Saturday, April 18, 2015

குரு வந்தனம் 


நான் பம்பாய் சென்ற போதுதான் நாடகம் எழுதவும் இயக்கவும் வாய்ப்புகள் கிடைத்தன
ஒரு நாடகத்தை ஒவ்வொரு காட்சியாக அலசி எப்படி அதை தேவையான நீளத்தில் வைக்க வேண்டும்
அந்த காட்சியில் வரும் வசனங்கள் வேறு எங்காவது அந்த நாடகத்தில் வருகிறதா
நாடகத்தில் எங்காவது ஒரு வசனத்திலாவது தொய்வு ஏற்படுகிறதா
காட்சியின் ஆரம்பம் என்ன முடிவு என்ன அது
ஒவ்வொரு காட்சியும் நாடகத்தை ஒரு அங்குலமாவது சுவாரஸ்யமாக முன்னோக்கி நகர்த்தி செல்கிறதா
நாடகத்தை நாம் பார்த்தால் அந்த காட்சியை ரசிப்போமா அல்லது ஜோக்கிற்கு சிரிப்போமா
ஒத்திகையின் போது வசனத்தின் ஏற்ற தாழ்வுகள் என்ன
நாடகத்தின் ஆரம்ப காட்சியிலேயே மக்களை நாடகத்தின் உள்ளே இழுத்து விட வேண்டும்
போன்றவற்றை எல்லாம் உன்னிப்பாக கவனித்தே நாடகத்தை இயக்கினேன்
இவற்றிற்கெல்லாம் நான் என் மானசீக குருவாக வரித்துக் கொண்டவர் திரு ARS அவர்கள்
இவருடன் 6 வருட காலம் UAA ல் இருந்தபோது ஒரு ஏகலைவனாக நான் கற்றுக் கொண்ட பாடங்கள் எனக்கு பெரும் உதவியாக இருந்தது
இது தவிர நாடகம் நடக்கும் போது ரசிகர்களின் மன நிலைமையை எடை போடுவதில் மன்னர் அவர்
உண்மையிலேயே ரசிக்கிறார்களா அல்லது ரசிப்பது போல நம்மை கிண்டலடிக்கிறார்களா என்பதை அறிவதில் வல்லவர்
ஒரு சமயம் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா நாடகம் எனக்கு கண் தெரியாத ஒரு சிறுவனின் வேடம் (197௦)
சென்னையில் நாடகம் நடை பெற்ற போதெல்லாம் என் காட்சிகளுக்கு எனக்கு கைதட்டல் வரும் பாராட்டு கிடைக்கும்
இதே நாடகம் ஒருமுறை வெளியூர் ஒன்றில் நடந்த போது அவர்கள் அந்த நாடகத்தையே பெரிதாக ரசிக்கவில்லை
என் காட்சியின் பொது லேசாக கைதட்டல் நான் உணர்ச்சி வசப்பட்டு ஆர்வக் கோளாறினால் இன்னும் கொஞ்சம் அதிகமாகவே நடிக்க துவங்கினேன் (நான் கண்களை BANDAGE போட்டு கட்டியிருந்ததால் என்னால் AUDIENCE யோ நடிகர்களையோ பார்க்க முடியாது)
என் பின்னால் இருந்து ருந்து ஒரு கை அழுத்தமாக என் தோளில் விழுந்தது
ஒரு குரல் ரகசியமாக “உன்னை கிண்டல் செய்கிறார்கள் சீக்கிரம் வசனத்தை பேசி முடித்துவிட்டு போய்விடு என்றது
ARS குரல் என்று எனக்கு தெளிவாக புரிந்தது
அவர் சொன்னது உண்மை என்று நாடகம் முடிந்தபோது தெரிந்து கொண்டேன்
அவரிடம் கற்ற பாடம் எனக்கு மேடையில் நடிக்கும் போது பேருதவியாக இருந்தது
அந்த அளவிற்கு துல்லியமாக பாராட்டு கைதட்டல் எது கலாட்டா கைதட்டல் எது என்று கணிக்க கூடியவர் அவர் இப்பவும் என் நாடகம் நடக்கும் போது ரசிகர்களின் தன்மைக்கேற்ப என்னால் நாடக வேகத்தை மாற்றி கொள்ள முடிகிறது என்றால் அதற்கு அவர் காரணம் 
அவரை என் நாடக குருவாக வணங்குகிறேன்

No comments:

Post a Comment