவி Script ஐ கையில் கொடுக்க

    கால் கிழே பாவாமல் ஆனந்தத்தில் மிதந்தேன்.

    எல்லோரும் செய்ய மாட்டேன் என்று ஒதுங்கிய பாத்திரம் என்ன தெரியுமா...?

    நான் சென்னையில் போட்ட முதல் வேடம் என்ன தெரியுமா??

    என் முதல் மேடை நாடகம் சென்னையில் நடந்த போது ஏற்பட்ட சுவையான அனுபவத்தை அப்புறம் சொல்கிறேனே
  • என்னுடைய நாடக அனுபவங்கள் பகுதி 1 ல் சகோதரியுடன் முதன் முதலில் தாயே யசோதா பாட்டிற்கு மேடையில் நடனமாடியதைப் பற்றி குறிப்பிட்டிருந்தேன் அதன் புகைப்படம் தேடி எடுத்தது
    A fan letter for PONNIYIN SELVAN AUDIO BOOK THANK YOU VERY MUCH MR Anandasubramanian Cp

    Finished listening to 78 hours of Ponniyin Selvan.
    I was crying listening to Karikala cholan's death, manimekalai's insanity and sad death.
    This novel was very good, but what made it great was the wonderful, wonderful narration, the awesome background score, each actor sooo natural and so good and had such expressions...
    Kudos to the team. Each word narrated is etched in my memory.

    Tuesday, August 26, 2014

  • என் நாடக அனுபவங்கள்

    நான் முதன் முதலில் மேடை ஏறியது நாகையில் தான். அது 1964 ம் ஆண்டு(வயது13) என்று நினைவு நண்பர்கள் எல்லாம் சேர்ந்து நாடகம் போடுவது என முடி வு செய்தோம்

    நாகைப்பட்டினத்தில் கோடையிடி வாத்தியார் என்று ஒரு drillmastder அவருக்கும் நாடகம் என்றால் உயிர் அவர் எழுதி இயக்கிய ஒரு சரித்திர நாடகத்தில் எனக்கு ஒரு முக்கியமான பாத்திரம் பக்கம் பக்கமாக வசனம், ஏற்கனவே நாடகம் நடிப்பு கனவுகளோடு இருந்த நான் ஆனந்த கூத்தாடினேன் இதற்கு முன்னால் சகோதரியுடன் “தாயே யசோதா” பாட்டிற்கு புகளுரில் கிருஷ்ணனாக வேஷமிட்டு நடனமாடிய அனுபவம் வேறு (வயது 8)

    இதைத்தவிர எல்லோரும் விரும்பி கேட்கும்போதெல்லாம் “அழகான பொண்ணுதான் அதுக்கேற்ற கண்ணுதான்” பாட்டுக்கு அடிக்கடி அபிநயம் பிடிப்பேன்

    அப்போதெல்லாம் நாகைபட்டினத்திடில் வீடு வீடு ஆக சென்று நாங்கள் சிறுவர்கள் பணம் வசூல் செய்து நாடகம் போடுவோம்
    ஒரு 4௦ பக்க நோட்டு புத்தகத்தில் எல்லோரும் தங்கள் தங்கள் அன்பளிப்பை எழுதி கையெழுத்து இடுவார்கள் எவ்வளவு என்கிறிர்களா எல்லாம் ஒரு ரூபாய் எட்டணா நாலணா தான் அதுவே 1௦௦ ரூபாய்க்கு மேல் வசுலாகிவிடும் அதிலும் என் தாத்தா வக்கீல் வெங்கடசாரியர் முதல் பெயர் எழுதி விட்டால் போதும் எல்லோரும் கொடுத்துவிடுவார்கள்

    தாத்தா தர்மம் செயவதர்கேன்றே ஒரு சுருக்குபையில் ஒரு பைசா ரெண்டு பைசா அஞ்சு பைசா என மாற்றி வைத்திருப்பார் வாசலில் தர்மம் என்று வந்தால் இல்லை என்று சொல்லாமல் கொடுத்து வந்தவர் அவர்.
    இப்போது கூட பல சமயங்களில் நான் ஆபத்துகளில் இருந்து தப்புவதற்கு காரணம் அவர் செய்த தர்மம் தான் என நினைப்பேன்

    நாடகம் அதுவும் பேரன் நாடகம் என்றால் சும்மாவா தத்தா 5 ரூபாய் என எழுதி கொடுக்க வசூல் களை கட்டியது
    தினமும் rehearsal, வசூல் வேட்டை, பக்கம் பக்கமாக வசனம்.
    எனக்கு இந்த வேஷம் என் நடிப்பு திறமைக்கு கொடுக்கப்பட்டதா அல்லது தாத்தவின் அன்பளிப்புக்குய் கொடுக்கப்பட்டதா என நினைவு இல்லை..

    ஆனால் நாடக தேவதை என்னை அவள் பிடிக்குள் கொண்டு வந்த விட்டாள்

    நாடக தினம் சௌந்திரராஜ பெருமாள் கோவில் பிரகாரத்தில் நாடகம் கூட்டம் அலை மோதியது (நாகை கடற்கரைக்கு அருகில் அல்லவா)

    மதியம் 2 மணியிலிருந்து ஒப்பனை நடந்து கொண்டிருந்தது
    Rosepowder டப்பா வாங்கி அதை தேங்காய் எண்ணையில் குழைத்து முகத்தில் அப்பியவுடனே தொண்டையில் லேசாக கிச் கிச் அடுத்து மிசை ஓட்டுவதற்கு punture ஓட்டும் பசை வாங்கி வந்து மீசை முளைக்காத உதட்டில் தடவி ஓட்டவும் கிச் கிச்....கீச் கீச் ஆனது லேசாக கனைத்துக்கொண்டே உடை மாற்றி கொண்டு மேடை ஏறவும் கோடை இடி வாத்தியார் கை குலுக்கி அனுப்பிவைத்தார்

    அவ்வளவுதான் தெரியும்

    மேடை பயமெல்லாம் துளியும் எனக்கு இல்லை ஆனால் என் குரலுக்கு இருந்தது போலிருகிறது எங்கியோ மக்களுக்கு பயந்து காணாமல் போய்விட ஒரு வசனம் கூட மறக்காமல், நான் யாருக்குமே கேட்காமல் வெறும் காற்றாக வசனம் பேசியது நிஜம்.

    முதல் மேடை நாடகம் இப்படி என்னை பொறுத்தவரை ஊமை நாடகமாக அமைந்துவிட்டது

    Rosepowder தேங்காய் எண்ணை puncture பசை இதெல்லாம் காரணம் என சிலர் கூற கண் த்ரிஷ்டிதான் என பாட்டி சுத்திப்போட அழுதுகொண்டே உறங்கிப்போனேன்

    அதுக்கப்புறம் கோடை இடி வாத்தியார் நான் நாகையில் இருந்தவரை நாடகம் போடவில்லை

    நாடக அனுபவங்கள் தொடரும்.......

  • Monday, August 25, 2014

    Audio book Ponniyin selvan

    அமரர் கல்கி அவர்களின் அமர காவியமாகிய பொன்னியின் செல்வன் ஒரு ஒலிப்புத்தகமாக வெளிவந்துள்ளது
    தமிழின் மிக சிறந்த வரலாற்று நாவல்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த புத்தகம் படித்த பிறகு தஞ்சாவூர் மற்றும் இலங்கை போய் ஒரு முறை சுற்றி பார்க்க வேண்டும் என்று கட்டாயம் அனைவருக்கும் தோன்றும்.
    வந்தியத்தேவன், குந்தவை, ராஜ ராஜ சோழன், பழுவேட்டரையர், நந்தினி, ஆழ்வார்க்கடியான் அனைவரையும் ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என்று ஆவல் உண்டாகும்
    உண்மை நிகழ்வுகளோடு அங்கங்கு கதை சேர்த்து கல்கி பிணைத்திருக்கும் இக்காவியம் என்றும் படித்தவர் அனைவர் மனதிலும் வாழும்.
    இந்த கதாபாத்திரஙகளையும் நடந்த சம்பவஙளையும் நம்மால் கண்ணால்தான் பார்க்க மூடியாது ஆனால் கேட்கவாது செய்யலாமே என்ற் ஆசையில் உருவானதுதான் இந்த ஓலிப்புத்தகம். 2000 க்கும் மேற்பட்ட பக்கஙகள் 15க்கும் மேற்பட்ட பாடல்கள். எல்லாவற்றையும் தொகுத்து ஒரு 78 மணி நேர ஒலிப்புத்தகமாக வெளியிட்டுள்ளோம்
    60க்கும் மேற்பட்ட நாடக தொலைகாட்சி கலைஞர்கள் இந்த கதாபாத்திரங்களுக்கு தங்கள் குரல் மூலம் உயிர் கொடுத்துள்ளார்கள்.
    மறக்க முடியாத இந்த மாந்தர்கள் தங்கள் முன்னால் ஒலி வடிவில் வலம் வரப்போகிறார்கள்.
    பின்னணி இசையும் மற்ற விசேஷ ஒலிகளும் உங்களை சோழர்கள் காலத்திற்கே 1000 வருடங்கள் பின்னால் அழைத்துப் போகப்போகின்றன.
    தமிழ் படிக்கத் தெரியாதவர்களுக்கும் புத்தகம் படிக்க நேரம் இல்லாதவர்களுக்கும், இப்படிப்பட்ட ஒரு ஒலிப்புத்தகம் ஒரு பெரிய வரப்பிரசாதமாகும்.
    மேலும் பலர் இந்த சரித்திர நாவல்களின் ஆங்கில மொழிபெயர்ப்பை தேடி அலைகிறார்கள் கல்கி அவர்களின் எழுத்தை தமிழில் படித்தால்தானே சுவை. அவரது எழுத்தின் வன்மைதானே இந்த நாவலின் வெற்றிக்கு காரணம் ஆகையால் ஒரு தமிழ் புத்தகத்தை தமிழிலேயே கேட்டுப்பயன்பெறலாமே!
    இந்த ஒலிப்புத்தகம் MP3 FORMATல் 3 DVD களில் பதிவு செய்யப்பட்டு வெளிவருகிறது
    இதை பெங்களூர் திரு C.K வெங்கடராமன் தயாரிக்க நாடக தொலைகாட்சி நடிகர் தயாரிப்பாளர் எழுத்தாளர் இயக்குனர் திரு பம்பாய் கண்ணன் இயக்கியுள்ளார்.
    பாடல்களுக்கு திரு சத்யசீலன் இசை அமைத்துள்ளர்
    திறமை மிக்க தொழில் கலைஞர்கள் இதன் ஒலிப்பதிவில் உறுதுணையாக இருந்து மிகச் சிறப்பாக ஒலிப்பதிவு செய்திருக்கிறார்கள்.
    இந்த ஒலிப்புத்தகம் 14 6 2013 அன்று மாலை 6 மணி அளவில் பிரம்ம கான சபா ஆதரவில் சென்னை சத்குரு ஞானானந்தா கலை அரங்கில் (நாரத கான சபா) வெளியிடப்பட்டது. 
    இப்போதெல்லாம் நிறைய பேர்கள் எழுத்தாளர் சுஜாதாவை பற்றி அடிக்கடி எழுதுவதை பார்க்கிறேன். ஆகையால் என் பங்கிற்கு என் அநுபவத்தை நானும் பகிர்ந்து கொள்ளலாம் என ஆசைப்பட்டு........இதோ
    சுஜாதா அவர்களின் இறுதிகாலத்தில் அவருடன் நெருக்கமாக பழகும் சந்தர்ப்பம் எனக்கும் வாய்த்தது அவருடைய கதை ஒன்றை Home Vedio என சொல்லப்படும் VCD/dvd க்காக பிரத்யேகமாக தயாரிக்கும் முயற்சியில் அவரை சந்தித்து பேசினேன்... என்ன கதை என்று முடிவு செய்யவில்லை... நாலைந்து கதைகளை குறிப்பிட்டேன்... ஒரு வாரம் கழித்து பேசுவதாக சொல்லிவிட்டு அனுப்பிவிட்டார்!! ஒரு வாரம் கழித்து மறுபடியும் அவரை சந்தித்தபோது இந்தDVD/VCD மார்க்கெட் பற்றி அக்கு வேறு ஆணி வேறாக அலசி எனக்கு என்ன நஷ்டம் வரலாம் என்றும் எத்தனை பேர் வாங்கலாம் என்றும் மொத்த statistics கொடுத்து என் ஆர்வத்திற்காக அனுமதி வழங்கினார் ஒரு வாரத்திற்குள் என்ன home work!!! என்று ஆச்சரியமும் ஆனந்தமும் பட்டுக்கொண்டே விடு திரும்பினேன்... நாங்கள் தேர்ந்தெடுத்த கதை அவருடைய சிறுகதை "வாசல்".... "மாமா விஜயம்" என்ற தலைப்பில் டெல்லி கணேஷ் நடிக்க வெளிவந்தது.... அதான் சுஜாதா... இவர் நாடகம் எழுத முதன் முதலில் வந்தபோது 3 மாதம் சென்னையில் தங்கி எல்லா தமிழ் நாடகங்களையும் பார்த்துவிட்டு மக்களின் நாடியை நன்கு புரிந்து கொண்டு பின்னர் தான் பூர்ணம்சாருக்கு எழுதினார் என்றும் கேள்விப்படுகிறேன் இதை நாடக எழுத்தாளர்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும் நமக்கு புரியும்படி நாடகம் போடுவதை விட மக்களுக்கு புரியும்படி நாடகம் போடுவது மிகவும் முக்கியம் நமக்கு பிடித்தபடி நாடகம் போடுவதை விட அவர்களுக்கு பிடித்தபடி நாடகம் போடுவது மிகவும் முக்கியம் நமக்கு plane ஓட்ட தெறியுமென்றால் பார்வையாளர்கள் எல்லோருக்கும் விமானம் மற்றும் அதன் செயல்பாடு நன்கு தெரியும் என்று நினைத்துக்கொள்வது விபரிதம்.. இன்னும் சிலர் இருக்கிறார்கள் அவர்கள் பார்வையாளர்களை அடிமுட்டாள்கள் என்று எண்ணி விடுகிறார்கள் அது இதைவிட அபாயம்...... இன்னும்......

    Saturday, August 23, 2014

    சிலர் என்னிடம் நடிப்பை பற்றி பேசுவார்கள் திரைப்படங்களில் நடிப்பதற்கும் தொலைகாட்சியில் நடிப்பதற்குமே நிறைய விதியாசம் உண்டு இது புரியாமல் பல திரைப்பட நடிகர்கள் தொலைகாட்சியில் நடிக்கும்போதும் தொலைக்காட்சி நடிகர்கள் திரைப்படங்களில் நடிக்கும்போதும் அவர்களின் பலவீனம் வெளிப்பட்டு விடுகிறது அதே போலத்தான் நாடக நடிப்பும்தொலை காட்சி நடிப்பும் தயவு செய்து தொலைகாட்சி தொடர்களை நாடகம் என சொல்லி நாடகத்தை இழிவு படுத்தாதிர்கள் நாடகம் என்பது உங்கள் கண்முன்னால் நிஜமாக நடப்பது It is a live performance மற்றது நிழல் நடிப்பிற்கும் நிழலுக்கும் இடையே பல மாற்றங்களையும் திருதங்களையிம் உள்வாங்கி உங்கள் முன்னால்ஒளிபரப்பாகிறது இது எப்படி நாடக் இலக்கணத்துக்குள் வரும் அடுத்து script முதலில் நகைச்சுவையை எடுத்துகொள்வோம் நாம் படித்து ரசித்து சிரிக்க கூடிய துணுக்குகள் எல்லாம் நடிக்கப்ப்படும்போது அதே நகைச்சுவையை உண்டாக்காது நகைச்சுவை கட்டுரைகள் எல்லாம் நல்ல நாடகமாக அமையாது நாடகம் எழுதுவது என்பது தனி கலை இது இரண்டிலும் மக்களால் அங்கீகரிக்கப்பட்டவர் ஒரு சிலரே குறிப்பாக இந்த காலத்தில் crazy மோகன்.. மேலும் எல்லா சிறுகதைகளும் நாடகமாக அமைந்து விடாது.... சிறுகதை எழுத்தாள்மை வேறு நாடக எழுத்தாளமை வேறு சிறுகதை எழுத்த்தளர்கள் தங்கள் கதைகளை நாடகமாக்க விரும்பினால் அதை ஒரு திறமையான நாடக எழுத்தாளனிடம் கொடுத்து எழுத வைத்து நாடக் இயக்கம் தெரிந்த ஒரு இயக்குனர் இயக்கினால் சிறப்பாக அமையும் கதைகளை தேர்தெடுக்கும் பொறுப்பையும் இயக்குனருக்கு கொடுத்து விட வேண்டும் அல்லது அந்த எழுத்தாளருக்கு நாடக அனுபவம் வேண்டும்......... (மேலும் எண்ணங்கள் தொடரும்)
    ஒலிப்புத்தகத்தில் நடிப்பது பற்றி சொல்லிக்கொண்டிருந்தேன்.. குறிப்பாக என்னுடைய ஒலிப்புத்தகம்... வானொலியில் நடிப்பதற்கும் இதற்கும் சிறிய வித்தியாசம் உண்டு.. வானொலியில் நாடகத்தில் ஒரு வசனம் முடிந்தவுடன் உங்கள் வசனம் ஆரம்பித்தால் அந்த வசனத்தின் உணர்வுக்கும் காட்சி அமைப்பிற்கும் ஏற்ப நீங்கள் பேசினால் போதுமானது.. ஏற்ற இறக்கங்கள், கதாபாத்திரத்தின் தன்மை, காட்சி அமைப்பிற்கு ஏற்ப modulation mood அமையுமானால் காடசியும் சிறப்பாக அமையும். அங்கே ஒரு தொடர்ச்சியான conversation அமைகிறது.. ஆனால் என் ஒலிப்புத்தகத்தில் கதை சொல்லி என்று ஒரு குரல் உள்ளது இவர் அவ்வப்போது வசனங்களுக்கு இடையே குறுக்கிடுவார் இவர் யாருமல்ல கதை ஆசிரியர் தான் இதானால் உங்கள் கவனம் சிதற வாய்ப்பு உள்ளது.. மீண்டும் வசனம் வரும்போது உங்கள் கவனம் வசனம் விடப்பட்ட இடத்தில் இருக்க வேண்டும் அங்கிருந்து தொடர்ந்து வர வேண்டும்.. இது படிப்பதாற்கு எதோ மிகவும் எளிமையாக தோன்றலாம் ஆனால் நாடகத்தில் மிக அனுபவமுள்ள நடிகர்களே கொஞ்சம் பழகும் வரை தினறியதைப் பார்த்த அநுபவத்தை தான் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.. இந்த மாதிரி ஒலிப்புத்தகங்களில் ஒரு சிறு சௌகரியமும் உள்ளது.. நீங்கள் என்ன உணர்சிகளை வெளிப்படுத்த வேண்டும் என்பதை யாரும் சொல்லித்தராமலேயே நீங்கள் கதையை படிக்கும்போதே தெரிந்து கொண்டு விடலாம் ஏனென்றால் அந்த ஆசிரியர் வசனம் எப்படி பேசப்படவேண்டும் என்பதை எழுதியிருப்பார் (கோபமாக கூறினான் சிரித்துக்கொண்டே பேசினான் போன்றவை) எதோ எனாக்கு தெரிந்தவரையில் என் அனுபவத்தை வைத்து எழுதிவிட்டேன் பிழையோ அல்லது முதிர்ச்சியோ இல்லஎன்றால் ப்ளீஸ் ignore
    ஒலிப்புத்தகங்கள் வெளியிட்டதும் பலர் ஒலிப்புத்தகம் என்றால் என்ன வென்று கேட்டார்கள்.. புத்தகத்திற்கு ஓலிவடிவம் என்று பொத்தாம் பொதுவாக சொல்லிவைத்தேன்... இருந்தாலும், இந்த முயற்சியிலே பலர் ஈடு பட்டு இருந்த்தால் நான் எப்படி வேறுபடுகிறேன் என்று சொல்ல வேண்டி இருந்தது. சில ஒலிப்புத்த்கங்களில் ஒரே குரலில் எந்தவிதமான உணர்சிகளும் இல்லாமல் படிக்கப்பட்டிருக்கும்... இதை நான் முதலில் தவிர்க்க விரும்பினேன்.. ஒவ்வொரு எழுத்தாளனும் தான எழுதும் ஒவ்வொரு வரியையும் எதோ ஒரு உணர்வை மனதிற்குள் நினைத்துக்கொண்டு அல்லது நடித்துக்கொண்டுதான் எழுதுகிறான்.. அது அழுவதாக இருக்கட்டும் பயமாக இருக்கட்டும் அவன் மனதிற்குள் நடிக்க வில்லை என்று சொல்ல முடியாது!! அவன் கதாபத்திரங்கள் பேசும்போது அவன் உணர்ச்சிபொங்க பேசிக்கொண்டே தான் எழுதுகிறான். அதை என் ஒலிப்புத்தகத்தில் நான் கொண்டுவரவில்லை என்றால் நான் அந்த எழுத்தாளனுக்கு செய்யும் துரோகம்!! ஒவ்வொரு வர்ணனைக்கும் ஒரு உணர்வு உண்டு...ஒவ்வொரு வசனத்திற்கும் ஒரு உணர்வு உண்டு... அதை ஒரே குரலில் படித்தால் சரியாக வருமா? ஆகையால் ஒவ்வொரு கதப்பாத்திராமும் ஒவ்வொருகுரலில் இருக்க வேண்டும்.. கதை சொல்லி.... ஒரு குரல். அது கிட்டத்தட்ட அந்த எழுத்தாளரின் குரல் அதற்கு தனியாக ஒருவர்...அப்புறம் கதை களம்...... அது நடக்குமஇடத்தை அவர் வர்ணித்துவிட்டார்...என்ன நடக்கிறது என்றும் சொல்லிவிட்டார் படிக்கும் நீங்களும் கற்பனையில் இடத்தையும் நிகழ்வுகளையும் புரிந்து கொண்டு விட்டிர்கள் ஆனால்கேட்கும் போது...!!!! நான் மழை பெய்து கொண்டிருந்தது என்று சொன்னால் உங்களுக்கு அது போதுமாட னதாக இருக்குமா? நீங்கள் மழையை பார்க்கவேண்டும்... அல்லது கேட்கவேண்டு அப்போதுதான் உங்கள் மனம் கதையில் ஈடுபடும்.... இதற்காகத்தான் சிறப்பு சப்தங்களான இடி மழை புயல் நாய் நரி பூனை கடல் அருவி சப்தங்கள் இதைதவிர நாம் எந்த ஒரு கற்பனையையும் இசையோடு இணைத்தே பழகிவிட்டோம் இசை உங்கள் உணர்வுகளை மிகைப்படுத்துகிறது........ இப்படி உருவாவதுதான் ஒலிப்புத்தகம்....... இது வானொலி நாடகம் போலத்தானே என்று சொல்வார்கள்.... உண்மைதான்..... ஆனால் அந்த நடிப்பிற்கும் ஒளிப்ப்புத்தக நடிப்பிற்கும் கூட ஒரு சின்ன வித்தியாசம் உண்டு........ அது அடுத்து..........
    நான் ஒலிப்புத்தகம் தயாரிப்பதற்கு எனக்கு முதன் முதலில் பெரிதும் ஊக்க மளித்தவர் திரு பூரம் சத்தியமுர்த்தி அவர்கள் தான். சில வருடங்களுக்கு முன்னால் ஒரே குரலில் வெளிவந்துகொண்டிருந்த சில ஒலிப்புத்தகங்களை கேட்டுவிட்டு அதில் எதோ மிஸ்ஸிங் என்று எனக்கு தோன்றியது

    ஒவ்வொரு கதையிலும் அந்த கதாசிரியனின் உணர்வுகள் எழுத்தில் புதைந்து இருப்பாதாக பட்டது ஒவ்வொரு வசனமும் அந்தந்த கதாபத்திரங்களின் உணர்சிகளுக்கு ஏற்ப ஏற்ற இறக்கங்களுடன் Modulation னுடன் இருந்தால் நன்றாக இருக்கும் என எண்ணினேன் சாய்பாபா வாழ்க்கை சரித்திரம் ஒலிப்புத்தகமாக கொண்டு வந்தபோது இதற்கு அவ்வளவு கவனம் செலுத்தவில்லை

    என்னுடைய படைப்புகளைப்பற்றி கேள்விப்பட்ட அவர் திரு PV என அழைக்கப்படும் P வெங்கடராமன் மூலமாக என்னை அழைத்தார். தன்னுடைய சிறுகதைகளை ஒலிப்புத்தகங்களாக தயாரிக்க வேண்டுமென்றார் அவரை முதன்முதலில் அப்போது தான் சந்திக்கின்றேன்.... திருவல்லிகேனியில் அவரது சிறிய குடிலில் அழைப்பு மணி அடித்தவுடன் ஒரு வயதானவர் வந்து என் கையை பற்றி அழைத்து சென்றார் அவரது புத்தகங்களை தேடி எடுத்து கொடுத்து படிக்க சொல்லி எந்த கதைகளை தேர்ந்து எடுக்க வேண்டுமென்ற பொறுப்பையும் என்னிடமே அளித்தார்

    நான் தேர்ந்து எடுத்த ஒவ்வொரு கதையை பற்றியும் அவர் அலசி அதை எப்படி எப்போது எழுதினேன் என்று கூறியபோது ஒரு இலக்கியவாதியின் அனுபவங்கள் என்னுள்ளும் பாய்ந்தன

    முதல் தொகுப்புக்கான கதைகள் தயாராகி "நலம் தரும் சொல்" என்ற தலைப்பில் பல கலைஞர்களின் குரல்களிள் இசை மற்றும் சிறப்பு சப்தங்களுடன் வெளியானபோது பூரம் சொன்ன வார்த்தைகள் இன்றும் என் காதுகளின் எதிரொலிக்கின்றன

    "எதிர்காலத்தில் தொழில் நுட்பங்களுடன் நாமும் வளர வேண்டும் இனி கொஞ்ச நாட்களில் காகிதத்தில் அச்சிடப்படுவதைவிட ELECTRONIC மீடியாவில் படிப்பதும் கேட்பதும் தான் நிலைக்க போகிறது என்னுடைய கதைகளை நானே படித்து ரசிப்பதைவிட கேட்டு கேட்டு இன்புறுகிறேன் என் கதாப்பாத்திரங்கள் என் கண் முன்னால் நடமாடுகின்றனர்" என்று கூறி ஆசிர்வதித்தார் அது மட்டுமல்ல மேலும் இரண்டு தொகுப்புகளை கொண்டு வரவும் அனுமதி தந்தார்

    இதுவரை இந்த 75 வயது இலக்கியவாதியின் 21 கதைகளை 3 தொகுப்புகளாக வெளியிட்டுள்ளேன் ஒவ்வொரு கதையையும் கேட்டுவிட்டு அவர் கண்களில் நீர் ததும்ப கையை பிடித்துகொண்டு பாராட்டியதை நினைக்கும் போது இந்த பதிவு எழுதும் கண்கள் மறைக்கின்றன இவர் கொடுத்த ஊக்கமும் ஆசியும் என் நெடுநாள் கனவான சிவகாமியின் சபதம் ஒலிப்புத்தகம் உருவாக காரணம்மாக அமைந்தது (இந்த புதினத்தை நான் ஒரு தொலைக்காட்சி தொடராகவோ TELEFILM ஆகவோ தயாரிக்க விரும்புவது தனி விஷயம்)

    பின்னர் பொன்னியின் செல்வன் எனக்கு பாராட்டுகளை அளித்தது.. இதற்கெல்லாம் பின்புலமாக இருந்தது திரு பூரம் அவர்கள் போட்ட பிள்ளையார் சுழிதான்.. என்றும் இவருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்

    திரு பூரம் அவர்கள் PORT TRUST ல் வேலைபார்த்து ஓய்வுபெற்றவர் திரு PV அவர்களின் நெருங்கிய நண்பர் பல வருடங்களுக்கு முன்னர் பிரபல பத்திரிக்கைகளான கண்ணன் கலைமகள் சுதேசமித்திரன் இவற்றில் பல கதைகளை எழுதி பரிசுகளைப் பெற்றவர் சிறந்த இலக்கியவாதி வேதம் கற்றவர் இவரைப்பற்றி இரண்டு கொசுறு செய்திகள்

    கணிதமேதை ராமனுஜம் வேலைபார்த்த அதே நாற்காலியில் வேலைபார்த்தவர் அவரைப்பற்றி நாடகம் எழுதி தயாரித்து நடத்தியவர் மற்றொரு முக்கியமான விஷயம்..........
    ;
    ;
    ;
    இந்த சிறந்த எழுத்தாளருக்கு கடந்த 2௦ வருடங்களாக கண்பார்வை முழுவதுமாக கிடையாது........

    பார்த்திபன் கனவு ஒலிப்புத்தக வெளியிட்டு விழாவில் நடைபெற்ற நாடகத்தில் இருந்து சில காட்சிகள்

    நான் இயக்கிய இந்த நாடகத்தில் மிகசிறப்பாக எலோரும் நடித்து கைதட்டலை பெற்றார்கள்

    குறிப்பாக சூரஜ் அர்ச்சனா வெங்கட் ஸ்ரீகாந்த் போன்ற இளைஞகர்கள் அனுபவமிக்க நடிகர்களான ஆனந்த் ராம் முத்துகுமார் சபாபதி மோகன் முரளி இவர்களுடன் இணைந்து 
    நடித்து 4௦ நிமிடத்தில் பார்த்திபன் கனவு கதாபாத்திரங்களை மேடையில் கொண்டு வந்தது மிகவும் மகிழ்ச்சியான நினைவு

    ஒளி அமைப்பு செய்த சேட்டா ரவி இசை அமைத்த குகபிரசாத் costume வழங்கிய மதுரை கண்ணன் ஒப்பனை செய்த குமார் எல்லோருமே பாராட்டுக்குரியவர்கள்

    எல்லோருக்கும் மேல் இதை தயாரிப்பதற்கு உறுதுணையாக இருந்து அயராமல் உழைத்த PS ராஜா விற்கு நன்றி

    எங்களுக்கு ஆதரவு அளித்த நல்லி அவர்களுக்கும் பிரம்ம கான சபா ரவி அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
    (4 photos)