Saturday, October 31, 2015

Netherlands பயணம்:::

.....................................................................................................................
என்னுடைய நெதர்லாண்ட்ஸ் பயணம் ஒரு மாதத்திலிருந்தே சூடு பிடித்து விட்டது என்னென்ன கொண்டு போக வேண்டும் எப்படி PACK செய்ய வேண்டும் என அவ்வப்போது என் மகள் போனில் சொல்லிக் கொண்டிருப்பாள் தினமும் ஒவ்வொரு மளிகை பொருளாக சேர்ந்து கொண்டே இருந்தது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புது ITEM
நானும் என் மனைவியும் எதோ புதுக்குடித்தனம் போவது போல ஒவ்வொன்றொன்றாக சேமித்து கொண்டிருந்தோம் இதற்கு இடையில் அவ்வப்போது 60 KILO விற்கு மேல் ஒரு ஒரு கிராம் கூடினால் கூட EMIRATES ல் ALLOW பண்ண மாட்டான் என்று ஒரு நாள் போன்
90 கிலோ எடையை ஒரே மாதத்தில் எப்படி குறைப்பேன் என்று நான் யோசித்து கொண்டிருக்கையில் என் மனைவி அது LUGGAGE எடை என்று நினைவுட்டினாள்
இரண்டு பெட்டி நிறைய அரிசி மாவு பருப்பு வகயராக்கள் புளி மிளகைபோடி என ஏகப்பட்ட ITEMS இதற்கு இடையில் 3 மாதம் தங்குவதற்கு தேவையான உடைகளுக்கு இடம் எங்கே இருக்க போகிறது என்று என் கவலையை தெரிவிக்க மகள் நீங்கள் வரபோவது டெலிவரிக்கு 3 மாதம் எங்கே வெளியே போகப்போகிறிகள் என்று ஒரு முன்னெச்சரிக்கை பதில் வைத்திருந்தாள்
எப்படியோ சமாளித்து கொஞ்சம் உடைகளை எடுத்து வைத்து அவ்வப்போது கிழ் விட்டிளிர்துந்து எடை MACHINE வாங்கி வந்து (அவர்கள் அட்கிக்கடி துபாய் லண்டன் என்று போய் வருகிறார்கள் வேறு எதற்கு இரண்டு பெண்களுக்கு பிரசவம் பார்க்கத்தான் ) எடை பார்த்து ஒவ்வொரு நாlளும் தேறிவரும் நோயாளியை போல பெட்டி எடை கூடிக்கொண்டே வந்தது இதற்கு இடையில் வாங்கி வந்த அரிசி மாவு அரைத்து வந்த மிளகாய்பொடி காபி போடி எல்லாம் அப்படியே எடுத்து போக முடியுமா இதற்கென்றே பிரத்யேகமாக MYLAPORE ல் ஒரு PACKING கடை இருக்கிறது அங்கு போய் இதை எல்லாவற்றையும் (கொட்டி) கொடுத்து விட்டால் அவர் கைதேர்ந்த கஸ்டம்ஸ் அதிகாரி போல நமக்கு விளக்கமாக எடுத்து சொல்லி அழகாக வெள்ளி பேப்பர் பிளாஸ்டிக் பேப்பர் என உருட்டி தருகிறார் அவற்றை கொண்டு வந்து நமது பேண்ட ஷர்ட் புடவை முதலியவற்றை சுற்றி வைத்து PACKING செய்து விட்டேன்
வெறும் டிரஸ் என்று மட்டுமில்லாமல் அதற்கு ஒரு PURPOSEவந்து விட்டது அல்லவா? மறுபடியும் எடை பார்க்க 63 கிலோ காட்டியது
இப்போது எதை நீக்குவது என்று யோசிக்க என் மனைவி என்னை ஒரு முறை பரிதாபமாக பார்க்க தாயே நாலு மாசத்துக்கு நாலு PANT எடுத்திருக்கேன் எனக்கு முக்கால் PANT எல்லாம் போட்டு பழக்கமில்லை என நான் கேவலமாக விழிக்க ஒரு புளி பாக்கெட்டை எடுத்து விடுவது என முடிவு செய்து கழித்தல் ஒரு 2 கிலோ தேறியது இன்னும் GRAND SWEETS முறுக்கு MIXTURE கிருஷ்ணா ஸ்வீட்ஸ் MYSORE PAK என இடம் வேண்டும் என்று யோசித்து யோசித்து எடுக்கப்போக இறுதியில் பெட்டி முழுவதும் எங்களது 3 மாத தேவைக்கான மருந்துகளும் என் மனைவயின் இன்சுலின் பாட்டில்களும் வாங்கிப்போகும் மளிகை சாப்பாட்டு சாமான்களும் தான் மிச்சமிருந்தன
இடை இடையிடையே கொஞ்சம் துணி வகைகள் குறிப்பாக என் பனியன் ஜட்டி போன்றவை)
இதற்கிடையில் இன்சுலின் ஊசிகள் எடுத்து செல்லலாமா தீவிரவாதிகள் என்று எங்களை ஜெயிலில் போட்டு சித்திரவதை செய்து விடுவார்களோ என்ற பயங்கர நினைவுகள் வேறு
DIABETIC டாக்டரிடம் சென்று ஒரு CERTIFICATE வாங்கிக்கொண்டேன் மகள் எதற்கும் எமிரேட்ஸ் ல் சொல்லிவிடு என்றாள் எமிரேட்ஸ் மும்பைக்கு போன் செய்து என் மனைவி சுகர் PATIENTஎன்றும் இன்சுலின் மருந்து எடுத்து செல்ல வேண்டுமென்றும் சொல்ல அவர்கள் ஒரு நாள் தேவை மட்டும் கையில் கொண்டு செல்லுங்கள் மீதி BAGGAGE செக் பண்ணி விடுங்கள் என்றார்கள்
திடிரென ஒரு சந்தேகம் ஒரு வேளை BAG காணமல் போய் விட்டால்........அல்லது குறிப்பிட்ட நேரத்திற்கு எங்கள் விமானத்தில் வராமல் போய்விட்டால் என்ன செயவது என்று ஒரு பயம் ஏற்பட்டது அதனால் என்ன ஆனாலும் ஆகட்டுமென ஒரு வாரத்திற்கான மருந்துகளை HAND LUGGAGE எடுத்து செல்வது என முடிவு செய்து ஒரு எக்ஸ்ட்ரா BAG ஐயே கழித்து கட்டிவிட்டு எல்லாவற்றையும் 3 பெட்டியில் PACK செய்து கொண்டு புறப்பட்டோம்
எனக்கோ இது இரண்டாம் முறை தான் வெளி நாடு செல்வது என் மனைவி என்னை விட சீனியர் முதல் மகளுக்கு பிரசவம் பார்க்க சென்ற அனுபவம்
அதனால் அவள் AIRPORT வந்தவுடன் எனக்கு எதுவும் தெரியாது என்ற பாணியில் எனக்கு முன்னால் நடந்து சென்று ஒவ்வொரு COUNTER ஆக போனாள் எனக்கு வரிசையில் நிற்கும் போதெல்லாம் ஒரு சின்ன நடுக்கம் கஸ்டம்ஸ் நாய் வந்து குதருவது போல கற்பனை ஓடியது பெங்களூர் AIRPORT ல் எமிரேட்ஸ் கவுன்டரில் வரிசையில் நின்று என் மகளின் வாயில் நுழையாத நெதர்லண்ட்ஸ் விலாசத்தை எழுதி எழுதி பெட்டிகளில் கட்டிக்கொண்டிருந்தேன்
வந்தாச்சு கவுன்ட்டர் அருகே ஒருவன் இளைஞன் ஒருத்தி சின்ன பெண்ண இந்த பெண்ணைப் பார்த்தால் கேள்வி எதுவும் கேட்கமாட்டாள் போல தோன்றியது கவுண்ட்டர் அருகே வந்ததும் அவள் எங்கள் பெட்டியெல்லாம் எடை பார்க்க எதையெல்லாம் இங்கே தரையில் உட்கார்ந்து பிரித்து போட்டு தூக்கி எறிய வேண்டுமோ என யோசித்து கொண்டிருக்கையில் சரியாக 61 கிலோ காட்டியது
EXCESS BAGGAGE எதுவும் கேட்கவில்லை
அடுத்து அவள் கேட்ட கேள்வி ஒன்றுதான் என்னை கொஞ்சம் யோசிக்க வைத்தது ஏண்டி எங்களை பார்த்து இப்படி ஒரு கேள்வியை கேட்டே ன்னு கோபப்பட வைத்தது

No comments:

Post a Comment