Saturday, December 20, 2014

Part of scene from My play JUST A SECOND PLEASE (CONTD)


என்னுடைய JUST A SECOND PLEASE நாடகத்திலிருந்து ஒரு காட்சியின் சில வசனங்களை பதிவிட்டிருந்தேன்
அதற்கு கொஞ்சம் நல்லாவே COMMENTS வந்ததால் அந்த காட்சிலிருந்து மேலும் கொஞ்சம் வசனங்கள் இதோ
இதற்கு மேல் அந்த நாடகத்தை முழுவதுமாக தொடரும் எண்ணம் இப்போதைக்கு இல்லை
---------------------------------------------------------------------------------------------------

கடவுள்:::: IT IS A WAR AGAINST ONE RATCHASA AND ANOTHER RATCHASA என்னுடைய தேவை எங்கே இருக்கு?
வாசு OH GOD!!
கூப்பிட்டயா?
ஆமாம் கூபிட்டா உடனே வந்திடரமாதிரிதான்
நான் வந்தப்புறம் தானே வாசு நீ கூபிட்டே
போதும் நல்லா பேசற அப எப்பதான் நீ வருவே
AGAIN A STUPID QUESTON நான் உன் முன்னாலேயே நிக்கறேன்
நீ கீதையிலே சொன்ன மாதிரி எப்ப வருவேன்னு கேட்டேன்
வருவேன் வாசு இன்னும் அக்கிரமங்கள் பெருகணும் பலகோடி அக்கிரமரங்ககிட்ட்ட மாட்டிகிட்டு சில லட்சம் அப்பாவி ஜனங்க அவஸ்தை படும் போது கண்டிப்பா வருவேன்
இப்ப மாத்திரம் என்ன வாழுதாம் எங்க பாத்தாலும் லஞ்சம், ஊழல் கொலை கொள்ளை.... அரசியல்வாதிகிட்டே லஞ்சம் கொடுத்தாதானே காரியம் நடக்குது
வாசு நீ BLACKMARKET லே ticket வாங்கி சினிமா பாத்ததில்லை?? CORPORATION TAXஐ குறைக்க லஞ்சம் நீ கொடுத்ததில்லை?? office லே லீவ் போட்டுட்டு ஒரு டாக்டர் கிட்ட பொய் மெடிக்கல் certificate வாங்கி கொடுத்ததில்லை??? உன்கிட்ட எல்லாமே 1௦௦% INCOME TAXக்கு கணக்கு காட்டின பணம்தானா??
போதும் போதும் மானத்தை வாங்காதே
இல்லை வாசு புரிய வைக்கிறேன் நான் வர வேண்டிய அவசியம் வரும்போது இதெல்லாம் இருக்காது இல்லை இதெல்லாம் பயன் தராது அப்பா லட்சக்கணக்கான உண்மையான அப்பாவி மக்கள் எல்லாத்தையும் இழந்திட்டு நிராயுதபாணியா என்னை நோக்கி கையை தூக்கும் போது நான் கண்டிப்பா வருவேன் அப்பா IT WILL BE..........
A WAR AGAINST RAATCHASAS AND DEVAS AM I RIGHT?
பரவயில்லையே நான் சொல்ல நினைச்சதை INTERPRETERS இல்லாமே புரிஞ்சிக்க ஆரம்பிச்சிட்டியே
INTERPRETERS ஆ
ஆமாம் சாமியார்கள் மனோததுவ நிபுணர்கள் கதாகலட்சேபம் உபன்யாசம் பண்ணறவங்க ETC ETC......
அப்போ அதுவரைக்கும் நாங்க காத்துகிட்டு இருக்கணும் அப்படித்தானே
ஏன் காத்திருக்கணும் நாந்தான் உன்கூடவே இருக்கேன் உன்கூவே வரேன் சாப்பிடறேன் தூங்கறேன் உனக்கு எல்லாம் தெரியும் ஆனா புரிஞ்சிக்க மாட்டேங்கறையே
என்ன சொல்லறே ?
சொல்லறேன் ஒரு உதாரணத்தோட சொல்லறேன் 2௦௦8 வருஷம் டிசம்பர மாசம் 6ம்தேதி என்ன நடந்தது நியாபகம் இருக்கா
அட போப்பா எனக்கு நேத்து நடந்ததே இப்ப எல்லாம் ஞாபகம் இருக்கறதில்லை
அன்னிக்கு என்ன நடந்ததுன்னு கொஞ்சம் யோசிச்சு பாரு
ம் ம் வரலையே
சரி நானே சொல்லறேன் சரியான்னு பாரு அன்னிக்கு உங்க சித்தி பெங்களுருலிருந்து வராங்க அவங்களை அழைச்சிகிட்டு வரதுக்கு நீ காலையிலே நாலு மணிக்கு STATION க்கு போகணும் அன்னிக்கு எதோ ஆட்டோ வெல்லாம் STRIKE
அட ஆமாம்
ஸ்டேஷன் போக பத்து நிமிஷம் தான் இருக்கு உன் SCOOTER ஐ ஸ்டார்ட் பண்ண என்னாச்சு
START ஆச்சு
ஆச்சு தெருக்கோடியிலே பொய் நின்னுதா??
ஆமாயா கழுதை மாதிரி உதைச்சேன் 2௦ முறை
நேரம் ஆகி கிட்டே இருக்கு அன்னிக்குன்னு பாத்து TRAIN வேற ரைட் டைம்
SURPRISING ஆ இல்லை?/
அப்ப என்ன நடந்தது??
என் FRIEND குமார் ரொம்ப நாள் பாக்கதவன் MOTORCYCLE லே வந்தான் என்னை CENTRAL லே டிராப் பண்ணுன்னேன் அவனும் என்னை DROP பண்ணான்.... அதுலே என்ன இப்ப
அதுலே ஒண்ணுமில்லை அவன்கூட போகும் பொது என்னமோ சொன்னியே என்ன அது?
என்ன சொன்னேன் ம்.... தெய்வம் மாதிரி வந்தேடான்னேன் .......அதுலே என்ன இப்ப (எதோ பொறி தட்டியவனாக) OH GOD
அதேதான் வாசு இந்தமாதிரித்தான் நான் பலபேரோட வாழ்க்கையிலே வந்திகிட்டுதான் இருக்கேன் பணம் தேவைப்படும்போது பணத்தோட வியாதி குணமாக டாக்டர் ரூபத்துலே ரோடை கிராஸ் பண்ணும்போது ஒரு TRAFFIC போலீசா என் அவசரத்த்துக்கு சிகரட் கிடைக்காத போது பீடி ரூபத்துலே வந்துகிட்டுதான் இருக்கேன் எல்லோரும் தெய்வம் மாதிரி ன்னு சொல்லுவாங்க ஆனா புரிஞ்சிக்க மாட்டங்க தெய்வம் மனுஷ ரூபிணா
அதுக்கு அர்த்தம் இப்பதான் புரியுது அவன் தன் ரூபத்துலே வரணும்னு அவசியமில்லை எந்த ரூபத்துலே வேணாலும் எப்ப வேணாலும் வருவார்னு ஆபத் பாந்தவா அனாத ரட்சகா வாமனா வாசுதேவ திர்விக்கிரமா........
போதும் போதும் கேட்டு கேட்டு அலுத்துபோச்சு....

No comments:

Post a Comment