Friday, May 1, 2015

ஒரு திரைப்படம் என்பது பொழுது போக்கு அம்சம்
கமல்ஹாசன் ஒரு சிறந்த நடிகர் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை
அவர் நடித்த படம் கூட சிறந்த படமாக இருக்கலாம் அதிலும் எனக்கு ஐயமில்லை
ஆனால் ஒரு படம் வெளிவந்த அன்று குழந்தை குட்டிகளுடன் காலை 6 மணி காட்சிக்கே போய் திரை அரங்கில் நிற்க வேண்டுமா
அதுவும் அந்த படம் வெளியாக வில்லை என்றால் அதற்கு இவ்வளவு எதோ குடும்ப இழப்பு போல வருந்த வேண்டுமா
பொழுது போக்கு என்பது நமக்கு வேலை இல்லாதபோது பொழுது போக பார்ப்பது
அதுவே எப்படி நம் வாழ்கையின் ஒரு அங்கமாக மாறிவிடுகிறது என்பதை நான் தமிழ் மக்களிடம் அதிகமாக காண்கிறேன் இதை வைத்துகொண்டு தமிழ் சானல்கள் பொழுது போக்குகின்றன
ஒரு முறை நான் மதுரை சென்றிருந்தேன் அது திபாவளி நேரம் அந்த வருடம் ஒரு கதாநாயகனின் படம் வெளிவரவில்லை அதற்கு அவர் ரசிகர்கள் போஸ்டர் ஓடியிருந்தார்கள்
தலைவா உன் படம் வெளிவராத தீபாவளி எங்களுக்கு துக்க நாள்
என்று
சாதாரணமாக நெருங்கிய உறவினர் மரண மடைந்து விட்டால்தான் நாம் தீபாவளி அந்த வருடம் கொண்டாட மாட்டோம்
இவர்கள் அபிமான நடிகர் படம் வராததால் தீபாவளி கொண்டாடவில்லை ஆனால் அந்த நடிகர் ஆனந்தமாக தீபாவளி கொண்டாடினார்
இவர்கள் ரசிகர்களா
அல்லது அவர் இவர்களின் செய்கையை ரசிக்கிறாரா......

No comments:

Post a Comment