Thursday, November 5, 2015


நெதர்லாண்ட்ஸ் பயணம் இரண்டாம் பகுதி 


வேளசேரி வீட்டிளிருந்து புறப்பட்டவுடனேயே என் மனைவி பிள்ளயாருக்கு ஒரு தேங்காய் உடைத்து விட்டு போக வேண்டுமென்றாள்
நேரமாகிக்கொண்டே இருப்பதால் வழியில் எங்காவது உடைக்கலாம் என்று நான் சொல்ல அவளும் முணு முணு த்துக் கொண்டே சரி என்க புறப்பட்டு விட்டோம்
ரெண்டு நிமிடத்திற்கு ஒரு முறை பிள்ளையாரை ஞாபகப்படுத்தினாள் சென்னையில் தெருவிற்கு தெருவு இருக்கும் பிள்ளையார் எங்கே பொய் ஒளிந்து கொண்டாரோ தெரியவில்லை இருந்த ஒரே கோவிலும் பூட்டி இருக்கவே BAMGALORE ல் பார்த்துக் கொள்ளலாமென சொல்ல அவள் முகம் இறங்கி போயிற்று
பெங்களூர் வந்தால் Airport ஞாபகமாக இருக்கவே பிள்ளையரை மறந்து போய் துபாய் FLIGHT பிடிக்க விமான நிலையம் வந்து விட்டோம் அப்போதுதான் முதல் படியை கடந்து LUGGAGE வெயிட் பார்த்து விட்டு சரியாக இருக்கவே அந்த பெண் என்னை பார்த்து உள்ளே தேங்காய் வைத்திருக்கிறிகளா என்று கேட்டாள்
எனக்கு பிள்ளையார் ஞாபகம் அப்போதுதான் சுரீர் என்று உரைத்தது என் மனைவி என்னை அர்த்த புஷ்டியுடன் நோக்கினாள் அவளுக்கு இந்த அமானுஷ்ய விவகாரங்களில் பெரும் நம்பிக்கை உண்டு
தேங்காய் எதுவும் இல்லை எனவும், அவள் மிண்டும் ஒரு முறை எங்களை பார்த்து நிச்சயமா சொல்ல முடியுமா என்று கேட்க எதிரில் GOWN அணிந்த பிள்ளையார் என் மனக்கண்ணில் முன்னால் ஒரு முறை வந்து போனார்
நிச்சயமாக சத்தியமாக என்று சொல்லி அங்கிருந்து புறப்பட்டோம்
என்ன நினைத்துது கொண்டிருக்கிறார்கள் இவர்கள் நான் என்ன நெதர்லாண்ட்ஸ் க்கு தேங்காய் உடைக்கவா போகிறேன் இல்ல எங்களைப் பார்த்தா அப்படி ஏன் தோணனும் என்று உள்ளுக்குள் பொருமி என் இயலாமையை ஆத்திக்கொண்டேன்
அங்கிருந்து நேராக iIMMIGRATION
என்னுடைய பாஸ்போர்டை கொடுத்தவுடன் என்னையும் என் பாஸ்போர்ட் ஐயும் மாறி மாறி பார்த்த அவன் என்ன சார் முதல் முறையா என்று கேட்க நான் இல்லை இதற்கு முன் ஆஸ்திரேலியா ஒரு முறை போயிருக்கிறேன் என்று மெல்ல பதில் சொன்னேன்
அவன் எதற்காக இந்த கேள்வியை என் முகத்தைப் பார்த்து கேட்கிறான் என்பது புரியாமல் ஒருமுறை நெற்றியை கண்ணாடியில் பார்த்து கொள்ளவேண்டும் போல இருந்தது
ஆனா இவள் 6 ம முறை என்று படையப்பா பாணியில் பதில் சொன்னேன்
அவர் கேட்டாரா என்கிற EXPRESSION ல் என் மனைவி என்னை பார்க்க (பார்க்க என்பது ரொம்ப மிதம்)
எதுக்கு சார் போறீங்க என்று அவன் கேட்க
இந்த முறை என் மனைவி முந்திக்கொண்டு மகளுக்கும் பிரசவம் என்று முடித்து வைத்தாள்
அடுத்த கேள்விக்கு நான் தான் பதில் சொல்வேன் என்று QUIZMASTER ஐ எதிர் நோக்கும் மாணவன் போல கை தூக்க தயாராக இருந்தேன்
எத்தனை மாசம் என்றார்
எட்டு என்று சடாலென பதில் சொல்ல
அவர் பாஸ்போர்ட் ஐ கிழே போட்டு விட்டார்
என்ன சார் விசாவே 90 நாள் தான் எப்படி.......என்று இழுக்க
என் மனைவி மறுபடியும் குறுக்கிட்டு (என் விஷயத்தில் குருக்கிடுவதே அவள் வழக்கம்)
அவர் தப்பா சொல்லறார் (பல சந்தர்ப்பங்களில் உளறுகிறார் என்று சொல்லுவாள்)
இன்று என்ன MOOD ஓ தெரியவில்லை நாங்க போறது 3 மாசத்துக்குதான் என் பொண்ணுக்குதான் எட்டு மாசம் என்று திருத்தினாள்
அவர் முகத்தில் முதல் முறையாக ஒரு புன்னகை பார்த்தேன்
பட்டு பட்டு என்று ரெண்டு பாஸ்போர்டிலும் ஸ்டாம்ப் குத்திவிட்டு போங்க என சொல்ல இந்த COUNTER ல் இருந்து புற்றப்பட்டால் போதுமென திரும்பி போக சார் அப்படி போனா வெளியே போய்டுவிங்க இப்படி உள்ளே போங்க என்று என்னை திசை திருப்பினார்
அங்கிருந்து புறபட்டு நேரடியாக கஸ்டம்ஸ் சோதனை
நான் உள்ளே போகும் போதெல்லாம் அது கி.. கி என்று கதற துவங்கியது என்னடா மும்பைக்கு வந்த சோதனை என நினைத்து ஒரு முறை பெல்டை கழட்டினேன் அடுத்த முறை பையிலிருந்தசாவியை எடுத்தேன் அடுத்து பையிலிருந்த காசை எல்லாம் எடுத்து கொட்டினேன் காசெல்லாம் பார்த்தவுடன் அது வாயடைத்து போய்விட்டது
இந்த சோதனையிலும் வெற்றி ஆகா என மகிழ்ந்து ஒரு வழியாக விமானத்தை வந்து அடைந்தோம் சின்ன வயதிலிருந்தே ஜன்னல் ஓர இருக்கையை ஓடி பிடித்து அமர்ந்தவனுக்கு சரியாக மையத்தில் நாடு இருக்கையாக அமைந்தது ஏமாற்றம் தான்
பசி வயிற்றை கிள்ளியது
விமானம் புறப்படத் தயாரானது
ஆகாயத்தில் பறக்க ஆரம்பித்தவுடன் ஒரு பெண் நீங்கள் VEGETARIAN ஆ என்று கேட்டு விட்டு சென்றாள்
அருகில் உள்ளவர்களுக்கெல்லாம் தட்டு நிறைய ஏதேதோ நிரப்பி வைத்தார்கள் வேஜிடேரியன் தட்டு வந்தது முன்னால் கொடுதவற்றில் பாதிய காணோம்
எனக்கோ கொலை பசி
திறந்து பார்த்தால் என் மனைவி தினமும் காக்காய்க்கு வைக்கும் அளவிற்கு சாதம் ஒரு சரவணா பவன் சாம்பார் கப்பை விட குறைந்த அளவிற்கு ஒரு கூட்டு கொஞ்சம் SALAD ஒரு பொறை அளவிற்கு பன் ஒரு ஸ்வீட் இவ்வளவுதான் எங்கள் மதிய உணவு
யோசித்து பார்த்தால் நாம் வீட்டில் நிறையவே சாப்பிடுகிறோம் என்ற நினைவை அகற்றாமல் இருக்க முடியவில்லை
அடுத்து துபாய் விமான நிலையம்
நிறைய விமானங்கள் நின்று கொண்டிருந்தன இறங்கினவுடன் என் சீனியர் PARTNER நாம இப்போ டெர்மினல் 3 GATE நம்பர் 2 லே AMSTERDAM FLIGHT பிடிக்கிறோம் எண்று ஸ்ரீஹரி கோட்டா விஞஞானி போல கூறினாள்
அடுத்த flight புறப்பட 2 மண் இ நேரம் இருந்தது கொஞ்சம் நேரம் கிடைத்தால் போதுமே காபி சாப்பிட விழையுமே நாக்கு.......காபி சாப்பிடலாமென ஒரு காபி கடைக்கு முன்னால் போய் நின்றால் அங்கு ஏகப்பட்ட காப்பிகள்
எந்த காபியை அர்ந்துவது என யோசித்து அவர்களிடம் coffee with milk என்று சொல்ல அவரைவிட உயரமான ஒரு கப்பில் (அவர் ஒரு சீனாகாரர்) காபியையும் நுறையையும் கலந்து அளித்தார்
ரெண்டு காபி வூட்லண்ட்ஸ் விலையில் 60 ரூபாய் என கணக்கு பண்ணி எவ்வளவு என்று கேட்க 9.5 யுரோ என்றார் உடனே CALCULATOR எடுத்தேன் 700 ரூபாய் நம்ம ஊர கணக்குக்கு வந்தது
எவ்வளவு குடித்தோமோ அதற்கு கழித்து கொண்டு மிதியை தந்து விடுவார்களா என கேட்கவில்லை
ம்ம்ம்ம் கையிலிருந்த 50 ஐரோ வில் 10 காலி
அப்புறம் AMSTERDAM விமானம் பிடித்து ஒரு வழியாக 7 மணி நேரம் பயனித்து வந்து சேர்ந்தோம் இதற்கிடையில் என் மனைவி sound of music மற்றும் சில படங்களை பார்த்து முடித்திருந்தாள்
விமான நிலையத்தில் இறங்கியவுடன் என் மனம் பக் பக்
இங்குதான் கஸ்டம்ஸ் செக்கிங் எல்லாம் ஒவ்வொரு பெட்டியாக எங்களை சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தது பார்பதற்கு எல்லாமே ஒரே மாதிரி இருக்க எங்கள் பெட்டியை எப்படி எடுப்பது என்று ஒரு பதைப்பில் இருக்க அதோ பாருங்க நம்ம பெட்டி என்றாள்
எப்படி இவ்வளவு சீக்கிரம் கண்டு பிடிச்சே
நீங்க எழுதி ஒட்டினது எவ்வளவு அசிங்கமா தொங்குது பாருங்க என்று நான் செல்லோடேப் போட்டு காயத்துக்கு BANDAGE போல ஒட்டியிருந்த பேப்பர் ஐ காட்டினாள்
எல்லாவறையும் எடுத்துக் கொண்டு நேரே iIMMIGRATION
அங்கே எங்கள் return டிக்கெட் மட்டும் பார்த்து விட்டு stamp போட
இனிமேல்தான் கஸ்டம்ஸ்
என் மனக்கண்ணின் முன்னால் நாங்கள் வாங்கி வந்த புளியும் ஊறுகாயும் முறுக்கும் அரிசி மாவும் சின்னா பின்னா படபோவதை எண்ணி கண் கலங்கினேன்
நேராக கஸ்டம்ஸ் green சேனல்
எதுவும் declare செய்ய தேவை இல்லாதவர்கள் இது வழியாக செல்லலாம் என்று அறிவிப்பு
நான் போய் விடலாம் என்றேன் என் மனைவி இல்லை நாம் கஸ்டம்ஸ் போய் காட்டிவிட்டே போவோம் என்றாள் (ஹரிச்சந்திரிணி) அதுதான் Australia வில் வழக்கம் என்று விளம்பரம் வேறு இல்லாவிட்டால் நாய் வருமாம்
கஸ்டம்ஸ் செக்கிங் கூண்டுகள் எங்கே எங்கே என்று தேடி அலைந்து பார்த்துவிட்டு ஒரு வேளை green சேனல் வழியாக போனால் அவர்கள் மடக்கி பிடித்து கொள்வார்களோ என்னவோ என்று யோசித்து ஒரு பாதை வழியாக நுழைந்தோம் அதுவும் green சேனல் தான வேறு எதுவும் கண்ணில் படவில்லை
ஐயாநான் யார் கிட்டயாவது என் பொட்டியை திறந்து காட்டணுமே என்று புலம்பாமல் புலம்பிக்கொண்டு திரு திரு வென முழித்துக்கொண்டு trolley ஐ தள்ளினேன் இவ்வளவு முழிக்கிறேனே அப்ப கூட யாருக்கும் என் மேல் சந்தேகம் வரவில்லையா? ஐயா என் பெட்டியை பாருங்க சாப்பாட்டு சாமான் தவிர் வேறு எதுவும இல்லை என்று கூவ வேண்டும் போல இருந்தது எல்லாரும் என்னை ரொம்ப நல்லவன்னு சொல்லராங்களேன்னு கண்ணை கசக்கி கிட்டு ஒரு கதவு வழியா வெளியே வந்தா அங்கே நான் கண்ட காட்சி......

No comments:

Post a Comment