Wednesday, November 16, 2016



ரெகார்ட் டான்ஸ்





ஒரு காலத்தில் பொருட்காட்சி எல்லாம் record dance என்றொரு நிகழ்ச்சி நடைபெறும்
வேறு ஒன்றுமில்லை திரைப்பட பாடல்களுக்கு மேடையில் ஆடுவார்கள் இதை பார்க்க கூட்டம் அலை மோதும் ஆனால் சிறுவர்களுக்கு அநுமதி கிடையாது நாங்கள் இந்த மாதிரி நடனம் பார்த்தோம் என்று தெரிந்தாலே விட்டில் உதை விழும் ஆனால் ரகசியமாக பார்த்தது உண்டு
இதல்லாம் பால காண்டம் இப்போது நன்றாகவே முன்னோக்கி செல்வோம் சுமார் 17 ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு முறை என் நண்பர் ஒருவர் என்னை ஒரு அரசாங்க அலுவலக குடியிருப்பில் நடந்த ஒரு சிறுவர்கள் நிகழ்ச்சி ஒன்றிற்கு நடுவராகவும் சிறப்பு விருதினராகவும் அழைத்திருந்தார்
அன்றைய பல நிகழ்சிகளுக்கு பிறகு ஒரு சிறப்பு நாட்டிய நிகழ்ச்சி நடந்தது
ஒரு எட்டு வயது சிறுமி ஒரு திரைப்பாடலுக்கு நடனமாடினார்
அவருக்கு கொடுக்கப்பட்ட பாடல் எது தெரியுமா
மன்மத ராசா மன்மத ராசா கன்னி மனதை கிள்ளாதே
என்ற பாடல்தான் அவரும் மிக சிறப்பாக வேகமாக சுழன்று சுழன்று ஆடினார்
எல்லோரும் பெரிசாக கைதட்டி ஆர்பரித்து பாராட்டினார்கள்
என் மனம் மட்டும் மிகவும் சோர்ந்து போயிற்று
என்ன இது ஒரு எட்டு வயது சிறுமி ஆடும் ஆட்டமா இது என்று மனம் வெதும்பியது
அப்போது இப்போது இருக்கும் கொஞ்சம் மனப்பக்குவம் கூட கிடையாது
என்னை மேடைக்கு பேச அழைத்தார்கள்
மனதில் எண்ணியதை சொல்லாமல் இருக்க முடியவில்லை பொங்கிவிட்டேன்
ஒரு எட்டு வயது சிறு ஆடும் ஆட்டமா இது ஒரு நடனம் என்றால் அசைவுகள் மட்டும் முக்கியமல்ல
அதுவும் இந்த நடனத்தில் அசைவுகளும படு ஆபாசம்
இந்த ஆபாச அசைவுகளெல்லாம் அர்த்தத்துடன் அந்த குழந்தைக்கு சொல்லி கொடுக்க பட்டதா பள்ளி ஆசிரியர்கள் தான் இப்படிப்பட்ட நடனத்தை குழைந்தைகளை ஆட வைக்கிறார்கள் என்றால் பெற்றோர்கள் எப்படி அனுமதிக்கிறார்கள்?
அந்த பாடலின் வரிகள் என்னவென்று அந்த குழந்தைக்கு தெரியுமா அதன அர்த்தம் புரியுமா அப்போதுதானே முகத்தில் பாவம் வரும் அந்த அர்த்தங்களை புரிந்து கொள்ளும் வயது அந்த குழந்தைக்கு இல்லையே என்று பொருமி விட்டேன்
கூட்டத்தில் ஓரிருவர் கைதட்ட நினைத்தது கூட கண்ணில் தெரிந்தது ஆனால் கையை இறுக்கி தனித் தனியாக கட்டிக்கொண்டனர் யாரவது என் சொல்லை ஆமோதித்து விட்டதை தெரிந்து கொண்டு விடப்போகிறார்களே என்ற ஜாக்கிரதை உணர்வு
அன்றைய நிகழ்ச்சி நிர்வாகிகள் என்னை வழி அனுப்பி வைக்கும்போது அழைத்து வந்த மகிழ்ச்சி இல்லை எப்படி இருக்கும்?
கொஞ்சம் கோபம் கொஞ்சமஅசடு வழிதல் போன்ற எல்லா முக பாவங்களுடனும் என்னை மிக சந்தோஷமாக வழி அனுப்பி வைத்தனர்
சந்தோசம் என்பது இங்கிருந்து போனால் போதும் என்ற நிறைவுதான்
மறு நாள் என்னை அழைத்து சென்ற என் நண்பன் எனக்கு தொலை பேசினான்
என்ன இப்படி செய்து விட்டே
நான் என்ன செய்தேன் நானொண்ணும் நடிக்கவில்லையே நடனம் ஆடவில்லையே
என்றேன்
அது இல்லை அந்து பொண்ணு டான்சை அப்படி கிழிச்சிருக்க வேண்டாம் அந்த பொண்ணு யார் தெரியுமா இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி கொடுத்த ஒரு உயர் அதிகாரியின் மகள் அவர்தான் செலவு bill எல்லாம் அனுமதிக்க வேண்டும் இதனால் அலுவலகத்தில் உன்னால் பெரிய பிரச்னை ஏற்பட்டு விட்டது
என்றான்
அன்றையிலிருந்து என்னை அழைத்து சென்ற ஒரு நிர்வாகி என்னை WOODLANDS DRIVE IN ஹோட்டலில் (நாங்கள் தினமும் சந்திக்கும் இடம்) சந்தித்தால் கூட முகத்தை திருப்பிக்கொண்டான்
பின்னால் அவன் ஒரு வியாபாரம் ஆரம்பித்து அலுவலகத்திலிருந்து ஒய்வு பெற்ற பின் என்னை தொடர்பு கொண்டு தன பிசினஸ் பற்றி பேச அழைத்தான் என்பது வேறு கதை
இதே போன்ற அனுபவம் எனக்கு மீண்டும் ஒரு முறை வேறு இடத்தில ஏற்பட்டது
இங்கிருந்து அவர்களுக்கு என்னை பற்றிய செய்தி போகாததால் என்னை அழைத்து விட்டார்கள் என்று நினைக்கிறேன்
அதுவும் ஒரு பள்ளி ஆண்டு விழா மேடை அங்கும் நான் ஒரு சிறப்பு விருந்தினர்
என்னை அழைத்து சென்றவர் சக நாடக நடிகர் ஒருவர்
மேடையில் கலை நிகழ்சிகள் ஆரம்பமாகின
முதல் பாட்டு ரன் படத்தில் வரும் காதல் பிசாசே காதல் பிசாசே என்ற பாட்டிற்கு நாட்டியம் ஆடினார்கள்
மாதவன் பாத்திரத்தில் ஒரு 10 வயது சிறுவன் அந்த கதாநாயகி பெயர் மறந்து விட்டது அதற்கு ஒரு எட்டு வயது சிறுமி
இருவருமே அந்த காதல் பாட்டிற்கு அருமையாக பாவங்களுடன் அங்க சேஷ்டைகளுடன் கட்டிபிடித்து ஆட ஆரம்பித்தனர்
என்னுள் இருந்த பிசாசு கொஞ்சம் கொஞ்சம் ஆகா உயிர் பெற்றது
முகம் சுளிக்க ஆரம்பித்தேன்
மேடையின் பக்கவாட்டில் பார்த்தால் இரண்டு ஆசிரியைகள் அந்த நடனத்தை சொல்லிகொடுதவர்கள் போலும்
அவர்களும் மேடைக்கு வெளியே ஒரே இடத்தில கை அசைத்து வாயசைத்து பாவங்கள் கொடுத்து தங்கள் திறமையின் வெளிப்பாட்டை உழைப்பை பெரிதும் ரசித்துகொண்டிருந்தனர்
வாங்க இருக்கு உங்களுக்கு என்று என்னுள் இருந்த சாத்தான் வேதம் ஓதியது
கஷ்டப்பட்டு நாற்காலியின் கைபிடியை பற்றிக்கொண்டேன்
இடைவேளை வரை காத்திருக்க வேண்டுமே அடுத்து ஒரூ சோலோ நடனம் என்றார்கள்
ஐயோ மறுபடியும் எந்த கன்னறவியோ என்று பயந்து கண்களை மூடிக்கொள்ள எத்தனித்த போது என் சாத்தா அடக்கும் விதம்மாக பாடல் ஒலித்தது நிமிர்ந்து உட்கார்ந்தேன்
ஒரு 15 வயது மாணவி மிக அருமையாக மணப்பாறை மாடுகட்டி என்ற பாடலுக்கு ஆடினாள்
பெரிதும் ரசித்தேன்
வெறும் பழைய பாடல் என்பதற்காகவா இல்லை
பள்ளியில் மாணவர்களுக்காக அந்த பாடல் பாடப்பட்டதற்காக
மேடையில் பேசும் பொது முதலில் காதல் பிசாசே என்றால் என்ன அர்த்தம் என்று அந்தத் எட்டு வயது சிறுமிக்கு தெரியுமா இல்லை காதல் டூயட் பாடுகிற வயசா இது அந்த ஆசிரியர்களும் பெற்றோர்களும் என்ன அர்த்தங்களை சொல்லிக்கொடுத்து அந்த குழந்தைகளுக்கு விளங்க வைத்தார்கள் என்று தெரியவில்லை என்று நான் ஆரம்பித்தவுடன் என்னை அழைத்து சென்ற சக நடிகர் வேகமாக ஓடி வந்து என் மைக்கை பிடுங்கி இது இவருடைய தனிக்கருத்து யாரும் தவறாக நினைக்க வேண்டாம் என்று எனக்கு பதிலாக மன்னிப்பு கேட்டுக்கொண்டார்
அவர் வருடா வருடம் அந்த நிகழ்ச்சிக்கு வருபவராம் அடுத்த வருடம் தன்னையும் அழைக்கமால் போய்விடுவார்களோ என்ற பயம் அவருக்கு
நான் விடுவதாக இல்லை அடுத்து வந்த நடனத்தை பற்றி
பேசியே தீருவேன் என்று சொல்லி என்ன அருமையான பாடலது தமிழ் நாட்டின் geography ஒரு பாடலில் வெளிவருகிறது இதை கேட்கும் குழந்தைகளும் எத்தனை விஷயங்களை தெரிந்து கொள்ளலாம்
மணப்பாறை மாடு கட்டி மாயவரம் ஏறு பூட்டி மணப்பாறையில் மாடு..... மாயவரம் ஏறு...... ஆத்துரு கிச்சடி சம்பா அரிசி மருதை ஜில்லா ஆளு பொள்ளாச்சி சந்தை விருதுநகர் வியாபாரி இப்படி அதில் எத்தனை விஷயங்கள்
கேட்கும் குழந்தைகளுக்கு எவ்வளவு விஷய தானம் கிடைக்கும்
அந்த ஆசிரியர்களை மனதார பாராட்டுகிறேன் என்று சொல்லி அமர்ந்தேன்
அப்புறம் அவர்கள் வழி அனுப்பிய விதம்தான் உங்களுக்கு புரிந்திருக்குமே என் நாடக நண்பர் புலம்பி தள்ளிவிட்டார்
இப்போது ரொம்பவே மனப்பக்குவம் வந்து விட்டது
மேடையில் பார்த்தவையும் விட்டுக்குள்ளேயே வந்து விட்டது
யாரிடம் போய் சொல்ல முடியும் குழந்தைகள் குழந்தைகளாக இல்லாமல் ஆடும் ஆட்டமும் பேசும்மழளைகளும் அவற்றை ரசிக்கும் சமுதாயமும் பிரம்மிக்க வைக்கின்றன
இப்போது நடிக்க வைக்கிரார்களாம் இரண்டொரு முறை பார்த்தேன் அதை பற்றி பேசாமல் இருப்பது நலம் ஏனென்றால்
கிழ நச்சு தாங்கவில்லை என்று விட்டில் எல்லோரும் என் காதில் கேட்கும்படியாக சொல்வது நாராசம்

No comments:

Post a Comment