Saturday, November 19, 2016

கடல் புறா ஒலிப்புத்தகம் நடிகர்கள் அறிமுகம்



கடல் புறா நாவலில் அதன் ஆசிரியர் சாண்டில்யன் அவர்கள் இரண்டே பெண் பாத்திரங்களை கொண்டு கதையை நகர்த்தி இருப்பார்
பெண்களை பற்றி வெகு கவர்ச்சியாக வர்ணிக்கும் ஒரு எழுத்தாளர் இப்படி படு கஞ்சத்தனமாக இரண்டே பாத்திரங்களை அந்த கதையில் நுழைத்திருப்பது என்ன புதுமையோ புரியவில்லை
ஆனாலும் அந்த பாத்திரங்கள் கதாநாயகனோடு சம்மந்த பட்ட மிகவும் பலமான பாத்திரங்கள்
ஒன்று கடாரத்துத் இளவரசி காஞ்சனா மற்றொன்று பிரதம வில்லன்பாத்திரமான பலவர்மனின் வளர்ப்பு மகள்
இந்த பெண்ணின் இயற்பெயர் நமக்கு தெரியாது
ஆனால் காரணப்பெயர் மட்டும் தெரியும்
மஞ்சளழகி
மஞ்சள் நிறம் கொண்ட ஒரு அழகி
மங்கோலியர்கள் என்ற இனத்தினருக்கு மட்டும் மஞ்சள் நிறம் உண்டு என்று நாம் படித்திருக்கிறோம்
இவளும் ஒரு சீனப் பெண் அதுவும் விஜயநகர சாம்ராஜ்யத்திற்கு உரிமை கோரக்கூடிய பெண்
ஜெயவர்மநின்மகள்
அகுதாவின் தங்கை மகள்
இவள் வாழ்வு முழுவதும் சோக மாயம்
இளையபல்லவன் மேல் காதல் கொள்கிறாள்
பிரிகிறாள் மிண்டும் இணைகிறாள்
நடனமாது
இப்படிப்பட்ட ஒரு பெண் பாத்திரத்திற்கு நான் நடிகை தேடிக் கொண்டிருந்தேன்
எனக்கு தேவை ஒரு நளினமான கரகரப்பும் நிறைந்த மயக்கும் பெண் குரல் கொஞ்சம் பரிதாபமாகவும் இருக்க வேண்டும்
நமது ஹிந்தி நடிகை ராணிமுகர்ஜி போல
யார் யாரயோ பேச வைத்து பார்த்தேன்
நான் முன்பே சொன்னபடி எனக்கு குரல் மட்டும் முக்கியமல்ல
ஓரளவிற்கு அவர்கள் உருவத்திலும் அந்த கதா பாத்திரங்கள் போலவே இருந்து விட்டால் இன்னும் நன்றாக இருக்குமே என்று ஒரு இயக்குனராக எப்போதும் நினைப்பேன்
ஏனென்றால் உதரணமாக ஒருவர் காதல் வசனம் பேச வேண்டும் என்று வைத்துக்கொள்ளுங்கள்
எதிரிலி ருப்பவர் ஓரளவவாது இளமையுடன் இருந்தால் அவர்களிடையே (இப்போது பெரும்பாலும் பயன்படுத்தப்படும் சொல்லான) chemistry குரலிலும் தெரியம் அல்லவா
அதை விடுத்து ஒரூ இருபது வயது பெண்ணை எதிரில் நிற்கும் அறுபது வயது மாதுவைப்பார்த்து கற்பனை செய்து கொண்டு நடி என்று ஒருவனை சொன்னால் அது அவ்வளவு சரியானதாக என் மனதிற்கு படவில்லை
ஆகையால் இருக்கும் இரண்டே பாத்திரங்கள் கொஞ்சம் இளமையான நடிகைகளாக இருந்தால் இவர்களை அறிமுக படுத்தும்போது கூட நாம் கொஞ்சமும் தயங்க வேண்டியதில்லை என்பது என் தீர்மானம்
அப்படியேதான் என் தேர்வும் நடந்து கொண்டிருந்தது
ஓரளவிற்கு காஞ்சனா பாத்திரத்திற்கு ஒரு நடிகை தேர்வு செய்து வைத்திருந்தேன் அவர் குரல் மஞ்சளழகிக்கு கூட பொருந்தும்
இருந்தும் வேறு யாருமே மஞ்சலழகிக்கு பொருத்தமாக கிட்டா விட்டால் அவர்தான் மஞ்சளழகி என்று சொல்லி வைத்திருந்தேன் இவரைபற்றி ஒரு தனிப்பதிவு வரும்
அவரை வைத்து முதல் நாள் ஒலிப்பதிவு செய்து கொண்டிருந்தபோது ஒரு பெண் அமைதியாக வந்து அமர்ந்திருந்தார் அவரை பார்த்தவுடன் நான் கேட்ட கேள்வி நடிக்கிறிங்களா என்பது தான்
அதுக்குத்தான் சார் உங்களை பார்க்க வந்திருக்கேன் என்றார் இவரை அழைத்து வந்தது காஞ்சனா
அவர் குரலை கேட்டவுடன் முகத்தை பார்த்தவுடன் மஞ்சள் முகமே வருக என்று பாடதுவங்கினேன்
ஒரு தொலை காட்சியில் செய்தி வாசிப்பாளராக க இருக்கிறேன் என்றார்
எனக்கு கொஞ்சம் பயம் வந்தது
இதற்கு முன்னால் சில செய்தி வாசிப்பாளர்களை நடிக்க வைத்து அவர்கள் வசனங்களை செய்தி படிப்பது போல படித்தது சோகம்
இரண்டு வசனங்களை கொடுத்து படிக்க சொன்னேன்
மிக நன்றாக தமிழ் உச்சரித்தார்
அதுவே இன்று சென்னையில் அபூர்வம் ஆயிற்றே
அதுவும் தொலைகாட்சியில் செய்திவாசிப்பவரிடம் கிடைப்பது இன்னும் அபூர்வம்
தனக்கு சரித்திர கதைகளில் உள்ள ஈடுபாட்டையும் நமது கலாச்சாரம் பற்றியும் பாரம்பரிய உணவு வகைகளை பற்றியும் மிக ஆர்வமுடன் பேசினார்
கடல் புறா பலமுறை படித்து உள்ளதையும் சொன்னவுடன் எனக்கு இவரிடம் கதா பாத்திரத்தை பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இருக்காது எனப்புரிந்தது
நடிக்க சொல்லி கேட்டேன்
இவருக்கு வசனங்கள் மிக இயல்பாக வந்தன
அப்புறம் என்ன நிங்கதான் மஞ்சளழகி என்றேன்
உங்க பெயர்
வனிதா
அன்று முதல் வனிதா மஞ்சளழகி ஆனார்
என்ன கொஞ்சம் அழுவதற்கும் சிரிப்பதற்கும் சிரமப்பட்டார்
ஆனால் பலமுறை சிரிக்க வைத்து அவருக்கு அழுகையே வந்துவிடும் நேரத்தில் வசனம் ok ஆகும்
அதேபோல அழ வேண்டிய நேரத்தில் அவர் மிகவும் கஷ்டப்பட்டு விசும்பல்களை கொண்டு வருவார்
நான் வேற யாரையாவது வைத்து அழுகை மட்டும் எடுத்துக்கொள்கிறேன் என்பேன்
அழுது விடுவார்
எதற்கு இதை இங்கு எழுகிறேன் என்றால் நடிப்பு என்று வரும் போது சிரிப்பும் அழுகையும் மிகவும் எதார்த்தமாக வரவேண்டும்
நண்பர்களோடு விழுந்து விழுந்து சிரிப்பவர்களை பார்திருக்கிறேன் சிரித்துக்கொண்டே பேசுபவர்களை கேட்டிருக்கிறேன்
ஆனால் அவர்களையே மைக் முன்னாலோ அல்லது கேமரா முன்னாலோ கொண்டு நிறுத்தினால் சிரிக்க சொன்னால் காற்றுதான் வரும்
சிரித்தால் வசனம் வராது வசனம் பேசினால் சிரிப்பு வராது
இதுவே அழுகைக்கும் போருந்தும்
சரி இது தனியாக வகுப்பு எடுக்க வேண்டிய விஷயம்
இங்கு வேண்டாம்
வனிதா எல்லாவற்றிலும் ஒரு முழுமையான நடிகையாக எனக்கு கிடைத்துள்ளார்
அவரை இன்னும் பெரிய பாத்திரங்களில் அவர் விருப்பப் பட்டால் பயன் படுத்திக்கொள ஆவலாக இருக்கிறேன்
இப்போதும் மிகச் சிறந்த செய்தி வாசிபாளராகவும் இருக்கிறார்
அதேதான்
இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை அவர் புரிந்து இருக்கிறார் என்று அர்த்தம் அது மட்டுமல்ல
சிறந்த ஒரு கட்டுரையாளர்
நல்ல கவிதைகள் எழுதுகிறார்
தமிழ் ஆர்வமிக்கவர்
ஆராய்ச்சியாளர்
செய்தி தொகுப்பாளர்
நன்றி வனிதா

No comments:

Post a Comment