Friday, March 6, 2015

நான் DVD/VCD க்காக TELEFILM தயாரித்த கதை (தொடர்ச்சி)

இரு வீடு ஒரு வாசல் DVD/VCD வெளியிட்டு விழா முடிந்தவுடன் அதை எப்படி விற்பனை செய்வது என்ற கேள்வி எழுந்தது நல்ல வேளையாக அப்போது DVD MARKET நல்லபடியாக இயங்கிக்கொண்டிருந்தது சோனி COMPANY பல படங்களை களம் இறக்கி நல்ல விலைக்கு விற்றுக் கொண்டிருந்த நேரம் என்னுடைய டெலிபிலிமும் சுமாராக விற்பனை ஆனது
ஆனால் இதை விட நல்ல விஷயம் என் இனிய நண்பர் ஒருவர் உதவியினால் ஒரு வங்கியில் அதை ஒரு பரிசுப்பொருளாக வாங்க ஆரம்பித்ததுதான்
நண்பரின் பெயரை அவரது அனுமதிபெற்று பின்னர் சொல்கிறேன்
இது கொடுத்த தைரியம் அடுத்த படத்தை பற்றி யோசனை தோன்றியது அப்போது என் மனதில் உதித்த ஒரு திட்டம் இந்த DVDVCD ல் விளம்பரங்களை சேர்த்தாலென்ன என்பதுதான் இதைப்பற்றி ஒரு விளம்பர AGENCY யிடம் பேசியபோது அதன் உரிமையாளர் உற்சாகமாக பெசினார்
அடுத்து யாருடைய கதை என்று தீர்மானிக்க வேண்டியிருந்தபோது எனக்கு நிண்ட நாளாக சுஜாதாவின் கதைகளில் ஒன்றை TELEFILM ஆக்க வேண்டுமென்ற ஆசை இருந்ததால் அவரை சந்திக்க முடிவுசெய்து பார்த்தேன்
என்ன கதை என்று முடிவு செய்யவில்லை... நாலைந்து கதைகளை குறிப்பிட்டேன்... ஒரு வாரம் கழித்து பேசுவதாக சொல்லிவிட்டு அனுப்பிவிட்டார்!! ஒரு வாரம் கழித்து மறுபடியும் அவரை சந்தித்தபோது இந்தDVD/VCD மார்க்கெட் பற்றி அக்கு வேறு ஆணி வேறாக அலசி எனக்கு என்ன நஷ்டம் வரலாம் என்றும் எத்தனை பேர் வாங்கலாம் என்றும் மொத்த statistics கொடுத்து என் ஆர்வத்திற்காக அனுமதி வழங்கினார்
ஒரு வாரத்திற்குள் என்ன home work!!! என்று ஆச்சரியமும் ஆனந்தமும் பட்டுக்கொண்டே வீடு திரும்பினேன்... நாங்கள் தேர்ந்தெடுத்த கதை அவருடைய சிறுகதை "வாசல்".... "மாமா விஜயம்" என்ற தலைப்பில் டெல்லி கணேஷ் நடிக்க வெளிவந்தது.
... அதான் சுஜாதா
இது வெளிவந்தபோது முதன் முறையாக DVD/VCDல் விளம்பரங்கள் இணைத்து வெளியிட்டேன் இது ஒரு பரிச்சார்த்த முயற்சியாக இருந்ததே தவிர விளம்பரங்களுக்கு உறுதி அளித்தவர் காணாமல் போனார் நேரிடையாக
விளம்பரதாரர்களை தொடர்பு கொள்ள முடியாத நிலைமை. விளம்பரங்கள் இருந்ததாலேயே வங்கிகள் மற்றும் CORPORATE கம்பனிகள் வாங்க யோசித்தன DVDVCD மார்க்கெட்டும், ஒரு மிகப்பெரிய கம்பனி பிரபலமான திரைப்படங்களையே குறைந்த விலைக்கு கொடுத்ததால் சரிந்தது
சுஜாதாவின் அருமையான கதை ஒன்று TELEFILM ஆக நிறைய பேர்களை சென்று அடையவில்லை
இருந்து வழக்கம் போல இந்த விக்கிரமாதித்தன் மனம் தளரவில்லை

No comments:

Post a Comment