Saturday, October 31, 2015

பெயர் ரகசியம்
என்னை எல்லோரும் அடிக்கடி கேட்கும் கேள்வி உங்களுக்கு ஏன் பாம்பே கண்ணன் என்று பெயர் என்பதுதான்
இதையே பல பத்திரிக்கை அன்பர்களும் கேட்டுள்ளார்கள் பேட்டிியிலும விளக்கம் அளித்திருக்கிறேன்
இருந்தும் இங்கு விளக்கம் தருவது என் கடமையாகிறது
முதலில் ஒரு உண்மையை சொல்லிவிடுகிறேன் இந்த பெயர் எனக்கு நானே வைத்துகொண்ட பெயரோ அல்லது காரண பெயரோ அல்ல
நான் பிறந்த ஊரும் பாம்பே அல்ல கொஞ்ச நாட்கள் அங்கே வசித்து இருக்கிறேன் அவ்வளவுதான் நானும் சென்னை வாசிதான் இன்னும் சொல்லப்போனால் மன்னார்குடி கண்ணன் என்றோ அல்லது நாகை கண்ணன் என்றோ பெயர் மிக பொருத்தமாக இருந்திருக்கும்
சென்ட்ரல் வங்கியில் வேலை பார்த்து கொண்டிருந்த எனக்கு PROMOTION என்ற பேய் பயங்கரமாக அறைய நான் சென்று விழுந்த ஊர் பம்பாய் அதற்கு முன்னால் சுமார் 7 வருடங்கள் திரு YGP அவர்களின் குழுவில் சிறிய வேடத்தில் துவங்கி சற்றே பெரிய வேடம் வரை வந்திருந்த நான் தொலை காட்சியிலும் வானொலியிலும் கொஞ்சம் பிரபலம்
1977 வருடம் நான் அந்த குழுவிலிருந்து விலகி நாடகம் எதுவும் நடிக்காமல் இருந்தேன் அப்போதுதான் BANK OF INDIA சீனா தயாரித்த வெங்கட் எழுதிய யாமிருக்க பயமேன் என்ற நாடகத்தில் கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு வந்தது அருளியவர் சீனா அந்த நாடகத்தை பற்றி வீ எஸ்வீ அவர்கள் விமர்சனத்தில் பாம்பே கண்ணான் நடிப்பில் நல்ல வேகம் தெரிகிறது என்று குறிப்பிட்டிருந்தார்
எதோ சில காரணங்களுக்காக அந்த நாடகம் 20 காட்சிகளையே தொட்டது இந்த நேரத்தில் தான் எனக்கு பதவி உயர்வு மாற்றலோடு வந்து சேரவே போதும் இந்த கலைப்பணி இனி சென்னை திரும்பி வந்தால் ஒரு AGM/DGM ஆக திரும்பி வருவது என முடிவு செய்து கையிலிருந்த ஸ்கிரிப்ட்களை எல்லாம் ( நான் அப்போதே நாடகம் தொலைகாட்சிக்கு எழுத துவங்கி இருந்தேன்அதை பற்றி பின்னல் எழுதுகிறேன்) எடுத்து ஒரு பரணில் அடுக்கிவிட்டு bank சம்மந்தப்பட்ட புத்தகங்களாக எடுத்து கொண்டு பம்பாய் செல்ல தீர்மானித்தேன்
இந்த நேரத்தில் விதி என்னைப்பார்த்து சிரித்தது எனக்குக் தெரியாது
எதோ ஒரு கதையில் வரூமாமே எங்கு போனால் ஒருவன் சாவிலிருந்து தப்பிக்கலாம் என்று நினைக்கிறானோ அங்குதான் அவனுக்கு விதி காத்திருக்கிறது என்று எமன் சொல்வாராமே அப்படித்தான் பாம்பே சென்றேன நான்
முதலில் பம்பாயில் பார்த்தது லிப்டில் கூட புட்போர்டில் தொங்கிக்கொண்டு செல்லும் கூட்டம்
SUN THEATRE ல் புதுப்படமாக பார்த்து கொண்டிருந்த நான் அங்கு சக்ரதாரிக்கு கூட அட்வான்ஸ் BOOKING செய்ய வேண்டி இருந்தது சரி அந்த நிகழ்வுகளை அப்புறம் பார்ப்போம் இப்பொது முதலில் பெயருக்கு வருவோம்
வருடா வருடம் 40 நாட்கள் விடுமுறை எடுத்துக் கொண்டு குடும்பத்தோடு சென்னை விஜயம்
என்னதான் நாடகம் வேண்டாமென்று நினைத்தாலும் நாடக நண்பர்களையும் நாடகங்களையும் பார்க்கும் ஆசை விட்டு விடுமா
இன்றும் என் மனைவி சொல்லி காடடும் ஒரு விஷயம்
ஒவ்வோறு வருடமும் 40 நாட்கள் சென்னை வருவதற்கு பதிலாக 10 நாட்கள் ஊர் சுற்றி இருந்தால் கூட மகாராஷ்டிரா முழுக்க பார்த்திருக்கலாம் என்பதுதான்
இப்போது LFC இல்லாமல் சொந்த செலவில் அஜந்தா எல்லோரா கோல்ஹாபூர் என்று மனைவியை அழைத்துக்கொண்டு போய் வருகிரேன்
வருடா வருடம் சென்னை போகும்போதெல்லாம் நான் கண்ணன் வந்திருக்கிறேன் என்று எல்லோருக்கும் போன் செய்து குறிப்பாக பம்பாயிலிருந்து என்று சொல்லுவேன் எல்லோரும் பம்பாயிலிருந்து வந்திருக்கும் கண்ணனை பார்க்க பேச ஒஎறு குடுவோம் அல்லது பம்பாயிலிருந்து வந்திருக்கும் கண்ணன் எல்லோரையும் பார்க்க விடு விடாக அலைவான்
நடுவில் சில பக்கங்களை மறந்தவிட்டு ஒரு 7 வருடம் தாண்டி விடுவோம்
1985 ள் நான் சென்னைக்கு மாற்றல் வாங்கிகொண்டு வந்து விட்டேன் அந்த வருடம் சீனா மிண்டும் யாமிருக்க பயமேன் நாடகம் போடுவதாக அறிவித்து என்னை நடிக்க வைத்தார்
அந்த நாடகம் அரங்கேறறமான அன்று காலையில் ஒரே அதிர்ச்சி ஹிந்து பேப்பரில் என் பெயர் பாம்பே கண்ணன் நடிக்கும் என்று வந்திருந்தது
அந்த நேரத்தில் சென்னை குழுக்களில் பல கண்ணண்கள் குறிப்பாக பவித்ராலயா கண்ணன் கவர்ச்சி வில்லன் கண்ணன் செந்தாமரை கண்ணன மேக்கப் கண்ணன் எழுத்தாளர் வேதம் கண்ணன் என்று பலர் புழங்கிகொண்டிருந்ததால் இந்த பெயரில் அழைக்க பட்டேன் அவ்வளவுதான்
இருந்தும் எனக்கு என்னவோ கூச்சமாக இருந்தது இப்போது பழகிய அளவிற்கு அப்போத அந்த பெயர் எனக்குள் ஒட்டவில்லை அதனால் சில மாதங்கள் வரை நான் என்னை கண்ணன் என்று மட்டுமே சொல்லிக்கொண்டேன் ஒரு விசிடிங் கார்டு கூட அடித்து கொள்ளவில்லை மேலும் வங்கியில் வேறு பொறுப்பான பதவியில் இருந்ததால் இந்த பெயர் எனக்கு அவ்வளவாக பயன் படவில்லை
இருந்தும் அடுத்தடுத்த நாடகங்களான அமிர்தம் கோபாலின் குழவில் நான் பாம்பே கண்ணன் என்றே அறியப்பட்டேன் சபாக்களில் நான் எதோ புது பிறவி எடுத்து வந்த பம்பாய் பிறவியாக பார்க்கப்பட்டேன் இங்கிருந்து போன அதே பழைய கண்ணன் தான் என்பது பலருக்கு அப்போது தெரியவில்லை
போவதற்கு முன் போய் வந்தபின் என்று என் நாடக வாழ்கையை இரண்டு பிரிவுகளாகக் பிரிக்கலம்
ஒரு கட்டத்திற்கு மேல் விட்டில் உறவினர்களுக்கு தொலைபேசினால் கூட பாம்பே கண்ணன் என்றே சொல்ல வேண்டிய நிலைமை வந்த பின்தான் விசிடிங் கார்டு அடித்தேன்
அதன் பிறகு பாம்பே என்னுடன் நிலையாக ஒட்டிக்கொண்டு விட்டது ஆனால் பம்பாயில் இருந்தபோது பாம்பே எனக்கு விருப்பமில்லாமல் போனது அதற்கு பரிகாரமாக இப்போது நான் என் பெயரை I LOVE BOMBAY என்று சொல்லிக்கொள்கிறேன் இன்னொன்றும் சொல்லிக்கொள்கிறேன்
I MISS YOU BOMBAY
பம்பாயின் பெயர் மும்பை ஆனபிறகு மும்பை கண்ணன் என்று பெயர் மாற்றம் செய்யவில்லையா என பலர் கேட்கின்றனர்
ஏன் மறைந்த மேதை பின்னணி பாடகர் PBS அவர்கள் என்னை DRVE IN WOODLANDS ல் சந்தித்த போதெல்லாம் மும்பை கண்ணன் என்றே அழைப்பார் ஒரு வாழ்த்துப்பா கூட எழுதி கொடுத்திருக்கிறார்
பெயர் எப்போது மாறும் என்று கேட்டால் என் ஒரே பதில் எப்போது மைசூர் பாக் பெயர் மாறுகிறதோ எப்போது பாம்பே ஹலவா பெயர் மாறுகிறதோ எப்போது CALCUTTA ரசகுல்லா பெயர் மாறுகிறதோ எப்போது மங்களூர் போண்டா பெயர் மாறுகிறதோ அப்போதுதான்
சரிதானே
இப்போது பெயர் ரகசியம் புரிந்து விட்டது அல்லவா
நான் சூட்டிக்கொண்ட பெயர் அல்ல
எனது BAMBAY ஐ எப்போது நினைவு கூறுவதற்காக இறைவன் எனக்கு அளித்த வரம்
இருந்தும் இந்த பெயரை எனக்கு அளித்த சீனாவுக்கு நன்றி!!!

No comments:

Post a Comment