Saturday, October 18, 2014

அடுத்து மாரப்ப பூபதி
 
இவரை ஒரு மாலையில் NARAADA GANA SABHA உணவகத்தில் முதன் முதலில் பார்த்தேன் 

நான் எதோ ஒலிப்புத்தகம் பற்றி பேசிக்கொண்டிருக்க எதிரில் மசாலா தோசை சாப்பிட்டு கொண்டிருந்தவர் என் பேச்சில் கலந்து கொண்டார் 
இவர் எடுத்த சில குறும்படங்களை அடுத்த முறை சரவன பவன் ஹோட்டலில் சந்தித்து கொடுத்தார் 

நன்றாக செய்திருந்தார் இவரை பார்த்திபன் கனவு ஒலிப்புத்தகத்தில் பங்கு பெற அழைத்தேன் 

இவர் குரல் அருமையாக இருந்தததால் ஒரு VOICE டெஸ்ட் எடுத்துவிட்டு இவரை நரசிம்ம பல்லவர் என்றேன் 

ஒரு நாள் ரெகார்டிங்கு ம் போனோம் இவரும் குந்தவியும் பேசும் காட்சிதான் நன்றாக நடித்திருந்தார் ஆனால் வேறு சில காரணங்களுக்காக இவர் செய்த நரசிம்ம பல்லவர் வேடத்தை வேறு ஒருவர் செய்ய வேண்டி வந்தது 

இவரை இந்த PROJECT லிருந்து  விட்டு விட எனக்கு இஷ்டமில்லை ஒரு வித்தியாசமான குரல் வித்தியாசமான உச்சரிப்பு யோசித்தேன் 

இவர்தான் மரப்ப பூபதி என தீர்மானித்தேன் அவரும் மிக நிறைவாக வித்தியாசமாக செய்தார் 

வித்தியாசமான ஒரு அதிர்வு சிரிப்பு MODULATION etc இந்த ஒலிப்புத்தகத்தில் நிச்சயம் இந்த குரல் யார் என்று விசாரிக்கப்படுவார் தனது அருமையான நடிப்பினால் உங்களை கவரப்போகிறார் திரு LAWRENCE பிரபாகர் அவர்கள் நன்றி திரு LAWRENCE 

ஒரு வித்தியாசமான தைரியமான பெண்ண க்ல்குரல் தேவைப்பட்டது வள்ளி வேடத்திற்கு யார் யாரோ முயற்சி செய்தோம் 

கடைசியில் ப்பூங்குழலிதான் நினைவிற்கு வந்தாள்

 அந்த குரலை மிண்டும் உடனடியாக கொண்டு வரவேண்டாம் என்றுதான் நினைத்தேன் 
ஆனால் முடியவில்லை 

இவரது வார்த்தைகளை உச்சரிக்கும் அழுத்தமும் குரலும் வள்ளிக்கு மிகப்பொருத்தமாக இருந்ததால் இவர்தான் வள்ளி என்று தீர்மானித்து அழைத்தோம் 

இவர் RAILWAY ல் நல்ல பதவியில் இருப்பதால் கொஞ்சம் விடுமுறை கிடைப்பது கடினம் இருந்தும் தனக்கு கிடைத்த் நேரத்தில் வந்திருந்து எந்த இடைஞ்சலும் இல்லாமல் ரெகார்டிங் ஐ முடித்து விட்டு போவார் 

ரொம்ப வேகமாக கற்றுக்கொள்வார் 

என்ன சிரிக்க சொன்னால் அழ சொன்னால் கொஞ்சம் நேரமாகும்  மற்றபடி வள்ளியாகவே வாழ்ந்தார் நன்றி ஸ்ரீவித்யா பத்மநாபான் 

இவருடன் பொன்னனாக இணைந்தவர் என் இனிய நண்பர் PT ரமேஷ் ரொம்ப சீனியர் நாடக நடிகர் 

இப்பவும் பல நாடகங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார் ஒரு சிறந்த நடிகர் இவரை முதலில் பொன்னியின் செல்வனில் பல சிறிய பாத்திரங்களை செய்ய வைத்திருந்தேன் பொன்னனா விக்கிரமணா என்ற சந்தேகம் வந்தபோது இவரை விட இளைஞர் ஒருவர் அந்த குரலுக்கு பொருத்தமாக இருந்ததால் பொன்னனாக மாறியவர் 

இவரும் வள்ளியும் பேசும் இடங்களில் இவரது மென்மையும் வள்ளியின் அதட்டலும் மிக நன்றாக இருந்தது 

இன்றும் இவரை பல மேடை நாடகங்களில் நீங்கள் பார்க்கலாம் நன்றி ரமேஷ் 

விக்கிரமன் 

இது கதாநாயகன் பாத்திரம் காதல் விரம் சோகம் பாசம் எல்லாம் வேண்டும் 
நான் ஒருமுறை CENTRAL EXCISE DEPARTMENT ல் ஒரு நாடக போட்டிக்கு JUDGE ஆக போனபோது இவர் ஒரு நாடகத்தை இயக்கியிருந்தார் நல்ல நாடகம் அது 

எங்களுக்கெல்லாம் உங்கள் ஒலிப்புத்தகங்களில் வாய்ப்பு உண்ட சார் என்றார் நிச்சயம் உண்டு வாங்கள் என்றேன் 

ஒரு முறை வாசித்து காண்பித்தார் 

விக்கரமன் பாத்திரம் செய்யுங்கள் என்றேன் இவர் இந்த மாதிரி RECORDING ற்கு புதிது போகப்போக நன்கு புரிந்து கொண்டார் 

இவர் நடிக்கு போதெல்லாம் ஒரு மிகப்பிரபலமான நடிகர் நமக்கு நினைவிற்கு வருவார் அது நினைத்து செய்ததில்லை இயற்கையாகவே அவர் MODULATION அப்படி அமைந்து விட்டது 

ஒரு நல்ல நடிகருக்கான அறிகுறிகள் இவரிடம் நிறைய உண்டு நன்றி JERRY 

இதில் கபால பைரவராக நடிக்க ஒரு வித்தியாசமான குரல் அதும் ஒரு பேய்க்குரல் எல்லோரும் பயப்படும்படியான குரல் தேவைப்பட்டது இரண்டே காட்சிகள்தான் என் இனிய நண்பர் ரமேஷ் இவர் ஒரு சீரியல் நடிகர் மேடை நடிகர் DUBBING ARTISTE என பல குரல் வல்லுநர் 
SPOKEN ENGLISH வகுப்பு எடுப்பவர் பிறருக்கு MODULATION சொல்லித்தருபவர் 
இவரிடம் ஒரு விண்ணப்பம் வைத்துகொண்டு அழைத்தேன் மகிழ்ச்சியாக கலந்து கொண்டார் ஒரே நாள் STUDIO வே அதிர்ந்தது அக்கம் பக்கம் குரல் கேட்டு என்ன வென்றார்கள் 

அப்படி இரண்டு காட்சிகளில் அசத்தினார் இவர் யாரென்று சொன்னால் அது ஒரு கூடுதல் தகவல் இவர் எனது பொன்னியின் செல்வன் ஒலிப்புத்தகத்தில் ஆழ்வர்கடியானாக வாழ்ந்தவர் நன்றி ரமேஷ்

இந்த புத்தகத்தில் ஒரு பெரிய SUSPENSE ஒன்று உள்ளது அதை இப்போது நான் வெளிப்படுத்த விரும்பவில்லை படித்தவர்களுக்கு தெரியும். இந்த SUSPENSE வெளி வந்து விடக்கூடாதே என்பதற்காக நானும் ஒரு உத்தியை கையாண்டு இருக்கிறேன் அதை மக்கள் எப்படி வரவேற்கிறார்கள் என்று பின்னால் பார்ப்போம் 

அடுத்து நரசிம்ம பலவர் 

ஒரு கம்பீரமான குரல் ஒரு பாசமான அப்பா எதிர்கால கனவுகளுடன் கூடியா ஒரு கலைஞன் ஒரு வேஷதாரி ஒரு மிகச்சிறந்த அரசன் எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு அன்பான காதலன் இது கல்கி அவர்களின் சித்தரிப்பு 

இதாற்கு பொருத்தமாகக் அமைந்தார் திரு NETHAJI அவர்கள் பல வெவ்வேறு DIMENSION களில் அமைந்த காட்சிகளில் அருமையாக செய்திருந்தார் நன்றி NETHAJI

மற்றவர்களைப் பற்றி அடுத்த பதிவில்

பார்த்திபன் கனவு ஒலிப்புத்தகம் வெளியிட்டு விழா பேச நினைத்ததும் பேச முடியாமல் போனதும் நன்றி நவிலல் 

பகுதி மூன்று 

பகுதி இரண்டு

இப்போது இதில் நடித்தவர்கள் ஒவ்வொருவரைப்பற்றியும் நான் அவசியம் கூறியே ஆகவேண்டும் யாரிலிருந்து ஆரம்பிப்பது
மேடையாக இருந்தால் வெளிச்சம் இருந்தால் ஒவ்வொருவராக பார்த்து பேசிவிடுவேன்
இங்கே என் முன்னால் இருப்பது ஒரு சிறிய திரை
முதலில் நான் ஆசிர்வாதம் வாங்குவதாக ஆரம்பித்தால் நலம்
எனக்கும் இவருக்கும் முதல் சந்திப்பே ஒரு வெளிவராத படத்தின் படப்பிடிப்பில் காரைக்காலில் அமைந்தது
அப்புறம் இபோதுதான் சந்திக்கின்றேன
பார்த்திபன் கனவு ஒலிப்புத்தகத்திற்கு நடிகர்கள் தவை என்றதும் முதல் விண்ணப்பமாக வந்தது இவரிடமிருந்துதான்
என்ன பாக்கியம்
எந்த சின்ன வேடமானாலும் பரவாயில்லை நான் அதில் இருக்க வேண்டுமென்றார்
எந்த திறமையான கலைஞன் இதை சொல்லுவான்?
அதுவும் நான் தயாரிப்பது ஒலிப்புத்தகம்தான் முகம் கூட காட்ட முடியாது
நாவலில் ஒரு வீரக்கிழவன் (வயது >7௦) பாத்திரம் வரும் அருமையான கதாப்பத்திரம் நிறைய வசனங்கள் அந்த வயதுக்கு ஆள் கண்டுபிடிப்பது மிகவும் கஷ்டம்
வயதும் தெரிய வேண்டும்
உச்சரிப்பு நடிப்பு இரண்டும் வேண்டும்
வீரமும் இருக்க வேண்டும்
நாவல் படித்தவர்களுக்கு அது புரியும்
தேடிக்கொண்டிருக்கும்போது கல்கி அவர்கள் இதோ இருக்கிறார் என்றார்
அவர்பாத்திரம் வருவதற்கு சற்று கால தாமதம் ஆனது
அவர் சுஜாதாவின் நாடகம் ஒன்றில் BUSY ஆக இருந்தார்
ஒரு நாள் STUDIO போட்டுவிட்டு சார் தேதி என்றேன்
பாண்டிச்சேரியில் நாடகம் என்றார்
அன்று மற்ற எல்லோரும் வந்துவிடுகிறார்கள் வேறு ARTISTE போடலாமே என்பதுதான் ஒரு தயாரிப்பாளரின் அடுத்த சிந்தனை
அதன் பிறகு 15 நாட்களுக்கு வேலை இல்லை
நல்ல வேளை நான் அந்த தவறை செய்ய வில்லை
காத்திருக்க முடிவு செய்தேன் ஒரு மாதம் சென்றது எல்லா வேலைகளையும் முடித்துகொண்டு
அவருடைய அத்தியாயம் ஒரு நாள் ஏற்பாடு செய்துகொண்டு அழைத்தேன்
காத்திருந்தது வீண்போகவில்லை
வந்தது பார்த்தோம்
மைக் முன்னால் அம்ர்த்தது பார்த்தோம்
நான்கு அத்த்தியயங்கள் முடிந்தது உணர்ந்தோம்
அவ்வளவுதான்
RETAKE இல்லை BLOW இல்லை MODULATION சொல்லித்தரவேண்டிய அவசியம் இல்லை
சார் HATS OFF TO YOU
என் ASSISTANT க்கும் எடிடருக்கும் அதிர்ச்சி
ஒரு வயதானவரைக் கொண்டு வந்து மைக் முன்னால் உட்காரவைத்து ரெகார்டிங் போகும் என்னை ஒரு மாதிரி பார்த்தவர்கள் ஆயிற்றே
வீரபத்திர ஆசாரியை கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்திய இவரிடம் நான் ஆசீர்வாதம் வாங்குவதை விட எப்படி நன்றி என்று ஒரு வார்த்தையுடன் முடித்துக்கொள்வது
அது நியாயமாகுமா??? ரெகார்டிங் முடிந்தவுடன் காசோலை நீட்டினேன் வாங்க மறுத்துவிட்டார்
கல்கியின் படைப்புக்கு என் சிறிய காணிக்கை என்றார் இன்னும் அந்த காசோலையை பத்திரமாக வைத்திருக்கிறேன்
ஒரு வேளை அதை கொடுத்திருந்தால் அவர் செய்த உதவியை ரொம்பவே கொச்சை படுத்டியிருப்பெனோ தெரியவில்லை
ஐயா பாரதி மணி அவர்களே உங்கள் பாதங்களில் நமஸ்கரித்து எழுகிறேன்
ஆசி கூறுங்கள்
நன்றி நன்றி நன்றி
அடுத்து இவர் ஒரு பண்பட்ட நாடக நடிகர்
அவரை கேளுங்கள் நாடக நடிகன் புன்பட்டவனாகத்தன் இருப்பான்
பண்பட்ட என்பதெல்லாம் வெத்து பேச்சு என்பார்
எனக்கும் இதில் உடன்பாடு உண்டு இருந்தாலும் இப்போதைல்க்கு பண்பட்ட என்றே வைத்துக்கொள்வோம்
இவர் முதன் முதலில் எனது சிவகாமியின் சபதம் ஒலிப்புத்தகத்தில் நடித்தார்
அப்போதே இவர் கறிகாய் வாங்க கடைக்குப்போனால் ஒரு கிலோ கத்திரிக்காய் என்றதும் இவரது குரலைகேட்டு ஒரு பெண் ஐயா மகேந்திரபல்லவரே என்றது நிஜம்
எனக்கே ஆச்சர்யம் ஒரு ஒலிப்புத்தகத்தின் குரலைக்கேட்டு கூட மக்கள் அடையாளம் கண்டு கொள்வார்களா
கண்டு கொண்டார்கள் அது நிஜம்
பொன்னியின் செல்வனில் இவர் சுந்தர சோழராக வந்த போது மன்னிக்கவும் வாழ்ந்தபோது இவர் குரலை எங்கே கேட்டாலும் சுந்தரசோழர் என அழைத்தவர்கள் உண்டு
அப்படிப்பட்ட குரலுக்கு சொந்தக்காரர்
என் இனிய நண்பர்
அவரை முதலில் வேண்டாமென்று ஒதுக்கிவைத்தவன்
பின்னர் அழைத்தேன் ஐயா நீர்தான் சிவனாடியார் என்றேன்
சிவனடியாரை கண் முன்னால் கொண்டுவந்து நிறுந்த்துங்கள் என்றேன்
செய்து காட்டிவிட்டார் என் இனிய நண்பர் SK ஜெயகுமார்
அவர்கள்
மிக்க நன்றி SKJ
எனது மூன்று ஒலிப்புத்தகங்களிலும் பங்கு கொண்ட ஒரே நடிகர் இவர் தான்

Thursday, October 16, 2014

தெய்வத்தின் ஆசி

விருதுகள் பாராட்டுகள் சில பெற்றிருந்தாலும் சமிபத்தில் கிடைத்த ஒரு கொரவம் என் 4௦ வருட உழைப்பு வீண் போகவில்லை என்ற மிகப்பெரிய சந்தோஷம் ஏற்பட வைத்தது
இந்த வருட நவராத்திரி விழாவில் நெமிலி பாலா பீடம் எனக்கு பாலா ரத்னா என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்தது
சென்ற சில வருடங்களாக நெமிலி பாலாவை தொடர்ந்து தரிசித்து வருகிறேன்
குழந்தை பாலாவும் என்னை வழிநடத்தி வருகிறாள்
கவிஞரும் பாலாபீடாதிபதியுமான எழில் மணியுடன் நான்

Wednesday, October 15, 2014

பார்த்திபன் கனவு ஒலிப்புத்தகம் பற்றி திரு RVS அவர்கள் எழுதிய விமர்சனம் 

காவேரி தீரம் அமைதி கொண்டு வி்ளங்கிற்று என்று ஒருவர் நிதானமாகக் கதை சொல்ல ஆரம்பிக்கிறார். பின்னணியில் சலசலவென்று ஆற்றுநீரோடும் ஓசை செவியை நனைக்கிறது. எங்கோ மிதந்துகொண்டிருக்கிறேன். கண் திறந்திருக்க செவிக்குள் புகும் கதையின் காட்சிகள் கருப்பு வெள்ளையாகத் தெரிகிறது. சண்டை போடுகிறார்கள். டிங்...க்ளிங்..களங்.. என்று வாளும் வேலும் மோதுகிறது.
ரௌத்ராகாரமாகப் பேசுகிறார்கள். ராஜ குடும்பத்தின் மேல் விசுவாசம் கொண்ட சிவனடியார் ஒருவர் நா தழுதழுக்க உணர்ச்சிவசப்படுகிறார். வீரபத்ர ஆசாரி வசனமாக நம் முன்னால் வந்து உட்கார்ந்துவிடுகிறார். போர் நடக்கும் காலத்தில் ஆசாரிகளின் பங்கைப் பற்றிப் பேசுகிறார். வள்ளியின் குரல் வெடுக் வெடுக்கென்ற மின்னலாய் வெட்டுகிறது. பொன்னன் பொழுதுதோறும் சளக்பளக்கென்று காவிரியில் படகுதள்ளுகிறான். மாரப்பபூபதி குல சத்ரு. அலட்சியக் குரலில் நயவஞ்சகம் தொணிக்கிறது.

வயது முதிர்ந்த ராஜ குடும்பத்து ஸ்திரீ வரும் காட்சியிலெல்லாம் ”மகனே...மகனே...” என்று உருகுகிறார்கள். கதாநாயகனைக் கட்டிக் கப்பலில் ஏற்றி நாடு கடத்துகிறார்கள். நீலக்கடலில் பச்சைத் திட்டாய் செண்பகத் தீவு வார்த்தைகளில் தெரிகிறது. சோழர் குலத்து இளவரசன் விக்கிரமனைப் பல்லவ குல இளவரசி குந்தவி மகாப்ஸ் வரை துரத்தித் துரத்திக் காதலிக்கிறாள். ஹெஹ்ஹே... என்று அழகு காட்டி பரிகாசம் செய்கிறாள். தந்தையிடம் பாசத்தைப் பொழிகிறாள். மாரப்பனை மிரட்டுகிறாள். நவரசமும் குந்தவியின் குரலில்.
காட்டுவழியில் விநோதமான ஒலியெழுப்பி குள்ளனொருவன் வேடிக்கை செய்கிறான். குலை நடுங்குமாறு கத்துகிறான். அறுபத்து மூவரில் ஒருவரான பரஞ்சோதி அடிகள் சேனாதிபதியென்று உலா வருகிறார். இவர்கள் பேசுவதற்கு நடுநடுவே ஒருவர் ஆற்றொழுக்கு போல கதை சொல்கிறார். ம்.. நிச்சயமாக டக்டக்டக்...கென்ற குதிரையின் குளம்பொலிகளும் உண்டு.
ஒலி ரூபமாக குறுந்தகட்டில் வாழும் வீரபத்ர ஆசாரியான பாட்டையா Bharati Mani, குந்தவியாக குறுந்தட்டிலிருந்து தோன்றிய ஒலி ஹீரோயினி மதுரபாஷிணி Ananya Mahadevan, விசித்திரக் குள்ளனாக ஓலமிட்டு மிரட்டிய Haho Sirippananda மற்றும் துளிக்கூட பிசிறில்லாமல் அச்சு வடிவத்திற்கு உணர்வுப்பூர்வமான ஒலிவடிவம் கொடுத்த Bombay Kannan Kannanஅவர்களும் எனது ஸ்நேகிதர்கள்.
அமரர் கல்கியின் பார்த்திபன் கனவை பன்னிரெண்டு மணி நேர ஆடியோ புஸ்தக வட்டாக்கி வெளியிட்டிருக்கும் பாம்பே கண்ணன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். விற்பனையில் சரவெடியாய் சாதனை படைத்து அவரது கனவும் மெய்ப்பட வேண்டும்.
நண்பர்களே! தீபாவளிக்கு பார்த்திபன் கனவு பரிசாகட்டுமே!!
‪#‎பார்த்திபன்_கனவு‬

...

Tuesday, October 14, 2014

பார்த்திபன் கனவு ஒலிப்புத்தக விழா இனிதே நடை பெற்றது எல்லோரும் விழாவைபற்றி எழுதி நெகிழ வைத்துவிட்டார்கள் குறிப்பாக அனன்யா RVS சார் JR சார் போன்றவர்கள்
மேடையில் எனக்கும் பேச சந்தர்பம் கிடைத்தது ஆனால் நேரமின்மை காரனமாக என்னால் பேச நினைத்ததெல்லாம் பேச முடியாமல் போயிற்று குறிப்பாக என் ரெகார்டிங் அனுபவங்கள் மற்றும் பங்குக் பெற்ற குரல் வித்தககர்களைப் பற்றி.....
எனக்கு கொடுக்க பட்ட தலைப்பு நன்றி நவிலல் மற்றும் ஒலிப்புத்தகம் அறிமுகம் எல்லாவற்றையும் அசுர வேகத்தில் செய்து விட்டு சரியாக 9 மணிக்கு முடித்துக்கொண்டேன்
இப்போது நேரம் கிடைக்க விலாவாரியாக கலைஞர்களைப்ப்றி பேசி நன்றி தெரிவிக்கலாமென்று எண்ணுகிறேன் வந்திருந்த கூட்டத்தை விட எனக்கு முகநூல் நண்பர்கள் அதிகம்
ஆகையால் இது சரியான முறையாக இருக்கும் என்று எனக்கு தோன்றுகிறது முதலில் குரல் தேடல்
6௦ க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பொன்னியின் செல்வன் ஒலிப்புத்தகத்தில் பங்கு பெற்றிருந்தாலும் அவர்களை இந்த முறை தவிர்த்து புதியவர்களை கொண்டுப் வரவேண்டும் என்று நினைத்தேன்
ஆனால் என்னால் அதை முழுமையாக செய்ய முடியாமற் போனது
சிலரை பயன்படுத்த வேண்டி இருந்தது
புதியவர்களை முக்கியமான பாத்திரங்களில் அறிமுகப்படுத்தினேன்
பின்னால் இவர்களையும் என் மற்ற ஒலிப்புத்தகங்களில் பயன்படுத்திகொள்ளலாம், மற்றும ஒரு VOICEBANK உருவாக்கலாம் என்ற எண்ணத்தில்தான்
இவர்களுக்கு இது முதல் முயற்சி
ஒலிப்புத்தகங்களில் பங்கு பெறுபவர்கள் குறிப்பாக கவனிக்க வேண்டுபவை சில
ஒன்று அவர்களின் உச்சிரிப்பு
நாடகமேடையில் உச்சரிப்பு கொஞ்சம் சரியாக இல்லை என்றால் கூட நடிப்பும் காட்சியும் அதை சமாளித்துவிடும் இங்கு அப்படி அல்ல உங்கள் முன்னால் இருக்கும் மைக் என்ற கருவி கம்ப்யூட்டர் போல மிகவும் SENSITIVE
அது உங்கள் ஒவ்வொரு எழுத்தின் உச்சரிப்பையும் காட்டிகொடுத்துவிடும்.
அடுத்தது உங்கள் கையில் உள்ள புத்தகம் கொஞ்சம் அலட்சியமாக இருந்தால்அது மைக் மேல் பட்டு ஓசை எழுப்பும்
அடுத்து உங்கள் நாக்கு
ஒவ்வொரு வார்த்தைக்கும் இடையில் அது ஏற்படுத்தும் சத்தம் உங்களுக்கு சாதரணமாக கேட்காது
ஆனால் மைக்குக்கு கேட்கும்
அது உங்கள் குரலை கேட்கும் பொது பல சந்தர்பங்களில் உங்கள் நிழல் போல வந்து உங்களை பாடாய் படுத்தும்
கொஞ்சம் தன்ணீர் குடித்து கொள்ளவேண்டும்
நாக்கு உலர்வதை தடுத்து கொள்ள வேண்டும் ஒவ்வொரு முறையும் வாயை மூடி திறப்பதை விட முடிந்தவரையில் திறந்த வாயாக உதடுகளை முடி திறக்காமல் அந்தந்த TAKE களை முடிப்பது நீங்கள் TAKE வாங்காமல் இருக்க உதவும்
அடுத்து ரெகார்டிங் போது அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தைகள் PAPER NOISE BLOW என்பவை கையில் இருக்கும் ஸ்க்ரிப்டை TAKEன் போது மைக்கில் கேட்கும்படியாக திருப்பக்கூடாது
இது சரித்திர நாடகங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியவை
அடுத்து இந்த BLOW இதற்கு எவ்வளவு பெரிய நடிகரும்ம் விதிவிலக்கல்ல யாரையும் பாரபட்சமில்லாமல் தாக்ககூடியது.
இதன் முக்கிய காரணகர்த்தா தமிழில் உள்ள ப என்ற எழுத்து மற்றும் சில
இப்படிப்பட்ட வார்த்தைகள் வரும் பொது MIKE லிருந்து சற்றே விலகி நடித்திர்களானால் இந்தத் தவறு ஏற்படாது இதற்கு கொஞ்சம் அனுபவம் முக்கியம்
ஒலிப்புத்தகத்டில் நடிக்கும் போது நீங்கள் வசனங்களி படிக்க வில்லை நடிக்கிரிர்கள் என்பதை தெளிவாக புரிந்து கொண்டு நடித்துக்கொண்டே உணர்சிபூர்வமாக படித்திர்களானால் நீங்கள் அந்த பாத்திரத்திற்குள் போவிர்கள் இல்லையென்றால்..... பாவம் நீங்கள்?!!
சமுக கதைகளுக்கும் சரித்திரகதைகளுக்கும் வசனத்தில் தான் வித்தியாசமே தவிர உணர்வுகளில் இல்லை
அடுத்து என்னிடம் நிறைய செய்தி வாசிப்பாளர்கள் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் வருகிறார்கள் அவர்களில் சிலருக்கு உச்சரிப்பு மிக நன்றாக உள்ளது ஆனால் படிக்கும் பொது அவர்கள் செய்தி வசிப்பிலிருந்தோ நிகழ்ச்சி தொகுப்பிலிருந்தோ வெளிவருவதில்லை
நரசிம்ம பல்லவரும வந்தியதேவனும் குந்தவையும் பழுவேட்டரையர்களும் செய்தி வாசித்தால் எப்படி இருக்கும்
அப்படி இருந்தது அவர்கள் MODULATION
இதை சரி செய்வதற்கு எனக்கு நேரமில்லை
அவர்கள் கொஞ்சம் HOMEWORK செய்து கொண்டு வந்தால் நிச்சயம் அவர்களை மாற்றி பயன்படுத்திக்கொள்வேன்
அடுத்து இந்த நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் இவர்கள் வேகத்துக்கும் இவர்கள் தமிழுக்கும் என்னால் ஈடு கொடுக்க முடியவில்லை
அதனால் பெரும்பாலனவர்களை என்னால் பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை இருந்தும் நல்ல குரல்களை அவர்களிடமும் தேடிக்கொண்டிருக்கிறேன்
அவர்கள் என்னிடம் கொஞ்சம் ள ல ழ ஸ ஷ போன்றவற்றின் உச்சரிப்பை ஒரு வகுப்பாக கற்றுக்கொண்டால் நலம்
இது என் அனுபவங்கள் மற்றும் கற்றுக்கொண்ட பாடம்
கொஞ்சம் வறட்சியாக இருந்தாலும் அன்ன பட்சிபோல தேவையானவர்ரை மட்டும் எடுத்துகொள்ளுங்கள்
இனி அடுத்த பதிவில் ஒவ்வொரு நடிக நடிகரைப்பற்றி அறிமுகப்படுத்தி நன்றி நவிலலாம் என எண்ணுகிறேன்
தொடரும்

Friday, October 10, 2014

PONNIYIN SELVAN AUDIO BOOK CLIMAX SONG 

வந்தியத்தேவன் கந்தமாறனை நோக்கினான். "ஆம், நண்பா! மணிமேகலை 

தான் யாழிசையுடன் சேர்ந்து பாடிக் கொண்டிருக்கிறாள்!" என்றான். 

படகிலிருந்து அவர்கள் இறங்கினார்கள். மணிமேகலை பாடுவது என்ன பாடல் என்பதை வந்தியத்தேவன் கவனமாகக் காது கொடுத்துக் கேட்டான். 

முன்னொரு சமயம் அதே நீராழி மண்டபத்தில் அவள் யாழிசையுடன் பாடிய அதே பாடல்தான்

.https://soundcloud.com/bombay-kannan-kannan/iniya-punal-sad-song

This is another song from Ponniyin selvan Audio Book This is the song in the climax chapter of the novel This song is written by Kalki and Music composed by Sathyaseelan This song is sung by Shravanti

Wednesday, October 8, 2014

பொன்னியின் செல்வன் ஒலிப்புத்தகத்தில் இடம் பெற்ற பாடல் மணிமேகலை பாடும் பாடல் இது

https://soundcloud.com/bombay-kannan-kannan/iniya-punal-happy-song

Monday, October 6, 2014

Desikan Narayanan review on Parthiban Kanavu 

பார்த்திபன் கனவு ஒலிப் புத்தகத்தை இரண்டு வாரம் முன் காரில் கேட்டு முடித்தேன். பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் ஒலிப்புத்தகத்தை உருவாக்கியவருக்கு பார்த்திபன் கனவு பெரிய விஷயம் இல்லை.
ஒலிப் புத்தகம் என்றால் ஒருவர் புத்தகத்தை நமக்கு படித்து காண்பிப்பார். ஆனால் பாம்பே கண்ணன் செய்வது ஒலிப்புத்தகம் அல்ல, ஒலிச்சித்திரம். பலரின் உழைப்பு அதில் அடங்கியுள்ளது. எல்லா இடங்களிலும் நண்பர் பாம்பே கண்ணன் உழைப்பு தனியாக தெரிகிறது. அவருக்கு என் வாழ்த்துகள்.
சிவகாமியின் சபதம் ஒலிப்புத்தகத்தில் என்னை கவர்ந்தவர் மகேந்திரபல்லவர் SK ஜெயகுமார் இதில் சிவனடியாராக பலம் சேர்த்துள்ளார். அனுபவித்து பேசியுள்ளார். நரசிம்ம பல்லவராக இவரை பேசவிடாமல், நேதாஜியை தேர்வு செய்தது புத்திசாலித்தனம்.
அடுத்து இந்த புத்தகத்துக்கு பலம் சேர்ப்பவர் வள்ளியாக ஸ்ரீவித்யா பத்மநாபான் ( பொன்னியின் செல்வனில் பூங்குழலி இவர் தான் ). உச்சரிப்பு, மாடுலேஷன் எல்லாம் பிறவியில் வர வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டு. முக்கிய பார்த்திரமான குந்தவை பாத்திரத்தில் Ananya Mahadevan அனன்யா மகாதேவன் (ஆரம்பத்தில் கொஞ்சம் ஸ்டார்டிங் டிரபிள் இருந்தாலும்:-) ) அருமையாக செய்துள்ளார். பாராட்டுக்கள். அடுத்த ஒலிப்புத்தகத்தில் இவர் வேறு லெவலுக்கு போய்விடுவார் என்று நினைக்கிறேன்.
அருள்மொழியாக பேசியவரின் உச்சரிப்பும், பார்த்திபன் கனவு அட்டைப்படமும் இன்னும் நன்றாக இருந்திருக்கலாம் என்பது என் தாழ்மையான அபிப்பிராயம்.
200ரூ ஒரு மாய உலகிற்கு அழைத்துச் சென்ற பாம்பே கண்ணன் குழுவிற்கு பாராட்டுக்களும் நன்றிகளும். வெளிநாடுகளில் ( ஏன் சென்னையில் கூட ) தமிழ் படிக்க தெரியாத குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் இதை சிபாரிசு செய்கிறேன்.
பிகு: மற்றவர்களை பற்றி எழுதவில்லை என்பதால் அவர்கள் நன்றாக செய்யவில்லை என்று அர்த்தம் இல்லை. ஒலிப்புத்தகம் நன்றாக வந்ததற்கு காரணம் Team Work !.

Sunday, October 5, 2014

Parthiban Kanavu Audio Book in Tamil Trailers

https://www.youtube.com/watch?v=kZQfS59Ua4U
https://www.youtube.com/watch?v=kZQfS59Ua4U

https://www.youtube.com/watch?v=kZQfS59Ua4U
https://www.youtube.com/watch?v=vQb-S8JNuQM

Friday, October 3, 2014

பார்த்திபன் கனவு ஒலிப்புத்தகம் பற்றி பாலாஜி நாகராஜன் அவர்கள் எழுதிய விமர்சனம் 

சென்ற வாரம் சனிக்கிழமை பார்த்திபன் கனவு ஒலிப் புத்தகம் வந்து சேர்ந்தது, அதற்கு சில நேரத்திற்கு முன்பு தான் ஆஸ்பத்திரியில் இருந்து திரும்பியிருந்தேன், புட் பாய்சன் மற்றும் குளிர் காய்ச்சல் ... இருந்தாலும் கொஞ்சம் கேட்கலாம்னு போட்டேன்.. மொத்தம் மூன்று பாகம், 78 ஒலிப் பேழைகள். கேட்க கேட்க கேட்டுக்கொண்டே இருக்க வைக்கும் சுவாரஸ்யம். முழுவதுமாக கேட்டு முடித்தது ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிக்கு. உடல் உபாதையையும் இந்த ஒலிப்பேழையின் சுவாரஸ்யமும் முழுவதுமாக கேட்டு முடித்துவிட்டேன்
எனக்கு பார்த்திபன் கனவில் மிகவும் பிடித்த கதாப்பாத்திரம் நரஸிமஹ பல்லவரும், பொன்னரும், வள்ளியும். இந்த ஒலிப்புத்தகத்தில் பங்குபெற்ற அனைவரது பங்களிப்பும் மிகவும் பாராட்டுக்குரியது. இதிலும் என்னுடைய ஆத்ம கதாபாத்திரங்களின் பங்களிப்பும் நன்றாக இருந்தது. இந்த ஒலிப்புத்தகம் மூலமாக மேலும் சில கதாப்பாத்திரம் எனக்கு பிடிக்க ஆரம்பித்தது, விக்கிரமசோழன் மற்றும் குந்தவி.
குந்தவிக்காக குரல் கொடுத்த Ananya Mahadevan குரலில் எப்போதும் ஓர் மழழை சாயல் இருப்பதாக எனக்குத் தோன்றும், இந்த கதாப்பாத்திரத்திற்கு அது அவருக்கு மிகவும் பொருத்தமாகவே இருந்தது. Bombay Kannan Kannan அவர்களுடைய திறமையான இயக்கம் மற்றும் குரல் தேர்வு, பார்த்திபன் கனவு படிப்பதை விட கேட்பதற்கு உங்கள் கற்பனைக் குதிரை இன்னமும் வேகமாக ஓட வைக்கும்.
மொத்ததில் மிகவும் அற்புதமான படைப்பு இன்னமும் மிக அற்புதமாக மெரூகட்டப்பட்டுள்ளது

பார்த்திபன் கனவு நாடகத்திலிருந்து மேலும் சில காட்சிகள்

பார்த்திபன் கனவு ஒலிப்புத்தகம் வெளியீட்டு விழா

 பார்த்திபன் கனவு ஒலிப்புத்தக வெளியிட்டு விழாவில் நடைபெற்ற நாடகத்தில் இருந்து சில காட்சிகள்
நான் இயக்கிய இந்த நாடகத்தில் மிகசிறப்பாக எலோரும் நடித்து கைதட்டலை பெற்றார்கள்
குறிப்பாக சூரஜ் அர்ச்சனா வெங்கட் ஸ்ரீகாந்த் போன்ற இளைஞகர்கள் அனுபவமிக்க நடிகர்களான ஆனந்த் ராம் முத்துகுமார் சபாபதி மோகன் முரளி இவர்களுடன் இணைந்து நடித்து 4௦ நிமிடத்தில் பார்த்திபன் கனவு கதாபாத்திரங்களை மேடையில் கொண்டு வந்தது மிகவும் மகிழ்ச்சியான நினைவு
ஒளிஅமைப்பு செய்த சேட்டா ரவி இசை அமைத்த குகபிரசாத் குமார் எல்லோருமே பாராட்டுக்குரியவர்கள்

எல்லோருக்கும் மேல் இதை தயாரிப்பதற்கு உறுதுணையாக இருந்து அயராமல் உழைத்த
PS ராஜா விற்கு நன்றி
எங்களுக்கு ஆதரவு அளித்த நல்லி அவர்களுக்கும் பிரம்ம கான சபா ரவி அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்