Saturday, October 31, 2015

பொன்னியின் செல்வன் பார்த்திபன் கனவு போன்ற ஒலி புத்தகங்கள் வெளியிட்டு விழாக்களில் எனக்கு பெரிதும் பக்க பலமாக இருந்த வரும் அந்தவிழாக்கள் வெகுசிறப்புடன் அமைய பெரும்காரணமாக இருந்தவருமான எனது நண்பர்ஒருவரைப் பற்றிஇது வரை எழுதாமல்இருந்து விட்டேன்
BETTER LATE THAN EVER
இவரை எனக்கு அறிமுகப் படுத்தியவர் திரு Evr Mohan அவர்கள் இருவரும் ஒரே வங்கி
இவரை நான் முதன் முதலில் சந்தித்தது இவர்வேலை பார்த்து வந்த STATE BANK OF NDIA பாண்டிச்சேரி அலுவலகத்தில்
முதன் முதலில் சந்தித்த உடனேய நாங்கள் மிகவும் நெருங்கி விட்டோம அவ்வளவு எளிமையாக இருந்தார்
கவிஞர் எழுத்தாளர் வங்கி அதிகாரி என்ற பல முகங்கள் அவருக்கு
பின்னர் ஒருநாள் இரு வீடு ஒரு வாசல் DVD வெளியிட்டிற்கு பிறகு அவரை அவரது கோபாலபுரம் அலுவலகத்தில் சந்தித்தேன
DVD பற்றி கூறிய வினாடியே அந்த கிளை வாடிக்கையாளர்களுக்கு கொடுப்பதற்காக சில dvd களை வாங்கிக் கொண்டு எனது வியாபாரத்தை துவக்கி வைத்தவர் அவர்.
அது மட்டுமா என்னை சென்னையில் எல்லா கிளைகளுக்கும் அறிமுகப் படுத்திவைத்து எனக்கு உற்சாகம் அளித்தவர் அவர்
அவரது உதவி மனப்பான்மையினால் பயனடைந்தவர்கள் பலர்
இது ஒரு நல்லபரிசு பொருளாக வாடிக்கையாளர்களுக்கு இருக்கும் என்பதை தான் உணர்ந்ததோடு மட்டுமல்லாமல் எனக்கு ஒரு பாராட்டு கடிதமும் வழங்கி கௌரவித்தார்
இவர் அளித்த ஊக்கம் தான் எனக்குமே;லும் மேலும் DVD க்கள் தயாரிக்க பெரிதும் தைரியத்தைக் கொடுத்தது பின்னர்ஒருநாள் நான் அரவிந்த அன்னையின் பாடல்கள் தயாரிக்க முற்பட்ட போது எனக்காக பல பாடல்களை எழுதிக் கொடுத்து அந்த ஒலிIத் தொகுப்பு பெரிதும் வெற்றியடைய உறுதுணையாக நின்றவர் அன்னையின்பக்தர்
அவர் அன்னையைபற்றி பல கட்டுரைகளை எழுதியவர் ஒரு வித்தியாசமான முயற்சியாக இருக்கட்டுமேஎன நான் ஆசைபட்டது சமையல் DVD
SUPERSAMAYAL என்ற பெயரில் நான்வெளியிட்ட DVD ல் இருந்த அத்தனை சமையல் குறிப்புகளும் அவர் மனைவியின் கைவண்ணம்
இவர் சாந்தி விஜய கிருஷ்ணன் என்றபெயரில் டிவி பத்திரிக்கைகளில் மிக பிரபலம்
என்னுடைய தயாரிப்பான எனது முதல்ஒலிப்புதகம் SAIBABA வாழ்க்கை சரித்திரத்தில் குரல் கொடுத்த நால்வரில் ஒருவர்
பாக்கியம்ராமசாமியின் அப்புசாமியும் ஆப்பிரிக்க அழகியும் DVD க்கு TITLE SONG இவர் கற்பனையில் உதித்த அழகியபாடல்
கவித்துவமாகவும் நகைச்சுவையாகவும் எழுத முடியுமென நிருபித்தவர் ஆச்சி மனோரமா நடித்த ஆட்சி மாற்றத்திலும் இவரது பாடல்தான்
இப்படி எனனுடைய ஒவ்வொரு தயாரிப்பிலும் இவரது பங்கு பெரிது
இவை எல்லாவற்றிற்கும் மேல் பொன்னியின் செல்வன் வெளியிட்டன்று வந்திருந்த கூட்டத்தை நாற்காலிகளில் கட்டிப் போட்டது இவரது சுவை மிக்க வர்ணனை இன்று எல்லோரும் விழாவைப்பற்றி பேசும் போது இவரைக் குறிப்பிட்டு ஓரிரு வார்த்தைகள் சொல்லாமல் இருக்க மாடார்கள்
இதே போல பார்திபன் கனவுவெளியிட்டு விழாவிலும் இவரது தொகுப்புரை விழாவிற்கே ஒருசிகரம்
அதை மேடையிலே பாராட்டியவர்கள் சிவசகரி இந்திரா சௌந்தரராஜன் போன்ற எழுத்தாளர்களும்ம் ARS வைஜெயந்திமாலா போன்ற கலைஞர்களும் நல்லி செட்டியாரும் ஆவார்கள்
அப்படிப்பட்ட ஒரு சிறந்த நண்பரை எனக்கு அளித்த இறைவா உனக்குநன்றி
ஓ யாரென்று சொல்லவில்லை அல்லவா
வேறு யார்
கவிஞர் பட்டிமன்ற பேச்சாளர் நாவலாசிரியர் சென்னை தொலை காட்சியில் செய்தி வாசிப்பாளர் வங்கிஅதிகாரி போன்ற பன்முகங்களைக் கொண்ட என் இனிய நண்பர் திரு Vijayakrishnan Seshadri அவர்கள்தான்
மிக்க நன்றி கடன் பட்டிருக்கிறேன் சார்
நன்றி நன்றி நன்றி
இவரது நாவல் கடல் நிலம் தனுஷ்கோடி புயல் பின்னணியில் எழுதப்பட்டது
மிக பிரபலமான ஒன்று
இவரிடம் TIME MANAGEMENT பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமென நானும மோகனும் அடிக்கடி பேசிக் கொள்வோம்
ஓரிரு வேலைகள் இருந்தாலே நேரமில்லை என்று சொல்லும் என்னை போன்றவர்கள் இவரிடம் அது கற்றுகொள்ளவேண்டிய பாடம் பல முறை கேட்டுப் பார்த்துவிடேன் சிரித்து விட்டார் அடுத்தது எவ்வளவு வேலை பளு இருந்தாலும் கொஞ்சமும் ஸ்ட்ரெஸ் ஆகாமல் சிரித்த முகத்துடன் வங்கிப் பணியை கவனிக்கும் நேர்த்தி இதையெல்லாம் நான் பார்த்து வியக்காத நாளே இல்லை

No comments:

Post a Comment