Saturday, October 31, 2015

நான் சமீபத்தில் பார்த்த கேட்ட நகைச்சுவை நாடகங்களில் எந்த வசனமெல்லாம் சிரிப்பு வரவழைக்க வேண்டுமென்று அவர்கள் விரும்புகிறாகளோ அங்கேயெல்லாம் டொய்ங் டொய்ங் என்று இசையால் இம்சித்தார்கள்
இந்த மாதிரி வாசிப்பு எல்லாம் ஒரு 30 அல்லது 40 வருஷத்திற்கு முந்தய சமாசாரம் அதை இன்னும் ஏன் தொடர்ந்து கடைபிடித்து வருகிறார்கள் என தெரியவில்லை மக்களை சிரிக்க வைக்க (எப்படியாவது)
இது ஒரு வழி என நினைக்கிறார்களா??
நமது நகைச்சுவை நாடகங்களில் இன்னும் ஒன்று நான் பார்த்தது நகைச்சுவை பாத்திரங்களில் நடிப்பவர்களே தங்களை அஷ்ட கோணலாக்கிகொண்டு நான் காமெடியன் என்று தனக்கும் மற்றவர்களுக்கும் அடிக்கடி நினைவூட்டுவது அந்த பாத்திரத்தை மிக செயற்கையாக்கி மிகைபடுத்தி நடிப்பது
மற்றொன்று சில நடிகர்கள் ஜோக் அடித்து விட்டு முதலில் அவர்களே அதற்கு சிரித்துவிடுவார்கள் பின்னர் பார்வையாளர்கள் follow suite,,,,
A SNUFF BOX NEVER SNEEZES
சமிபத்தில் ஒரு ஆங்கில நகைச்சுவை படம் ஒன்று பார்த்தேன் அருமையான நகைச்சுவை பாத்திரத்தில் நடித்த ஒருவர் கடைசி வரை அவர் சிரிக்க வில்லை அமைதியாக பார்பவர்களை மிகையாக சிரிக்க வைத்தார் என்றால் அது மிகை ஆகாது

No comments:

Post a Comment