Wednesday, September 24, 2014



நாடக அனுபவங்கள்
பகுதி 11


1991 ம் வருடம் டிசம்பர் மாதம் கோலாரில் எனது இரு வீடு ஒரு வாசல் நாடகம்
நான் நாடகக்காரன் என்ற பெயரில் சென்னையில் நாடக குழு துவங்கி முதல் நாடகம்
ஏற்கனவே கோலாரில் நடந்த பல நாடகங்களில் வேறு குழுவில் நான் பங்கு கொண்டிருந்தததால் எனக்கு மிக சுலபமாக இந்த வாய்ப்பு கிடைத்தது
அருமையான ரசிகர்கள் கோலார் தங்க வயலில் பணி புரியும் தமிழர்கள்
நல்ல விஷயங்களை மிகச் சிறப்பாக ரசிப்பார்கள் ஆகையால் இந்த நாடகத்திற்கு நான் மிகவும் எதிர் பார்ப்புடன் காத்திருந்தேன்.
கோலார் செல்ல வான் ஏற்பாடு செய்திருந்தேன் இரவு புறப்படட்டு காலை கோலார் சேர வேண்டியது மாலையில் நாடகம் முடிந்து இரவு புறப்பட்டு சென்னை வரவேண்டியது என ஏற்பாடு
புறப்பட வேண்டிய நாளன்று மலை VAN தயாராக இருக்கிறதா என்று பார்த்துவிட்டு அரங்க அமைப்பிற்கான படுதாக்களை ஏற்றிவிட்டு விளக்குகளை ஏற்றிவிட்டு எல்லா கலைஞ்ர்களையும் தயார் நிலையில் வைத்து விட்டு நானும் என் குழுவை சேர்ந்த நடராஜனும் வீடு வந்து சேர்ந்தோம் விட்டிற்குள் நுழையும் போதே எதோ ஒரு வித்தியாசமான அமைதியும் சலனமும் தென்பட்டது
தாம்பரத்தில் இருந்த என் மாமா கார் வாசலில் நின்றது என்ன இந்த வேளையில் என நினைத்துக்கொண்டு மெல்ல மாடி ஏறினேன்
இரவு மணி 8
ஹாலில் என் மனைவி என் அண்ணன் எல்லாரும் இருந்தார்கள் உள்ளே படுக்கை அறையில் என் தந்தை படுத்திருந்தார்.... அருகில் டாக்டர்......
என் தந்தை இப்படி அடிக்கடி படுத்திருந்து பின் எழுந்திருப்பது அவருடைய 4௦ வருட சக்கரை வாழ்க்கையில் சகஜம் என்பதால் எனக்கு முதலில் பெரிதாக ஏதும் தோன்றவில்லை
என்ன என்று கேட்டேன் அப்பாவுக்கு HEART அட்டாக் என்றார்கள் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது டாக்டர் வெளியே வந்தார் சினிமா டாக்டர் போல கனாடியை கழட்டுவார் என எதிர்பார்த்தேன்
“ரொம்ப சீரியஸ்” MATTER OF FEW HOURS OR DAYS என்றார் FEW HOURS என்று சொல்லாமல் இருந்தால் கூட நிம்மதி அடைந்து இருப்பேன் அப்பாவுக்கு அப்ப்போது 8௦ வயது
டாக்டர் HOSPITAL வேண்டாம் LETHIM GO PEACEFULLY என்று சொன்னார் எங்களுக்கெல்லாம் ஒரே குழப்பம் டாக்டர் போனபிறகு யோசித்தோம்
HOSPITAL என்ற முடிவுக்கு வந்தார்கள் என் அண்ணனும் மாமாவும்
BSS HOSPITAL என முடிவுசெய்து AMBULANCE க்கு அழைப்பு விடுத்தோம்
இரவு மணி 9
என் குழு நடராஜனிடம் சொல்லி காத்திருக்கும் எல்லோருக்கும் தகவல் சொல்ல சொன்னேன் PROGRAMME CANCELLED என்று மட்டும் சொல்ல வில்லை கொஞ்சம் தாமதமாக புறப்படுவோம் என்று சொல்லி வைத்தேன்
AMBULANCE வந்தது
BSS ஆஸ்பத்திரி
எல்லா பரிசோதனைகளும் நடந்தன
இரவு மணி 1௦ அங்கிருந்த
DUTY டாக்டரிடம் சென்று என் நிலைமையை எடுத்து சொல்லி போகலாமா என PERMISSION கேட்டேன் என்னை எதோ கேவலமான ஜந்துவைப் பார்பதுபோல பார்த்துவிட்டு “எப்படி இந்த கேள்வியை கேட்கிறிர்கள்?
NO WAY இன்னிக்கு ராத்திரி யாருமே எங்கியும் போகமுடியாது
யு YOU KNOW HIS CONDITION HE IS VERY சீரியஸ் போய் சொந்தக்கரங்களுக்கு தகவல் சொல்லுங்க” என்றார்
சரி இதான் விதி போலும் என நொந்துகொண்டே அக்காக வீட்டிற்கு KK நகர் புறப்பட்டேன்
எனது குழு நடிகற்களுக்கு சொல்லிவிட்டு விட்டிற்கு போகச்சொன்னேன் அப்போது CELLPHONE இல்லாத காலம் வேறு
இரவு மணி 12
எல்லோரும் HOSPITAL ICU வெளியே காத்திருக்கிறோம் நான் என் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கிறேன் இன்னும் கோலாருக்கு தகவல் சொல்ல வில்லை
ஒரு நப்பாசைதான் எதாவது அதிசயம் நடந்து டாக்டர் போய் வா என்று சொல்ல மாட்டாறான்னுதான்
ஆனால் அப்ப்படி எதுவும் நடக்கவில்லை
குழு அங்கத்தினர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் அழைப்பு வருமென வேரு சொல்லிவைத்தேன் நடராஜன் “நீ வரவில்லை என்றால் பரவாயில்லை நாங்கள் போய் நாடகம் நடத்திவிட்டு வருகிறோம்” என்று நிலைமை தெரியாமல் உளறினான்
இரவு மணி 2
நேராக என் அன்னையிடம் சென்றேன் எனக்கு கிடைத்த இந்த சந்தர்ப்பத்தை சொன்னேன் இது புதிதாக குழு ஆரம்பித்திருக்கும் யாருக்கும் கிடைக்காத ஒரு வாய்ப்பு இதைத் தவறவிட்டால் மீண்டும் இப்படி ஒரு வாய்ப்பு கிடைப்பது அரிது என எடுத்து சொன்னேன் என்ன செய்யலாம் என்று ஆலோனை கேட்டேன்
போய் வா என்றாள் பெருமாள் மேல் பாரத்தை போட்டுவிட்டு போய்வா என்றாள் அந்த வீரத்தாய் அன்று எனக்கு என் தந்தையை விட நாடகம் பெரிதாக இருந்தது அம்மாவே அனுமதி கொடுத்து விட்டாள் என எனக்கு நானே சமாதனம் சொல்லிக்கொண்டேன் எல்லோருக்கும் தகவல் சொல்லி புறப்படுகிறோம் என்றேன்
மணி 3
VAN ஏறிவிட்டோம்
மறுபடியும் படுதாக்கள் விளக்குகள் ஏற்ற தாமதம் ஆனது
சென்னை விட்டு புறப்படும்போது கலை மணி 4
சென்னை தாண்டும்போது நான் செய்தது சரிதானா மிண்டும் என் தந்தையை பார்ப்பேனா எதாவது ஒன்று அசம்பாவிதமாக நடக்குமானால் என் நிலைமை என்ன என்ற எண்ணங்களை தடுக்க முடியவில்லை சிறிது நேரத்தில் மனம் நாடகத்தில் செல்ல எண்ணங்கள் மாற அசதியில் சற்றே கண்ணயர்ந்தேன் எப்படியும் 7 மணி நேரத்தில் போய்விடலாமே
பயணம் தமிழ்நாடு கர்நாடக எல்லைப்பகுதியில் வண்டிக்கு கட்ட வேண்டிய வரி காரணமாக தடைபட்டது இரண்டு மணி நேரம் கடந்தது
மதியம் 2 மணி சுமாருக்கு மதிய உணவு அருந்தினோம்
அப்போது mobile போன் இல்லாததால் தொடர்பு கொள்வது கடினம்
இருந்தால் அன்று நான் தொடர்பு கொண்டிருப்பேனா தெர்யாது
எப்படியும் 4 மணிக்கெல்லாம் போய் விடலாமென்ற எண்ணத்தில் பயணம் தொடர்ந்தோம்
ஆனால் விதி என்று ஒன்று இருக்கிறதே
அதற்கு இந்த வேனை விட வேகம் அதிகம்
VAN டிரைவர் HIGHWAYலிருந்து திரும்பும் இடத்தில் கோலார் தங்க வயலுக்கு பதிலாக கோலாருக்கோ வேறு எதற்கோ திரும்பிவிட சுற்றி சுற்றித் வருகிறோம் தங்க வயல் மட்டும் காணவில்லை மறுபடியும் பரமபதம்போல புறப்பட்ட இடத்திற்கே வந்து சரியான பாதையில் பயணித்தோம்
KGF ல் நாங்கள் நாடகம் போடும் அரங்கிற்கு நேராக சென்றபோது மணி 6
வாசலில்..........
இன்றைய நாடகம் ரத்து என்ற அறிவிப்பு எங்களை வரவேற்றது
உடனடியாக அந்த காரியதரிசி செக்ல்வரஜை தொடர்பு கொண்டேன்
நீங்கள் மதியம் வரை வராததால் உங்கள் விட்டிற்கு போன் செய்தோம் உங்கள் தந்தை HOSPITAL லில் இருப்பதாக செய்தி வந்தது அதனால் ரத்து செய்தோம் நீங்கள் போன் செய்து இருக்கலாமே என்றார்
TENSION என்றேன்
மனதிற்குள்......
போன் செய்தால் அப்பா நிலைமை இப்படி இருக்கும்போது வரவேண்டாம் என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது என்றுதான் போன் செய்யவில்லை என்பதை எப்படி சொல்வது என நினைத்துக்கொண்டேன்
சார் இப்போ வந்து விட்டோம் என்ன செய்வது?
மணி 6 1௦ ஏழு மணிக்குள் ரெடியாக முடியுமா என்றார்
ஒப்புக்கொண்டு எங்கள் தொழில் நுட்ப கலைஞர்களை நோக்கினேன்
தயார் என்றார்கள் அரை மணியில் SET ம் LIGHT ம் ரெடி
இந்த நேரத்தில் செல்வராஜ் எங்களைவிட வேகமாக இயங்கினார் அங்கத்தினர்கள் எல்லோருக்கும் போன் செய்து நாடகம் உண்டு என்று அறிவித்து விட்டார்
நாங்களும் அரை மணி நேரத்தில் மேடை தயார் செய்து விட்டோம் பார்வையாளர்களும் வந்து விட்டார்கள்
அரங்கம் நிறைந்து இருந்ததது
என் வாழ்வில் அந்த மாதிரி ஒரு ரசிகர்களை நான் சந்த்தித்ததே இல்லை ஒவ்வொரு பகுதியையும் அணு அணுவாக ரசித்தார்கள்
நாடகமுடிவில் நடிகர்களை அறிமுகப் படுத்தும்போது STANDING OVATION ல் அரங்கம் அதிர்ந்தது
என் மனம் ஒரு புறம் சந்தோஷத்தில் மிதக்கும் போது மறுபக்கம் தந்தையின் நிலைமை நாடகம் முடிந்தவுடன் வந்து குத்தியது கண்களில் கண்ணிற் பெருக்கெடுத்து ஓட முயற்சிக்க அரும்பாடுபட்டு மறைத்துக்கொண்டு சென்னை திரும்ப VAN ஏறினோம் அதுவரைவரையில் நாடகம் மட்டுமே கவனத்தில் இருந்த எனக்கு இப்போது HOSPITAL, அம்மா, வீடு எல்லாம் நினைவிற்கு வந்தன
VAN ல் ஒரு முலையில் உட்கார்தவன் இரண்டு நாள் துக்கம் இல்லாததால் அயர ஆரம்பித்தேன்
எனக்கு பக்கத்து இருக்கையில் FEROZE
அவருக்கு அருகே நடராஜன்
கோலார் தங்க வயலை விட்டு வெளியே வருவதற்கு மறுபடியும் கஷ்டப்பட்டு வழிகண்டுபிடித்து ஒரு வழியாக நெடுஞ்சாலை அடைந்தபோது மணி காலை 3
ஓட்டுநர் டி சாப்பிடலாமென வண்டியை ஓரம்கட்டினார்
எல்லோஐம் இறங்கினர் நான் எழுந்திருக்கவில்லை
வண்டி காலை 6 மணி சுமாருக்கு பூந்தமல்லி அருகே வந்தபோது நான் கண் விழித்தேன் பக்கத்து இருக்கை காலியாக இருக்கவே feroze முன்பக்கம் எங்கேயாவது அமர்ந்திருக்கிறாரா என்று பார்த்த்தேன்
காணவில்லை
எங்கேடா feroze என்று நான் கேட்க எல்லோரும் அப்போதுதான் விழித்துக்கொண்டு முழி பிதுங்க தெரிய வில்லை என்றனர்
ஓட்டுனர் ஒருவேளை டி குடித்த இடத்தில் ஏற வில்லையோ என தனது சந்தேகத்தை கூறினார் யாருமே செக் பண்ண வில்லையா எனக் கடிந்து கொண்டு வண்டியை மீண்டும் கோலாரை நோக்கி திருப்புவது என யோசித்தோம் அப்போது என் குழுவின் கதாநாயகன் சுந்தர் ராமன் திரும்பி எங்கே எவ்வளவு துரம் போவது என ஒரு LOGICAL கேள்வியை எழுப்பினான் FEROZE ன் பை இருக்கிறதா என்று பார்த்தோம் இருந்ததது பையில் அவர் PURSE இருக்கிறதா என்று பார்த்தோம் இல்லை அவர் முன் ஜாக்கிரதையாகவோ இல்லை எதோ ஒரு காரணத்தினாலோ பணம் எடுத்து சென்றிருக்கிறார் ஆகையால் அவரிடம் பணம் இருக்கிறது எப்படியும் வந்து விடுவார் என்று கணக்கு போட்டு சென்னை நோக்கி புறப்பட்டோம் சென்னை அடைந்தவுடன் feroze விட்டிற்கு போன் போட்டு காலதாமதமாக வந்து விடுவார் என்ற தகவலை சொல்லிவிடலாமென தீர்மானித்து போன் செய்தேன் அவர் மனைவி எடுத்தார்
FEROZE என்று நான் ஆரம்பிப்பதற்குள் அவர் இதோ தரேன் என்று போனை குடுக்க FEROZE LINE ல் வந்தார் FEROZE i am sorry என்று நான் ஆரம்பிப்பதற்குள் “பரவாயில்லிங்க நீங்க இன்னும் விட்டுக்குபோகலையா எனக்கேட்டுவிட்டு விவரம் சொன்னார்
டீக்கு இறங்கினவர் பாத்ரூம் போகவேண்டுமென அவர் வழக்கப்படி ஒரு கல்லை தேடி எடுக்க கொஞ்சம் சாலை விட்டு விலகி உள்ளே போக எதோ ஒரு மசுதியை வேறு பார்த்திருக்கிறார் ரெண்டு நிமிடம் காலதாமதமாக அவர் வெளியே வர VAN ஓட்டுனர் எல்லோரும் வந்துவிட்டதாக நினைத்து வண்டியை எடுக்க எல்லோரும் அசதி காரணமாக கண்ணயர்ந்து விட்டிருக்கிரார்கள்
சாலைக்கு வந்து பார்த்த feroze VAN புறப்பட்டு போவதைப்பார்த்து குரல் கொடுத்திருக்கிறார் யார் காதிலாவது விழுந்தால் தானே
பிறகு feroze கையில் காசு இருந்ததால் தைரியமடைந்து மஸூதிக்கு சென்று அமர்ந்து காலை பிரார்த்தனையை முடித்துவிட்டு வெளியே வந்து முதல் bus பிடித்து எங்களை முந்திக்கொண்டு சென்னை அடைந்து இருக்கிறார்
அவர் முகத்தில் எப்படி விழிப்பேன் என பயந்து கொண்டு இருந்த என்னை வெகுவாக நிம்மதி பெருமுச்சு விட வைத்துவிட்டார் அவர்
அடுத்து அப்பா
நேராக விட்டிற்கு ஓடினேன் HOSPITAL அப்பா IMPROVING என்ற நல்ல செய்தியை என் மனைவி குடுத்து விட்டு FEROZE போன் பண்ணினார் என்றும் தெரிவிக்க.......
என்ன சொன்னார் என்று கேட்டேன்
நடுவழியிலே VAN ஐ MISSபண்ணிட்டாரமே சென்னை வந்தது விட்டுக்கு போன் பண்ணார் “சார் கவலைப்படுவார் நான் சௌக்கியமாக வீடு வந்து சேர்ந்து விட்டேன் என்றும் மட்டும் சொல்லிவிடுங்கள் அப்பா உடம்பு விஷயமாக ரொம்ப கவலையில் இருக்கிறார் என்னைப்பற்றி TENSION ஆக வேண்டாம்” என்றார்.
அவர் இடத்தில் வேறு ஒரு நடிகரை வைத்துப்பார்கிறேன்
அன்று மாலை DRIVE IN ல் அவர் கையை பிடித்துக்கொண்டு கண்கலங்கினேன் வார்த்தைகள் வரவில்லை
FEROZJI நீங்க ஒரு GENTLEMAN

நாடக அனுபவங்கள் பகுதி 1௦


ரம்ஜான் மாதம் என்றாலே எனக்கு நினைவிற்கு வருவது என்னுடைய நாடகக்காரன் குழுவை சேர்ந்த FEROZE என்னும் நடிகர்தான்
நடிகர் என்பதைவிட ஒரு அருமையான நண்பர் ஆஜானுபாஹுவாக இருப்பார் அப்பா வேடத்திற்கு பிறவி எடுத்தது போல!!
அவருக்காகவே நான் சில சமயம் செட் டிசைன் செய்து மேடையில் அவரை உட்கார வைப்பேன் மேடையே நிரம்பி களை கட்டிவிடும் அருமையான SINCERE நடிகர் ஒத்திகையின் பொது பல கேள்விகள் கேட்டு SCRIPT ல் உள்ள ஓட்டைகளை சுட்டிக் காட்டுவார் சில சமயம் அவர் கேள்விகள் எரிச்சல் ஊட்டினாலும் பல சந்தர்பங்களில் மிகவும் உதவியாக இருக்கும்
நாடகமும் சிறப்பாக அமையும்
CYCLE ல் தான் வருவார்
ஒரு வித்தியாசமான அப்பா நடிகர்
மிகவும் தெய்வ பக்தி மிகுந்தவர் 5 வேளை தொழுகையை எக்காரணம் கொண்டும் தவற விட மாட்டார் ஒத்திகை நடந்தாலும் நாடகமே ஆரம்பிக்க போவதானாலும் அந்தந்த நேரத்திற்கு ஒரு முலையில் தொழுது கொண்டிருப்பார்
ரம்ஜான் மாதத்தில் ரொம்ப சிறப்பாக உண்ணா நோன்பை கடைபிடிப்பவர் எச்சில் கூட விழுங்க மாட்டேன் என்று கூறுவார் இவரது இந்த வழக்கம் என்னைக் கூட ஒரு முறை இவரிடமிருந்து காப்பாற்றி இருக்கிறது
ஒருமுறை கோலர் தங்க வயலில் நாடகம்
அது ரம்ஜான் மாதம்
KGF சென்றால் நாங்கள் தங்க சுரங்கத்தில் 2௦௦௦-3௦௦௦ அடிகள் கிழே சென்று தங்கம் பாறையில் படிந்து இருப்பதை வேடிக்கை பார்த்துவிட்டு வருவோம் தங்கம் வெள்ளையாய் ஒரு கோடு போல பாறையில் இருக்கும் இது எப்படி மஞ்சள் உலோகமாக மாறுகிறது என்று அவர்கள் விளக்க அதிசயமாக இருக்கும்
FEROZE எங்கே வந்தாலும் அறையில் அடைந்து கிடைக்காமல் எல்லா இடங்களுக்கும் செல்ல ஆர்வமோடு கலந்து கொள்வார் நம்ம கோவில்கள் ஆனால் கூட சன்னதி வரைக்கும் வந்து ஆச்சர்யமுடன் சிலைகளை ரசிப்பார் பிரகாரங்களை சுற்றி வருவார்
நாடக தினமன்று காலை நாங்கள் எல்லோரும் தங்க சுரங்கம் போவது என்று ஏற்பாடு
எல்லோரும் புறப்பட்டு KGF ஏற்பாடு செய்திருந்த வண்டியில் ஏறிவிட்டோம்
FEROZE மட்டும் வரவில்ல இதை உணராமல் அவருக்கு காத்திராமல் அவசரமாக புறப்பட்டு விட்டோம்
சொல்லப்போனால் இந்த தங்க சுரங்கம் PROGRAMME அவர் ஏற்பாடுதான்
அடிவாரத்துக்கு போனதும்தான் எனக்கு அவர் வரவில்லை என்ற நினைவே வந்தது
என்ன பதில் சொல்வது என்று யோசித்தேன் குற்ற உணர்வு பிடுங்கி தின்றது
சடேலென்று நாங்கள் LIFT ல் கிழே வரும் போது வாயில் நிறைய டேஎச்சில் ஊறி அதை விழுங்கிக்கொண்டே இருந்தது நினைவிற்கு வந்தது
அறைக்கு திரும்பி வந்ததும் நேரே அவரிடம் போனேன்
மிகவும் கோவமாக இல்லை...... வருத்தமாக இருந்தார்..
“நல்ல வேளை FEROZE நீங்கள் வரவில்லை
வந்திருந்தால் ரொம்ப கஷ்டப்பட்டு போயிருப்பிர்கள் லிப்ட்ல் எச்சில் துப்ப முடியாது விழுங்கவும் முடியாது
அதனாலே தான் விட்டிட்டு போய்ட்டோம் என கூசாமல் சொன்னேன் அவர் அப்பாவியாக அதை ஒப்புக்கொண்டு தான் வராததற்கு மகிழ்ந்து எனக்கு நன்றி பாராட்டினார் அதான் FEROZEJI
வேறொரு சமயம் இவரை நடு இரவில் நட்ட நாடு சாலையில் விட்டுவிட்டு வந்தது பற்றி எழுதுகிறேன்

Monday, September 22, 2014

ஜூலை மாத தென்றல் இதழில் என் பேட்டி வெளி ஆனது
நன்றி Madhurabharathi sir and Arvind swaminathan sir
அதன் link
http://www.tamilonline.com/thendral/

Saturday, September 20, 2014



 நாடக அனுபவங்கள் பகுதி 9


சமிபத்தில் என்னுடைய JUST A SECOND PLEASE என்ற நாடகத்தின் YOU TUBE LINK FACEBOOK ல் பதிவு இட்டிருந்தேன் அதற்கு ஒரே ஒரு LIKE வந்திருந்தது எனக்கு சட்டென்று கோவில்பட்டியில் என் நாடகம் நடந்த போது ஏற்பட்ட அனுபவம்வ் நினைவிற்கு வந்தது 



1992 ல் ஒரு முறை கோவில்பட்டி பொருட்காட்சியில் எனது இரு வீடு ஒரு வாசல் நாடகம் நடத்த வாய்ப்பு வந்தது அந்த நாளில் கோவில்பட்டி விருதுநகர் இங்கெல்லாம் பொருட்காட்சியில் நல்ல கூட்டம் நாடகத்திற்கு வரும் நன்றாகவே ரசிப்பார்கள் இதனால் மிக உற்சாகத்துடன் ஒப்புக்கொண்டேன்

நாடக நாளும் வந்தது.காலையிலேயே கோவில்பட்டி சென்று அடைந்து விட்டோம் மாலைதான் நாடகம் மதிய உணவிற்கு பிறகு நாடகம் நடத்தும் இடத்திற்கு சென்றேன் நாடக மேடையும் பார்வையாளர் களுக்கான இடமும் மிகப்பெரியது திறந்த வெளி அரங்கம் மக்கள் அமர்ந்தால் 3௦௦௦ பேருக்கு மேல் அமரலாம் எனக்கோ மகிழ்ச்சிக்கு அளவே இல்லை இன்றுமாலை வரப்போகும் கூட்டத்தை கற்பனை செய்து மகிழ்ந்தேன் தங்கும் இடத்திற்கு வந்து எல்லோரையும் மறுபடியும் ஒரு முறை நாடகத்த்திற்கு ஒத்திகை பார்க்க சொன்னேன்

இரவு உணவிற்குப்பிறகு நாடக மேடையை அடைந்தோம் இரவு 1௦ மணிக்குதான் நாடகம் பொருட்காட்சி சப்தங்கள் எல்லாம் அடங்கிய பிறகு நாடகம் ஆரம்பமாகும் என்றார்கள்

அதனால் பொருட்காட்சி மைதானத்தை சுற்றி வரப்போனோம் பல இடங்களில் ஸ்டால்கள் உருவாகிக்கொண்டிருந்தன முதல் நாள் ஆனதால் முழுமை பெறவில்லை

எங்கள் நாடகந்தான் துவக்க விழா நாடகம்
இரவு மணி 1௦ சிறிது சிறிதாக பொருட்காட்சியை காணவரும் அன்பர்களை ஓயாமல் அழைத்த குரலும் ஓயத்தொடங்கியது மக்கள் அவரவர் வேலைகளைகளை முடித்துக்கொண்டு வந்துகொண்டிருக்கிறார்கள் என ஆவலுடன் காத்திருந்தோம்

ஆனால் யாரும் முதல் நாள் வரத் தயாராக இல்லை என தெரிந்தது கொஞ்சம் படுதாவை நிக்கி விட்டு வெளியே பார்த்தேன்

திறந்த வெளி அரங்கம் மதியம் பார்த்தது போலவே வெறுமையாக இருந்தது மணி 1௦ 3௦ நாடகம் ஆரம்பிக்க சொல்லி தகவல் வந்தது

முதல் மணி அடித்து பார்போம் கூட்டம் வந்து விடும் என்ற நப்பாசையுடன் முதல் மணி இரண்டாம் மணி எல்லாம் அடித்து விட்டோம்

யாரும் அரங்கத்தினுள் வருவதாக தெரியவில்லை அங்கங்கே பொருட்காட்சி மைதானத்தில் சிலர் நின்று கொண்டிருந்தார்கள்

அவர்களிடம் நாடகம் ஆரம்பிக்கப்போகிறது என ஸ்பீக்கரில் அலறினார்கள்

எங்கே அதை ஒரு எச்சரிக்கை யாக கொண்டு வெளியேறிவிடுவார்களோ என்று கூட நான் பயந்தேன்!!

இறுதியாக நாடகம் ஆரம்பித்தே ஆக வேண்டுமென்ற நிலைமை ஏற்பட்டு விட்டது எங்கள் நடிகர்களுக்குக் சோகம் ஒருபுறம் மறுபுறம் ஆகா ஜாலியாக எதை வேண்டுமானாலும் பேசி நமக்குள் ரசிக்கலாம் என்ற எண்ணம் மறுபுறம்

நாடகத்தை ரத்து செய்து விடலாமென்று நினைத்தேன் நாடக ஏற்பாடு செய்தவர்கள் நாடகத்திற்கு ticket விற்றிருப்பதால் நடத்தியே ஆக வேண்டுமென்றார்கள்!!

காலி அரங்கமென நினைத்து படுதாவை உயர்த்தினால் ஒரே ஒருவர் மணற்படுக்கை அமைத்து நாடகம் பார்க்க தயாராக சாய்ந்து படுத்திருந்தார்!!!

ஓ!! இவர்தான் அந்த ticket வாங்கியவரா என நினைத்துகொண்டு (சபித்துக்கொண்டு) நாடகத்தை துவக்கினேன்

அவ்வப்போது எங்கள் குழுவை சேர்ந்தவர்களை வேலை இல்லாதபோது அரங்கத்தில் சென்று அமரும்படி சொல்லி வைத்தேன் அதன்படி அவர்களும் முறை போட்டுக்கொண்டு நாற்காலிகளை கொஞ்சம் நிரப்பினார்கள்

ஆனால் அந்தே ஒரே ஒருவர் நாடகத்தை ரசித்த விதம் எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது

சிரிக்க வேண்டிய இடத்தில் சிரித்து ரசிக்க வேண்டிய இடத்தில் ரசித்து என் கடமை உணர்வை தூண்டிவிட்டார்

அந்த ஒரு ரசிகனுக்காக நான் நாடகத்தில் எந்த ஒரு பகுதியையும் சுருக்காமல் 1௦௦௦ பேருக்கு எப்படி நடிப்போமோ அப்படியே உண்மையாக நடித்து முடித்தோம்

என்ன இருந்தாலும் அந்த ஒரு ரசிகர் காசு கொடுத்து நாடகம் பார்க்க வந்தவர் அல்லவா? ஒரே ஒரு ரசிகர் பார்க்க நாடகம் போட்டவன் என்று guinness world ரெகார்ட் எதாவது இருக்கிறதா???

நாடகம் இடைவேளை வரை வந்து விட்டது ஆனால் பணம் வந்து சேரவில்லை கேட்டு அனுப்பினேன்

collection ஆகவில்லை ஆனவுடன் தந்து விடுகிறோம் என்றார்கள்

தொடர்ந்து நம்பிக்கையுடன் நாடகத்தை நடத்தி முடித்தோம் அப்போதும் பணம் வந்து சேரவில்லை நான் நேராக பொருட்காட்சி அலுவலகம் சென்றேன்

உங்க பணம்தான் தயார் செய்து கொண்டிருக்கிறோம் என்றார்கள்

மேஜை மேல் ஒரு ரூபாய் ரெண்டு ருபாய் 5 ரூபாய் என நோட்டுகளும் காசுகளும் குவிந்து கிடந்தன

பக்கத்தில் ஒரு சிறிய மூட்டை அதனுள் காசுகள் கட்டி வைக்கப்பட்டிருந்தன அந்த பொற்கிழியை எடுத்து என்னிடம் கொடுத்து உங்கள் பணம் 1ரூபாய் 2 ரூபாய் காசுகளாக இந்த பையில் இருக்கிறது எண்ணிக்கொள்ளுங்கள் என்றார்கள்

அதனுள் கொஞ்சம் 1௦ ரூபாய் 2௦ ரூபாய் நோட்டுகள் இருந்தது கொஞ்சம் ஆறுதல்.

நாடகத்திற்கு இந்த 2௦ நுற்றாண்டில் மூட்டையில் 3௦௦௦ ரூபாய் பெற்ற முதல் நாடகக்காரன் நானாகத்தான் இருப்பேன்

எல்லாம் கவுன்டரில் டிக்கெட்விற்ற காசு போலும்
கோவில்பட்டி அல்லவா கொஞ்சம் கடலைமிட்டாய்வாசனை அடித்தது

தூரத்தே சிலர் அப்பளம் சாப்பிட்டுகொண்டிருந்தார்கள் இரவு மணி 2.


Thursday, September 18, 2014

மேலும் சில விமர்சனங்கள் 


Fantastic Initiative. Great work. Listening to the First CD. Great Treasure of Tamil Historical Novel in Easy Format. Thanks Bombay Kannan Kannan Sir.
Subramanian ranganathan 

பொன்னியின் செல்வன் ஒலிப்புத்தகம் பற்றி நண்பர் Shri Karthikeyan Meenakshi Sundarar எழுதிய விமர்சனம்

இந்தக் குரல்களை மறக்கமுடியாது! ஒரு கும்பமேளா சத்தத்தில் கூட இவர்களின் குரலை வைத்து நான் கண்டுபிடித்துவிட முடியும்!

சாதாரணமாக ஒளிச் சேர்க்கையும் ஒலிச் சேர்க்கையும் சரியான விகிதத்தில் சேர்வதால்தான் காணொளி வசப்படுகிறது. ஆனால் இதில் குரல் கொடுத்துள்ளவர்களுக்கு ஒரு நிபந்தனை! இனிப்பை பற்றி பேசலாம்! ஆனால் சாப்பிடக்கூடாது! உடல்மொழி அசைவு கேட்பவர்களாகிய நமக்குத் தெரியாது என்ற நிச்சயத்துடனே அவர்கள் பேசவேண்டும். சிறிது ஏமாந்தாலும் மன்மோகன் சிங் நாட்டு மக்களுக்குத் தன்னை திருடன் என்று சொல்வது தனக்கு எவ்வளவு மகிழ்ச்சி என்று படிப்பது போல் ஆகிவிடும்.

வீரபாண்டிய கட்டபொம்மன் என்ற உடனே நமக்கு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நமக்கு உடனே நினைவுக்கு வருவதற்கான காரணம் முதலில் அவர் தோற்றமும், உடல்மொழி அசைவும், பிறகுதான் வசனம்(நம் காதில் விழும்). ஆனால் இங்கு இவர்களின் குரல் மட்டுமே! என்னதான் அவர்கள் professional,amateur கலைஞர்களாக இருந்தாலும் continuity-க்கும்,சீன்-க்கு உண்டான mood-ம் இல்லையென்றால் வேலை தீர்ந்தது.அவர்களின் குரலில் இருந்த அன்பு, வீரம், கலாச்சார உணர்வு, அதிகாரத் தொணி யாவும் அக்காலத்தில், குறைந்த பட்சம் கல்கியின் காலம் வரை அந்த தொன்மை, இனிமை இருந்தே இருக்கிறது. எல்லா புகழும் கண்ணனுக்கே!(Bombay)
சுந்தர சோழராக தன் குரலால் வாழ்ந்திருக்கும் SK. ஜெயக்குமார், குந்தவையான கீர்த்தி-யி டம் தன்னுடைய இளமை காலத்து காதலை சொல்லுமிடத்தில் உள்ள வாத்சல்யமும், நெகிழ்ச்சியும், கீர்த்தி (குந்தவை) அதை புரிதலுடன் தந்தைக்குச் சொல்லும்போதும், அரசுடைமை தன் சகோதரர்களுக்குதான் தான் என்று விவாதம் செய்யுமிடமும் மெய் சிலிர்க்கும். பெண்களை பெற்றவர்களுக்கும், பெண்களுக்கும் தான் அந்த உணர்வின் மகாணுபாவம் தெரியும்.என் உறவினர்கள், நண்பர்களான அப்பாய், கிட்டண்ணன்,ஆவுடையப்பன் அண்ணன், ராஜாராம் அண்ணன், ஸ்டீபன் அண்ணன், சிவகுமார், தியாகு, மற்றும் என் மணைவி ஆகியோர் அந்த விஷயத்தில் பாக்கியசாலிகள். எனக்கும்,என் தந்தைக்கும் இந்த ப்ராப்தம் கிடைக்கவில்லை. எனது மகனுக்கு கிடைக்கும் என்று நம்புகிறேன்.

கீர்த்தியும், வானதியாக குரல் கொடுத்த வித்யாவும், குந்தவையாக அடிக்கள்ளி! என்று செல்லமாக கோபித்துக் கொள்ளும்போதும்,வானதியாக அக்கா!அக்கா! என்று குழையும்போதும் அந்த நேசத்தை என்னால் விவரிக்க முடியாது. ஆனால் அந்த மாதிரியான நேசத்தை பைரவி திரைபடத்தில் சுமித்ரா, லதா ஆகியோர் ஆடிப் பாடும் பாடலான "இதோ! இதோ! என் நெஞ்சிலே, மற்றும் ரம்பா, தேவயாணி பாடும் "மல்லிகையே மல்லிகையே" விலும் ஒரு வகையான ஆச்சரியத்தில் உணர்ந்திருக்கிறேன். கீர்த்தி, வித்யா போன்ற காலத்தை வெல்லும் குரல்கள் இன்னும் உள்ளனவா?

நந்தினியாக ஃபாத்திமா பாபு, ஒரு உலோக பெண்குரல், பெரும்பாலும் பொருள் பொதிந்த, அதிகராத் த்வனி கூடிய குரல், ஒரு மாயம்! நான் கல்லூரியில் படித்தபொழுது இன்றைக்கு அக்கன்னா ( ஃ) பாத்திமா தொலைக்கட்சியில் செய்திகள் வாசித்தாலும், வாசிப்பார் என்று சொல்லி நண்பர்களின் கோபத்திற்கு ஆளாகி வீட்டிற்கு அவசர அவசரமாக வந்த காலம் நினைவிற்கு வருகிறது.

அருண்மொழி வர்மராக அனந்தன், வந்தியத் தேவனாக இளங்கோ, பூங்குழலியாக ஸ்ரீவித்யா, ஆழ்வார்க்கடியானாக ரமேஷ்,அநிருத்தராக கல்யாண்ஜி, பழுவேட்டரையராக வேலுச்சாமியும் நம் மனக்கண் முன்பாக நிற்கிறார்கள்.இவர்கள் முகங்கள் எனக்குத் தெரியாவிட்டாலும் இவர்களுடைய குரல்கள் என் ஜீவியமுட்டும் வாழ்ந்திருக்கும். நானும் தேடிக்கொண்டே இருப்பேன்.

பொருள் தேடும் இந்த காலத்தில் பாம்பே கண்ணன் தன் கனவை மட்டும் மெய்ப்பித்திருக்கிறார் என்று நினைக்கிறேன்.சர்வ வல்லமை பொருந்திய தமிழ்த் திரையுலகம் பாம்பே கண்ணனை தேடிவரட்டும். வந்தே மாதரத்தை மீண்டும் இலைஞர்கள் மத்தியில் எழுச்சியுடுவதற்கு ஒரு பரத் பாலா,ரஹ்மான் செய்தது போல CK.வெங்கட்ராமன், பாம்பே கண்ணன் பொன்னியின் செல்வன் ஒலிச் சித்திரத்தை செதுக்கி இருக்கிறார்கள்.

நான் இங்கே குறிப்பிட்டவர்களில் யாருக்கும் திரு, திருமதி அல்லது செல்வி என்றோ சேர்த்தவில்லை, ஏனென்றால் அவர்கள் எல்லோரும் இந்தியாவின் Intelligent Property-ஆக அறிவிக்கப்படுவதற்கு தகுதியுள்ளவர்கள்.

இதை தொடர்ந்து கேட்டதின் மூலம் என் தாய் மொழியறிவில் முன்னேறி,என்னுடைய பேச்சு மொழியில் இனிமைக் கூடியுள்ளதாக நினைக்கிறேன்.





A letter received from from dr J venkat Narayanan

Dear sir,First of all i would like to congratulate and thank you for making PONNIYIN SELVAN AUDIO DVD.Its a himalayan task and your crew is really outstanding. I thoroughly enjoyed the audio book. Am not able to express my joyous feelings by words when i listened. All dubbing artists have performed well especially the person who narrates the story,PERIYA PAZHUVAETARAIYAR IS TOO GOOD.NANDHINI's voice exactly matches the character.MOST IMPORTANTLY MUSIC,EXCELLENT RE-RECORDING which creates the mood for the story. musician has got fantastic skills.Whenever i listen the story and close my eyes am able to see the movie and would like to go that CHOLA s period. Mr. KALKI IS a gift for all tamil novel readers.Hats off to the author.sir as a director you have worked hard and it pays now. Iam able to imagine you would have made strenous efforts during audio recording because voice expression is the back bone of this story. As a captain of the team you can be proud to make this audio.Am sure people will feel they are blessed when they listen this audio.Am damn sure the rest of the people who dont listen to this will miss something great in life. Thank you once again and i expect many more works to come from you and we will surely support you. with regards
Dr. J. Venkat Narayanan


"This is one of the excellent venture. Both the producer and the director's have not looked this as a business venture, I could see their heart & soul with utmost passion in this work."SUDHANGAN JOURNALIST 

Sir,
  I finished hearing your audio dvd of Poniyin Selvan. It's a fantastic work. I enjoyed very much.  I have read book of poniyin selvan more than 3 to 4 times. But hearing with excellent background music, special effect music and very apt voices for the characters made me enjoy poniyin selvan more. Voices of Arulmolithevar & Vanthiyathevan are excellent. Especially the male voice that narrates the whole story was too good. Also certain songs which comes in between were good. On the whole it is an excellent work. I hope you can bring lot more books in audio mode. I want to gift your DVD to my friends & relatives. I want 5 copies. Can you courier to those Addresses mentioning my name in the courier. Please collect the amount for 5 copies and the addresses from me. I would have taken 5 copies or more in empty dvd's and given to my friends & relatives free of cost. But i dont want this excellent work to be pirated. Congratulations. 
With Regards
Dr.T.K.N.Kailash,
Chennai-10.

பொன்னியின் செல்வன் ஒலிப்புத்தக விமர்சனங்கள் 


MR Anandasubramanian Cp

Finished listening to 78 hours of Ponniyin Selvan.
I was crying listening to Karikala cholan's death, manimekalai's insanity and sad death.
This novel was very good, but what made it great was the wonderful, wonderful narration, the awesome background score, each actor sooo natural and so good and had such expressions...
Kudos to the team. Each word narrated is etched in my memory.



Sir, Thanks for bringing out the audio book of Ponniyin Selvan. I listened to it in Nov'13 and my wife & daughter (who can't read Tamil) & my brother listened to it in Dec'13 and all of us were literally spell bound when we finished it. I have read the novel in Tamil 3 or 4 times since my school days. In spite of that, the audio book kept me hooked as if I am listening to the story for the first time. All the actors have given their soul 100% in dialogue delivery & BGM is a definite plus. Overall, an enjoyable period drama and it took more than a fortnight for us to completely come out of the characters' impact. Hats off to you & your team. Arunachalam, Bangalore.

When I was young I used to read serial stories in the weekly magazines for the old people in our house. I have not thought anything about it except that they used to declare that my reading was lovely and my modulation was enjoyable.
Today only I recollect the greatness in me. How? wait. I will tell you.
I am fortunate to receive a copy of Ponniyin selvan audio book from the creator himself.
the first seven chapters took me to a tour of 1960s.
PONNIYIN SELVAN Audio book by Sri.Bombay Kannan is the best and premier effort to Tamil literature.
Words fail me when I look for them to praise SriBombay Kannan Kannan. I salute to you. I bow to you ; i adore you Bombay Kannan sir.
I am sure all the fans of Ponniyin selvan will enjoy every word of this audio book.
Sri Bombay Kannan deserve the highest accolade that is available for work to Tamil Literature. Whether he gets any or not , according to me He is standing tall in service to Tamil readers

Rengaswamy Santhanam

பொன்னியின் செல்வன் மற்றும் சிவகாமியின் சபதம் இரண்டு நாவல்களும் தமிழில் ஒலிக் கோப்பாக கொண்டு வந்திருக்கிறார் திரு பாம்பே கண்ணன் அவர்கள். Bombay Kannan Kannan. மிக அருமையாக இருக்கிறது. என்னைப் போன்று பொன்னியின் செல்வன் மற்றும் சிவகாமியின் சபதம் ஆர்வலர்களுக்கு மிகப்பெரிய விருந்து. நன்றி கண்ணன் சார்.Iyappan Krishnan  



Dear Sir
I recently purchased the audio book from giri trading agency and I wish to congratulate and thank you for producing an above excellent audio book.
I have recommended it in our corporate forum and many have approached the Connexions shop in our mahindra city campus to buy the same.
you have taken painstaking efforts to recreate the period, songs, music and the thrilling suspense at the end of each chapter. The songs were really excellent.
Iam halfway through the book and am still hearing the sword clashes, songs and characters.
Thanks
Anandasubramanian





மதிப்பிற்குரிய திரு பாம்பே கண்ணன் அவர்களுக்கு,
அனேக வணக்கத்துடன் அடியேன் எழுதுவது. அவர்களின் பொஅமரர் கல்கி ன்னியின் செல்வன் நாவலை இதுவரை 3000 பக்கங்களுக்கும் மேலான புத்தகமாய் மட்டுமே படிக்க முடியும் என்ற நிலையை

மாற்றி, ஒலி வடிவமாக, ஒரு திரைப்படத்தின் ஒலி வர்ணனை போல் 78 மணி நேரம் கேட்டு மகிழும் ஒரு அற்புத ஒலித்தகடாக இந்த தமிழ் கூறும் நல்லுலகிற்கு பரிசளித்தமைக்கு என் மனமார்ந்த கோடானு கோடி நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.

அமர் கல்கி அவர்களின் வரலாற்று படைப்புகளை படிப்பவர்கள் தமிழ் வரலாற்று பித்துபிடித்து அலையும் கிறுக்கர்களாவது நிச்சயம். அப்படி பட்டவர்களுள் நானும் ஒருவன். என் கல்லூரி நாட்களில் எனக்கு கிடைத்த தேர்வு விடுமுறைகளை எல்லாம் கல்கிக்கே அர்ப்பணித்து அத்தனை வரலாற்று நாவல்களையும் படித்து ஆர்வம் தீராமல் பிற ஆசிரியர்களின் வரலாற்று நாவல்களையும் தேடி தேடி படித்து என் வரலாற்று பசியை தீர்க்க முயன்றேன். ஆனால் எவ்வளவு படித்தாலும், கல்கி அவர்களின் படைப்பு மனதில் நின்றது போல் எதுவும் நிற்கவில்லை. அப்படி பட்ட நாவல்களான பொன்னியின் செல்வனையும் சிவகாமியின் சபதத்தையும் மீண்டும் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் மட்டும் நீங்காமல் இருந்தது. அனால் மின்னல் வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கும் அலுவலக வாழ்கையில், அவ்வளவு பெரிய புத்தகத்தை மீண்டும் படிப்பது இயலாத காரியம். ஒரு நாள் எதேர்ச்சையாக தங்கள் படைப்பான பொன்னியின் செல்வன் ஒலி புத்தகத்தை இணையக்கடையில் (nammabooks .com ) பார்த்தேன். உள்ளத்தில் எழுந்த தாங்க முடியாத ஆர்வத்தில் உடனே வாங்கிவிட்டேன்.
உண்மையில் நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை அது இதனை அருமையாக உருவாக்கப்பட்டிருக்கும் என்று. தயவு கூர்ந்து மண்ணிக்கவும் எனக்கு இதற்கு முன் உங்களை தெரியாது, உங்கள் முந்தைய படைப்புகளை நான் அறிந்திருக்கவும் இல்லை. அதனால் தான் நான் எதிர்பார்கவில்லை என்று கூறுகிறேன். ஆனால் இந்த படைப்பின் அட்டையில் பதித்த ஓவியமே எனது ஆர்வத்தை பல மடங்கு கூட்டியது. முதல் பாகம் முழுவதையும் எனது ஐபோன்-இல் ஏற்றி முன்னுரையை கேட்க தொடங்கியதுமே நான் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சோழ சாம்ராஜியத்தில் மீண்டும் ஒருமுறை, ஆனந்தமாக நீந்தபோகிறேன் என்பதை உணர்ந்து கொண்டேன். படிக்கும் பொழுது கதையில் இருக்கும் ஆர்வத்தில், தொய்வு ஏற்படும் என தோன்றும் சில பகுதிகளை படித்தும் படிக்காமல் வேகமாக நகர்ந்து செல்வது தவிர்கமுடியததாக இருந்தது. அந்த பகுதிகளையும் கேட்கும் பொழுது தவறவிடாமல் கவனிக்க வேண்டும் என்று தீர்மானித்துக்கொண்டேன்.

முதலில் நான் கூற விரும்புவது தங்கள் வர்ணனையை பற்றி. இத்தனை அருமையாகவும் தெளிவாகவும் சிறு பிதற்றல் கூட இல்லாமலும் தமிழை உச்சரிக்க கேட்டு உண்மையில் பல வருடங்கள் ஆகின்றன. எனக்கு என் பள்ளி காலத்து முதிர்ந்த தமிழாசிரியர் நினைவு வந்தது. அதிலும் கல்கி அவர்களே என் காதருகே வந்து கதை சொல்வது போல் உணர்வு ஏற்பட்டது. நீங்கள் கல்கி அவர்களின் படைப்புக்கு மட்டும் ஒலி வடிவம் கொடுக்கவில்லை, கல்கி அவர்களை புகைபடத்தில் மட்டுமே காணும் பாக்கியம் பெற்ற இன்றைய மற்றும் நாளைய தழில் குடிமக்களுக்கும் கல்கி இப்படித்தான் பேசியிருப்பார் என்று குரல்வடிவமும் கொடுத்துவிட்டீர்கள். உச்சரிப்பு மட்டும் இன்றி கதையின் சூழ்நிலைக்கு ஏற்ப அதன் இயல் நிலை மாறுபாடுகளை (mood) கச்சிதமாய் வெளிக்கொண்டு வந்துள்ளீர்கள். கனிவாய் பேச வேண்டிய இடத்தில கனிவாகவும், ஆக்ரோஷமாய் பேச வேண்டிய இடத்தில ஆக்ரோஷமாகவும் பேசி, மயிர்கால்களை சிலிர்ப்படைய செய்துள்ளீர்கள்.
அடுத்து, பின்னணி இசை. இந்த மாபெரும் படைப்புக்கு பின்னணி இசை சேர்த்திருக்கும் அந்த இசையமைப்பாளர், ஆயிரம் கோடி வணக்கங்களுக்கு உரித்தானவர். ஒரு திரைப்படம் பார்ப்பதுபோல் ஒரு பிரமிப்பை பின்னணியில் எழும் துல்லியமான ஓசைகளும் இசைக்கருவிகளின் இனிய நாதமும், காட்டு விலங்குகளின் சப்தங்களும், குதிரைகளின் கனைப்பும், பறவைகளின் கானமும், இடி, மழை, காற்று போன்ற இயற்கை ஒலிகளும், ஒவ்வொரு கதாபதிரதிற்குமான தனிப்பட்ட இசையும், சொல்லியடங்கா வியப்பையும் ஆர்வத்தையும் உண்டாக்குகின்றன.

அடுத்ததாக, நான் மிகவும் ரசித்த சில கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்தோரை குறிப்பிட விரும்புகிறேன். இதை அவர்களிடம் சேர்க்கும்படியும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
நந்தினி (பாத்திமா பாபு) - எனை மிகவும் கவர்ந்த பாத்திரம். கதையின் மிகவும் சக்திவாய்ந்த மங்கை. படிக்கும் பொழுது ஒவ்வொருவரும் இவளை பற்றி கற்பனை செய்துவைத்திருக்கும் வடிவத்தை குரலின் மூலம் கண்முன்னால் கொண்டுவந்து நிறுத்துவது என்றால் நினைத்து பார்க்கக் கூடிய காரியமா அது? அதை அப்பழுக்கின்றி செய்திருக்கிறார் பாத்திமா பாபு. இவருக்கு அறிமுகம் தேவையில்லை. குரலை கேட்டவுடனேயே கண்டுபிடிக்க முடிந்தது. நந்தினிக்கு வேண்டிய , மிடுக்கும், தைரியமும், கோபமும், சூழ்ச்சியும், காதலும், நகைப்பும், அப்படியே தனது காந்தக்குரலில் பிரதிபலிக்கிறார்.

ஆதித்த கரிகாலன் (வெற்றி விக்னேஷ்) - சினிமாவாக பொன்னியின் செல்வனை எடுத்தால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை தவிர வேறு யாரும் இதற்கு பொருத்தமில்லாதவர்கள் எனபது என் கருத்து. அவ்வளவு சக்திவாய்ந்த ஒரு வேங்கையாக சித்தரிக்கப்படும் இளவரசனுக்கு குரல் கொடுக்க துணிவதே ஒரு தைரியம் தான். என்னை அப்படியே தன் குரலுக்கு அடிமையாக்கி விட்டார் வெற்றி விக்னேஷ். ஆதித்த கரிகாலன் வரும் இடமெல்லாம் என் ஆர்வம் பலமடங்கு கூடுவதற்கு அந்த பாத்திரத்தின் வலிமையை போலவே இவரது வலிமையான குரலும் ஒரு காரணம். கடம்பூர் சம்புவரையர் மாளிகையில் அவர் பெரியோர் சிறியோர் என பாராமல் அனைவரையும் திக்கு முக்காட செய்யும் கட்சியில் ஒட்டுமொத்தமாக அத்தனை கைதட்டல்களையும் பெறுகிறார். அதுவும் அந்த 'இடி இடி என சிரிக்கும்' இடத்தில் அப்பப்பா....பிரமாதம்.
வந்தியத்தேவன் (இளங்கோ) - கதையின் நாயகன், மிகவும் சாந்தமாகவும் இல்லாமல், எப்போதும் கோபமாகவும் இல்லாமல், சீராக அதே நேரம் நையண்டியுடனும் பவனி வரும் ஒரு இளம் காளை. இளங்கோ அட்டகாசமாய் செய்திருக்கிறார். அந்த கதாபாத்திரத்தின் வரம்பு அறிந்து அதன் உடல் மொழிகள் அறிந்து கேட்போரின் என்ன ஓட்டத்தை அறிந்து, கச்சிதமாக குரல் கொடுத்திருக்கிறார். பாராட்டுக்கள்.
பெரிய பழுவேட்டரையர் – (வேலுசாமி). அடடா. இவரை தமிழ் திரையுலகம் இன்னும் கண்டுகொள்ளவில்லையா? என்ன ஒரு கம்பீரமான குரல். என்ன ஒரு அட்டகாசமான உச்சரிப்பு. கடைசி பாகத்தில் ஆற்றில் தத்தளிக்கும் பொழுது அவர் பேசும் வசனமும் அதற்கு அவர் தந்திருக்கும் உயிரும் நம்மையும் அந்த வெள்ளத்திலேயே மிதக்க வைக்கிறது. திரைப்படமாக எடுத்தால் கூட இவ்வளவு துல்லியமாக அந்த காட்சியை உருவாக்க முடியாது. இவருக்கு எனது பணிவான வணக்கங்கள்.

வானதி (வித்யா) - இந்தனை இனிமையான கனிவான குரலில் வானதி அருள்மொழி வர்மருடன் பேசியிருந்தால் குரலை கேட்ட முதல் வினாடியே அவர் காதலில் விழுந்திருந்தாலும் ஆச்சரியமில்லை. வெட்கம், அச்சம், கனிவு, மேன்மை, சற்றும் எல்லை தாண்டாத கோவம் என இவர் காட்டும் குணாதிசயங்கள் கேட்கும் காதுகளுக்கு தேனமுதை ஊற்றுகிறது.
பூங்குழலி (ஸ்ரீவித்யா) - பளிங்குக்குரல். ஒரு சமயம் சாமர்த்தியத்தின் திருவுருவாகவும் மறு சமயம் விரக்தியின் உச்சத்துக்கும் செல்லும் ஆண்மைமிக்க பெண். குரலின் கம்பீரம் வீரத்தையும் சாமர்த்தியத்தையும் கண் முன் கொண்டு வர அதே சமயம், அந்த குரலின் கனிவு அவள் ஆழ்மனதின் சோகத்தையும் அதில் படிந்திருக்கும் அப்பழுக்கற்ற ஈரத்தையும் வலிமையாக உணர்த்துகிறது. மிகவும் கடினமான வேலையாக இருந்திருக்கும். சபாஷ் ஸ்ரீவித்யா.
குந்தவை (கீர்த்தி) - ஒரு அறிவுக்கூர்மை மிக்க அரசிளங்குமரி, தமையனை அகிலம் போற்றும் மாவீரனாக்க துடிக்கும் வீரமிகு தமக்கை - இதை அப்படியே தன் குரலால் பிரதிபலித்து பாத்திரத்திற்கு கௌரவம் சேர்த்திருக்கிறார்.
மேலும் ஆழ்வார்கடியான் (ரமேஷ்) , சுந்தர சோழர் (ஜெயக்குமார்), மணிமேகலை (மித்ரா) , அநிருத்த பிரம்மராயர் (கல்யாண்ஜி), சின்ன பழுவேட்டரையர் (ராஜேஷ் கண்ணா), பார்த்திபேந்திர பல்லவன் (TMC கிருஷ்ணா), கந்தமாறன் (ஜெய்), சம்புவரையர் (பூங்குன்றன்) , சேந்தன் அமுதன் (முத்துக்குமார்), மதுராந்தகன் (சதீஷ்), ரவிதாசன் (நேதாஜி), மலையமான் (போத்திலிங்கம்), மற்றும் பிறரும் மிகவும் அருமையாக செய்திருக்கிறார்கள்.
மொத்தத்தில், இந்த படைப்பு, ஒரு வரலாற்று சிறப்பு மிக்கது. இதை அனுபவித்தோர், பிரவிப்பயனில் ஒரு முக்கிய பயனை அடைந்துவிட்டோராவர். இதன் புகழ் தமிழுள்ள மட்டும் இறவாது நிலைத்திருப்பது திண்ணம். எனது கவலையெல்லாம், இன்னும் நூற்றுக்கு தொண்ணுற்றொன்பது பேர் தமிழ் வரலாற்றுக்கு அதனை முக்கியத்துவம் தருவதில்லை. அதனால் அமுதம் கண்ணருகே இருந்தும், அதை அவர்கள் பருக முடியாத நிலை. நீங்கள் அதை கிண்ணத்தில் ஊற்றி கண்ணுக்கு முன் நீட்டி உள்ளீர்கள். சுவைக்க மனம் வருகிறதா பார்போம்!!!
தங்களது அடுத்த படைப்பான பார்த்திபன் கனவிற்காக ஆவலுடன் காடிருக்கிறேன்.

இப்படிக்கு, பணிவுடன், 

பிரேம் ஆனந்த் (கோயம்புத்தூர்).




(மேலும் விமர்சனங்கள் அடுத்த பதிவில்)



Tuesday, September 16, 2014

I HAVE DIRECTED FOUR HINDI SOLO PLAYS WRITTEN AND PERFORMED BY VIBHA RANI A VERY POPULAR HINDI NOVELIST AND PLAYWRIGHT

THESE PLAYS WERE COMPOSED IN SUCH A MANNER THAT EVENTHOUGH THERE ARE ABOUT 10 CHARACTERS (ALL PERFORMED BY THIS SINGLE ARTISTE)

 YOU WILL FEEL THE PRESENCE OF ALL CHARACTERS ON THE STAGE DUE TO EXCELLENT PERFORMANCE BY THIS  ARTISTE,  HER MOVEMENTS, CHANGE OF MOODS MODULATION AND BODY LANGUAGE ETC.

SHE HAS WRITTEN ONE PLAY TITLED " BHIKARIN" WHICH IS BASED ON THE SHORT STORY WRITTEN BY RABINDRANATH TAGORE I AM GIVING BELOW A LINK TO WATCH THIS FIRST PART OF THE PLAY SHORTLY I WILL GIVE LINKS FOR THE OTHER PARTS ALSO

   https://www.youtube.com/watch?v=0ahUEWtCJME&feature=share


நாடக அனுபவங்கள் பகுதி 8




நானும் வெங்கடராமனும் ஓஹோ எந்தன் பேபி நாடக அனுபவத்திற்கு பிறகு ரொம்பவே மகிழ்ச்சிய்டன் அடுத்து அடுத்து நாடகங்கள் பற்றி யோசிக்க ஆரம்பித்தோம் நாங்கள் இருவரும் சேர்ந்து பாரத்த இரண்டு ஆங்கிலப்படங்கள் எங்களை பெரிதும் மனம் கவர்ந்தது ஒன்று Irma la douze மற்றொன்று To Sir with Love
முதலில் Toi Sir with love படத்தை நாடகமாக்குவது என்று முடிவு செய்து அதைப்பற்றி பேச ஆரம்பித்தோம்.

ஏனென்றால் அப்போது HOSTELல் தங்கி படித்து வந்ததால் அதில் வரும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர் எல்லோருமே நாங்கள் நெருங்கிப் பழகினவர்கள் போலவே இருததுதான் காரணம் என் hostel லில் நடந்த பல சம்பவங்கள் இதில் இடம்பெற்றன

உதாரணத்திற்கு என் அறைக்கு அடுத்த அறையில் ஒரு தெலுங்கு மாணவன் இருந்தான் அவனுக்கு தமிழ் சுத்தமாக வராது ஏன் அசுத்தமாகக் கூட வராது அவனுக்கு நாங்கள் தமிழ் சொல்லிக்கொடுத்தோம்

எப்படி??

hostel வார்டன் rounds வரும் பொது வணக்கம் எப்படி தமிழில் சொல்ல வேண்டும் என்று அவனுக்கு முதல் பாடம் சொல்லிக்கொடுத்தோம்
“வாடா முட்டாள்” என்றால் வணக்கம் என்று அர்த்தம் என்று முதல் பாடம்
அடுத்து சௌக்கியமா என்று கேட்க
“மடையா எப்படி இருக்கே” என்று இரண்டாவது பாடம்

அடுத்து உள்ளே வாங்க என்று சொல்ல உள்ளே வாடா என்று முன்றாவது பாடத்தையும் சொல்லி மனப்பாடம் செய்ய வைத்தோம்

அவனும் மிகவும் சிரத்தையாக அதை மனப்பாடம் செய்து கொண்டு வார்டன் வந்தபோது இவற்றை பிரயோகித்து எல்லோரையும் சிரிக்க வைத்தது பெரிய விபத்து
இதை அப்படியே ஒரு காட்சியாக்கி இதை ஒரு சர்தார்ஜி மாணவனை வைத்து பேச வைக்கலாமென்று காட்சி எழுதினோம்

இது பின் நாளில் எதாவது ஒரு படத்தில் பயன்பட்டிருந்தால் அந்த நேரத்தில் அந்த இயக்குனரோ கதாசிரியரோ அதே கல்லூரியில் படித்துக் கொன்டிருக்க வேண்டுமே தவிர வேறு காரணமில்லை

அடுத்த காட்சியில் வார்டனுக்கும் மெஸ்ஸில் தகராறு செய்யும் ஒரு மாணவனுக்கும் இடையிலான ஒரு சம்பவம்

ஒரு முறை மாணவர்கள் மெஸ்ஸில் சாப்பாடு நன்றாக இல்லை எனறு strike பண்ணினார்கள் அவர்கள் எல்லோரையுமே வீட்டுக்கு அனுப்பிவிட்டு hostel மூடப்பட்டது
அபோது இருந்த எங்கள் கல்லுரி மாணவர்கள் வன்முறையெல்லாம் ஈடுபட மாட்டார்கள்

மாணவர்கள் அடுத்த வருடம் ADMISSIONக்கு வந்தபோது ஒவ்வொருவரையும் INTERVIEW வைத்தே HOSTELல் சேர்த்துகொண்டார்கள் ஒவ்வொருவரையும் வார்டன் பல கேள்விகள் கேட்டார் அதில் ஒரு மாணவனிடம் கேட்க்கப்பட்ட கேள்வி
வடையில் முடி இருந்த என்ன பண்ணுவே
துக்கி எறிவேன் சார்
என்னது!!!~ எதை?
முடிய.
YOU ARE ADMITTED

இது உண்மையில் நடந்த சம்பவம் இதுவும் ஒரு நாடக காட்சியாக அமைந்தது

இப்படி HOSTEL நடந்த பல சம்பவங்களை கொண்டு ஒரு நாடகத்தின் பல காட்சிகள் உருவாகின வெங்கடராமனின் நகைச்சுவை வசனங்களுடன்

இது இப்படி இருக்கட்டும் இந்த நாடக SCRIPT ற்கு பின்னால் வருவோம் இப்போது HOSTELல் நடந்த வேறு சில சம்பவங்களைப் பார்ப்போம்

முக்கியமாக நான் சினிமாவில் நடித்த கதை!!!!

அப்போது வீனஸ் PICTURES சேர்ந்த வேங்கடேஸ்வரனும் அவர் தம்பியும் எங்கள் கல்லூரியில் படித்து வந்தார்கள் ஒரு நாள் hostel மாணவர்களில் பலர் ஒரு சினிமா SHOOTING ற்கு தேவைபடுகிறார்கள் என்று HOSTEL ல் வந்து சொல்ல நாங்கள் பலரும் தயாரானோம் காலை 5 மணிக்கெல்லாம் BUS வந்து விட்டது

என்னைப் பற்றி சொல்ல வேண்டுமா?
சினிமாவில் நடிக்கப் போகிறோம் என்று நான் இரவு முழுவதும் தூங்க வில்லை

என் நடிப்பை பார்த்து அப்படியே ஸ்டுடியோவிலேயே வேறு படத்திற்கு BOOK ஆகி அங்கேயே இருந்து விடும்படி ஆகி விட்டால் என்ன செய்வது? படிப்பு என்னாவது அப்பாவிற்கு என்ன பதில் சொல்வது? T நகரில் எங்கே விடு வாங்கலாம்? எந்த பாங்கில் account ஓபன் பண்ணுவது?
ரசிகர் மன்றம் தேவையா இல்லையா?
போன்ற பல் கற்பனைகள்

வாகினி studio விற்குள் நுழைந்தோம்
நான் கலைத்தாயின் மடிமீது தவழ்ந்து விளையாட தயாராகிவிட்டேன்

மற்ற மாணவர்கள் எல்லோரும் எதோ ஜாலியாக PICNIC வந்தது போல இருக்க நான் மட்டும் கொஞ்ச சீரியஸ் ஆக வசனம் எவ்வளவு பக்கம் இருக்கும் என்ற சிந்தனையில் இருந்தேன்
பட்டணத்தில் பூதம் அந்த படம் அதில் பாஸ்கட் BALL மேட்ச் வரும் அதில் நாங்கள் மாணவர்கள் SPECTATORS

அதனாலென்ன கமெராவில் முகம் தெரிந்தால் ஏதாவது ஒரு இயக்குனர் பார்த்து என்னை கொத்திக்கொண்டு போய்விட மாட்டாரோ???

எல்லோரும் சென்று காலை உணவருந்திவிட்டு வந்தோம்
ஒரு தென்னை மரத்தடியில் மொட்டை தலையுடன் மனோகர் சார் சுருட்டு பிடித்துக் கொண்டிருந்தார் அவரிடம் கொஞ்சம் நேரம் பேசிவிட்டு திரும்பினால் ஒரு காரின் அருகே நாகேஷும் KR விஜயாவும் சீட்டு ஆடிக்கொண்டிருந்தார்கள்

எல்லாவற்றையும் சென்னைக்கு புதிதாக வந்தவன் வண்டலுர் ஜூவில் திரிவதுபோல பார்த்துக்கொண்டே நகர்ந்தோம்
எங்களை FLOOR என சொல்லப்படும் ஒரு படப்பிடிப்பு அரங்கத்துக்குள் அழைத்து சென்றார்கள்

அதற்குள் நுழைய ஒரு பெரிய கதவு இருந்த போதிலும் எல்லோரும் சிறைக்குள் நுழைவதுபோல ஒரு சிறிய கதவு வழியாக புகுந்து சென்றார்கள் உள்ளே போனால் “அட நம்ம COLLEGE BASKET BALL GROUND போலவே இருக்கே” என்று ஆச்சர்யப்பட்டுப்போனோம்

இரண்டு பக்கமும் கூடை மேலே இருக்க தரை சுத்தமாக இருந்தது இந்த விளையாடு மைதானத்திற்கு ஒரு பக்கம்தான் GALLERY இரண்டு பக்கமும் ஒரு பெரிய கம்பியில் இடுப்பில் அணியும் பெல்ட் போல எதையோ கடடி அதில் எடைகளை கட்டி மேலே மேலே துக்கி பார்த்துக்கொண்டிருந்தார்கள் சரி காமெராவை கட்டி துக்கபோகிரார்கள் என என்னுள் இருந்த camera கண் சொல்லியது

நாங்கள் எல்லோரும் சென்று GALLERY ல் அமர்ந்தோம்
ஒரு சிறு சல சலப்பு

ஜெய்ஷங்கர் சார் எங்களில் ஒருவர் போல ஹாய் என்று உரக்க கத்திக்கொண்டு வேகமாக உள்ளே வந்து எங்கள் எல்லோரையும் பார்த்து ஹாய் ஹாய் என்று கை ஆட்டினார்
என்ன ஒரு எளிமையான மனிதர் இவர் என எண்ணினோம்
அடுத்து நாகேஷ் வந்து ஜெய்ஷங்கரிடாம எதோ ஜோக்கடித்தர்
அடுத்து KR விஜயா வர ஜெய் ஷங்கரும் நாகேஷும் அவரிடம் எதோ ஜோக்கடித்தனர்

அடுத்து ஜவர் சீதாராமன் வந்து முன்வரிசையில் ரமாப்ரபாவுடன் அமர்ந்தார் அடுத்து மனோகர் சார் வந்தார்
டைரக்டர் வந்ததும் எங்கள் எல்லோரையும் பார்த்து நான் ACTION என்று சொன்னதும் எல்லோரும் எழுந்து நின்று சந்தோஷமாக கைதட்டி ஆரவாரம் செய்ய வேண்டுமென்றார் இதை பலமுறை எடுத்தார்கள்

இது மொத்தமாக எடுக்கப்பட்ட LONGSHOT ஆனதால் கூட்டத்தில் நான் எங்கிருக்கிறேன் என்று இன்று வரை பட்டினத்தில் பூதம் TV ல் போடும்போதேல்ல்லாம் தேடிக்கொண்டிருக்கிறேன்

இன்றுவரை கண்ணில் படவில்லை

பின்னர் ஜெய்ஷங்கரையும் நாகேஷையும் தொங்கிக்கொண்டிருந்த பெல்டில் கட்டி மேலே துக்கி பந்தை குடைக்குள் போட வைத்து பலமுறை எடுத்துகொண்டார்கள்
கருப்பு கம்பியை பிடித்து ஒவ்வொரு பக்கமும் ஆறு பேர் தூக்கினார்கள் இவர்கள் மேலே பறந்து போய் பந்தை போட்டார்கள்

என்னுடைய camera theory தப்பானதில் என் நண்பன் ஒருவன் என்னைப்பார்க்க நான் முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கொண்டேன்

இப்போது camera கோணம் மாறி எங்கள் பக்கம் மறுபடி திரும்பியது

நாகேஷ் ஜாவர் சீதாராமன் காலடியில் வந்து உட்கார்ந்து ஜிபும்பா விடம் பந்து எந்த பக்கம் விழவேண்டும் என்று சொல்லும் காட்சி

நான் ஜாவர் சார் பின்னால் உயரத்தில் அமர்ந்திருந்தேன் ஆஹா நாம் இந்த காட்சியில் உணர்ச்சியை கொட்டி முக பாவத்தை காட்டிவிடவேண்டும் என்று தீர்மானித்துக்கொண்டு தயாரானேன்

அப்போது உணவு இடைவேளை வந்தது எல்லோரும் சாப்பிட்டு விட்டு வந்தோம்

எங்களுக்காக பிரத்யேகமாக KR விஜயா நீச்சல் உடை அணிந்து நடித்த காட்சின் RUSHES போட்டு காட்டினார்கள்
கல்லுரி மாணவர்கள் PSYCHOLOGY தெரிந்தவர்கள் போலிருக்கிறது

பின்னர் இடைவேளைக்குப்பிறகு எல்லோரும் மறுமடியும் BASKET BALL மைதானத்தில் கூடினோம் யார் யார் எங்கே அமர வேண்டுமென்று அவர்கள் ஒன்றும் தீவிரமாக யோசிக்கவில்லை

நான் கிட்டத்தட்ட ஜாவர் சார் அவர்களின் பின்புறம் கொஞ்சம் தள்ளி இடம் பிடித்து அமர்ந்தேன் இந்தமுறை இன்னும் கொஞ்சம் உயரமான தட்டில் இடம் கிடைத்தது நாகேஷ் சார் ஜாவர் முன்னால் உட்கார்ந்து பேசுவதை முன்று நான்கு முறை ஒத்திகை பார்த்து கொண்டார்கள் இப்போது TAKE போகிறோம் என்று டைரக்டர் ராமன் சார் சொன்னவுடன் நான் நடிக்க தயாரானேன்

திடிரென தடதட வென சத்தம் நான் அந்த உயரத்திலிருந்து கிழே வந்திருந்தேன் என்னுடன் சிலரும் வந்திருந்தார்கள் GALLERY அப்படியே சரிந்து போய் கிழே இறங்கிவிட்டிருந்தது மற்றவர்கள் சமாளித்துக்கொண்டு இறங்கிவிட என்னால் மட்டும் முடியவில்லை

என் இரண்டு கால்களும் இரண்டு பலகைகளுக்கிடையே மாட்டிக்கொண்டு என்னால் கால்களை விடுவித்துக்கொள்ள முடியவில்லை ஒரே அல்லோல கல்லோலம் தான்
எப்படியோ பலகையை எடுத்துவிட்டுத் என்னையும் என் கால்களையும் விடுவித்தார்கள்

TV NEWS பாஷையில் சொல்லப்போனால் ஒரே பரபரபப்பு
ஒருத்தர் ஐஸ் பெட்டி எடுத்து வந்து என் காலில் வைத்தார்
ஒருத்தர் எதோ களிம்பு தடவ முயற்சி செய்தார்
ஒருவர் எலும்பு முறி வு ஏறபட்டிருக்குமோ என சோதனை செய்தார்
வலியைப் பொறுத்துக்கொண்டு மெல்ல எழுந்தேன்
நொண்டிக்கொண்டே நடக்க ஆரம்பித்தேன்
நல்ல வேளை FRACTURE எதுவும் இல்லை ஒரு புறம் பலகைகளை மிண்டும் அடுக்கி கட்டுவதற்கு ஆசாரிகள் ஓடி வந்தார்கள்

என் நண்பன் ராமமூர்த்தியின் தோள்களை பிடித்துக்கொண்டு மெல்ல நடந்து FLOOR க்கு வெளியே வந்து ஒரு மரத்தடியில் அமர்ந்து காலை நீவி விட்டுக்கொண்டேன் வலி கொஞ்சம் அதிகமாகத்தான் இருந்தது

உள்ளேயிருந்து START சவுண்ட் START CAMERA ACTION என்ற வார்த்தைகள் என் காதில் மெல்ல ஒலித்தன கால் வலியைவிட மன வலி இன்னும் கொஞ்கம் அதிகமாகத்தான் இருந்தது

மறு நாள் மீண்டும் எல்லோரும் போன BASKET BALL ஷூட்டிங்கிற்கு நான் மட்டும் போகவில்லை...............
என்னால் போக முடியவிlல்லை

Sunday, September 14, 2014

பாக்கியம் ராமசாமியின் பிரபலமான நகைச்சுவை நாவலான அப்புசாமியும் ஆப்ரிக்கா அழகியும் தொலை காட்சிபடமாக dvd/vcd கென்று பிரதேயகமாகத் தயாரிக்கப்பட்டு 2௦௦7 ம் ஆண்டு வெளியிட்டேன் காத்தாடி ராமமூர்த்தி மீரா கிருஷ்ணன் மற்றும் பலர் நடித்துள்ளனர் அதன் முதல் பகுதி
 https://www.youtube.com/watch?v=RssIZZX7mCU&feature=share

Tuesday, September 9, 2014


பொன்னியின் செல்வன் ஒலிப்புத்தகத்திலிருந்து 


Venkatasubramanian Ramamurthy

கல்கியின் பொன்னியின் செல்வன் ஒலிப்புத்தகத்தில் எனக்குப் பிடித்த பீஸ்! கொட்டும் மழையோடு இடியோசையின் பின்னணியில் Bombay Kannan Kannan வர்ணிக்கும் விதம் அபாரம்.

எனது ட்ரெய்லர் தயாரிப்பு.

அதன் link இதோ 



.https://www.youtube.com/watch?v=5zEHjLYSojg

Saturday, September 6, 2014

நாடக அனுபவங்கள் பகுதி 7



Hostel நாடகத்திற்காக நண்பன் வெங்கடராமனை தேடி ஓடினேன் என்று எழுதினேன் அல்லவா.... நானும் அவனும் வழக்கம் போல சோமசுந்தரம் பார்க்கில் சந்தித்து கதை பற்றி பேசினோம்

அந்த காலகட்டத்தில் வெங்கடராமன் பல வினோதமான கதைகளை சொல்லுவான் வாய் பிளந்து கேட்டுக் கொண்டிருப்பேன் எதோ அமரிக்கா ரஷ்ய இங்கிலாந்து தேசத்தில் THAMES நதிக்கரையில் அமர்ந்து கதை கேட்;பது போல இருக்கும்

உதாரணமாக ஒரு கதை

ஒரு குழந்தை கர்ப்பபையில் பத்து மாதம் வளருகிறது அது பத்து மாதம் எப்படி வளருகிறது என்று சோதனை செய்து அறிந்துகொள்ள ஒரு விஞ்ஞானி ஆசைப் படுகிறான் அதற்காக அவன் ஒரு கர்ப்பபைபோல ஒரு இருட்டு அறையை உருவாக்கி அதற்குள் சென்று அப்படிப்பட்ட குழந்தைபோல காலை மடக்கிக்கொண்டு அமர்ந்து கொள்கிறான் அவனுக்கு அதற்குள்ளேயே திரவ உணவு வழங்கப்படுகிறது அவன் இந்த உணவில் காலம் கழித்து பத்துமாதம் கழித்து வெளி உலகம் பார்க்க வரும்போது அவன் குழந்தையாக தவழ்ந்து வெளியே வருகிறான் இப்படி ஒரு கதை---நாடகத்திற்கு!!!!

அடுத்த கதை ஒருவனுக்கு சிறை வாழ்க்கை போல விட்டிலேயே ஒரு அறையில் வெளி உலகமே பாராமல் அடைத்து வைக்கப்பட்டால் பத்து வருடங்களோ இருபது வருடங்களோ கழித்து வெளியே வந்தால் அவன் மனநிலை எப்படி இருக்கும்?

இப்படி பல கதைகள் அவன் சொல்ல நான் கேட்பேன்
இறுதியில் இந்த கதையெல்லாம் மேடைக்கு ஒத்துவராது
எனக்கு hostel மாணவர்கள் ரசிக்குமே படியாக ஒரு comedy கதை கேட்டு வாங்கினேன்.

“ஓஹோ எந்தன் பேபி” என்ற தலைப்பில் ஒரு நாடகம் தயார்
அதில் எல்லா நகைச்சுவை துணுக்குகளும் இணைக்கப் பட்டு ஒரு மணி நேர தோரணம் தயார்

கல்லுரி முடிந்தவுடன் ஒத்திகை ஆரம்பமாகும்
இதிலும் ஒரு கதாநாயகி பாத்திரம் இருந்தது
அதை நான் செய்ய வில்லை

ஏனென்றால் நான் தயாரிப்பாளர் கம் டைரக்டர் ஆயிற்றே!!
ஆனாலும் நான் கதாநாயகன் வேஷமும் எடுத்துக்கொள்ளவில்லை

எப்பவுமே comedy நாடகங்களில் கதாநாயகனுக்கு பெரிய வேலை இருக்காது வெங்கடராமன் எழுதிய ஜோக்குகளெல்லாம் ஒரு வயதான கிழவனுக்கே அமைந்திருந்தது

ஆகையால் 18 வயதிலே நான் எடுத்துக்கொண்ட பாத்திரம் ஒரு 6௦ வயது கிழவன் பாத்திரம் தான்

ஒல்லியாக அந்தகாலத்து friend ராமசாமி மாதிரி எனது உருவம்

கதாநாயகிக்கு hostel ஜூனியர் ஒரு பையன் மாட்டினான்
கதாநாயகன் மற்றொரு மாணவன்

இப்படியாக எல்லோரையும் தேத்தி விட்டு ஒத்திகை ஆரம்பமாயிற்று வெங்கடராமனுக்கு இது அனேகமாக இரண்டாவது மேடை நாடகம்

ஒத்திகை துவங்கியவுடன் வெங்கடராமனுக்கு என் direction ல் நம்பிக்கை போய்விட்டதா என்று தெரியவில்லை...
தனது நண்பர் ஒருவர் இயக்குவார் என்று கூறினான் நானும் அந்த நேரத்தில் எந்த பிடிவாதமும் பிடிக்காமல் ஒப்புக்கொண்டேன்

மறுநாள் வெங்கடராமனின் நண்பர்கள் என்று இருவர் bullet MOTORCYCLEல் வந்து இறங்கினர்

ஒருவர் பெயர் நடராஜன்
மற்றவர் பெயர் எனக்கு நினைவில் இல்லை

இருவருமே இரட்டையர்களாக இயக்கப்போவதாக கூறினர்

அட என்னடா இது நாம் அதிர்ஷ்டம் ஒரு college நாடகத்திற்கு கிருஷ்ணன்- பஞ்சு போல இரட்டை இயக்குனர்களா என்று வியந்தேன்

இருவரும் அப்போது CTO எனப்படும் CENTRAL TELEGRAPH OFFICE ல் வேலை பார்த்தர்கள்

தினமும் வருவார்கள் நான் நடித்து கொண்டிருப்பேன் மற்றவர்களும் நான் சொன்னபடி வசனம் பேசி நடிப்பார்கள்
இவர்கள் இருவரும் அமர்ந்து ரசிப்பார்கள்

இப்படியே ஒத்திகை 5 நாட்கள் நடந்தது நாடகத்திற்கு முதல் நாள் அவர்கள் வந்து போன செலவிற்காக ஒரு நாளைக்கு 5 ரூபாய் என பணம் கொடுக்கும்படி வெங்கடராமன் சொல்ல அப்பா கொடுத்து பாக்கெட் மணியில் பெரிய துண்டு விழுந்தது

ஒரு இயக்குனருக்கு SORRY ரெட்டை இயக்குனர்களுக்கு PAYMENT கொடுத்து ஒரு hostel நாடகம் தயாரித்த முதல் தயாரிப்பாளர் நானாகத்தான் இருக்கு,ம்

நாடகம் சிறப்பாக அமைந்து கொண்டு வந்தது

நாடக அரங்கேற்ற நாள் இரவு முழுவதும் நாடக சிந்தனைதான்

காலையில் எழுந்ததும் காபி அருந்துவதற்காக HOSTEL MESS க்கு சென்ற எனக்கு பெரும் அதிர்ச்சி HOSTEL NOTICE BOARD ல் இன்று கண்ணன் நாடகம் யாரும் போகவேண்டாம் எல்லோரும் BOYCOTT செய்வோம் என ஒரு எதிர்ப்பு குரல் NOTICE ஆக என் கண் முன்னால் தெரிய படிக்க முடியாமல் கண்கள் மறைத்தது

எழுதியது வேறு யாருமல்ல

சிறுவயதிலிருந்தே--3ம் வகுப்பிலிருந்து கல்லுரி வகுப்பு வரையில் என் கூடவே படித்து வரும் என் நண்பன்தான்

எனக்கு இந்த அறிக்கையின் காரணமும் தெரியவில்லை
அவர்களுக்கும் தெரிந்ததா என்றும் தெரியவில்லை

நண்பனிடம் ஓடினேன் பேச மறுத்தான்

கெஞ்சினேன்....

அழுதேவிட்டேன் என்றும் சொல்லாலாம்

இறுதியில் பெரிய மனது பண்ணி நாடகம் நடத்துவதற்கு சம்மதம் அளிப்பதுபோல தன் போராட்டத்தை விலக்கிக்கொண்டான்

போராட்டத்தை தொடர்ந்திருந்தால் எத்தனைபேர் அவன் பின்னால் போய் இருப்பார்களோ தெரியாது ஆனால் நான் எந்த RISK ம் எடுக்க தயாரில்லை மிகுந்த TENSION உடன் நாடகம் ஆரம்பிக்க காத்திருந்தேன்

வயதானவர் வேடம்

நகைச்சுவைப்பாத்திரம்

மனதில் TS பாலையா RANGARAO போன்றவர்கள் ஓட நாடகத்தில் பாலையா அந்த பாத்திரத்தை எப்படி செய்திருப்பாரோ.....குறிப்பாக அவருடைய MANNERISM முதலியவற்றை மனதில் வைத்துக்கொண்டு என் பாணியில் செய்ய ஆரம்பித்தேன் காட்சிக்கு காட்சி APPLAUSE ம் சிரிப்பும் தான்

நாடகம் மிகப் பெரிய வெற்றி என்று சொல்ல வேண்டியதில்லை

நண்பன் உள்ளே வந்தான்
கட்டி அணைத்துக்கொண்டான்
என்னை மன்னித்துவிடு என்றான்
நீதான் hostel நடிகர் திலகம் என்று உணர்ச்சி மேலிட்டு ஓவராக புகழ்ந்தான்

எப்படியோ முதல் நாடகம் தயாரித்து வெற்றிகரமாக அரங்கேற்றி விட்டேன்

அன்றையிலிருந்து HOSTEL லில் என் மதிப்பு உயர்ந்ததோ என்னவோ தெரியாது ஆனால் நடிப்பு ஆசை இன்னும் வெறியாக என் மனதில் வேருன்றியது..

விவேகானந்தா கல்லூரியி ல் ஒரு அருமையான திறந்த வெளி அரங்கம் உண்டு அதில்தான் நான் படிக்கும் காலத்தில் TKS குழுவினரின் ராஜ ராஜ சோழன் சோ வின் MIND IS MONKEY போன்ற நாடகங்களைப் பார்த்திருக்கிறேன்.

இந்த மேடையில் ஜெய்ஷங்கர் போன்ற கலைஞர்கள் நடித்து இருக்கிறார்கள் இப்போது அந்த மேடை நாடகத்திற்கு பயன்படவில்லை என பார்க்கும்போது மிகவும் வருத்தமாக இருக்கிறது

கல்லூரியில் படிக்கும் கால கட்டத்தில் வருடம் முழுவதும் காமதேனுவிலும் கபாலியிலும் படங்களாக பார்த்து தள்ளியதால் பாடத்தில் நிறையவே பின்தங்கி விடுவேன்

இதற்காக STUDY HOLIDAYS போல ஜனவரியிலிருந்து HOSTEL அறையை காலி செய்துவிட்டு T நகரில் MADLEY தெருவில் இருந்த என் அக்கா விட்டிற்கு படிப்பதற்கு போய்விடுவேன்

அப்போதெல்லாம் மாலை வேளையில் நண்பர்கள் கூடும் இடம் உஸ்மான் ரோட்டில் இருந்த நேஷனல் டீ கடை

அந்த கால கட்டத்தில் உஸ்மான் ரோடு இப்போதுபோல ஒளிந்து கொண்டிருப்பதில்லை

இதே சாலை விசாலமாக தெரியும் இரண்டு பக்கமும் பஸ்கள் போகும் WALKING போகலாம் அழகான பெண்களைப் பார்க்கலாம்

டிபன் சாப்பிட நாதன்ஸ் கபே இருந்தது

இதைத்தவிர INDIA COFFEE HOUSE என ஒரு பெரிய சொர்க்க பூமி அது
இங்குதான் நான் முதன் முதலில் நான் பட்டாபி ரமணி முரளி மற்றும் பலரை சந்தித்தேன்

ஒரு நாள் பேச்சு வாக்கில் பட்டாபியும் YG மகேந்திராவும் AC COLLEGEOF TECHNOLOGYல் ஒரே வகுப்பு என தெரிந்து கொண்டேன்

அன்றையிலிருந்து பட்டாபியுடன் ஒட்டிக்கொண்டேன் அவன் விட்டிற்கு போக ஆரம்பித்தேன்
பட்டாபி ஒரு நாள் என்னை மகேந்திராவுக்கு அறிமுகம் செய்து வைத்தான்
மெல்ல UAA ல் சேரவேண்டும் என்கிற என் விருப்பத்தை அவனிடம் சொல்லி மகேந்திராவிடம் சொல்ல வைத்து அவர்களுடன் சென்று THE GREAT YGP அவர்களை சந்தித்தேன்.

தொடரும்

அன்றையிலிருந்து பட்டாபியுடன் ஒட்டிக்கொண்டேன் அவன் விட்டிற்கு போக ஆரம்பித்தேன் பட்டாபி ஒரு நாள் என்னை மகேந்திராவுக்கு அறிமுகம் செய்து வைத்தான் மெல்ல UAA ல் சேரவேண்டும் என்கிற என் விருப்பத்தை அவனிடம் சொல்லி மகேந்திராவிடம் சொல்ல வைத்து அவர்களுடன் சென்று THE GREAT YGP அவர்களை சந்தித்தேன்.



Tuesday, September 2, 2014

நாடக அனுபவங்கள் 6ம் பகுதி




மறு நாள் கலையில் நான்கு மணிக்கெல்லாம் எழுந்து அந்த குளிரில் கூட சித்ராவதி ஆற்றுக்கு சென்று குளித்தோம் மிகப்பெரிய கழிவறை என்று சொல்ல கூடிய திறந்த வெளி கழிவறைதான் பழக்கமில்லை ஆயினும் இப்படி ஒரு அனுபவம் வித்தியாசமாக இருந்தது

காலையில் நகர சங்கீர்த்தனத்தில் கலந்து கொண்டு பாபாவின் அறை என்று சொல்ல கூடிய ஒரு அறையின் முன்பு நாங்கள் எல்லோரும் அமர்ந்தோம்

பாபா வந்து எங்களை சந்திப்பாரென்று கூறினார்கள் நானும் ரகுவும் வாசுவும் கொஞ்சம் பயத்துடனேதான் அமர்ந்திருந்தோம்

கதவு திறந்தது சிகப்பு அங்கியில் பாபா புன்னைகையுடன் வெளியே வந்தார் எங்கள் எல்லோரையும் ஒரு நோட்டம் விட்டுவிட்டு அந்த நாற்பது பேரில் குறிப்பிட்ட ஒரு பதினைந்து பேரை மாட்டும் உள்ளே அழைத்தார் அதில் நாங்கள் மூவரும் அடக்கம்

உடல் நடுங்கியது

என்ன மாயம் செய்வாரோ என்ன தண்டபையோ என பயந்துகொண்டே உள்ளே சென்று அமர்ந்தோம்

பாபா உள்ளே வந்து கதவை மூடி தாழிட்ட்டு ஒரு sofa ல் அமர எங்கள் எல்லோரையும் ஒரு பார்வை கனிவுடன் பார்த்தார்
நாராயணசாமி சார் எல்லோரையும் அறிமுகம் செய்து வைத்தார்
(தேவையே இல்லை)

பின்னர் பாபா தன்னுடைய முன் பிறவி கதை என்று சொல்லி ஷீரடி பாபாவின் கதை உங்களுக்கு சொல்கிறேன் என்று ஆரம்பித்து கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் முற்பிறவி பாபா பற்றி கூறினார்
இது வரையில் யாருமே சொல்லாத ஒரு கதையாக அது இருந்தது

ஷிர்டி பாபா வின் இளமைப்பருவம் யாருக்குமே தெரியாது
ஷிர்டி பாபா சிவா பெருமானின் அவதாரம் என்றும் அவர் தேவகிரியம்மா என்ற ஹிந்து பெண்ணின் வயிற்றில் உதித்தவர் என்றும் அவரும் அவர் கணவனும் காட்டில் சென்று கொண்டிருக்கையில் குழந்தையை பெற்று விட்டு சந்யாச வாழ்க்கையை மேற்கொண்டு அந்த இளம் குழந்தையை காட்டிலேயே விட்டு விட்டு சென்று விடுகின்றனர்

பின்னர் அந்த குழந்தை ஒரு முகமதியரால் வளர்க்கப்பட்டு சிறுவனாக ஷீரடி அடைகின்றார்

அதன் பின்னர் எல்லோருக்கும் தெரிந்த கதைதான்
நான் ஏன் இந்த கதையை இங்கே குறிப்பிடுகின்றேன் என்றால்............

இதன் பிறகு சுமார் 4௦ ஆண்டுகளுக்கு பிறகு நான் என்னுடைய அடுத்த ஒலிப்புத்தகம் எது வென யோசிக்கும் போது ஒரு நாள் நாடக நடிகரும் எழுத்தாளருமான வாத்யார் ராமன் அவர்கள் வீட்டிற்கு சென்றேன்

என் பஜாஜ் பிளாட்டினாவில் போய் கொண்டிருக்கும்போது எனக்கு திடிரென ஒரு எண்ணம் ஏன் ஷிர்டி சாய் கதையை ஒரு ஒலிப்புத்தகமாக கொண்டு வரக்கூடாது என்று எண்ணினேன்

ராமன் வீட்டை அடைந்ததும் நாங்கள் வேறு எதை எதை பற்றியோ பேசிக்கொண்டிருந்தோம்

புறப்படும் பொது ராமன், உனக்கு ஒரு புத்த்தகம் தரவேண்டும் என்று சொல்லி உள்ளிருந்து ஒரு புத்தகம் கொண்டு வந்து கொடுத்தார் அது வேறு எதுவும் இல்லை

வாத்யார் ராமன் எழுதிய ஷிர்டி சாய் பாபா வின் வாழ்கை சரித்திரம்

எனக்கு எதுவுமே தோன்ற வில்லை உடனடியாக என்னுடைய அடுத்து ஒலிப்புத்தகம் இதுதான் சார் என்று சொன்னேன்

புத்தகத்தை பிரட்டி முதல் அத்தியாயத்தை படித்ததும் என் கண்களையே என்னால் நம்ப முடியவில்ல

பாபா 4௦ வருடங்களுகு முன்னால் எதை எங்களுக்கு மட்டும் தனியாக சொன்னாரோ அதே கதை அப்படியே அதே வார்த்தைகளுடன் எழுதியிருந்தார் ராமன்

ஷிர்டி சாயின் பிறப்பை பற்றிய அதே சரித்திரம் ஒரு சம்பவம் கூட மாறவில்லை

சாய் பிறந்து காட்டிலே விடப்பட்ட வரலாறு தேவகிரி அம்மாவுக்கு சிவபெருமானும் பார்வதி தேவியும் வயதானவர்கள்ளக காட்சி தந்து அவர் வீடடில் உணவு அருந்தியது கனவிலே வந்து சொன்னது அவர் வயிற்றிலே உதித்தது காட்டிலே விடப்பட்டது என எந்த சம்பவமும் பாபா அன்று சொன்னது போலவே எழுதப்பட்டு இருந்தது

ராமன் அந்த அத்தியாயத்தை முடிக்கும் போது இந்த சம்பவங்கள் கற்பனைபோல தோன்றினாலும் சத்ய சாய்பாபா போன்ற ஒரு மகானின் வாயிலிருந்து வந்ததால் இதை வெறும் கற்பனை என்று ஒதுக்கிவிட முடியாது என்று எழுதி இருந்தார்

எனக்கு ஒன்றும் அப்போது புரியவில்லை என்னையே நான் இது நிஜமா என்று கிள்ளிப்பார்த்துக்கொண்டேன்

இப்போது புட்டபர்த்திக்கு 1968 ற்கு வருவோம்

பாபா கதை முடிந்தவுடன் எல்லோரையும் ஆசிர்வதித்தார்

ஒரு மோதிரத்தை வரவழைத்து நாராயண சாமின் கை விரலில் மாட்ட பல வருஷங்களாக மடங்காத அந்த விரல் அன்று மடங்கி நிமிர்ந்தது பெரியஆச்சர்யம்

அத்தோடு முடியவில்ல தலையை தடவிய ரகுவிற்கு கழுத்தில் மாட்டிக்கொள்ள ஒரு பெரிய டாலர்

அவரைப் பற்றி அவதுறாக பேசிய வாசுவுக்கு ஒரு அழகிய வெள்ளி மோதிரம்

எனக்கு எதுவும் தரவில்லை என்ற வருத்தம் எனக்கும் இன்றும் உண்டு

இத்தோடு நின்றததா அந்த பதினைந்து பேரில் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் தனியாக உள் அறையில் நேர்காணல்

அந்த சிலரில் அடியேனும் அடக்கம்

உள்ளே அழைத்து அவர் முன்னால் நிற்கையில் பேச்சு வரவில்லை

கண் இமைக்க வில்லை

அது என்ன மாயமோ மந்திர சக்தியோ தெரியவில்லை
கண்கள் ஆறாக நீரை பெருக்க தேம்பி தேம்பி தான் அழ முடிந்தது

என்ன வேண்டும் என்றார் கேட்க துணிவில்லை

அப்பாவுக்கு உடம்பு நலம் பெற வேண்டுமென்றேன்

நூற்று கணக்கான விபூதி பொட்டலங்களை எதுத்து கைநிறைய அள்ளி கொடுத்து அனுப்பினார்

கண்ணிற் பெருக வெளியே வந்தேன்

அடுத்து ரகுவுக்கும் வாசுவுக்கும் உள்ளே அழைப்பு என்ன நடந்ததோ தெரியாது

புட்டபர்த்டியிளிருந்து சுப்ரமண்யம் சுப்ரம்னண்யம் ஷண்முகநாத சுப்ரமன்த்யம் என்ற பாடல் பாபாவின் குரலில் கணிரென்று ஒலித்துகொண்டிருக்க புறப்பட்டோம்

பஸ்ஸில் போகும்போது எல்லோரும் பஜன் பாடல்கள் பாட நாங்கள் முவரும் அதில் கலந்து கொண்டோம்!

பாபா கூறிய கதையை நாராயண சாமீ சார் நாடகமாக தயாரித்து வெளியிட்டார்

அதில் எனக்கு இரண்டு சிறிய பாத்திரங்கள் அதில் முக்கியமானது பாபாவின் படத்த்தை கையேலேயே வைத்துகொண்டிரும் நரசிம்ம சுவாமிஜியின் வயதான பாத்திரம்

திரும்பி வந்தவுடன் நண்பர்களுடன் பாபா மகிமை பேசியது சண்டை போட்டது அதற்கு பாபா அடுத்தமுறை தனிமையில் சந்தித்துபோது என்னை கண்டித்தது இதெல்லாம் இந்த கட்டுரைக்கு அவ்வளவு பொருத்தமாக இல்லை என்பதால் விரிவாக பேசவில்லை

நான் T tநகரில் தங்கி இருந்தபோது என் விட்டிற்கு எதிர் வீட்டில் சந்திரசேகர் என்று ஒரு நண்பன்

அவன் பின்னாளில் செட்டிநாடு CEMENTS ல் STENO வாக வேலை பார்த்தான்

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பரம விசிறி

நாங்கள் இருவரும் தினமும் விவித பாரதியில் ஒலிசித்திரங்கள் நாடகங்கள் கேட்டுக்கொண்டே அவர் நடிப்பை பெரிதும் சிலாகித்து பேசி மகிழ்வோம்

அவன் எனக்கு வெங்கடராமன் என்பவனை சோமசுந்தரம் பார்க்கில் அறிமுகம் செய்து வைத்தான்

வெங்கடராமன் கைரேகை. போட்டோ எடுப்பது கதை சொல்வது என பலகலை மன்னன்

எனக்கு அவனிடம் ஒரு பெரிய HERO WORSHIP ஏற்பட்டு விட்டது
நிறைய சிறுகதைகள் சொல்வான் எல்லாமே வித்தியாசமாக இருக்கும்

இவை சில ஆங்கில சிறுகதைகளிம்ன் தமிழாக்கம் என்று எனக்கு அப்போது தெரியாது ஏனென்றால் நான் கதை புத்தகம் படிப்பது அதுவும் ஆங்கில கதைப்புத்தகம் படிப்பது மிகவும் குறைவு NEUMEROLOGY சொல்வான்

இவனும் இவன் நண்பர்கள் சிலரும் சேர்ந்து EXPRESS DELIVERY என்று ஒரு நகைச்சுவை நாடகம் கிருஷ்ணா காண சபாவில் போட்டார்கள்

அதை பார்க்க போயிருந்தேன்
நாடக எழுத்தாளர் என்றால் போதுமே ஒட்டிக்கொண்டு வாய்ப்பு பெறலாமே என அவன் கூட ஒட்டிக்கொண்டேன்

தினமும் அவனை சந்திப்பது என பொழுது ஓடிக்கொண்டிருந்தது

இப்படி இருக்கும்போதுதான் எனக்கு என்னுடைய கல்லூரி HOSTELல் ஒரு நாடகம் போட சந்தர்ப்பம் கிடைத்தது

உடனே வெங்கடராமனை தேடி ஓடினேன்

மீண்டும் சந்திப்போம்




பொன்னியின் செல்வன் ஒலிப்புத்தகம் பற்றி திரு RVS அவர்களின் எண்ணங்கள்


என் டிஸயரை ஒட்டி உரசி உறவாட வரும் அந்த இருசக்கர ஹோண்டாக்காரனின் டப்டப்டப் சப்தம் குதிரையின் குளம்பொலி போலக் கேட்கிறது. ஹெல்மெட் அணியாத முகத்தில் அவனது குறுவாள் மீசையைப் பார்த்தால் “அட! இவன் வானவர் குல வல்லவரையன்!!” என்று குதிக்கிறது மனம். ப்ளக். ”ச்சேச்சே! இது என்ன பிரமை..” என்று ரெண்டு சிக்னல் தள்ளி வந்தால் ஹெச்டிஎஃப்ஸி செக்யூரிட்டியின் முரட்டு மீசையும் பெரிய கண்ணும் அகண்ட கிருதாவும் ப்ளு யூனிஃபார்மில் சோழ சாம்ராஜ்யத்தின் தனாதிகாரி பெரிய பழுவேட்டரையரே ஏடியெம்மிற்கு பாதுகாப்பாக நிற்பது போன்று இருந்தது. அவர் பக்கத்தில் மூடிய சிவிகையும் அதில் அவர் சமீபத்தில் கல்யாணம் செய்துகொண்ட இளமங்கை நந்தினியும் தென்படுகிறாளா என்று தேடிப் பக்கத்து ஷேர் ஆட்டோவில் நெருக்கியடித்து இரு காதுக்குள்ளும் ஒயர்கள் ஓட உட்கார்ந்திருந்த ஐடி மங்கையின் மேல் போய் பார்வை விழுந்தது. ப்ளக். ச்சே! இது என்ன விபரீத சிந்தனை!! தலையை உதறிக்கொண்டேன்.

சமீபத்திய கோடை மழையினால் கணுக்கால் அளவு தண்ணீர் ஏறிக் காணப்பட்ட போரூர் ஏரி 74 மதகுகளைக் கொண்ட பரந்து விரிந்த வீரநாராயண ஏரி போல மலைக்க வைக்கிறது. ப்ளக். ஏரியின் கரையில் ஒதுங்கியிருந்த ப்ளாஸ்டிக் பைகளும் குப்பைகளும் என்னைப் பிடறியில் தட்டி நிகழ்காலத்துக்கு கொண்டுவந்தது. ப்ளக். சீராக வண்டி ஊர்ந்து கொண்டிருக்கும் போது சற்று தூரத்தில் கொஞ்சம் கட்டையாகவும் தடிமனாகவும் நெற்றி மணக்க நாமமும் இட்டுக்கொண்டு ரோடோரத்தில் நடந்து சென்றுகொண்டிருந்தவரை “ஓய்! ஆழ்வார்க்கடியான் நம்பி.. இங்கே வாருமய்யா... என்ன தைர்யம் இருந்தால் ஸ்ரீரங்கத்தில் பெருமாளின் காலைக் கழுவிய தண்ணீர்தான் திருவானைக்காவலில் சிவனாரின் அபிஷேகத்திற்கு பயன்படுகிறது என்று சிவ அபவாதம் செய்வீர்..” என்று வீரசைவர் போலக் கலகமூட்டும்படியாகக் கேட்க நா எழுந்தபோது அவர் மாநகரப்பேருந்தில் சிரமப்பட்டு ஏறிக்கொண்டிருந்தார். அவர் நம்பியில்லை. ப்ளக்.

சிறு அணியாக டிஎல்லெஃபிலிருந்து வெளிவந்த நாரீமணிகளில் ஒருத்தி சோழர் குல இளைய பிராட்டி குந்தவை மாதிரியும் பக்கத்தில் ஒடிசலாக இருந்தவள் அருள்மொழிவர்மனை மயக்கம் போட்டுக் கவிழ்த்த வனிதாவாகவும் ஏனையோர் இளவரசிகளின் தோழிகளாகவும் கலகலச் சிரிப்பில் வந்தபோது டப்டப்டப்டப்பில் ஆரோகணித்து வந்தியத்தேவன் துரத்தி வருகிறானா என்று ரியர்வ்யூ மிரரில் தேடினேன். ஊஹும். இல்லை. ப்ளக். மியாட் ஹாஸ்பிடல் சிக்னலில் நின்றுகொண்டிருந்தபோது எதிரில் ஓடிய கூவமாயிருந்த அரசிலாற்றில் குந்தவையுடன் கூட வந்தவர்கள் அன்னப்படகில் உட்கார்ந்து வலம் வருகிறார்களோ என்று சீட்டிலிருந்து பாலத்துக்குக் கீழே கட்டாந்தரையை எட்டிப்பார்த்து ஏமாந்தேன். ப்ளக்.

சென்னை ட்ரேட் சென்டர் வாசலில் எனைச் சூழ்ந்து நின்ற வாகனாதிகள் திரும்புறம்பியம் போரில் அணிவகுத்து நின்ற குதிரை மற்றும் யானை சைன்னியம் போலவும் ஓரமாக நடந்து சென்றவர்கள் காலாட்படையைச் சேர்ந்த வீரர்கள் போலவும் இருந்தது. ப்ளக். முன்னால் நகர இடமில்லை என்று தெரிந்தும் வைத்த கை எடுக்காமல் ஹார்ன் அடித்த சிகாமணிகள் போர்ப் பின்னணியில் எழும் யானைப் பிளிரும் சப்தத்தையும் குதிரை கனைக்கும் ஒலியையும் ஒரு சேர உருவாக்கி என்னுடைய விஜயாலய சோழனின் திரும்புறம்பியப் போர்க் கற்பனைக்கு வலு சேர்த்தார்கள். முன்னால் ஊர்ந்தன. என் வண்டி நகர்ந்தது. ப்ளக்.

”இங்கு ஜோதிடம் பார்க்கப்படும்” என்று தகரத்தில் எழுதி கேட்டில் தொங்கிய வீட்டை எக்கிப் பார்த்துக் ”இங்கே குடந்தை ஜோதிடர் இருக்கிறாரா?” என்று கேட்க எத்தனிக்கும் போது “ஆ. நாகேஷ்வரன். ஜோதிடர்” என்ற பெயர் என்னை ”ஆ” வென்று வா பிளக்க வைத்தது. ப்ளக். இடும்பன் காரி, கந்தவேள் மாறன், சம்புவரையர், வணங்காமுடி, சேந்தன் அமுதன் என்று ஆண்பிள்ளைகள் யாராவது தென்படுகிறார்களா என்று அலைந்தது என் மனம். ப்ளக்.

என் பேட்டை எல்லையில் சிந்தனையைக் கலைத்த அரைபாடி லாரியின் ஏர் ஹார்னைச் சபித்துக்கொண்டே திரும்பினேன். தெருவிற்குள் ஸோடியம் வாப்பர் விளக்குகள் உருமாறித் தகதகக்கும் தீவர்த்திகள் கம்பத்துக்கு கம்பம் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தது. ப்ளக். கண்ணுக்கெட்டிய தூரம் வரை யாரும் வரவில்லை என்று உறுதி செய்துகொண்டு ஒரு செகண்ட் கண்ணை மூடித் திறந்தேன். இப்போது மீண்டும் எடிஸனின் ஸோடியம் வாப்பர் லாம்ப் எரிந்தது. மீண்டும் ஒரு டூ வீலர் குதிரையின் டொக்..டொக்..டொக்.. குளம்பொலியுடன் வேகமாகக் கடந்தது. ப்ளக். சிரித்துக்கொண்டேன்.

*************

ஒரு வாரமாக வந்தியத்தேவனுடன் பயணித்துக்கொண்டிருக்கிறேன். நான் காரில் வர வலது பக்கம் வெளியே நீட்டிக்கொண்டிருக்கும் ரியர் வ்யூ மிரரைப் பிடித்துக்கொண்டே அழிச்சாட்டியமாக கூட வருகிறான்.

பாம்பே கண்ணனின் ( Bombay Kannan Kannan ) அற்புதமான இயக்கத்தில் வந்திருக்கும் “பொன்னியின் செல்வன்” ஒலிப்புத்தகத்தைக் கேட்டு ரசித்துக்கொண்டிருக்கிறேன்.

தமிழில் ஒரு உன்னத முயற்சி. இயக்கத்துடன் ஏற்ற இறக்கங்களுடன் கதை சொல்லும் பாம்பே கண்ணன் ஒரு சமயம் இராமாயண மஹாபாரதக் கதைகள் சொல்லிச் சிவலோகப் பதவியடைந்த என் பாட்டி போலவும் சில சமயங்களில் திண்ணையில் உட்காரவைத்து பேய்க்கதை சொன்ன பக்கத்துவீட்டு கஸ்தூரி அக்கா மாதிரியும் இன்னும் சில சமயங்களில் சினிமாவுக்குப் போய்விட்டு வந்து தோளில் கை போட்டுக் கதை சொல்லும் நண்பன் மாதிரியும் மாறிமாறித் தெரிகிறார். பாம்பே கண்ணனுக்கு கம்பீரமான கணீர்க் குரல். கோட்டைக் கொத்தளங்களில் வந்தியத்தேவன் தப்பித்து வரும் போது டெஸிபல் குறைத்து கிசுகிசுத்து நம்மையும் கூடவே அழைத்துச் செல்கிறார். ஒரு புத்தகத்தை நமக்கு நாமே படிக்கும்போது கூட எப்படி ஏற்ற இறக்கங்களுடன் மனசுக்குள் படித்துக் கொண்டாட வேண்டும் என்று கற்றுக்கொடுக்கும் உரைநடைப் பேச்சு. அபாரம்.

வந்தியத்தேவனின் உச்சரிப்புகள் சில இடங்களில் வழுக்கினாலும் பல இடங்களில் இளைஞனனின் குரலாகப் பந்தாவாக இருக்கிறது. பெரிய பழுவேட்டரையரின் குரலில் அனாயாசமாக அதிகாரம் தொனிக்கிறது. சுந்தரசோழன் கனிவும் கம்பீரமும் ஒன்று குழைத்துப் பேசுகிறார். மன்னையில் அரை ட்ராயர் பிராயத்தின் போது திருச்சி விவிதபாரதியில் புதன் இரவு 8 மணி ட்ராமா கேட்டிருக்கிறேன். படுத்துக்கொண்டே காதால் விஷயங்களைக் கேட்டு கிரஹித்துக்கொண்டு மனக்கண்ணில் ஓட்டிப் பார்ப்பது ஒரு இதமான அனுபவம். கண்ணால் பார்க்கும் சினிமாவிற்கு வடிவழகான மேனியழகைப் போல காதால் கேட்டு ரசிக்கும் ஒலிப்புத்தகத்துக்கு பாந்தமான மற்றும் உணர்வுப்பூர்வமான குரலுடையவர்கள்தான் நாயகநாயகியெல்லாம். ஃபாத்திமாபாபுவின்( Fathima Babu ) பின்னணிக் குரல் நேரில் நந்தினியைப் பார்ப்பது போன்ற பரவசம் தருகிறது. இளையராணி நந்தினிக்கு இளமை பொங்கும் குரலில் பேசியிருக்கிறார். இல்லையில்லை. நடித்திருக்கிறார். தீர்க்கமான உச்சரிப்பு.

”இது எவ்ளோ நாள் முயற்சி சார்?” என்று காலையில் கேட்டதற்கு அடக்கமாக “இராப்பகல் பார்க்காம ஒண்ணரை வருஷம் ஆச்சு” என்றார். எனக்குப் புல்லரித்தது. திருட்டு டிவிடி போல ஒருத்தர் வாங்கி எல்லோருக்கும் ஓசியாக இந்த எம்பித்ரீ டிவிடிக்களைக் விநியோகிக்காமல் 600 ரூபாய்க் கொடுத்து வாங்கிக் கேட்டு மகிழ்ந்து நிறைகளைப் புகழ்ந்தும் குறைகளைச் சுட்டியும் இது போன்ற புதுமுயற்சியைப் பாராட்டலாம். ஊக்குவிக்கலாம். டிவிடிக்கள் திரு. பாம்பே கண்ணனிடமே கிடைக்கிறது. வீட்டிற்கு கிடைக்க ஏற்பாடு செய்கிறார். கேஷ் ஆன் டெலிவரி.

இவ்விமர்சனத்தை அடித்து முடித்தும் காதுகளில் மொத்தமாகக் குடிகொண்டிருக்கிறார் பாம்பே கண்ணன். இளையராணி ஃபாத்திமாபாபுவாகிய நந்தினியின் குரலும்தான்.

Monday, September 1, 2014

நாடக அனுபவங்கள் 5ம் பகுதி


1968 ம் ஆண்டு நான் hostel ல் தங்கி படித்து வந்த காலம் மிக மகிழ்ச்சியான காலம் 


என் அறை தோழர் ஒரு வினோதமான பிறவி தன வயதையும் மீறி பக்தி பழமாக விளங்கியவர் அறையில் அவருடைய அலமாரி முழுவதும் சாமி படங்களாக நிரம்பி இருக்கும்

அவர் நின்று, உட்கார்ந்து பார்த்ததைவிட அவரை நான் நமஸ்கரித்த கோத்தில் பார்த்தது தான் அதிகம்

கல்லூரியில் நுழைந்த நேரம் அது hostel வாழ்கை மிக இனிமையாக இருக்கப்போகும் கனவுகளோடு வந்த எனக்கு இப்படி ஒரு சாமியார் அறை தோழராக கிடைத்தது ஒரு பெரும் ஏமாற்றமே
அவருடன் சேர்ந்து நானும் ஒரு கேலிப்பொருளாக சக மாணவர்களால் ஆக்கப்பட்டேன்
அதனால் நான் என் அறையிளிருந்ததை விட மற்றவர்களின் அறையில் இருந்த நேரம் தான் அதிகம் என் அறை தோழர் வைத்திருந்த படங்களில் அதிகமாக இருந்தவை புட்டபர்த்தி பாபாவின் படம்தான்

எனக்கு அவரிடம் நம்பிக்கை கிடையாது அதனால் நானும் அவரை நிறைய கிண்டல் செய்து நிந்தித்து வந்தேன்

இப்படி ஒரு காலகட்டத்தில் தான் நான் நாராயணசாமி சார் அழைத்து அவர் வீட்டிற்கு சென்றேன்
அது வீடு மட்டுமல்ல ஒரு TUTORIAL COLLEGE ம் கூட என்னை தன குடும்பத்தோடு வரவேற்றார்

அவர் குடும்பம் கொஞ்சம் பெரிசு மனைவி மாமியார் மாமனார் சின்ன சின்ன குழைந்தைகள் என பலர். என் பெண் வேடத்தை சிலாகித்து பேசிவிட்டு உன் நடிப்பு ரொம்ப நல்லா இருந்தது என்றார்
பின்னர் அவர் மஹாபரத்தில் கிருஷ்ணர் பங்கு பெரும் காட்சிகளாக தொகுத்து ஸ்ரீ கிருஷ்ணா விஜயம் என்னும்ம் நாடகம் எழுதி இருப்பதாகவும் அதில் நான் நடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார் 1

சரி! ருக்மணி வேஷமா? சத்யா பாமாவா? என்று ஆவலுடன் SCRIPT ஐ வாங்கினேன்

அவரும் உன்னை முதலில் முகத்தைப் பார்த்து ருக்மணியாகத்தான் போடுவதாக இருந்தேன் ஆனல் உன் நடிப்பை பார்த்து என் நாடகத்தின் கதாநாயகன் கிருஷ்ணனாக நீதான் நடிக்க போகிறாய் என்றார்

எனக்கு கூரைக்கும் தரைக்கும் வித்தியாசம் புரியவில்லை
6௦ பக்க SCRIPT ல் என் PORTION மட்டும் கிட்டத்தட்ட 4௦ பக்கம்

ஒரு மாதத்தில் நாடகம்.. ராயபேட்டைல் LLOYDS ROAD சந்திப்பில் உள்ள ஒரு சிறிய கல்யாண மண்டபம் தான் அரங்கம்

இப்பவும் அந்த பக்கம் போகும்போதெல்லாம் அந்த அரங்கை அரங்கனை சேவிப்பது போல சேவித்து விட்டுதான் போவேன் மற்ற நடிகர்கள் எல்லாம் அவர் மாணவர்கள்

அங்கே அறிமுக மாணவர்கள் தான் இப்போது பிரபலமாக பாடிவரும் வினாயாவின் தந்தை கோபால், RAGHU என்கிற ஜூனியர் பாலையா, வாசு போன்றவர்கள் நாடகம் ஓத்திகை ஆரம்ப மாயிற்று

இப்போதுதான் எனக்கு சமஸ்கிரிதம் படிக்காததன் வருத்தம் ஏற்பட்டது நிஜம் பல இடங்களில் வசனங்களை ஸ்லோகமாக எழுதியிருந்தார்

போதததற்கு கீதை உபதேசம் காட்சியில் அந்த வரிகளே நான் சில இடங்களில் பேசவேண்டும்
எப்படியோ தமிழில் எழுதி நடிகன் என்கின்ற முறையில் உச்சரிப்புகளை மனப்பாடம் செய்து கொண்டு பேசி நடித்து விட்டேன்

அந்த ஸ்லோகங்கள் இன்றும் என் நினைவில் நிற்கின்றன நாடக தினமன்று என் உடல் முழுவது நீல பெயிண்ட் அடித்து....முகத்துக்கு மேக்கப் போடமாட்டேனா என்று ஏங்கியவனுக்கு உடம்பு பூரா பெயிண்ட் அடிச்சா எப்படி இருக்கும்

மோர் சாதம் கிடைக்காத என ஏங்கியவனுக்கு விருந்து சாப்பாடா!! உடம்பு பூரா நகை கட்டி விட்டு..... அங்கங்கே ரத்த காயம் வேறு

கோவிலிருந்து பிரத்யேகமாக தருவிக்கப்பட்ட ஆண்டாள் மாலை போட்ட வுடன் என்னை நான் NTR போல உணர்ந்தேன்

நிறைய பேர் என்னை பக்தியுடன் பார்ப்பது போல இருந்தது
நாடகத்தில் ஒரு வசனம் விடாமல் பேசி நடித்து பெரும் பாராட்டுகளை பெற்றவுடன் எனக்கு மிகவும் பெருமையாக இருந்ததது

அன்றிலிருந்து நாராயண சாமீ என்னை கிருஷ்ணா என்று அழைக்க ஆரம்பித்தார்

இந்த நாடகத்திற்கு அடுத்த ஷோ உடனடியாக நிர்ணயிக்கப்பட்டது
எங்கே தெரியுமா

புட்டபர்த்தியில் பாபா முன்னிலையில்

அவர் பிறந்த நாளன்று......

எனக்கு அப்போது அடுத்த நாடகம் என்ற உணர்வு தான் இருந்ததே தவிற வேறு எதுவும் தோன்ற வில்லை அனால் இப்போது இதை எழுதும் போது கொஞ்சம் vibrations உணர முடிகிறது என்பதை என்னால் மறைக்க முடியவில்லை
நாராயணசாமி சாருக்கு அவருடைய திருமணத்தை நடத்தி வைத்தவரே பாபாதானம்
அவர் தாலி எடுத்துக் கொடுததுதான் இவரே மாமியை கைபிடித்தாராம்

எனக்கு நாடகம் நடிக்க வேண்டும்

அது எங்கிருந்தால் என்ன...

நாங்கள் நாடகம் போட புறப்படும் நாளும் வந்தது

என்னைப் போலவே இந்த பாபா விஷயத்தில் நம்பிக்கை இல்லாதவர் இருவர்

ஒருவன் JUNIOR BAALIAH

இன்னொருவன் வாசு

நாங்கள், எல்லோரும் MOUNT ROAD ல் உள்ள ஒரு போட்டோ STUDIOல் குழுமினோம்

எங்களுக்கு BUS ஏற்பாடு செய்தவர்கள் DAWN ENVELOPES உரிமையாளர்கள் நான் வாசு ரகு மூவரும் பின் இருக்கையில் இடம் பிடித்து கொண்டோம்

எல்லோரும் பாபா பஜன் பாடல்களை பாடி பயணத்தை துவக்க நாங்கள் மட்டும் வேறு கதைகளை பேசி எல்லோரையும் கிண்டலடித்துகொண்டு பயணித்தோம்

வழி நெடுக எங்களை எதோ மாமிச பட்சிணிகளை பார்ப்பது போல பார்த்துகொண்டு வந்தார்கள்

நாங்கள் முவரும் அடித்த கொட்டத்தை பார்த்து நாராயண சாமீ சார் வேறு கிருஷ்ணன் கிடைத்திருந்தால் என்னை அன்றே மாற்றி இருப்பார்!

பாவம் அவர்!!

புட்டபர்த்தியை அடைந்தோம் அங்கே நிலவிய அமைதி ஊரில் யாருமே இல்லை என்ற உணர்வை ஏற்படுத்தியது ஆனால் விசாரித்தபோது அந்த வருடம் அந்த ஊரில் அந்த நேரத்தில் 5 லட்சம் பேர் வந்துள்ளார்கள் என அறிந்து ஆச்சர்யப்பட்டேன் கூடையில் குப்பை அள்ளும் ஒருவர் ஒரு கம்பெனி MD யாம் மற்றொருவர் பெரிய தொழிலதிபராம்

சரி இப்போது அதெல்லாம் எதற்கு??

மதியம் மேடைக்கு சென்றவுடன் பாபா வருவதாக சொன்னார்கள்

அவர் வந்தார்

எங்களை எல்லோரையும் பார்த்து புன்னகைத்தார்

நான்தான் அவர் காலில் விழமாட்டேனே நாரயணசாமி சார் அறிமுகம் செய்து நான்தான் கிருஷ்ணன் என்றார்

பாபா கையிலிருந்து விபுதி கொட்டியது கை நீட்டி பெற்றுக்கொண்டேன்

எதோ மந்திரிக்கப்பட்டவன் போல அவர் காலில் விழுந்து எழுந்தேன் ரகு மிகவும் குறும்புக்காரன்

அவர் அருகிலே சென்று அவர் தலை முடியை தடவிக்கொடுப்பது போல பற்றி லேசாக இழுத்தான்

பாபா சிரித்தார்

அவன் கைகளில் பாம்பு நெளிவது போல இருந்தது என்று பின்னால் சொன்னான் பாபா செல்லமாக அவனை தெலுங்கில் கடிந்தார்

அன்று மாலை நாடகம்

மேக் UP முடிந்து நாடகம் ஆரம்பிக்க வேண்டும்

பாபா முதல் வரிசையில் அமர்ந்ததும் நாடகம் ஆரம்பமாகியது
முதல் காட்சிளிருந்து நான் பேச வேண்டும் பேசுகிறேன் நடிக்கிறேன்

ஆனால் என் ஒவ்வொரு அசைவின் போதும் என் தலையில் இருந்த கிரிடம் கிழிறங்கி என் கண்களை மறைத்துக்கொண்டே இருந்தது

அதை சரி செய்து நடிப்பதா அல்லது கழட்டிவிடுவதா??
கழட்டலாமா?? கிருஷ்ணர் கிரிடத்தை கழட்டி இருப்பாரா??
என்று யோசிப்பதற்குள் தட்டு தடுமாறி இடைவேளை வரை வந்து விட்டேன்

பாபா உள்ளே வந்தார்

என்னை கிருஷ்ணா என்று அழைத்தார்
அருகில் சென்றேன் தலையை தடவினார் என் கண்களில் நீர் முட்டிற்று

என்ன கிரிடம் படுத்துகிறதா என்றார்

ஆமாம்

இடைவேளைக்கப்புறம் படுத்தாது என்றார்

போய்விட்டார்

இடைவேளைக்குப் பிறகு எதுவுமே செய்யாமல் என் கிரிடம் தலையில் பொருத்திய இடத்தில் அசையாமல் அலங்காமல் அப்படியே நின்றது

மீதி நாடகத்தை முடித்தேன்

நாராயணசாமி என் தலை கர்வம் போய்விட்டது என்றார்

மறுநாள் கலையில் எங்கள் எல்லோரையும் பாபா தனிமையில் சந்திக்க அழைத்தார்.

தி இந்து தமிழில் என் பேட்டி

நாடக அனுபவங்கள் பகுதி 4

அந்நாளில் guindy இன்ஜினியரிங் கல்லூரியில் வருடா வருடம் கல்லுரிகளுக்கிடையேயான நாடக போட்டி நடைபெறும்

தற்சமயம் இப்படி ஒரு போட்டி நடக்கிறதா என்று எனக்கு தெரியவில்லை அப்படி நடந்தால் தமிழ் நாடக மேடைக்கும் திரைபடங்களுக்கும் நிறைய புது எழுத்தாளர்கள் வந்திருக்க வேண்டுமே

ஆனால் வரவில்லை என்ன காரணம் என்று தெரியவில்லை

அந்நாளில் எல்லா வருடமும் A/C COLLEGE OF TECHNOLOGY பல பரிசுகளை தட்டி செல்லும் காரணம் அந்த சமயத்தில் Mouli அங்கே LEATHER TECHNOLOGY படித்துவந்தார். YG மகேந்திரன் CHEMICAL ENGINEERING படித்துவந்தார்

இவர்களுடன் மற்ற கல்லூரி நாடக குழுக்களும் போட்டியிட்டன. பரிசுகளை வென்றன அது ஒரு ஆரோக்கியமான போட்டியாக மாணவர்கிடையே இருந்தது. படிப்புக்கிடையே இப்படிப்பட்ட கலாசார விழாக்கள் எங்கள் வாழ்வில் ஒரு வசந்தம்

இந்தகால மாணவர்களை நினைக்கும் பொது எனக்கு கொஞ்சம் பரிதாபமாகத்தான் இருக்கிறது

சரி நாம் நம் நாடகத்திற்கு வருவோம்

ஒத்திகை முடிந்து அரங்கேற்ற நாள் வந்தது என்று சொன்னேன் அல்லவா நாராயணசாமீ சாருக்கு சினிமா உலகில் நிறைய பேரை தெரிந்து இருந்ததால் அவர் CINEMA MAKEUP MAN COSTUMER எல்லோரையும் ஏற்பாடு செய்து விட்டார்

இந்த ஒப்பனை கலைஞர்களுக்கு ஒரு பழக்கம் உண்டு யாராவது முதன்முறையாக மேக்கப் போடவந்தால் அவர்களை உசுப்பேத்தி விடுவது கை வந்த கலை

நான் அந்த நாற்காலியி உட்கார்ந்தவுடன் அதுவும் பெண் வேஷம் என்று சொன்னவுடன் அவர் வேலையை காண்பிக்க ஆரம்பித்தார்

“சிவாஜி கணேசன் கூட முதன் முதல்லே பொம்பளை வேஷம்தான் நாடகத்துலே போட்டாரு அப்பவே சொன்னேன் பெரிய நடிகனா வருவென்னு உனக்கு தம்பி அவரை மாதிறேயே கண்ணு ஓஹோன்னு வரப்போறே பாரு””
என்று சொல்லி என் நடிப்பு வெறிக்கு தூபம் போட நான் மானசிகமாக சரோஜாதேவியுடனும் தேவிகாவுடனும் டூயட் பாட ஆரம்பித்தேன்

கண்ணுக்கு ஸ்பெஷல் MAKEUP போட்டு கன்னங்களுக்களுக்கெல்லாம் ROUGE போட்டு ஆப்பிள் போல சிவக்க வைத்து..... நல்ல வேளை அந்த கால கட்டத்தில் நான் அப்போதுதான் ஷேவிங் பண்ண ஆரம்பித்திருந்தேன் கொஞ்சம் கரடு முரடு குறைவாக இருந்தது இல்லையானால் ஒரு ரெண்டாங்கட்டான் முகம் வந்திருக்கும்

பின்னர் WIG வைத்து பின்னலிட்டு பூ வைத்து அலங்காரம் செய்தார்கள் முகம் மட்டும் கிட்டத்தட்ட ஒரு பெண் வடிவம் வந்து விட்டது

இனிமேல்தான் முக்கியமானது விஷயமே

நான் COSTUMER இடம் சென்று என்னை ஒப்டைத்துகொண்டேன்
சட சட என்று என் PANT ஐ உறுவி போட்டு விட்டு ஒரு பாவாடையை மாட்டி விட்டார்

அதன் பின்னர் எதோ ரெண்டு கொட்டாங்குச்சி போல இருந்த பாத்திரத்தை கவிழ்த்து என் மார்பில் கட்ட கொஞ்சம் எரிந்தது
அதன் பின்னர் ஒரு ரவிக்கை அணிவித்து மட மடவென்று ஒரு புடவையை சுற்றி கட்டிவிட்டார் பாருங்கள !!

நான் அவரிடம்......
“ஏன் சார் உங்க விட்டுலே மனைவிக்கு நீங்கதான் புடவைர் கட்டி விடுவிங்களா?” ன்னு கேட்க நினைத்து வாயை அடக்கிக் கொண்டேன்
ஆஹா!! அந்த புடவை மடிப்புகள் என்ன.. அதை அவர் நிவிவிட்ட அழகு என்ன....

பின்னர் மேலே கொசுவம் வைத்து அதை இடுப்பு பாவடையில் சொருகும் பொது கொஞ்சம் கூச்சத்தால் நெளிந்தேன்

பெண்களுக்கான ஒரு HIGH HEEL செருப்பையும் அணிந்தபிறகு முழுமையான பெண்ணாக தோற்றமளித்த என்னை பார்த்தவுடன் நாராயணசாமி ஒரு சின்ன திருஷ்டி பொட்டு வைத்துக்கொள் என்றார்

நாடகம் துவங்க போகிறது கூட்டம் அலை மோதுகிறது (நிஜம்!)

அந்நாளில் நாடகத்திற்கு நல்ல கூட்டம் வரும்
இந்த கல்லூரியில் நாடகத்தை கிழிப்பதற்கென்றே கூட்டம் வரும்

கதாநாயகி அறிமுக காட்சி நான் உள்ளே வந்தவுடனேயே விசில் பறந்தது ஏதேதோ COMMENTS,PAPER ROCKETS எல்லாம் பறந்தது

ஒரு நல்ல கதை அம்சம் கொண்ட நாடகம் ( முதல் நாடகம்) அப்படியே நின்று விடுமோ??

ரொம்ப கலக்கமாக இருந்தது.

ஆனால் ஒரு விஷயம்
எனக்கு என்றுமே இந்த STAGE FEAR பெரிதாக பாதிக்காது

நான் தொடர்ந்து எல்லா தெய்வங்களையும வேண்டிக்கொண்டு என் வசனங்களை ஒழுங்காக பேசி நடித்து கொண்டிருந்தேன்

கொஞ்சம் கொஞ்சமாக விசில்கள் குறைந்தன
கூச்சல் அடங்க துவங்கியது

45 நிமிட நாடகதில் கடைசி 3௦ நிமிடங்கள் எந்த கலாட்டாவும் இல்லாமல் நடந்து முடிந்தது

இந்த திடீர் மாற்றத்திற்கு என்ன காரணம்
ஷர்மாவின் நடிப்பா கதையா அல்லது என்னை நிஜப் பெண்ணென்று நினைத்து பரிதாபமா
யாமறியோம்!!!

நாடகம் முடிந்து எல்லோரும் MAKEUP அறையில் கூடினோம்

நாராயணசாமி சார் வெகுவாக பாராட்டினார்

ஷர்மாவுக்கு சந்தோஷம் பிடிபடவில்லை

மேக்கப் அறையில் தெரிந்தவர்கள் கூட்டம்

வெளியே கதவு ஜன்னல்களில் தலைகள். எட்டி எட்டி பார்த்துகொண்டிருந்தார்கள்.

யாரோ ஒருவர் வந்து என்னை பார்க்கவேண்டும் என்று வெளியே சிலர் காத்திருப்பதாக கூறினார் நான் அப்படியே வெளியே வந்தேன்

பத்து பத்னைந்து மாணவர்கள் என் முன்னால் நின்று கொண்டு உங்கள் நடிப்பு பிரமாதம் என்றார்கள்

நான் நன்றி என்று சொல்லி கை குலுக்குவார்கள் என கை நீட்டினேன்

வணக்கம் சொன்னார்கள்

ஒருவன் ரொம்ப கூச்சப்பட்டு மெல்ல கை விரல்களை நிட்டினான்

கையால் தொட்டேன்

அவன் கை நடுங்கியது

இப்போது மற்றவர்களும் ஒவ்வொருவராக தயங்கி தயங்கி கை நீட்ட நான் அவர்கள் கையைப்பற்றி குலுக்க......
ரொம்பவே மகிழ்ந்தார்கள்

விடைபெறும்போது ஒருவன் ரொம்ப தேங்க்ஸ் மேடம்!! உங்க போன் NUMBER, அட்ரஸ் என வாயெடுக்க.....

அடபாவிங்களா இதனை நேரம் என்னை பொண்ணுன்னு நினைச்சா பேசிகிட்டு இருந்தீங்க??

ஒரு நிமிஷம் இருங்க எழுதித்தறேன்னு சொல்லி உள்ளே வந்து WIG ஐ கழட்டி கையிலே எடுத்துகிட்டு போய் நின்னேன்.....

ஒரே ஆரவாரம்

“நீங்க பையனா!!!!” என அடிப்படையிலேயே சந்தேகப்பட்டு கட்டிபிடித்து சந்தொஷப்பட்டர்கள்!!

இது என் நடிப்புக்கு கிடைத்த வெற்றியா?

அல்லது MAKEUPக்கு கிடைத்த வெற்றியா??!!

இன்று வரை புரியவில்லை (இந்த சம்பவம் நடந்த ஆண்டு 1967 மாணவர்களின் கூச்சமும் தயக்கமும் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும்)

எங்களுக்கு பரிசு எதுவும் கிடைக்கவில்லை

ஆனால் என்ன??

நாராயணசாமி சார் தன்னுடைய அடுத்த நாடகத்தில் நடிக்க அழைப்பு விடுத்தார் அதுதான் பொதுமேடையில் என் முதல் நாடகம்

மீண்டும் சந்திப்போம்