Monday, January 12, 2015

காலை மணி 8 2௦ மனைவியை கொண்டு விட வேளசேரி ரயில் நிலையத்திற்கு தினமும் செல்வது எனது வழக்கம்
அப்போதெல்லாம் நான் பார்க்கும் காட்சி மிக சுவாரஸ்யமான ஒன்றாக இருக்கும்
ஸ்டேஷனுக்குள் நுழையும் போதே இவர்கள் என் கண்ணில் பட்டு விடுகிறார்கள்
இவர்கள் நிலையத்திற்கு வெளியே படுத்திருப்பார்கள் வெள்ளை நிறத்தில் ஒன்று கருப்பு நிறத்தில் ஒன்று வெள்ளையும் கருப்பும் அழகாக டிசைன் போட்ட நிறத்தில் ஒன்று brown நிறத்தில் ஒன்று என பல வகை இவர்களில் உண்டு இவர்கள் எப்போதும் அரை தூக்கத்திலேயேதான் இருப்பார்கள் யாரையும் எந்த தொந்திரவும் செய்ய மாட்டார்கள் ஆனால் சில நாட்களில்......
ஒரு நாள் காலை படுத்திருந்த கருப்பனின் ஒரே ஒரு காது மட்டும் சட்டென்று மேலேழும்பியது மெல்ல தலை தூக்கி பார்த்தது மீண்டும் தலை சாய்த்து படுத்துக்கொள்ள..... இப்போது வெள்ளையனின் TURN அவனது வலது காது மட்டும் மெல்ல எழும்பியது தலை நிமிர்ந்தது
மெல்ல படுத்திருந்த நிலையிலிருந்து நீங்கி உட்கார்ந்தது
முகத்தில் கொஞ்சம் கோபம் கொந்தளித்தது உர்ர்ர் உர்ர்ர் என்ற மெல்ல சப்தமிட்ட வாறே தனது மேலுதடு விரிய பற்கள் வெளியே தெரிய கோபமாக மறுபடியும்ர் ஒரு உர்ர்ர்
இப்பொது கருப்பன் வெள்ளையன் மற்ற வண்ணங்கள் எல்லாம் உயிர் பெற்றன உர்ர்ர்..... உர்ர்ர்ர் என்பது மாறி முதலில் ஒரு லொள் இது கருப்பன்
பின்னர் வெள்ளையன் சேர்ந்து கொள்ள லொள் லொள்
இங்கிருந்த நால்வரும் பார்த்த திசையை நானும் திரும்ம்பிப்பார்தேன்
ஆகா வடக்கே உள்ள சென்னையின் அடையாளமான சென்னை சில்க்ஸ் வாசலிலிருந்து அவர்கள் இனத்தை சேர்ந்த ஒருவர் எல்லை தாண்டி ஸ்டேஷன் அருகே வந்து விட இவை நான்கும் பலமாக குரல் கொடுத்தபடி போருக்கு தயாரகின
இப்போதுதான் கவனிக்கின்றேன் 4 எட்டு ஆனது 8 பதினாறு ஆனது ஒவ்வொரு நடைமேடையிலிருந்தும் நான்கு நான்காக போர்விரர்கள் தங்கள் இனிமையான உறக்கத்தை மறந்து துறந்து....... ஒரு பெரும் படை உருவாக்கின
எல்லோரும் சேர்ந்து கொண்டு எல்லை மிறிய வெளி நாட்டானையும் அவன் தோழர்களையும் கார்கில் போரில் சந்தித்து..... துரத்தி கொண்டுபோய் சென்னையின் அடையாளம் அருகே கொண்டு விட்டு வந்து மீண்டும் அவரவர்கள் இடத்திற்கு திரும்பின
மறுபடியும் உறங்கினவா என்று நான் சரியாக கவனிக்க வில்லை ஆகா என்ன ஒற்றுமை தங்கள் நாட்டிற்கு ஒரு அபாயம் என்றால் எந்த போர் வீரன் பொறுத்துக்கொள்வான் என்பது போல இவை உறங்கி கிடந்ததென்ன விழித்தது என்ன சேர்ந்திசை பாடியதென்ன பாய்ந்து சென்று தங்கள் எல்லை பிரச்சனையை தீர்துக்கொண்டது என்ன????
திரும்மிப் பார்க்கிறேன் நடைமேடைஒவ்வொன்றிற்கும் நான்கு வாசலில் நான்கு வெளியே பார்கிங்கில் நான்கு என அமைதியாக அடங்கிபோயின
காட்சி மாறியது
மறு நாள்
இதே போல station க்கு சென்று ரயில் புறப்பட்டதும் என் வண்டி அருகே நின்று கொண்டு செல் போனில் பேசிக் கொண்டிருந்தேன்
மறுபடியும் ஒரு உர்ர்ர்ர்...... ஒரு லொள்.......
Chennaisilks பக்கம் திரும்பினேன் எந்த சலனமும் இல்லை இப்போது உர்ர்ர் சத்தம் அதிகரிக்கவே திரும்பிப் பார்த்தேன் நடை மேடை ஒன்றில் தான் எதோ பிரச்சனை
கொஞ்சம் முன்னால் சென்று பார்த்தேன் நடை மேடை 2 லிருந்து ஒரு கருப்பன் முதல் மேடைக்கு நுழைய பார்க்கிறது
முதல் நடை மேடையை ஆக்கரமித்துக்கொண்டிருந்த ஒரு பழுப்பனும் வெள்ளையனும் சேர்ந்து கொண்டு அதற்கு எச்சரிக்கை ஒலி எழுப்பிக்கொண்டிருந்தன
கருப்பன் கேட்காமல் போகவே இன்னும் சில வெள்ளையனோடு சேர்ந்து கொண்டன கருப்பனை உண்டு இல்லை என்று ஆக்கிவிடுவது அவற்றின் நோக்கமாக இருக்கலாம்
அங்கே ஒரு போர் உருவாவதற்கான அறிகுறிகள் தோன்றி விட்டன
இப்போது நடை மேடை இரண்டிலிருந்து நேற்று சந்தித்த சிலர் வந்த விட்டனர் இரண்டு நடை மேடை வாசிகளுக்கிடையே போர் துவங்கி விட்டது (போர் நடக்கும் பொது வேறு யாரும், இதை சட்டை செய்யாமல், என்னை போல வேலை அற்றவர்களா அவர்கள்? ரயில் ஏறி போய்விட்டனர்)
இப்போது போரில் நடைமேடை ஒன்றிற்கு வெற்றி
2 தோல்வியை ஒப்புக்கொண்டு இரண்டாவது மேடைக்கு புற முதுகிட்டுவிட்டன
மறுபடியும் ஒன்றாம் எண் போர்விரர்கள் திரும்பி வந்து படுத்துகொண்டன ரயில்கள் போய்க்கொண்டு இருந்தன
இந்த காட்சியையும் பார்த்துவிட்டு வீட்டிற்கு வந்தேன் வாசலில் HINDU கிடந்தது
எடுத்து பிரித்தேன்
கர்நாடகா தமிழ்நாடு Border ல் கனடியர்களுக்கும் தமிழர்களுக்கும் கைகலப்பு!!
ஆந்திரா எல்லையில் தமிழர்கள் விரட்டி அடிக்கப்படுகின்றனர்!!
என்ற செய்திகளோடு
எல்லையில் பாகிஸ்தான் அத்துமீரலில் நடந்த இந்திய பாகிஸ்தான் போரில் ஒரு தமிழர் ஒரு சீக்கியர் ஒரு மலையாளி ஒரு கன்னடக்கரர் ஒரு ஆந்திரர் நாட்டுக்காக போராடி உயிர் துறந்ததும் செய்தியாக வந்திருந்தது

No comments:

Post a Comment