Sunday, March 1, 2015

நான் DVD/VCD TELEFILMS தயாரித்த கதை

கி பி 2௦௦1ல் தமிழ்நாடெங்கும் CABLE டிவி க்கள் மிக பிரபலம் அவர்களுக்காக நான் பழைய சீரியல்களை வாங்கிக் கொடுத்து கொண்டிருந்தேன்
அப்போதுதான் இவர்களுக்காக நாம் ஏன் படங்களை தயாரிக்கக் கூடாது என்று எனக்குள் ஒரு உள்ளுணர்வு சொல்ல அதற்கான ஒரு நல்ல SCHEME உடன் அவர்களை அணுகினேன்
நான் தமிழ்நாடடில் கேபிள் சேனல் இருந்த எல்லா ஊர்களுக்கும் படை எடுத்தேன்
என்னுடைய திட்டம் அவர்களுக்கு வெகுவாக பிடித்திருந்தது ஆனால் காசு மட்டும் கொடுக்கத் தயாராக இல்லை
அந்தந்த ஊர்களில் உள்ள சில நண்பர்களை மற்றும் விளம்பர AGENCY களை தொடர்பு கொண்டு என் திட்டத்தை விளக்கி கூறினேன்
எல்லோரும் பொறுமையாக கேட்டு அருமை என்று கைகுலுக்கினர்
ஒரு மிகப்பிரபலமான AGENCY இந்த திட்டம் ஒரு CORPORATE கம்பனியிலிருந்து வந்திருந்தாள் அப்படியே விலை கொடுத்து வாங்கி இருப்போம் ஆனால் பேசுவது ஒரு தனி மனிதனாயிற்ரே என்று வருத்தத்துடன் கை குலுக்கினார் அந்த COMPANY ன் MARKETING EXECUTIVE
இருந்தாலும் கோவையில் ஒருவர் துணிந்து முன் வந்து 4௦ ஆயிரம் பணம் தருவதாக ஒப்புக்கொண்டார் அடுத்து சேலத்தில் ஒருவர் 25 ஆயிரம் தருவதாக கடிதம் கொடுத்தார் மதுரை பெரிய ஊர் ஆயிற்றே 1 லட்சம் தருவதாக ஒரு விளம்பர கம்பனி MANAGER கையெழுத்து இட்டார்
போதுமே இந்த பணத்திற்குள் ஒரு TELEFILM முடித்து விடலாம் என்ற கணக்கில் சென்னை திரும்பியவுடன் உடனடியாக ஷூடடிங்கிற்கு ஏற்பாடு செய்தேன்
நானே தயாரித்து இயக்குவதாக தீர்மானித்துக்கொண்டேன் திர்மானம் என்ன அதுதானே என் நீண்ட நாள் கனவு
சில தொலைகாட்சி கலைஞர்களை வைத்து நான் இயக்கி தயாரித்த முதல் TELEFILM தான் இரு வீடு ஒரு வாசல்
இது என்னுடைய நாடக குழுவினரால் பலமுறை நடிக்கப்பெற்ற நகைச்சுவை நாடகம்
SHOOTING ற்கு முதல் நாள் வரை பணம் தருகிறேன் என்று சொன்னவர்கள் யாரும் கண்டு கொள்ளவில்லை
சரி முடித்துக் காண்பித்தால் தான் தருவார்கள் என்று நினைத்துக்கொண்டு படத்தை முடித்து விட்டு DVD ஐ எடுத்துக் கொண்டு எல்லா ஊர்களுக்கும் போனேன்
அப்போதுதான் புரிந்தது அவர்கள் கொடுத்த கடிதம் எல்லாம் வெறும் எழுத்தளவில் மாடும் தான் என்று
இப்போது என் கவலை எல்லாம் போட்ட பணத்தை எப்படி எடுப்பது என்று தான் தன முயற்சியில் சற்றும் மனம் தாளராத விக்கிரமாதித்தன் போல இந்த படத்தை நாமே CABLE தொலைகாட்சியில் வெளியிட்டு MARKETING செய்தால் என்ன என்று என் உள்ளத்தில் இருந்த வேதாளம் கேட்டது அதற்கு உடனடியாக பதில் சொல்லாமல் காரியத்தில் இறங்கினேன்
நான் முதலில் சந்தித்தது சேலம் பாலிமர் சேனல் உரிமையாளரைத்தான் அவரிடம் எனக்கு 9௦ நிமிடம் SLOT கொடுங்கள் அதற்கு பணம் எதுவும் கேட்காதிர்கள் நான் ஒளிபரப்பி MARKETING செய்து கொள்கிறேன் என்றேன்
ஒப்புக்கொண்டார்
டிசம்பர் மாதம் 24 தேதி என் இரு வீடு ஒரு வாசல் தொலைகாட்சி படம் வெளிவருவதாக திர்மானம் ஆயிற்று
18 ம் தேதியிலிருந்து சேலத்தில் தங்கி கலை 9 முதல் மாலை 8 மணி வரை MARKETINGல் அலைந்து திரிந்து பாலிமர் சேனலின் விளம்பரதாரர்களை எல்லாம் சந்த்தித்து விளம்பரங்கள் சேகரிக்க தொடங்கினேன்
5௦௦௦ ரூபாய் கொடுத்தால் 5 நிமிட விளம்பரம் என்று கூற நிகழ்ச்சி அவர்களுக்கு புதிதாக இருந்ததால் கிட்டத்தட்ட 27௦௦௦ வரை விளம்பரங்கள் கிடைத்தது இது அந்நாளில் பெரிய சாதனை தான்
நானே சேனலில் உட்கார்ந்து TELEFILM ஐயும் விளம்பரங்களையும் உரிய நேரத்தில் ஒளிபரப்பி வெற்றிகரமாக முடித்தேன்
சேலம் தந்த உற்சாகம் ஈரோடு பாலிமர் சேனலில் இதே போல ஒளிபரப்ப தைரியம் தந்தது
இங்கும் அதே உழைப்பு ஆனால் கிடைத்தது 14௦௦௦ மட்டுமே
இதன் பின்னர் கோவை கிருஷ்ணா TV இங்கு எனக்கு எதுவுமே கிடைக்க வில்லை
இதன் பின்னர் என் டெண்டை மதுரைக்கு கொண்டுபோனேன் அதற்குள் கேபிள் சானல்களில் பல மாறுதல்கள் வந்து விடவே என் திட்டம் அத்தோடு நின்று போனது
இவ்வளவுதான் நமக்கு கிடைத்தது என்று எண்ணி நஷ்ட கணக்கை ஏற்றுக்கொண்டு நாடகத்தில் கவனம் செலுத்தத் தொடங்கினேன் என் TELEFILM DVD உறங்க போய்விட்டது
கி பி 2௦௦5 ல் மௌலியின் FLIGHT 172 DVD வெளிவந்து வெற்றி பெற்றவுடன் உறங்க போனவர் விழித்துக்கொண்டார்
அதை வெளியிட்ட தயாரிப்பாளர்களிடம் சென்று என்னுடைய படம் தயாராக DVD ஆக உள்ளது நீங்கள் அதை வெளியிடுங்கள் எனக் கூறினேன்
அவர் அதற்கு உங்கள் DVD விலைபோகாது வேண்டுமானால் நீங்களே முயன்ப்று பாருங்களேன் என்று கூறிவிட்டார்
அவ்வளவுதான் என்னுள் உறங்கிக்கொண்டிருந்த வேதாளம் மறுபடியும் முருங்கை மரத்தில் ஏறிக்கொள்ள அதை வெட்டி சாய்க்க நான் சற்றும் மனம் தளாராமல் DVD MARKETING பற்றி யோசிக்க ஆரம்பித்தேன் படம் கையில் இருக்கிறது மேற்கொண்டு 5௦௦௦௦ செலவுசெய்தால் DVD பிரதிகள் தயாராகிவிடும் முயன்று விடுவது எனதீர்மானித்து இறங்கினேன்
வெளியிட்டு விழாவிற்கு அதே மௌலியை வரவழைத்து அவர் கையாலேயே வெயிட்டு பின்னர் MARKETINGல் இறங்கி வியாபரத்தை துவங்கினேன்
நான் விரும்பியோ விரும்பாமலோ பலர் நான் இந்த தொழிலை துவங்குவதற்கு அவர்கள் அறிந்தோ அறியாமலோ காரணமாக இருந்திருக்கிறார்கள் அவர்களுக்கு என் நன்றி
கேபிள் சேனலுக்கு நான் கொடுத்த திட்டம் மற்றும் இந்த MARKETING ல் நான் சந்தித்த சவால்கள் என்னுடைய மற்ற படங்கள் நான் பிரபல எழுத்தாளர் சுஜாதவை சந்தித்து பேசியது பற்றி பின்னர் எழுதுகிறேன்

No comments:

Post a Comment