Saturday, November 19, 2016



கடல் புறா ஒலிப்புத்தகம் நடிகர்கள் அறிமுகம்



இந்த தொடரில் அடுத்து நாம் சந்திக்க போவது......
இவரை நான் முதன் முதலில் சந்தித்தது லியோ பிரபு நாடகத்தில அ...டுத்து இவருடன் நான் நெருங்கி பழகியது ஜெயஸ்ரீ pictures தயாரித்த என்ன சத்தம் இந்த நேரம் என்ற தொலை காட்சி தொடரில் தான்
அதன் பிறகு இவரை நான் பல முறை சென்னை சென்ட்ரல் ரயில் நிலத்தில் முன்பதிவு பிரிவில் சந்தித்திருக்கிறேன்
நான் மட்டும் அல்ல நாடகம் போடும் எல்லோரும் இவர் உதவியை நாடி அங்கு வருவார்கள்
தென்னக ரயில்வேயில் ஒரு பொறுப்புள்ள அதிகாரி யாக இவர் முன்பதிவு பிரிவில் பணியாற்றி வந்தார்
நாங்களெல்லாம் அப்போது நிறைய வெளியூர் நாடகங்களுக்கு போக வேண்டியிருந்ததால் bulkbooking எனப்படும் குழு முன்பதிவிற்கு அங்கு செல்வோம்
அப்போதெல்லாம் மயிலை மற்ற இடங்களில் இந்த வசதி கிடையாது அங்கு போய் இவரை பார்த்தால் போதும் மட மட வென்று நாடக குழுக்களுக்கான வேலைகளை முடித்து தந்து விடுவார் ஏனென்றால் இவரும் ஒரு நாடக காரர்தானே இவருக்கும் உதவி புரியும் குணமும் அதிகம்
இதன் பிறகு சிவகாமியின் சபதம் ஒலிப்புத்தகம் எடுத்த போது என் செவிகளிலேயே ஒலித்துக்கொண்டிருந்த குரல் ஒன்று இவர்தான் புலிகேசி என்று நினைவுட்டியது அப்படித்தான் நாங்கள் இந்த ஒலிப்புத்தக வேலைகளில் இணைந்தோம்
இவரும் நாக நந்தியும் பேசும் முன்று நான்கு தொடர்சியான அத்தியாயங்கள் இரண்டே மணி நேரத்தில் முடிந்தது என்பது இவரது திறைமைக்கு அத்தாட்சி
இவர் குரல் எங்கிருந்தாலும் அதிரும்
பின்னர் பெரிய பழுவேட்டரையராக பங்கேற்க அழைத்தேன்
அப்பப்பா
இவர் நந்தினியை சந்திக்க போகும் காட்சியில் ஒரு கிளியை கழுத்தை நெரிக்கும் காட்சி ஆகட்டும்
இவரும் அவர் தம்பியும் உறுமும் காட்சி ஆகட்டும்
மண்டபத்தை சாய்த்து ரவிதாசன் மேல் விழும் காட்சி ஆகட்டும்
வெள்ளத்தில் தவித்து குடந்தை ஜோசியரை சந்தித்து பேசும் காட்சி ஆகட்டும்
இறுதியில் கத்தியை தன மேல் பாய்ச்சிக்கொண்டு தற்கொலை முயலும காட்சி ஆகட்டும் மனிதர் வாழ்ந்து இருப்பார்
பெ. ப மரணமடையும் காட்சி மட்டும் இவர் கேட்டதற்கு இணங்க இரண்டு முறை ஒலிப்பதிவு செய்தேன்
அவர் திருப்தி அடைந்தார்
அந்த காட்சியில் இவர் கொடுத்த சில சிறப்பு சப்தங்கள் படிக்கும்போது நிச்சயம் கிடைக்காது
இவர் நந்தினியோடு பேசும் காட்சிகளில் இழையோடிய ஒரு அடிமை மயக்கத்தை கவர்ச்சியின் காமத்தை தனது வீரத்தோடு மிக அழகாக கேட்டபடி கொடுத்திருப்பார்
அதுதான் கல்கி அவர்கள் எழுதியதும்
இதற்குமேல் அவர் நடிப்பை பற்றி நான் பெற்ற வெற்றி பற்றி நீங்கள் தான் எழுத வேண்டும்
ஒரு இயக்குனரின் நடிகர் இவர்
இவர்களெல்லாம் பயன்படுத்தபடாமல் நமது சீரியல் உலகம் இன்னும் ஒரு சிலர் பின்னாடியே சுற்றிக்கொண்டிருப்பது நமது துரதிர்ஷ்டம்
அடுத்து கடல் புறா
ஒரு ராட்சதத்தனமான குரல் கொண்ட ஒரு அரசன் கடல் கொள்ளை காரன் மகள் மேல் பாசத்தை பொய்யாக பொழிபவன் அகுதாவிடம் அஞ்சுபவன் ஒரு வில்லன் பாத்திரம் இளையபல்லவனிடம் அடிமைபட்டு போனவன்
பலவர்மன்
இதற்கு இவர் குரலை தவிர என்னால் வேறு எந்த குறலையும் யோசிக்க முடியவில்லை
இங்கு ஒரு கூடுதல் தகவல்
இந்த கடல் புறா ஒலிப்பதிவு முழுவதும் என்னுடன் இயக்கத்தில் பெரும் உறுதுணையாக இருந்தவர்
இவர் பெற்ற modulation உச்சரிப்பு நடிப்பு மற்றவர்களுக்கு பயன்படாதா என்ற எண்ணத்தில் இவருக்கு அந்த பொறுப்பும் கொடுக்கப் பட்டது
மேலும் என் குரலை ஒலிப்பதிவு செய்யும் பொது எனக்கு ஒருவர் என் தவறுகளையும் சுட்டிக்காட்ட தேவைப்பட்டது அதற்கு பெரும் உதவியாக இருந்தவர் வேலுசாமி அவர்கள் அவர் இருந்தால் நான் கொஞ்சம் ஒய்வு எடுப்பேன்
மேலும் ஒரு நடிகர் அல்லது நடிகை நடிக்கும்போது செய்யும் தவறுகளை ஒரு இயக்குனராக உணர்ந்தாலும் ஒரு தயாரிப்பாளனாக நான் சில சமயம் studiotime பண விரயம் கருதி ஆமோதித்தாலும் இவர் விட மாட்டார்
அதனால் we aimed at perfection together
வேலுசாமி இவர் பெயர்
ஆனால் எல்லோரும் என்னிடம் இவரை பற்றி பேசும்போது பழுவேட்டரையர் அல்லது புலிகேசி என்றுதான் அழைக்கிறார்கள்
இவருடன் மேலும் பல ஒலிப்புதகங்களில் பங்கு பெற ஆசைபடுகிறேன்
THANK YOU VELUCHAMY

கடல் புறா ஒலிப்புத்தகம் நடிகர்கள் அறிமுகம்



கடல் புறா நாவலில் அதன் ஆசிரியர் சாண்டில்யன் அவர்கள் இரண்டே பெண் பாத்திரங்களை கொண்டு கதையை நகர்த்தி இருப்பார்
பெண்களை பற்றி வெகு கவர்ச்சியாக வர்ணிக்கும் ஒரு எழுத்தாளர் இப்படி படு கஞ்சத்தனமாக இரண்டே பாத்திரங்களை அந்த கதையில் நுழைத்திருப்பது என்ன புதுமையோ புரியவில்லை
ஆனாலும் அந்த பாத்திரங்கள் கதாநாயகனோடு சம்மந்த பட்ட மிகவும் பலமான பாத்திரங்கள்
ஒன்று கடாரத்துத் இளவரசி காஞ்சனா மற்றொன்று பிரதம வில்லன்பாத்திரமான பலவர்மனின் வளர்ப்பு மகள்
இந்த பெண்ணின் இயற்பெயர் நமக்கு தெரியாது
ஆனால் காரணப்பெயர் மட்டும் தெரியும்
மஞ்சளழகி
மஞ்சள் நிறம் கொண்ட ஒரு அழகி
மங்கோலியர்கள் என்ற இனத்தினருக்கு மட்டும் மஞ்சள் நிறம் உண்டு என்று நாம் படித்திருக்கிறோம்
இவளும் ஒரு சீனப் பெண் அதுவும் விஜயநகர சாம்ராஜ்யத்திற்கு உரிமை கோரக்கூடிய பெண்
ஜெயவர்மநின்மகள்
அகுதாவின் தங்கை மகள்
இவள் வாழ்வு முழுவதும் சோக மாயம்
இளையபல்லவன் மேல் காதல் கொள்கிறாள்
பிரிகிறாள் மிண்டும் இணைகிறாள்
நடனமாது
இப்படிப்பட்ட ஒரு பெண் பாத்திரத்திற்கு நான் நடிகை தேடிக் கொண்டிருந்தேன்
எனக்கு தேவை ஒரு நளினமான கரகரப்பும் நிறைந்த மயக்கும் பெண் குரல் கொஞ்சம் பரிதாபமாகவும் இருக்க வேண்டும்
நமது ஹிந்தி நடிகை ராணிமுகர்ஜி போல
யார் யாரயோ பேச வைத்து பார்த்தேன்
நான் முன்பே சொன்னபடி எனக்கு குரல் மட்டும் முக்கியமல்ல
ஓரளவிற்கு அவர்கள் உருவத்திலும் அந்த கதா பாத்திரங்கள் போலவே இருந்து விட்டால் இன்னும் நன்றாக இருக்குமே என்று ஒரு இயக்குனராக எப்போதும் நினைப்பேன்
ஏனென்றால் உதரணமாக ஒருவர் காதல் வசனம் பேச வேண்டும் என்று வைத்துக்கொள்ளுங்கள்
எதிரிலி ருப்பவர் ஓரளவவாது இளமையுடன் இருந்தால் அவர்களிடையே (இப்போது பெரும்பாலும் பயன்படுத்தப்படும் சொல்லான) chemistry குரலிலும் தெரியம் அல்லவா
அதை விடுத்து ஒரூ இருபது வயது பெண்ணை எதிரில் நிற்கும் அறுபது வயது மாதுவைப்பார்த்து கற்பனை செய்து கொண்டு நடி என்று ஒருவனை சொன்னால் அது அவ்வளவு சரியானதாக என் மனதிற்கு படவில்லை
ஆகையால் இருக்கும் இரண்டே பாத்திரங்கள் கொஞ்சம் இளமையான நடிகைகளாக இருந்தால் இவர்களை அறிமுக படுத்தும்போது கூட நாம் கொஞ்சமும் தயங்க வேண்டியதில்லை என்பது என் தீர்மானம்
அப்படியேதான் என் தேர்வும் நடந்து கொண்டிருந்தது
ஓரளவிற்கு காஞ்சனா பாத்திரத்திற்கு ஒரு நடிகை தேர்வு செய்து வைத்திருந்தேன் அவர் குரல் மஞ்சளழகிக்கு கூட பொருந்தும்
இருந்தும் வேறு யாருமே மஞ்சலழகிக்கு பொருத்தமாக கிட்டா விட்டால் அவர்தான் மஞ்சளழகி என்று சொல்லி வைத்திருந்தேன் இவரைபற்றி ஒரு தனிப்பதிவு வரும்
அவரை வைத்து முதல் நாள் ஒலிப்பதிவு செய்து கொண்டிருந்தபோது ஒரு பெண் அமைதியாக வந்து அமர்ந்திருந்தார் அவரை பார்த்தவுடன் நான் கேட்ட கேள்வி நடிக்கிறிங்களா என்பது தான்
அதுக்குத்தான் சார் உங்களை பார்க்க வந்திருக்கேன் என்றார் இவரை அழைத்து வந்தது காஞ்சனா
அவர் குரலை கேட்டவுடன் முகத்தை பார்த்தவுடன் மஞ்சள் முகமே வருக என்று பாடதுவங்கினேன்
ஒரு தொலை காட்சியில் செய்தி வாசிப்பாளராக க இருக்கிறேன் என்றார்
எனக்கு கொஞ்சம் பயம் வந்தது
இதற்கு முன்னால் சில செய்தி வாசிப்பாளர்களை நடிக்க வைத்து அவர்கள் வசனங்களை செய்தி படிப்பது போல படித்தது சோகம்
இரண்டு வசனங்களை கொடுத்து படிக்க சொன்னேன்
மிக நன்றாக தமிழ் உச்சரித்தார்
அதுவே இன்று சென்னையில் அபூர்வம் ஆயிற்றே
அதுவும் தொலைகாட்சியில் செய்திவாசிப்பவரிடம் கிடைப்பது இன்னும் அபூர்வம்
தனக்கு சரித்திர கதைகளில் உள்ள ஈடுபாட்டையும் நமது கலாச்சாரம் பற்றியும் பாரம்பரிய உணவு வகைகளை பற்றியும் மிக ஆர்வமுடன் பேசினார்
கடல் புறா பலமுறை படித்து உள்ளதையும் சொன்னவுடன் எனக்கு இவரிடம் கதா பாத்திரத்தை பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இருக்காது எனப்புரிந்தது
நடிக்க சொல்லி கேட்டேன்
இவருக்கு வசனங்கள் மிக இயல்பாக வந்தன
அப்புறம் என்ன நிங்கதான் மஞ்சளழகி என்றேன்
உங்க பெயர்
வனிதா
அன்று முதல் வனிதா மஞ்சளழகி ஆனார்
என்ன கொஞ்சம் அழுவதற்கும் சிரிப்பதற்கும் சிரமப்பட்டார்
ஆனால் பலமுறை சிரிக்க வைத்து அவருக்கு அழுகையே வந்துவிடும் நேரத்தில் வசனம் ok ஆகும்
அதேபோல அழ வேண்டிய நேரத்தில் அவர் மிகவும் கஷ்டப்பட்டு விசும்பல்களை கொண்டு வருவார்
நான் வேற யாரையாவது வைத்து அழுகை மட்டும் எடுத்துக்கொள்கிறேன் என்பேன்
அழுது விடுவார்
எதற்கு இதை இங்கு எழுகிறேன் என்றால் நடிப்பு என்று வரும் போது சிரிப்பும் அழுகையும் மிகவும் எதார்த்தமாக வரவேண்டும்
நண்பர்களோடு விழுந்து விழுந்து சிரிப்பவர்களை பார்திருக்கிறேன் சிரித்துக்கொண்டே பேசுபவர்களை கேட்டிருக்கிறேன்
ஆனால் அவர்களையே மைக் முன்னாலோ அல்லது கேமரா முன்னாலோ கொண்டு நிறுத்தினால் சிரிக்க சொன்னால் காற்றுதான் வரும்
சிரித்தால் வசனம் வராது வசனம் பேசினால் சிரிப்பு வராது
இதுவே அழுகைக்கும் போருந்தும்
சரி இது தனியாக வகுப்பு எடுக்க வேண்டிய விஷயம்
இங்கு வேண்டாம்
வனிதா எல்லாவற்றிலும் ஒரு முழுமையான நடிகையாக எனக்கு கிடைத்துள்ளார்
அவரை இன்னும் பெரிய பாத்திரங்களில் அவர் விருப்பப் பட்டால் பயன் படுத்திக்கொள ஆவலாக இருக்கிறேன்
இப்போதும் மிகச் சிறந்த செய்தி வாசிபாளராகவும் இருக்கிறார்
அதேதான்
இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை அவர் புரிந்து இருக்கிறார் என்று அர்த்தம் அது மட்டுமல்ல
சிறந்த ஒரு கட்டுரையாளர்
நல்ல கவிதைகள் எழுதுகிறார்
தமிழ் ஆர்வமிக்கவர்
ஆராய்ச்சியாளர்
செய்தி தொகுப்பாளர்
நன்றி வனிதா

Wednesday, November 16, 2016



ரெகார்ட் டான்ஸ்





ஒரு காலத்தில் பொருட்காட்சி எல்லாம் record dance என்றொரு நிகழ்ச்சி நடைபெறும்
வேறு ஒன்றுமில்லை திரைப்பட பாடல்களுக்கு மேடையில் ஆடுவார்கள் இதை பார்க்க கூட்டம் அலை மோதும் ஆனால் சிறுவர்களுக்கு அநுமதி கிடையாது நாங்கள் இந்த மாதிரி நடனம் பார்த்தோம் என்று தெரிந்தாலே விட்டில் உதை விழும் ஆனால் ரகசியமாக பார்த்தது உண்டு
இதல்லாம் பால காண்டம் இப்போது நன்றாகவே முன்னோக்கி செல்வோம் சுமார் 17 ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு முறை என் நண்பர் ஒருவர் என்னை ஒரு அரசாங்க அலுவலக குடியிருப்பில் நடந்த ஒரு சிறுவர்கள் நிகழ்ச்சி ஒன்றிற்கு நடுவராகவும் சிறப்பு விருதினராகவும் அழைத்திருந்தார்
அன்றைய பல நிகழ்சிகளுக்கு பிறகு ஒரு சிறப்பு நாட்டிய நிகழ்ச்சி நடந்தது
ஒரு எட்டு வயது சிறுமி ஒரு திரைப்பாடலுக்கு நடனமாடினார்
அவருக்கு கொடுக்கப்பட்ட பாடல் எது தெரியுமா
மன்மத ராசா மன்மத ராசா கன்னி மனதை கிள்ளாதே
என்ற பாடல்தான் அவரும் மிக சிறப்பாக வேகமாக சுழன்று சுழன்று ஆடினார்
எல்லோரும் பெரிசாக கைதட்டி ஆர்பரித்து பாராட்டினார்கள்
என் மனம் மட்டும் மிகவும் சோர்ந்து போயிற்று
என்ன இது ஒரு எட்டு வயது சிறுமி ஆடும் ஆட்டமா இது என்று மனம் வெதும்பியது
அப்போது இப்போது இருக்கும் கொஞ்சம் மனப்பக்குவம் கூட கிடையாது
என்னை மேடைக்கு பேச அழைத்தார்கள்
மனதில் எண்ணியதை சொல்லாமல் இருக்க முடியவில்லை பொங்கிவிட்டேன்
ஒரு எட்டு வயது சிறு ஆடும் ஆட்டமா இது ஒரு நடனம் என்றால் அசைவுகள் மட்டும் முக்கியமல்ல
அதுவும் இந்த நடனத்தில் அசைவுகளும படு ஆபாசம்
இந்த ஆபாச அசைவுகளெல்லாம் அர்த்தத்துடன் அந்த குழந்தைக்கு சொல்லி கொடுக்க பட்டதா பள்ளி ஆசிரியர்கள் தான் இப்படிப்பட்ட நடனத்தை குழைந்தைகளை ஆட வைக்கிறார்கள் என்றால் பெற்றோர்கள் எப்படி அனுமதிக்கிறார்கள்?
அந்த பாடலின் வரிகள் என்னவென்று அந்த குழந்தைக்கு தெரியுமா அதன அர்த்தம் புரியுமா அப்போதுதானே முகத்தில் பாவம் வரும் அந்த அர்த்தங்களை புரிந்து கொள்ளும் வயது அந்த குழந்தைக்கு இல்லையே என்று பொருமி விட்டேன்
கூட்டத்தில் ஓரிருவர் கைதட்ட நினைத்தது கூட கண்ணில் தெரிந்தது ஆனால் கையை இறுக்கி தனித் தனியாக கட்டிக்கொண்டனர் யாரவது என் சொல்லை ஆமோதித்து விட்டதை தெரிந்து கொண்டு விடப்போகிறார்களே என்ற ஜாக்கிரதை உணர்வு
அன்றைய நிகழ்ச்சி நிர்வாகிகள் என்னை வழி அனுப்பி வைக்கும்போது அழைத்து வந்த மகிழ்ச்சி இல்லை எப்படி இருக்கும்?
கொஞ்சம் கோபம் கொஞ்சமஅசடு வழிதல் போன்ற எல்லா முக பாவங்களுடனும் என்னை மிக சந்தோஷமாக வழி அனுப்பி வைத்தனர்
சந்தோசம் என்பது இங்கிருந்து போனால் போதும் என்ற நிறைவுதான்
மறு நாள் என்னை அழைத்து சென்ற என் நண்பன் எனக்கு தொலை பேசினான்
என்ன இப்படி செய்து விட்டே
நான் என்ன செய்தேன் நானொண்ணும் நடிக்கவில்லையே நடனம் ஆடவில்லையே
என்றேன்
அது இல்லை அந்து பொண்ணு டான்சை அப்படி கிழிச்சிருக்க வேண்டாம் அந்த பொண்ணு யார் தெரியுமா இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி கொடுத்த ஒரு உயர் அதிகாரியின் மகள் அவர்தான் செலவு bill எல்லாம் அனுமதிக்க வேண்டும் இதனால் அலுவலகத்தில் உன்னால் பெரிய பிரச்னை ஏற்பட்டு விட்டது
என்றான்
அன்றையிலிருந்து என்னை அழைத்து சென்ற ஒரு நிர்வாகி என்னை WOODLANDS DRIVE IN ஹோட்டலில் (நாங்கள் தினமும் சந்திக்கும் இடம்) சந்தித்தால் கூட முகத்தை திருப்பிக்கொண்டான்
பின்னால் அவன் ஒரு வியாபாரம் ஆரம்பித்து அலுவலகத்திலிருந்து ஒய்வு பெற்ற பின் என்னை தொடர்பு கொண்டு தன பிசினஸ் பற்றி பேச அழைத்தான் என்பது வேறு கதை
இதே போன்ற அனுபவம் எனக்கு மீண்டும் ஒரு முறை வேறு இடத்தில ஏற்பட்டது
இங்கிருந்து அவர்களுக்கு என்னை பற்றிய செய்தி போகாததால் என்னை அழைத்து விட்டார்கள் என்று நினைக்கிறேன்
அதுவும் ஒரு பள்ளி ஆண்டு விழா மேடை அங்கும் நான் ஒரு சிறப்பு விருந்தினர்
என்னை அழைத்து சென்றவர் சக நாடக நடிகர் ஒருவர்
மேடையில் கலை நிகழ்சிகள் ஆரம்பமாகின
முதல் பாட்டு ரன் படத்தில் வரும் காதல் பிசாசே காதல் பிசாசே என்ற பாட்டிற்கு நாட்டியம் ஆடினார்கள்
மாதவன் பாத்திரத்தில் ஒரு 10 வயது சிறுவன் அந்த கதாநாயகி பெயர் மறந்து விட்டது அதற்கு ஒரு எட்டு வயது சிறுமி
இருவருமே அந்த காதல் பாட்டிற்கு அருமையாக பாவங்களுடன் அங்க சேஷ்டைகளுடன் கட்டிபிடித்து ஆட ஆரம்பித்தனர்
என்னுள் இருந்த பிசாசு கொஞ்சம் கொஞ்சம் ஆகா உயிர் பெற்றது
முகம் சுளிக்க ஆரம்பித்தேன்
மேடையின் பக்கவாட்டில் பார்த்தால் இரண்டு ஆசிரியைகள் அந்த நடனத்தை சொல்லிகொடுதவர்கள் போலும்
அவர்களும் மேடைக்கு வெளியே ஒரே இடத்தில கை அசைத்து வாயசைத்து பாவங்கள் கொடுத்து தங்கள் திறமையின் வெளிப்பாட்டை உழைப்பை பெரிதும் ரசித்துகொண்டிருந்தனர்
வாங்க இருக்கு உங்களுக்கு என்று என்னுள் இருந்த சாத்தான் வேதம் ஓதியது
கஷ்டப்பட்டு நாற்காலியின் கைபிடியை பற்றிக்கொண்டேன்
இடைவேளை வரை காத்திருக்க வேண்டுமே அடுத்து ஒரூ சோலோ நடனம் என்றார்கள்
ஐயோ மறுபடியும் எந்த கன்னறவியோ என்று பயந்து கண்களை மூடிக்கொள்ள எத்தனித்த போது என் சாத்தா அடக்கும் விதம்மாக பாடல் ஒலித்தது நிமிர்ந்து உட்கார்ந்தேன்
ஒரு 15 வயது மாணவி மிக அருமையாக மணப்பாறை மாடுகட்டி என்ற பாடலுக்கு ஆடினாள்
பெரிதும் ரசித்தேன்
வெறும் பழைய பாடல் என்பதற்காகவா இல்லை
பள்ளியில் மாணவர்களுக்காக அந்த பாடல் பாடப்பட்டதற்காக
மேடையில் பேசும் பொது முதலில் காதல் பிசாசே என்றால் என்ன அர்த்தம் என்று அந்தத் எட்டு வயது சிறுமிக்கு தெரியுமா இல்லை காதல் டூயட் பாடுகிற வயசா இது அந்த ஆசிரியர்களும் பெற்றோர்களும் என்ன அர்த்தங்களை சொல்லிக்கொடுத்து அந்த குழந்தைகளுக்கு விளங்க வைத்தார்கள் என்று தெரியவில்லை என்று நான் ஆரம்பித்தவுடன் என்னை அழைத்து சென்ற சக நடிகர் வேகமாக ஓடி வந்து என் மைக்கை பிடுங்கி இது இவருடைய தனிக்கருத்து யாரும் தவறாக நினைக்க வேண்டாம் என்று எனக்கு பதிலாக மன்னிப்பு கேட்டுக்கொண்டார்
அவர் வருடா வருடம் அந்த நிகழ்ச்சிக்கு வருபவராம் அடுத்த வருடம் தன்னையும் அழைக்கமால் போய்விடுவார்களோ என்ற பயம் அவருக்கு
நான் விடுவதாக இல்லை அடுத்து வந்த நடனத்தை பற்றி
பேசியே தீருவேன் என்று சொல்லி என்ன அருமையான பாடலது தமிழ் நாட்டின் geography ஒரு பாடலில் வெளிவருகிறது இதை கேட்கும் குழந்தைகளும் எத்தனை விஷயங்களை தெரிந்து கொள்ளலாம்
மணப்பாறை மாடு கட்டி மாயவரம் ஏறு பூட்டி மணப்பாறையில் மாடு..... மாயவரம் ஏறு...... ஆத்துரு கிச்சடி சம்பா அரிசி மருதை ஜில்லா ஆளு பொள்ளாச்சி சந்தை விருதுநகர் வியாபாரி இப்படி அதில் எத்தனை விஷயங்கள்
கேட்கும் குழந்தைகளுக்கு எவ்வளவு விஷய தானம் கிடைக்கும்
அந்த ஆசிரியர்களை மனதார பாராட்டுகிறேன் என்று சொல்லி அமர்ந்தேன்
அப்புறம் அவர்கள் வழி அனுப்பிய விதம்தான் உங்களுக்கு புரிந்திருக்குமே என் நாடக நண்பர் புலம்பி தள்ளிவிட்டார்
இப்போது ரொம்பவே மனப்பக்குவம் வந்து விட்டது
மேடையில் பார்த்தவையும் விட்டுக்குள்ளேயே வந்து விட்டது
யாரிடம் போய் சொல்ல முடியும் குழந்தைகள் குழந்தைகளாக இல்லாமல் ஆடும் ஆட்டமும் பேசும்மழளைகளும் அவற்றை ரசிக்கும் சமுதாயமும் பிரம்மிக்க வைக்கின்றன
இப்போது நடிக்க வைக்கிரார்களாம் இரண்டொரு முறை பார்த்தேன் அதை பற்றி பேசாமல் இருப்பது நலம் ஏனென்றால்
கிழ நச்சு தாங்கவில்லை என்று விட்டில் எல்லோரும் என் காதில் கேட்கும்படியாக சொல்வது நாராசம்

A posting from Thirusanguraja Venkatesan





தமிழனக பிறந்ததில் நான் மிகவும் பாக்கியசாலி அதை நினைத்து நினைத்து பூரிப்பு அடைகிறேன்..
இன்று இறுதியாக கல்கியின் பொன்னியின் செல்வன் (Ponniyin Selvan) முழுவதும் கேட்டு முடித்து விட்டேன் (Bombay Kannan' S Audio Books and Videos ஒலி புத்தகம்).
...
அமரர் கல்கி அவர்கள் நம் தமிழ்ர்க்கு மிக பெரிய தொன்டு செய்து இருக்கிறார்.
தமிழகத்தின் வரலாற்றில் முக்கிய பங்கு சோழற்கலுக்கு உள்ளது அது என்றும் அழியாதது அந்த வரலாற்றை புனைந்து பொன்னியின் செல்வன் என்று ஒரு பொக்கிழத்தை கல்கி நமக்கு வழங்கி உள்ளார் அதனால் எதிர்கால தமிழக வரலாற்றில் கல்கியும் இடம் பிடித்து விட்டார் என்று கூறினாள் மிகையாகாது.
தமிழனாக பிறந்த அனைவரும் கல்கியின் பொன்னியின் செல்வன் என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
மேலும் Bombay Kannan Kannan அவர்களும் மிக பெரிய தொன்டு செய்து இருக்கிறார். இந்த Bombay Kannan' S Audio Books and Videos ஒலி புத்தகத்தில் வரும் அனைத்து கதா பாத்திரங்களும் மிக சிறப்பாக நடித்துள்ளார்கள் இவர்தான் என் மனதைக் கவர்ந்தவர் என்று கூற முடியாது ஏன் என்றால் அனைவரும் போட்டி போட்டு நடித்துள்ளார்கள் ஆண் பெண் இருபாலரும்.
மேலு‌ம் கதை முதல் பகுதியில் இருந்து இறுதி முடிவுரை கல்கி என்று கூறும் வரை Bombay Kannan Kannan நம்முடன் இருக்கிறார்.
Bombay Kannan Kannan, C K Venkatraman(Producer) மற்றும் அவர்களது குழுவிற்கு என் கோடான கோடி நன்றி.


ஒரே ஒருவருக்காக.......



நான் என்றுமே ஒரு average மாணவன்தான் படிப்பில் பெரிதாக முதல் மார்க் schoolfirst காலேஜ் first என்றெல்லாம் வந்ததில்லை
ஆனால் எதோ சுமாராக மார்க் எடுத்து அறுபதுலிருந்து எழுபது சதவிகிதம் வாங்கி ஒரு average ஸ்டுடென்ட் என்ற அந்தஸ்துளியே இருந்து விடுவேன்
FAIL எல்லாம் ஆனதில்லை நிறைய மார்க்கு வரும் என்று எதிர்பார்க்கும் பாடத்தில் குறையும்
சுத்தமாக WASHOUT என்று நினைக்கும் ஒன்றில் யாரும் நம்பமுடியாத மார்க்கு பெற்று விடுவேன்
இந்த பொது விதி என்னை நாட க உலகிலும் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது மிக நல்ல நாடகம் என்று சொல்லப்பட்ட ஒரிரு நாடகங்கள் கூட average வெற்றி தான் பெரும்
பாராட்டு கிடைக்கும் விருது கிடைக்கும் சில இடங்களில் கூட்டம் வரும்
நல்ல நாடகம் போடுபவன் என்ற பாராட்டுகளோடு வெளி வந்து விடுவேன்
இப்போதும் FACEBOOK ல் கிடைக்கும் LIKES கமெண்ட்ஸ் பார்க்கும் போது அந்த விதி இன்னும் மாறவில்லை என்றே தோன்றுகிறது எப்படியும் average ஆக 5௦ லிருந்து 60 நிச்சயம் மிகச்சிறந்த பதிவு என்பது கண்ணில் படாமல் போய்விடும் ரொம்ப சுமார் என்று நான் நினைக்கும் பதிவு வெற்றி பெரும்
இதெல்லாம் விட நான் நாடகம் போட்ட காலத்தில் எனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவம் இங்கு நிச்சயம் பதிய தகுந்தது என்று நினைக்கிறேன்
1992 ல் ஒரு முறை கோவில்பட்டி பொருட்காட்சியில் எனது இரு வீடு ஒரு வாசல் நாடகம் நடத்த வாய்ப்பு வந்தது அந்த நாளில் கோவில்பட்டி விருதுநகர் இங்கெல்லாம் பொருட்காட்சியில் நல்ல கூட்டம் நாடகத்திற்கு வரும் நன்றாகவே ரசிப்பார்கள் இதனால் மிக உற்சாகத்துடன் ஒப்புக்கொண்டேன்
நாடக நாளும் வந்தது.காலையிலேயே கோவில்பட்டி சென்று அடைந்து விட்டோம் மாலைதான் நாடகம் மதிய உணவிற்கு பிறகு நாடகம் நடத்தும் இடத்திற்கு சென்றேன் நாடக மேடையும் பார்வையாளர் களுக்கான இடமும் மிகப்பெரியது திறந்த வெளி அரங்கம் மக்கள் அமர்ந்தால் 3௦௦௦ பேருக்கு மேல் அமரலாம் எனக்கோ மகிழ்ச்சிக்கு அளவே இல்லை
இன்றுமாலை வரப்போகும் கூட்டத்தை கற்பனை செய்து மகிழ்ந்தேன் தங்கும் இடத்திற்கு வந்து எல்லோரையும் மறுபடியும் ஒரு முறை நாடகத்த்திற்கு ஒத்திகை பார்க்க சொன்னேன்
இரவு உணவிற்குப்பிறகு நாடக மேடையை அடைந்தோம் இரவு 1௦ மணிக்குதான் நாடகம் பொருட்காட்சி சப்தங்கள் எல்லாம் அடங்கிய பிறகு நாடகம் ஆரம்பமாகும் என்றார்கள்
அதனால் பொருட்காட்சி மைதானத்தை சுற்றி வரப்போனோம் பல இடங்களில் ஸ்டால்கள் உருவாகிக்கொண்டிருந்தன முதல் நாள் ஆனதால் முழுமை பெறவில்லை
எங்கள் நாடகந்தான் துவக்க விழா நாடகம்
இரவு மணி 1௦ சிறிது சிறிதாக பொருட்காட்சியை காணவரும் அன்பர்களை ஓயாமல் அழைத்த குரலும் ஓயத்தொடங்கியது மக்கள் அவரவர் வேலைகளைகளை முடித்துக்கொண்டு வந்துகொண்டிருக்கிறார்கள் என ஆவலுடன் காத்திருந்தோம்
ஆனால் யாரும் முதல் நாள் வரத் தயாராக இல்லை என தெரிந்தது கொஞ்சம் படுதாவை நிக்கி விட்டு வெளியே பார்த்தேன்
திறந்த வெளி அரங்கம் மதியம் பார்த்தது போலவே வெறுமையாக இருந்தது மணி 1௦ 3௦ நாடகம் ஆரம்பிக்க சொல்லி தகவல் வந்தது
முதல் மணி அடித்து பார்போம் கூட்டம் வந்து விடும் என்ற நப்பாசையுடன் முதல் மணி இரண்டாம் மணி எல்லாம் அடித்து விட்டோம்
யாரும் அரங்கத்தினுள் வருவதாக தெரியவில்லை அங்கங்கே பொருட்காட்சி மைதானத்தில் சிலர் நின்று கொண்டிருந்தார்கள்
அவர்களிடம் நாடகம் ஆரம்பிக்கப்போகிறது என ஸ்பீக்கரில் அலறினார்கள்
எங்கே அதை ஒரு எச்சரிக்கை யாக கொண்டு வெளியேறிவிடுவார்களோ என்று கூட நான் பயந்தேன்!!
இறுதியாக நாடகம் ஆரம்பித்தே ஆக வேண்டுமென்ற நிலைமை ஏற்பட்டு விட்டது எங்கள் நடிகர்களுக்குக் சோகம் ஒருபுறம் மறுபுறம் ஆகா ஜாலியாக எதை வேண்டுமானாலும் பேசி நமக்குள் ரசிக்கலாம் என்ற எண்ணம் மறுபுறம்
நாடகத்தை ரத்து செய்து விடலாமென்று நினைத்தேன் நாடக ஏற்பாடு செய்தவர்கள் நாடகத்திற்கு ticket விற்றிருப்பதால் நடத்தியே ஆக வேண்டுமென்றார்கள்!!
காலி அரங்கமென நினைத்து படுதாவை உயர்த்தினால் ஒரே ஒருவர் மணற்படுக்கை அமைத்து நாடகம் பார்க்க தயாராக சாய்ந்து படுத்திருந்தார்!!!
ஓ!! இவர்தான் அந்த ticket வாங்கியவரா என நினைத்துகொண்டு (சபித்துக்கொண்டு) நாடகத்தை துவக்கினேன்
அவ்வப்போது எங்கள் குழுவை சேர்ந்தவர்களை வேலை
இல்லாதபோது அரங்கத்தில் சென்று அமரும்படி சொல்லி வைத்தேன் அதன்படி அவர்களும் முறை போட்டுக்கொண்டு நாற்காலிகளை கொஞ்சம் நிரப்பினார்கள்
ஆனால் அந்தே ஒரே ஒருவர் நாடகத்தை ரசித்த விதம் எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது
சிரிக்க வேண்டிய இடத்தில் சிரித்து ரசிக்க வேண்டிய இடத்தில் ரசித்து என் கடமை உணர்வை தூண்டிவிட்டார்
அந்த ஒரு ரசிகனுக்காக நான் நாடகத்தில் எந்த ஒரு பகுதியையும் சுருக்காமல் 1௦௦௦ பேருக்கு எப்படி நடிப்போமோ அப்படியே உண்மையாக நடித்து முடித்தோம்
என்ன இருந்தாலும் அந்த ஒரு ரசிகர் காசு கொடுத்து நாடகம் பார்க்க வந்தவர் அல்லவா? ஒரே ஒரு ரசிகர் பார்க்க நாடகம் போட்டவன் என்று guinness world ரெகார்ட் எதாவது இருக்கிறதா???
நாடகம் இடைவேளை வரை வந்து விட்டது ஆனால் பணம் வந்து சேரவில்லை கேட்டு அனுப்பினேன்
collection ஆகவில்லை ஆனவுடன் தந்து விடுகிறோம் என்றார்கள்
தொடர்ந்து நம்பிக்கையுடன் நாடகத்தை நடத்தி முடித்தோம் அப்போதும் பணம் வந்து சேரவில்லை நான் நேராக பொருட்காட்சி அலுவலகம் சென்றேன்
உங்க பணம்தான் தயார் செய்து கொண்டிருக்கிறோம் என்றார்கள்
மேஜை மேல் ஒரு ரூபாய் ரெண்டு ருபாய் 5 ரூபாய் என நோட்டுகளும் காசுகளும் குவிந்து கிடந்தன
பக்கத்தில் ஒரு சிறிய மூட்டை அதனுள் காசுகள் கட்டி வைக்கப்பட்டிருந்தன அந்த பொற்கிழியை எடுத்து என்னிடம் கொடுத்து உங்கள் பணம் 1ரூபாய் 2 ரூபாய் காசுகளாக இந்த பையில் இருக்கிறது எண்ணிக்கொள்ளுங்கள் என்றார்கள்
அதனுள் கொஞ்சம் 1௦ ரூபாய் 2௦ ரூபாய் நோட்டுகள் இருந்தது கொஞ்சம் ஆறுதல்.
நாடகத்திற்கு இந்த 2௦ நுற்றாண்டில் மூட்டையில் 3௦௦௦ ரூபாய் பெற்ற முதல் நாடகக்காரன் நானாகத்தான் இருப்பேன்
எல்லாம் கவுன்டரில் டிக்கெட்விற்ற காசு போலும்
கோவில்பட்டி அல்லவா கொஞ்சம்
கடலைமிட்டாய்வாசனை அடித்தது
தூரத்தே சிலர் அப்பளம் சாப்பிட்டுகொண்டிருந்தார்கள்
இரவு மணி 2.