Sunday, March 29, 2015

நட்பு 

எதிர்த்த வீட்டில் ஒரு பைரவர் நான் வேளச்சேரி வந்த புதிதில் வெளியே புறப்[படும்போதெல்லாம் எதிர் வீட்டின் வாசலில் இருந்தே என்னை பார்த்துகொண்டிருப்பார்

அவன் முகத்தில் எப்போதும் ஒரு சோகம் தெரியும் ஒரு நாள் அன்பாக அழைத்தேன்
மெல்ல என்னருகில் வந்து தன வாலை ஆட்டியது கழுத்தை தட்விக்கொடுத்ததும் சிறிது நேரம் என்னுடன் இருந்து விட்டு போய்விட்டது
ஒரு நாள் இரவு விட்டு திரும்பியதும் நான் அழைக்காமலேயே என்னை நோக்கி வந்தது கையிலிருந்த இரண்டு பிஸ்கட்டுகளை அதற்கு கொடுத்தேன் உடனடியாக சாப்பிடடு விட்டு சிறிது நேரம் என்னையே உற்று பார்த்து கொண்டு இருந்து விட்டு போய்விட்டது
அடுத்த நாள் நான் என் விட்டின் அருகே வந்த உடனேயே ஓடி வந்தது அருகில் நின்றது தடவிக்கொடுத்தேன்
ஆனால் கையில் பிஸ்கட் இல்லை சிறிது நேரம் பார்த்து விட்டு போய்விட்டது அடுத்த நாள் ஞாபகமாக ஒரு பிஸ்கட் பக்கெட் வாங்கி வந்து அழைத்து கொடுத்தேன்
சாப்பிட்டு முடித்தடவுடன் என் முகத்தை சிறிது நேரம் பார்த்து விட்டு போய்விடும்
இரண்டு நாட்கள் பிஸ்கட் வாங்கமறந்து விட்டு வந்து விடுவேன் ஆனால் அதன் வருகை மட்டும் நிற்கவில்லை
இன்று வாங்கி வரவில்லை நாளை தருகிறேன் என்று அதற்கு புரியும் என்ற நம்பிக்கையில் சொல்லி விட்டு அனுப்பிவிடுவேன்
சற்று நேரம் இருந்து விட்டு போயவிடும் மறுபடியும் ஒருநாள் மறக்காமல் வாங்கி கொடுத்து விட்டேன்
இரண்டு முன்று நாட்கள் நான் எதுவும் தரவில்லை என்றாலும் அதன் வருகை மட்டும் நிற்காது
வரும் கழுத்தை நிட்டும் அன்பாக தடவிக்கொடுப்பேன் பாசமாக பார்த்து விட்டு திரும்பிவிடும் ஒரு நாள் கேட்டே விட்டேன் நான்தான் சில நாட்களாக உனக்கு ஏதும் தரவில்லையே ஏன் ஓடி வந்து என்னிடம் வாலை ஆட்டுகிறாய் என்று
என்னை ஒரு பார்வை பார்த்தது (முடிந்தால் dubbing voice போடுக்கொள்ளலாம்)
நண்பா இரண்டு நாள் நீ எதுவும் தரவில்லை என்றால் எப்போதுமே தரமாட்டாய் என்பது அர்த்தமா இல்லை நமது நட்பு நீ தரும் இந்த பிஸ்கட்டில்தான் இருக்கிறதா ஆதாயம் வரும்போது நட்பு பாரட்டுவதும் அது துண்டிக்கப்ப்படும்போது விலகிப்போவதும் எனக்கு தெரியாது எனக்கு தெரிந்ததெல்லாம் உன் நட்பும் நி எனக்கு எப்போதோ வாங்கித்தந்ததும் தான்
என்று சொல்லாமல் சொல்லியது
பாசமுடம்ன் நட்புடன் இன்றும் என்னுடன் பழ்கிக்கொண்டிருக்கிறது

No comments:

Post a Comment