Saturday, December 13, 2014

என்னுடைய JUST A SECOND PLEASE என்ற நாடகத்தில் முதல் காட்சியின் சுருக்கம் இது நமது கத நாயகன் வாசு தன் வாழ்க்கையில் ஆசைப்பட்டது எதுவும் கிடைக்க வில்லை என்று புலம்பிக்கொண்டிருக்கிறான்
இதானால் தன தோல்விக்கெல்லாம் காரணம் கடவுள் தானென்று அவரை நிநதனா ஸ்துதி செய்து கொண்டிருக்கிறான் கடவுளாலேயே அவன் திட்டுக்கள் பொறுக்க முடியாமல் அவன் முன் தோன்றி தான் காரணமல்ல என்று விளக்க எண்ணுகிறார்
இப்படி ஒரு சந்தர்ப்பத்தில் கடவுள் வாசு முன் தோன்றுகிறார் அதுவும் எப்படி??
இப்படி...........
கடவுள் உள்ளே வர அவர் ஒரு ஜீன்ஸ் PANT ம் ஒரு T SHIRT ம் அணிந்து இருக்கிறார்
வாசு: வாங்க நீங்க
கடவுள் நான் யாருன்னு உனக்குக் தெரியாது ஆனா நீ யாருன்னு எனக்கு தெரியும் வாசு அலைஸ் வாசுதேவன் நீதானே நான் யாருன்னு SHORT ஆ ஸ்வீட்டா சொல்லிடறேன்.நான்... நீ தினமும் பூஜை பண்ணறியே SORRY பூஜ பண்ணறா மாதிரி திட்டரேயே அந்த கடவுள் THE GOD
நீ கடவுளா? இப்ப காலிங் பெல் அடிச்சு உள்ளே வந்து என்கிட்ட பேசிகிட்டு இருக்கற நீ கடவுளா??
ஆமாம் வாசு ஓ உனக்கெல்லாம் கடவுள் வரார்ன்னா வெடி வெடிக்கணும் பூமி பிளக்கணும் மின்னல் மின்னனும் இடி இடிக்கணும் புயல் வீசணும் புகை நடுவிலே நான் வரணும் அப்பத்தான் நம்பவே இல்லை அதெல்லாம் பொய் வாசு நான் சாதாரண மனுஷனா வந்தா இப்படித்தான் காலிங் பெல் அடிச்சு நீ கதவை திறந்த உடனேவருவேன்
அப்படின்னா இந்த டிரஸ் இந்த PANT SHIRT
ஓ நீயெல்லாம் என்னை கிரிடத்தோட சங்கு சக்கரத்தோட 12 கை களோட பாத்தே பழகிட்டே இல்லை வாசு இப்ப நான் போட்டுகிட்டு இருக்கற DRESS இது உங்க ஊர்லே தற்போதைய பேஷன் ஆனா எங்க உலகத்துலே இது 5௦௦௦ வருஷங்களுக்கு முன்னாடி இருந்த FASHION அதாவது நீங்க சிக்கி முக்கி கல்லை வச்சு நெருப்பு வரவழிச்ச காலம்
WHAT DO YOU MEAN?
I MEAN WHAT I SAID
YOU TALK ENGLISH TOO
இதான்யா உங்ககிட்ட PROBLEM என்னை கடவுள்ன்னு சொல்லுவிங்க எல்லாம் தெரிஞ்சவன் எங்கும் இருப்பவன்ன்னு சொல்லுவிங்க ஆனா என்னை உங்க சினிமா டிராமாவிலே english தெரியாத காமெடியன்னா ஆக்கிடுவிங்க இதுதான் நீங்க உண்மையிலேயே கடவுளை நம்பறதா? வாசு நான் உருவாக்கின மனுஷன் பஞ்சை கண்டுபிடிக்கிறான் நைலான் கண்டு பிடிக்கிறான் JEANS போடறான் ஆனா என்னை மட்டும் இன்னும் BARE BODY ஆ பஞ்சகச்சத்தோட கோவில்லே நிறுத்தி வச்சிருக்கிங்களே இது நியாயமா வாசு
எல்லாம் நல்லத்தான் பேசறே ஆனா உன்னை கடவுள்ளுன்னு எப்படி நம்பறதுன்னு தான் தெரியலை ஆனா ஒரு மாதிரி த்ரில்லிங்கா இருக்குய்யா உன் கூடவே இருக்கணும் உன் கூடவே பேசணும்னு தோணுது இருந்தாலும் கடவுள்ன்னா உன்னை எப்படி நம்பறது நான் நம்பற மாதிரி ஒரு மழையை வரவழைச்சு காட்டேன்
வாசு நான் கடவுள்ளுன்னு இப நம்ப முடியலன்னா பரவாயில்லை போக போக புரிஞ்சிப்ப இப்போதைக்கு என்னை கடவுள்ன்னு வச்சுக்கயேன் புரியலை? கணக்குலே விடை தெரியாதபோது ANSWER=X ன்னு ஆரம்பிப்போமே அது மாதிரி இப்ப கடவுள்=X ன்னு ஆரம்பி விடை தெரியும்போது X=GOD ன்னு நியே புரிஞ்சிப்பே
இபேல்லாம் தான் உன்னை காணறதே இல்லியே அக்கிரமம் நடக்கும்ம் போதெல்லாம் வந்து நல்லவங்களை காப்பாத்துவேன்னு சொன்னியே
எப்ப
உனக்கே மறந்து போச்சா பகவத் கீதை
ஆமாம் சொன்னேன் அப்ப நல்லவங்க நிறைய இருந்தாங்க அவங்களை காப்பத்த வேண்டிய அவசியமும் எனக்கு இருந்தது
இப்ப நல்லவங்களே இல்லை ங்கிறியா
இருக்காங்க வாசு THEY ARE ONLY MINORITY இப்ப நடக்கற அக்கிரமங்கள் அநியாயங்கள் எல்லாமே ஒரு அக்கிரமத்துக்கும் இன்னொரு அக்கிரமத்துக்கும் நடக்கற போராட்டமாகவே தான் இருக்கு ஒரு அநியாயத்துக்கும் இன்னொரு அநியாயத்துக்கும் ஏற்படற சண்டையாகவே தான் இருக்கு என் தேவை எங்க இருக்கு It is war against one ratchasa and another ratchasa
(Part of a scene from my play staged in 2003)
Like · ·

No comments:

Post a Comment