Tuesday, September 2, 2014

நாடக அனுபவங்கள் 6ம் பகுதி




மறு நாள் கலையில் நான்கு மணிக்கெல்லாம் எழுந்து அந்த குளிரில் கூட சித்ராவதி ஆற்றுக்கு சென்று குளித்தோம் மிகப்பெரிய கழிவறை என்று சொல்ல கூடிய திறந்த வெளி கழிவறைதான் பழக்கமில்லை ஆயினும் இப்படி ஒரு அனுபவம் வித்தியாசமாக இருந்தது

காலையில் நகர சங்கீர்த்தனத்தில் கலந்து கொண்டு பாபாவின் அறை என்று சொல்ல கூடிய ஒரு அறையின் முன்பு நாங்கள் எல்லோரும் அமர்ந்தோம்

பாபா வந்து எங்களை சந்திப்பாரென்று கூறினார்கள் நானும் ரகுவும் வாசுவும் கொஞ்சம் பயத்துடனேதான் அமர்ந்திருந்தோம்

கதவு திறந்தது சிகப்பு அங்கியில் பாபா புன்னைகையுடன் வெளியே வந்தார் எங்கள் எல்லோரையும் ஒரு நோட்டம் விட்டுவிட்டு அந்த நாற்பது பேரில் குறிப்பிட்ட ஒரு பதினைந்து பேரை மாட்டும் உள்ளே அழைத்தார் அதில் நாங்கள் மூவரும் அடக்கம்

உடல் நடுங்கியது

என்ன மாயம் செய்வாரோ என்ன தண்டபையோ என பயந்துகொண்டே உள்ளே சென்று அமர்ந்தோம்

பாபா உள்ளே வந்து கதவை மூடி தாழிட்ட்டு ஒரு sofa ல் அமர எங்கள் எல்லோரையும் ஒரு பார்வை கனிவுடன் பார்த்தார்
நாராயணசாமி சார் எல்லோரையும் அறிமுகம் செய்து வைத்தார்
(தேவையே இல்லை)

பின்னர் பாபா தன்னுடைய முன் பிறவி கதை என்று சொல்லி ஷீரடி பாபாவின் கதை உங்களுக்கு சொல்கிறேன் என்று ஆரம்பித்து கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் முற்பிறவி பாபா பற்றி கூறினார்
இது வரையில் யாருமே சொல்லாத ஒரு கதையாக அது இருந்தது

ஷிர்டி பாபா வின் இளமைப்பருவம் யாருக்குமே தெரியாது
ஷிர்டி பாபா சிவா பெருமானின் அவதாரம் என்றும் அவர் தேவகிரியம்மா என்ற ஹிந்து பெண்ணின் வயிற்றில் உதித்தவர் என்றும் அவரும் அவர் கணவனும் காட்டில் சென்று கொண்டிருக்கையில் குழந்தையை பெற்று விட்டு சந்யாச வாழ்க்கையை மேற்கொண்டு அந்த இளம் குழந்தையை காட்டிலேயே விட்டு விட்டு சென்று விடுகின்றனர்

பின்னர் அந்த குழந்தை ஒரு முகமதியரால் வளர்க்கப்பட்டு சிறுவனாக ஷீரடி அடைகின்றார்

அதன் பின்னர் எல்லோருக்கும் தெரிந்த கதைதான்
நான் ஏன் இந்த கதையை இங்கே குறிப்பிடுகின்றேன் என்றால்............

இதன் பிறகு சுமார் 4௦ ஆண்டுகளுக்கு பிறகு நான் என்னுடைய அடுத்த ஒலிப்புத்தகம் எது வென யோசிக்கும் போது ஒரு நாள் நாடக நடிகரும் எழுத்தாளருமான வாத்யார் ராமன் அவர்கள் வீட்டிற்கு சென்றேன்

என் பஜாஜ் பிளாட்டினாவில் போய் கொண்டிருக்கும்போது எனக்கு திடிரென ஒரு எண்ணம் ஏன் ஷிர்டி சாய் கதையை ஒரு ஒலிப்புத்தகமாக கொண்டு வரக்கூடாது என்று எண்ணினேன்

ராமன் வீட்டை அடைந்ததும் நாங்கள் வேறு எதை எதை பற்றியோ பேசிக்கொண்டிருந்தோம்

புறப்படும் பொது ராமன், உனக்கு ஒரு புத்த்தகம் தரவேண்டும் என்று சொல்லி உள்ளிருந்து ஒரு புத்தகம் கொண்டு வந்து கொடுத்தார் அது வேறு எதுவும் இல்லை

வாத்யார் ராமன் எழுதிய ஷிர்டி சாய் பாபா வின் வாழ்கை சரித்திரம்

எனக்கு எதுவுமே தோன்ற வில்லை உடனடியாக என்னுடைய அடுத்து ஒலிப்புத்தகம் இதுதான் சார் என்று சொன்னேன்

புத்தகத்தை பிரட்டி முதல் அத்தியாயத்தை படித்ததும் என் கண்களையே என்னால் நம்ப முடியவில்ல

பாபா 4௦ வருடங்களுகு முன்னால் எதை எங்களுக்கு மட்டும் தனியாக சொன்னாரோ அதே கதை அப்படியே அதே வார்த்தைகளுடன் எழுதியிருந்தார் ராமன்

ஷிர்டி சாயின் பிறப்பை பற்றிய அதே சரித்திரம் ஒரு சம்பவம் கூட மாறவில்லை

சாய் பிறந்து காட்டிலே விடப்பட்ட வரலாறு தேவகிரி அம்மாவுக்கு சிவபெருமானும் பார்வதி தேவியும் வயதானவர்கள்ளக காட்சி தந்து அவர் வீடடில் உணவு அருந்தியது கனவிலே வந்து சொன்னது அவர் வயிற்றிலே உதித்தது காட்டிலே விடப்பட்டது என எந்த சம்பவமும் பாபா அன்று சொன்னது போலவே எழுதப்பட்டு இருந்தது

ராமன் அந்த அத்தியாயத்தை முடிக்கும் போது இந்த சம்பவங்கள் கற்பனைபோல தோன்றினாலும் சத்ய சாய்பாபா போன்ற ஒரு மகானின் வாயிலிருந்து வந்ததால் இதை வெறும் கற்பனை என்று ஒதுக்கிவிட முடியாது என்று எழுதி இருந்தார்

எனக்கு ஒன்றும் அப்போது புரியவில்லை என்னையே நான் இது நிஜமா என்று கிள்ளிப்பார்த்துக்கொண்டேன்

இப்போது புட்டபர்த்திக்கு 1968 ற்கு வருவோம்

பாபா கதை முடிந்தவுடன் எல்லோரையும் ஆசிர்வதித்தார்

ஒரு மோதிரத்தை வரவழைத்து நாராயண சாமின் கை விரலில் மாட்ட பல வருஷங்களாக மடங்காத அந்த விரல் அன்று மடங்கி நிமிர்ந்தது பெரியஆச்சர்யம்

அத்தோடு முடியவில்ல தலையை தடவிய ரகுவிற்கு கழுத்தில் மாட்டிக்கொள்ள ஒரு பெரிய டாலர்

அவரைப் பற்றி அவதுறாக பேசிய வாசுவுக்கு ஒரு அழகிய வெள்ளி மோதிரம்

எனக்கு எதுவும் தரவில்லை என்ற வருத்தம் எனக்கும் இன்றும் உண்டு

இத்தோடு நின்றததா அந்த பதினைந்து பேரில் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் தனியாக உள் அறையில் நேர்காணல்

அந்த சிலரில் அடியேனும் அடக்கம்

உள்ளே அழைத்து அவர் முன்னால் நிற்கையில் பேச்சு வரவில்லை

கண் இமைக்க வில்லை

அது என்ன மாயமோ மந்திர சக்தியோ தெரியவில்லை
கண்கள் ஆறாக நீரை பெருக்க தேம்பி தேம்பி தான் அழ முடிந்தது

என்ன வேண்டும் என்றார் கேட்க துணிவில்லை

அப்பாவுக்கு உடம்பு நலம் பெற வேண்டுமென்றேன்

நூற்று கணக்கான விபூதி பொட்டலங்களை எதுத்து கைநிறைய அள்ளி கொடுத்து அனுப்பினார்

கண்ணிற் பெருக வெளியே வந்தேன்

அடுத்து ரகுவுக்கும் வாசுவுக்கும் உள்ளே அழைப்பு என்ன நடந்ததோ தெரியாது

புட்டபர்த்டியிளிருந்து சுப்ரமண்யம் சுப்ரம்னண்யம் ஷண்முகநாத சுப்ரமன்த்யம் என்ற பாடல் பாபாவின் குரலில் கணிரென்று ஒலித்துகொண்டிருக்க புறப்பட்டோம்

பஸ்ஸில் போகும்போது எல்லோரும் பஜன் பாடல்கள் பாட நாங்கள் முவரும் அதில் கலந்து கொண்டோம்!

பாபா கூறிய கதையை நாராயண சாமீ சார் நாடகமாக தயாரித்து வெளியிட்டார்

அதில் எனக்கு இரண்டு சிறிய பாத்திரங்கள் அதில் முக்கியமானது பாபாவின் படத்த்தை கையேலேயே வைத்துகொண்டிரும் நரசிம்ம சுவாமிஜியின் வயதான பாத்திரம்

திரும்பி வந்தவுடன் நண்பர்களுடன் பாபா மகிமை பேசியது சண்டை போட்டது அதற்கு பாபா அடுத்தமுறை தனிமையில் சந்தித்துபோது என்னை கண்டித்தது இதெல்லாம் இந்த கட்டுரைக்கு அவ்வளவு பொருத்தமாக இல்லை என்பதால் விரிவாக பேசவில்லை

நான் T tநகரில் தங்கி இருந்தபோது என் விட்டிற்கு எதிர் வீட்டில் சந்திரசேகர் என்று ஒரு நண்பன்

அவன் பின்னாளில் செட்டிநாடு CEMENTS ல் STENO வாக வேலை பார்த்தான்

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பரம விசிறி

நாங்கள் இருவரும் தினமும் விவித பாரதியில் ஒலிசித்திரங்கள் நாடகங்கள் கேட்டுக்கொண்டே அவர் நடிப்பை பெரிதும் சிலாகித்து பேசி மகிழ்வோம்

அவன் எனக்கு வெங்கடராமன் என்பவனை சோமசுந்தரம் பார்க்கில் அறிமுகம் செய்து வைத்தான்

வெங்கடராமன் கைரேகை. போட்டோ எடுப்பது கதை சொல்வது என பலகலை மன்னன்

எனக்கு அவனிடம் ஒரு பெரிய HERO WORSHIP ஏற்பட்டு விட்டது
நிறைய சிறுகதைகள் சொல்வான் எல்லாமே வித்தியாசமாக இருக்கும்

இவை சில ஆங்கில சிறுகதைகளிம்ன் தமிழாக்கம் என்று எனக்கு அப்போது தெரியாது ஏனென்றால் நான் கதை புத்தகம் படிப்பது அதுவும் ஆங்கில கதைப்புத்தகம் படிப்பது மிகவும் குறைவு NEUMEROLOGY சொல்வான்

இவனும் இவன் நண்பர்கள் சிலரும் சேர்ந்து EXPRESS DELIVERY என்று ஒரு நகைச்சுவை நாடகம் கிருஷ்ணா காண சபாவில் போட்டார்கள்

அதை பார்க்க போயிருந்தேன்
நாடக எழுத்தாளர் என்றால் போதுமே ஒட்டிக்கொண்டு வாய்ப்பு பெறலாமே என அவன் கூட ஒட்டிக்கொண்டேன்

தினமும் அவனை சந்திப்பது என பொழுது ஓடிக்கொண்டிருந்தது

இப்படி இருக்கும்போதுதான் எனக்கு என்னுடைய கல்லூரி HOSTELல் ஒரு நாடகம் போட சந்தர்ப்பம் கிடைத்தது

உடனே வெங்கடராமனை தேடி ஓடினேன்

மீண்டும் சந்திப்போம்




No comments:

Post a Comment