Friday, November 27, 2015

போஜனம் 


சிறுகதை




நந்தனம் சிக்னலில் கார் வந்து நின்ற பொது உடனே ஒருவன் காலை விந்தி விந்தி ஓடி வந்து கார் கதவை டோக் டோக் என்றுதட்டி கை நீட்டினான்
ரங்கநாதனுக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது
இவன் என்ன கார் கதவை தட்டி பிச்சை கேட்பது
என்று நினைக்க அருகில் இருந்த அவர் மனைவி
போனாப்போகுது ஒரு 5 ரூபாய் கொடுதிடுங்களேன்
என்று சிபாரிசு செய்தாள் அவருக்கு இன்னும் ஆத்திரம் பற்றிகொண்டு வந்தது
கேக்கறது பிச்சை இதுலே அதிகார பிச்சையா என் கார் கதவை தட்டறானே இதை துடைக்க அவனுக்கு அருகதை இல்லை என்று பொங்கினார்
பாவங்க கால் வேற சரியில்லை
அதெலாம் சும்மா கொஞ்ச நேரம் கழிச்சி பாரு ஓடுவான்
என்று சொல்லிவிட்டு சிக்னல் கிடைத்ததும் வேகமாக காரை கிளப்பிக்கொண்டு சென்றார் ரங்கநாதன்
மறுநாள் அவருடைய பெண்ணிற்கு கல்யாணம் மிகப்பெரிய சத்திரத்தில்
அதை சத்திரம் என்று சொல்லிவிட முடியாது
அது ஒரு RESORT என்று சொல்லலாம்
ஊருக்கு வெளியே மகாபலிபுரம் போகும் வழியில் கடற்கரை ஓரமாக மிகப்பெரிய தோட்டம் அதிலே உள்ளே ஒரு கோடியில் மிக பிரம்மடமான மண்டபம் சாலையிலிருந்து உள்ளே வர ஒரு கிலோமீட்டருக்கு மேலே இருக்கும் அதுவரையில் ஒரே தோப்பும் துரவும்தான்
ரங்கநாதன் சென்னையின் குறிபிட்டு சொல்லக்கூடிய வர்த்தகர்களில் ஒருவர் குறைந்த பட்சம் 5௦௦௦ பேர்களாவது திருமண வரவேற்பிற்கு வந்து விடுவார்கள் அதற்காகவே இந்த RESORT ஏற்பாடு செய்திருந்தார் அவர்
மாலைக்கு மேல் வருகின்றவர்கள் இரவு தாமதம் ஆனால் அங்கேயே தங்கி கொள்ளலாம் சகல வசதிகளும் அங்கே உண்டு
பல குளிசாதன அறைகள் பார் ஸ்விம்மிங் POOL டென்னிஸ் கோர்ட்
என்ன இல்லை அங்கு
பார்த்து பார்த்து அழைத்திருந்தார் சென்னையின் மற்ற VVIP களை அவரது நட்பு வட்டாரம் அரசியல் கலப்பில்லாத நண்பர்கள் கொண்டது
அதனால் பெரிய போலீஸ் கெடுபிடி போன்றவை அங்கே இருக்காது
காலையிலேயே RESORT க்கு வந்து விட்டார் ரங்கநாதன் கூடவே அவர் மனைவியும் வந்து விட்டார்
பத்திரிக்கைகள் மடுமே கிட்டதட்ட 5௦௦௦ தாண்டி விட்டது
நிச்சயம் 5௦௦௦ இலைகளுக்கு குறைவிருக்காது என்று CONTRACTOR இடம் சொல்லி ஏற்பாடு செய்ய சொல்லிவிட்டார்
பிரமாண்டமான சமயலறையில் சாப்பாடு தயாராகிக் கொண்டிருந்தது
இந்த மாதிரி ஒரு இடத்தை முதல்லே கண்டுபிடிச்சு கல்யாணம் பண்ணவன் நானாகத்தான் இருப்பேன் என்று பெருமை அடித்து கொண்டிருந்தார் மனைவியிடம்
மொத்தம் 102 வகையறாக்கள்
20 வகை ஊருகாய் பீடாவோட சேர்த்து
என்று இவரது கர்வத்திற்கு எஎண்ணை விட்டுகொண்டிருந்தார் CONTRACTOR
வாசலில் இலைகளையும் அதில் மிச்சமாகப் போகும் உணவையும் கொட்டுவதற்கு ராட்சத பீப்பாய்கள் வந்து அடுக்கி வைக்க பட்டன
இலையை எடுத்து போட்டவுடனே மிச்சத்தை சாப்பிடறதுக்கு அள்ளிகிட்டு போறதுக்குன்னு ஒரு கும்பல் வரும் அதுங்க மொத்த இடத்தையும் அசிங்கம் பண்ணிடுவாங்க நாலு ஆட்களைப் போட்டு அந்த மாதிரி கும்பல்களை முன்னாடியே விரட்டி அடிச்சிடுங்க
என்றார் CONTRACTOR ன் ஆளிடம்
அவரோ ஒரு பெரிய ஆர்வக்கோளறு சிறு வயது
கவலையே படாதிங்க சார் ஒரு நாய் வராது என்றான்
ரங்கநாதனுக்கு சுருக்கென்றது நாய் என்றதும்
முக்கியமா நாயெல்லாம் வராம பாத்துக்க இலை எல்லாம் கொதறிப் போட்டு கிழே தள்ளிவிட்டிடும்
என்று சொல்லி விட்டு வேறு வேலை கவனிக்க சென்றார்
மாலை முன்று மணி இருக்கும் வாசலில் கார்டனில் பெரிய பெரிய வண்ண குடைகளை நட்டு காப்பி ட்ரிங்க்ஸ் பானி பூரி பேல்ல் பூரி பாப்கோர்ன் பழங்கள் போன்றவற்றை தனித்தனியாக ருசிக்க சுவைத்து மகிழ ஸ்டால்களை நிர்மாணித்து கொண்டிருந்தார்கள்
ஒவ்வொன்றாக விசிட் அடித்து கொண்டு வந்த ரங்கநாதன் எந்தெந்த ஸ்டால் எங்கெங்கு இருக்க வேண்டும் என்று முறைபடுதிக்கொண்டிருந்தார்
காற்று மெல்ல விசிக் கொண்டிருந்தது
குடைகள் லேசாக ஆடிக்கொண்டிருந்தன
நான் போய் டிரஸ் பண்ணிகிட்டு தயாராகிட்டு வந்திடறேன்
என்று சொல்லிவிட்டு உள்ளே போனார் வழக்கம் போல தன மனைவி பின் தொடர
உள்ளே AC ரூமிற்குள் நுழைந்து தனது புதிய சூட் எவ்வளவு அழகா பிட்டிங்கா இருக்கிறது என்று பார்த்துக்கொண்டிருக்கும் போது லேசாக பட்டாசு வெடி போல சத்தம் கேட்டது
ஆகா கல்யாணத்திற்கு வான வேடிக்கை சொல்லாமல் போய்விட்டோமே என கொஞ்சம் வருத்தம் கொண்டார்
மறுபடியும் அந்த சதம் இன்னும் அருகில் கேட்பது போல கேட்டது
ஜன்னலை திறந்து நோக்கினர் தூரத்தே கருமேகங்கள் சூழ்ந்து கொண்டிருந்தன
JUST PASSING CLOUDS
என்று தனக்குள் சொல்லிவிட்டு தனது கோட்டை மாட்டிக்கொண்டு வெளியே வந்தவருக்கு மரியாதையை செலுத்தும் விதமாக ஒரு பல வண்ண குடை அவர் காலடியில் வந்து விழுந்தது
என்ன சங்கர் என்னாச்சு
என்று அந்த உதவியாளரை அழைத்துக் கொண்டு தோட்டத்திற்க்குள் வர அவரது கோட்டில் காக்கை எச்சம்போல பச்சகென்று ஒரு பொட்டு நிர் பட்டு தெரித்தது
என்ன என்று அவர் அண்ணாந்து பார்க்கும் பொது அவர் முகத்தில் டைரக்டர் ஆகஷன் என்று சொன்னவுடன் பெய்யுமாமே அப்படி திடிரென மழை நீர் விழுந்தது
சுதாரித்துக்கொண்டு வெளியே வர மழை வேகமாக பெய்ய ஆரம்பித்தது
மின்விளக்குகளை தூக்கிக்கொண்டு ஓடினார்கள் சிலர்
அதை பிளாஸ்டிக் பேப்பர் கொண்டு முடினார்கள்
குடைகள் வேகமாக இருப்பிடத்தை விட்டு மேல்நோக்கி நகர்தன பேப்பர் கப்புகள் பறக்க ஆரம்பித்தன மேஜை விரிப்புகள் கலைந்தன ஒவ்வொன்றாக ரங்கநாதன் பார்த்து முடிப்பதற்குள் வேகமான காற்றும் பலமான மழையும் பிடித்து கொண்டன
மணி 5 இது துவக்க நேரம்தான்
இதன் பிறகு இடைவேளை விடாத திரைப்படம்போல மழை வெளுத்து வாங்கியது காற்றும் மழையும் தவிலும் நாதஸ்வரமும் போல கச்சேரி செய்தன இடியும் மின்னலும் பக்க வாத்தியங்களாக ஒலித்தன மழை மழை மழை தான்
முதலில் வந்த ஒரு 50 பேர்கள் தவிர வேறு யாரும் அந்த மண்டபத்திற்கு அதுவரையில் வந்து சேரவில்லை வழியில் வெள்ளமாம் மரம் விழுந்து விட்டதாம் கார்கள் பஸ்கள் லாரிகள் என அங்கங்கே நிற்கிறதாம்
ஒவ்வொருவருக்கும் தொலைபேசி விவரங்களை தெரிந்து கொண்டார் ரங்கநாதன்
எல்லாரும் ஒரே குரலில் தங்கள் வருதத்தை ஓரேவார்த்தையில் தெரிவித்துக்கொண்டனர்
ஒரு வேளை கல்யாணத்தை ஏவிஎம் ரஜெஸ்வரியிலே வச்சிருக்கலாமோ சரவணன் கூட நம்ம FRIEND தானே என யோசித்தார்
ஆனால் சற்று நேரத்திற் கெல்லாம் சரவணனே போன் செய்து ஏவிஎம் ரஜேஸ்வரி நிலை இன்னும் மோசம் என்று பகிர்ந்து கொண்டார் அவரும் ஒற்றை வார்த்தையில் SORRY
ரமணனை அழைத்தோமா என்று அப்போது அவருக்கு சந்தேகம் வந்தது
மணமக்களுக்கு பின்னாலிருக்கும் மேஜையை பார்த்தார்
ஒரு சில கலர் பெட்டிகளே அங்கு நிரம்பி இருந்தன பெண்ணும் மாப்பிள்ளையும் நின்று நின்று களைத்து போகாமல் உற்சாகமா காதல் மொழிகளை பகிர்ந்து கொண்டிருந்தார்கள்
சாப்பிடும் ஹாலை எட்டிப் பார்த்தார் அங்கே 100 பேர் அமரும் வரிசையில் இருவர் சாப்பிடடு கொண்டிருந்தனர் பல வரிசைகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு நாற்பது பேர் தேறும்
எவ்வளவு ஆடம்பரமாக நடந்து இருக்க வேண்டிய திருமணம் இது என்று யோசித்து கண்ணாடியை கழட்டி கண்களை துடைத்து கொள்ளலாமா என யோசித்தவர் நாலு பேருக்கு முன்னால் வேண்டாமென தன தனி அறைக்கு திருமினார்
சிறிது நேரத்திற்கு எல்லாம் CONTRACTOR MRS ரங்கநாதனுடன் உள்ளே நுழைந்து
அண்ணா கச்சேரி ஆட்கள் கூட வந்து சேரலை அதெல்லாம் கூட நான் உங்க கிட்ட கேட்டு வாங்க மாட்டேன் ஆனா 5௦௦௦ சாப்பாடு மிச்சமாறது ஸ்வீட் வடை VEG ரோல் எல்லாமே அஞ்சாயிரம் அஞ்சாயிரமனு இருக்கே என்னாலே திருப்பி எடுத்துண்டு போக முடியாது சாக்கடையிலே கொட்டவும் மனசு வரலை...ஒண்ணு ரெண்டுன்ன நாங்க எல்லாரும் ஆளுக்கு கொஞ்சம் எடுத்துண்டு போய்டுவோம் மீதிய என்ன பண்ணறதுன்னு.....
என்று கையை பிசைய
மற்ற நேரமாக இருந்தால என் தலையிலே கொட்டுய்யான்னு கோபமாகக் கத்தி இருப்பார் ரங்கநாதன்
ஆனால் இப்போது அந்த குரல் வரவில்லை
மனது கனத்தது
என்ன தப்பு பண்ணேன் என்று யோசித்தார் சற்று நேரம்
டோக் டோக் என்று கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது அந்த சத்தம் தனக்கு கடவுள் ஏதோ ஒரு பதில் சொன்னது போல இருந்தது ரங்கநாதனுக்கு
கதவை திறந்து கொண்டு RESORT மேனேஜர் வந்தார்
அவருக்கும் நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக விளங்கியது
அய்யா பக்கத்துலே ஒரு அநாதை ஆசிரமம் இருக்கு அங்கே ஒரு இரண்டாயிரம் குழந்தைங்க ஐநுறு வயசானவங்க இருக்காங்க அவங்களுக்கு இன்னக்கு மழையிலே சாப்பாடு இல்லையாம் இதெல்லாம் அங்கே கொண்டு போயிட்டிங்கன்னா...... ஐயா தப்பா நினைக்கக் கூடாது
என்று தயங்கி தயங்கி கூறினார்
ரங்கநாதன் அதிக நேரம் யோசிக்கவில்லை
CONTRACTOR ஐப் பார்த்து
புறப்படுங்க
என்றார்
ரங்கநாதனின் பெரிய காரில் சாதமும் பருப்பும் சாம்பாரும் பட்சணங்களும் அப்பளமும் சிப்சும் வடைகளும் பாயசமும் மாயா பஜார் படத்தில் வரூவது போல பவனி வந்தன
மழை லேசாக விட்டு அவர்களுக்கு வழி கொடுத்தது மின்னல் வெளிச்சம் வழி காட்டியது இடி முழக்கம் துரத்தே யாரோ கைதட்டுவது போல கேட்ட்டது மாப்பிள்ளையும் பெண்ணும் மனைவியும் கூட வர இலைகள் பச்சை கொடி காட்ட ஆசிரமத்தை அடைந்து எல்லோருக்கும் இலை போட்டு பரிமாறினார்கள்
எல்லோரும் வேண்டியதை மட்டும் கேட்டு சாப்பிட்டார்கள்
திருப்தியாக சாப்பிட்டார்கள் சந்தோஷமாக கைகுலுக்கினார்கள்
பெரியவர்கள் மணமக்களை எந்தவித போலித்தனமும் இல்லாமல் வாழ்த்தினார்கள்
அவசர அவசரமாக கொண்டு வந்த கிப்ட் பாக்கெட்டை கையிலே திணித்து விட்டு போட்டோ வீடியோ எடுத்துக்கொண்டுசாப்பாட்டு கூடத்தை நோக்கி ஓடும் அவசரம் அங்கு இல்லை
காதை கிழிக்கும் சத்தங்கள் இல்லை
ஒரு மாபெரும RECEPTION அங்கு அரங்கேறியது
சாப்பிட்டு முடித்தவுடன் இலைகள் அடுத்த பந்திக்கு தயார் என்பது போல சுத்தமாக இருந்தன
கமலா ரொம்ப திருப்தியா இருக்கு என்றார் ரங்கநாதன் மனைவியிடம்
கமலா! அங்கே எவ்வளவு பேர் சாப்பிட்டாலும் அதுலே மிச்சம் மிதி வச்சு வீண் அடிக்கறதைவிட விட இங்கே எல்லாமே பயன்பட்டதுலே ரொம்ப திருப்தியா இருக்கு சக்கரை வியாதிக்காரன் இனிப்பு வாங்கி விணடிபான் BP காரன் ஊறுகாயையும் உருளையும் போட்டுகிட்டு ஒதுக்குவான் இதெல்லாம் தான் என் பெருமைக்கு காரனம்ம்னு நினைச்சேன் ஆனா இப்பதான் தெரியுது பசிச்சவனுக்கு சோறு போடறதுதான் உத்தமம்னு
என்று சொல்;லிவிடடு டிரைவரிடம்
ஆமாம்.... போற வழியிலே தானே நந்தனம்,சிக்னல்?
என்று விசாரித்துக் கொண்டார்

No comments:

Post a Comment