Tuesday, November 10, 2015

நெதர்லாண்ட்ஸ் பயணம் மூன்றாம் பகுதி

........................................................................................................
பயணம் தொடங்குவதற்கு முதல் நாள் என் மகள் என்னை அழைத்து உன்னுடைய மொபைல் போனில் இன்டர்நேஷனல் ரோமிங் இருகிறதா பார்த்துக்கொள் என்று சிறிய லக்ஷ்மி வெடியை தூக்கி போட்டாள்
இதேதடா சோதனை என்று மனதில் நினைத்துகொண்டு AIRCEL அலுவலகத்திற்கு போன் செய்து கேட்கலாமே என்று தொடர்பு கொண்டால் அவர்கள் லேசில் வந்து விடுவார்களா என்ன
திருவிளையாடல் சிவாஜி என்கிற சிவ பெருமான் சுந்தரம்பாள் என்கிற ஔவையாரிடம் என்னை ஒன்று இரண்டு என்று வரிசை படுத்தி பாடு என்று சொல்ல அவர் ஒவ்வொரு எண்ணுக்கும் ஒரு அர்த்தம் கற்பிப்பது போல இவர்களும் ஒன்றிலிருந்து ஒன்பது வரை ஏதேதோ சொல்லிகொண்டு போனார்கள் எனக்கு தெரிந்ததெல்லாம் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்பதுதான் நானும் ஒன்றை அழுத்திவிட்டு பாடல் முடியட்டுமென காத்திருந்தேன்
இறுதியில் பிரச்னை தீர்க்கும் நாரதர் போல ஒரு அதிகாரி வந்தார்
என்ன விஷயம்
என்று கேட்டார் INTERNATIONAL ரோமிங் பற்றி விசாரித்தேன்
அவர்கள் எப்பவுமே இந்த PREPAID ஆசாமிகளை இளைய தாரத்து குழந்தை போலவே பாவிப்பார்கள்
அதெல்;லாம் POSTPAID CONNECTION க்குத்தான் உங்களுக்கு இல்லை
என்று கேவலபடுத்த
நான்
அப்போ நாங்கள் என்ன செய்வது
என்று கேட்க
நீங்க அந்த நாட்டுக்கு போன உடனே அதுவா வேலை செஞ்சாலும் செய்யும் இல்லன்னா இல்லை
என்று யாரோ அரசு அதிகாரியை பற்றி சொல்வது போல கூறினார்
சரி நமது தலை எழுத்து என்று எண்ணிக்கொண்டே என் மகளிடம் இதை தெரிவிக்க
அவள்
ஒரு வேளை நாங்கள் யாரவது ஏர்போர்ட் வரவில்லை என்றால் எங்களை அழைப்பதற்காக சொன்னேன்
என்று சொல்ல இப்போது தான என் மனதில் குருவி வெடி வெடித்தது TRAIN ல் சென்றாலே ஸ்டேஷன் உள்ள நுழுயும் போதே நம்மை RECEIVE பண்ண யார் வந்திருக்காங்கன்னு பதட்டம் பட்டு வளர்ந்தவங்க
S2 COMPARTMENT, PLATFORM உள்ள நுழையும்போதே S5 லிருந்து இதோ வந்திட்டேன்னு கை ஆட்டற கும்பலைச் சேந்தவங்களாச்சே
இப்ப என்னடான்னா AIRPORT,.....அதுவும் புது நாடு.... பாஷை வேற தெரியாது... அது என்னவோ DUTCH ஆமே....சுத்தம்
நான் காலேஜ் முடிசசவுடனே எங்கப்பா என்னை MAXMUELLER BHAVAN லே GERMAN படிக்க வச்சாரு அப்பவே அந்த வாழப்பழத்தை வாயிலே அடக்கிகிட்டு பேசற மொழி கொஞ்சமும் மனசுலே ஏறலை
ஓரளவுக்கு GERMAN லே என் பேரை சொல்ல கத்துகிட்டேன் அவ்வளவுதான் இதை வச்சு சமாளிக்கலாமான்னு கேட்க
இது வேற அது வேற என்றாள்
சரி இப்ப என்ன செய்யனுங்கிற
என்று கேட்டு வைத்தேன்
ஒண்ணும் பிரச்சனை இல்லைப்பா (எவ்வளவு சுலபமா சொல்லிட்ட) ஒரு வேளை நாங்க ஏர்போர்ட் வரலைன்னா (வந்திடும்மா) எனக்கு டெலிவரி டைம் ஆகி நான் HOSPITAL போகிறதா இருந்தா வரமாட்டோம் நீ என்ன பண்றே ஏர்போர்ட் வந்த வுடனே உன் மொபைல் வேலை செய்யுதா பாரு இல்லன்னா WI FI CONNECTION எங்க இருக்குன்னு கேளு போய் அதுலே CONNECTION வாங்கிக்க
அம்மா என் WIFE கூடவே நான் பல சமயம் தொடர்பு எல்லைக்கு வெளியிலேயே இருக்கேன் இதுலே எப்படிம்மா WI FI எல்லாம்
எனக்கேட்க நினைத்தேன் என் அமைதியை பார்த்து மறுபடியும்
ஒண்ணும்பிரச்னை இல்லைப்பா அங்கே இருக்கறவங்க கிட்ட WI FI எப்படி காங்நேச்டின் வாங்கணும்னு கேளு
நானு!!ஒரு பாஷை தெரியாத ஊர்லே கேக்கணும்!!! சரிதான்
ஒண்ணும் பிரச்னை இல்லைபா என்று அவள் ஆரம்பிக்க
சரி என்று கேட்க துவங்கினேன்
அவங்ககிட்ட கேக்கும் பொது உங்களுக்கு ENGLISH தெரியுமான்னு கேளு
அம்மா எங்க ஊர்லே யார்கிட்டயாவது இங்கிலீஷ் தெரியுமான்னு கேட்ட அடிப்பங்கம்மா என்றேன்
அப்பா! ஒண்ணும்....
தெரியும் ஒண்ணும் பிரச்னை இல்லை அதானே
ஆமாம் இங்க யாரும் தப்பா நினைக்க மாட்டாங்க உங்க கிட்ட ENGLISH லே பேசலாமான்னு கேளு.........
அடடே!!!!
இந்த கேள்வியை நம்ம ஊர்லே பல பேர்கிட்ட நான் கேட்காததாலே வந்த சிக்கலை நினைத்துகொண்டேன்
பேசலாம்னு சொன்னா அப்ப WI FI பத்தி கேளு அவங்க GUIDE பண்ணுவாங்க அப்புறம் எங்களுக்கு போன் பண்ணு AIRPORT லேந்துஎப்படி வீட்டுக்கு வரணும்னு சொல்லறேன்
அம்மா உங்க விடு எவ்வளவு துரம்மா
ஒண்ணும் பிரச்னை இல்லைப்பா 200 கிலோ மீட்டர்தான் TRAIN பிடிச்சு வந்திடலாம்
அய்யஹோ ஏர்போர்ட் அப்புறம் ரயில்வே ஸ்டேஷன் அப்புறம் LUGGAGE அப்புறம் ஸ்டேஷன் லேந்து வீடு
ஒண்ணும் பிரச்சனை இல்லம்மா
என்று சொல்லிட்டு போனை வைத்துவிட்டேன்
இதுக்கப்புறம் PLANE
ஆங் முக்கியமான விஷயத்தை சொல்ல மறந்திட்டேனே நல்ல வேளை என் பெண் எனக்கும் என் மனைவிக்கும் சாப்பாடு DIABETIC DIET என்று எழுதிக்கொடுக்கவில்லை
கொடுத்திருந்தால்
எனக்கு இத்தனை நேரம் தாடி முளைச்சு ரெண்டு கொம்பு முளைச்சு எங்கியாவது கசாப்பு கடையில் தொங்கிக்கொண்டிருப்பேன்
எப்படியோ AMSTERDAM வந்து சேர்ந்தேன்
(இதற்கு பிறகு பகுதி ரெண்டில் உள்ள இந்த பகுதியை சேர்த்து கொள்ளவும்)
நேராக கஸ்டம்ஸ் green சேனல்
எதுவும் declare செய்ய தேவை இல்லாதவர்கள் இது வழியாக செல்லலாம் என்று அறிவிப்பு
நான் போய் விடலாம் என்றேன் என் மனைவி இல்லை நாம் கஸ்டம்ஸ் போய் காட்டிவிட்டே போவோம் என்றாள் (ஹரிச்சந்திரிணி) அதுதான் Australia வில் வழக்கம் என்று விளம்பரம் வேறு இல்லாவிட்டால் நாய் வருமாம்
கஸ்டம்ஸ் செக்கிங் கூண்டுகள் எங்கே எங்கே என்று தேடி அலைந்து பார்த்துவிட்டு ஒரு வேளை green சேனல் வழியாக போனால் அவர்கள் மடக்கி பிடித்து கொள்வார்களோ என்னவோ என்று யோசித்து ஒரு பாதை வழியாக நுழைந்தோம் அதுவும் green சேனல் தான வேறு எதுவும் கண்ணில் படவில்லை
ஐயாநான் யார் கிட்டயாவது என் பொட்டியை திறந்து காட்டணுமே என்று புலம்பாமல் புலம்பிக்கொண்டு திரு திரு வென முழித்துக்கொண்டு trolley ஐ தள்ளினேன் இவ்வளவு முழிக்கிறேனே அப்ப கூட யாருக்கும் என் மேல் சந்தேகம் வரவில்லையா? ஐயா என் பெட்டியை பாருங்க சாப்பாட்டு சாமான் தவிர் வேறு எதுவும இல்லை என்று கூவ வேண்டும் போல இருந்தது எல்லாரும் என்னை ரொம்ப நல்லவன்னு சொல்லராங்களேன்னு கண்ணை கசக்கி கிட்டு ஒரு கதவு வழியா வெளியே வந்தா அங்கே நான் கண்ட காட்சி...........
அங்கே பார்த்தால் என் மாப்பிள்ளை கையை ஆட்டிக்கொண்டே நிற்கிறார்
மாப்பிள்ளை நீங்க எங்கே இங்கே
கஸ்டம்ஸ் லே சேர்ந்துட்டிங்களா
என்று வழக்கமாக ஒரு அசட்டுதனமான் கேள்வியை கேட்க
என் மனைவி ஒரு இடி இடித்தாள்
அப்பா நீங்க வெளியே வந்துட்டிங்க
என்று ஜெயிலிருந்து வெளி வந்த கைதியை வரவேற்பது போல வரவேற்றார்
அப்போ கஸ்டம்ஸ் எதுவுமே செக் அப் பண்ணலியே நான் உள்ள பொய் ஒருதடவை திறந்து கட்டிட்டு வந்திடட்டுமா
என்று கேட்டுக்கொண்டு TROLLEY ஐ திருப்ப
ஐயோ நீங்க AIRPORTக்கு வெளியே வந்திட்டிங்க என்று கூறி எங்களை கார் பார்கிங்க்கு அழைத்து போனார்
மணி என்ன என்று கேட்டேன்
மணி இரவு 9 ஐ காட்டியது
வெளியே பட்டப்பகல் போல வெய்யில் அடித்துகொண்டிருந்தது ஒரு வேளை இது வேற நாடோ என்ற ஐயம் என் அசட்டு மனதில் தோன்றாமல் இல்லை
இங்கே ராத்திரி பத்தரைக்கு தான அஸ்தமனம் என்று மாப்பிள்ளை கூற
உதயம்??? என்று நான் கேட்க
அது காலை 5 மணிக்கெல்லாம் ஆயிடும்
அப்ப நான் கொஞ்ச நாளைக்கு ராத்திரியே பாக்க போறதில்லையா
கவலையே படாதிங்க இன்னும் கொஞ்ச நாள் தான் அப்புறம் ஒரு நாலு மணி நேரம் தான பகல் பாக்கியெல்லாம் ராத்திரிதான்
என்றார் என் மாப்பிள்ளை
பசி வயிற்றை கிள்ளியது குறிப்பறிந்து ஒரு TIFFEN CARRIER ஐ தர....
திறந்தால் எனக்கும் என் மனைவிக்கும் ரவை இட்லி தயிர்சாதம் மோர் மிளகாய்
காரில் பயனித்துக்கொண்டே எங்கள் இரவு சாப்பாட்டை முடித்துக்கொண்டோம்
இரண்டு நாட்களுக்கு பிறகு ரவை இட்லியும் தாயிர் சாதமும் மோர் மிளகாயும் அமிர்தமாக இருந்தன
இரண்டு மணி நேரத்தில் வீடு வந்து சேர்ந்தோம்
இனி இங்கு தாங்கும் நாட்கள் ஒரு மூன்று மாதம்

No comments:

Post a Comment