Saturday, October 31, 2015

என் தந்தையும் நானும்
என் குழந்தைக்கு இரண்டு வயது இருக்கும் போது எதாவது வேண்டுமென்று அழுது அடம் பிடித்தால் என் அப்பா உடனடியாக அதை வாங்கித் தரவேண்டுமென சிபாரிசு செய்வார்ட்
அப்பா குழந்தையை செல்லம் கொடுத்து கெடுக்காதீர்கள் என்று சொன்னால்
குழந்தை அழுதுடா போனால் போகட்டுமே என்பார்
அதே குழந்தைக்கு 5 வயது ஆகும்போது அதன் பின்னாடியே shoe போட uniform போட்டு விட ஓடுவார் 
அதன் ஸ்கூல் bag ஐ தூக்கிக்கொண்டு போய் ரிக்க்ஷாவில் வைப்பார்
காலையில் அதற்கு பல் தேய்த்து விடுவதிலிருந்து எல்லாம் அவர் உபயம்தான்
அப்பா அவனை INDEPENDANT ஆ வளக்கணும்னு சொன்னா ஒப்புகொள்ள மாட்டார்
போடா நீ சின்ன வயசுலே என்ன பண்ணே சொல்லட்டுமான்னு மானத்தை வாங்குவார்
10 வயதில் என் பையன் பள்ளியிலிருந்து வரும் வரையில் வாசலிலே இருந்து அவன் விசிறி எறியும் புத்தக மூட்டைகளை சாப்பாடு கூடைகளை சுமந்து வருவார்
தாத்தாவிற்கு தொந்தரவு தரக்கூடாது நீதான் எடுத்து வரவேண்டும் என்று கண்டித்தால் குழந்தை எதிரிலேயே நம்மை கண்டிப்பார் பாவம்
குழத்தை TIRED ஆ வருவான் போனாப் போறது விடு என்று அவர் கூற குழந்தை என்னைப்பார்த்து பரிகசிக்கும் அப்பா மேல் கோபம் கோபமாகக் வரும்
பையன் பள்ளியிலிருந்து வருவர்தற்கு நேரமானால் வாசலிலேயே காத்திருப்பார்
அப்பா வருவான் என்று சொன்னால் கேட்க மாட்டார்
நேரம் ஆகுதுடா என்பார்
இதே போலத்தான் நான் அலுவலகம் சென்று திரும்பி வர கொஞ்சம் காலதாமதம் ஆனால் என் கார் விட்டு வாசல் தொடும் வரை BALCONY லேயே நின்று கொண்டிருப்பார் இரவு நேரமானால் துங்க போக மட்டார் எதாவது போன வந்ததா என என் மனவியை அரித்து விடுவார்
வீட்டிற்கு வரும்போது அவர் பால்கனியில் நிற்பதை பார்க்க கோபம் கோபமாக வரும் என் தலையை பார்த்தவுடன் ஓடிப்போய் பெட்ரூமில் ஒளிந்து கொள்வார கேட்டால் பாசமென்பார்
வெளியூர் போனால்; தினமும் தொலைபெசவேண்டும் இல்லைஎன்றால என் மனைவி பாடு அவ்வளவுதான் என் அம்மா அப்படியல்ல கொஞ்சம் தைரியம் அதிகம்
அப்பாவை அப்பப்ப அடக்கி வைக்க வேண்டும் என்று கடிந்து கொள்வார்
நாம் 10 ரூபாய்க்கு தோசை சாப்பிட்டால் விலை ரொம்ப அதிகம் என்று சொல்லி அவர் காலத்து தோசை விலையை சொல்லி அந்த காலத்து கோல்ட் விலை நிலம் விலை வீட்டு விலை எல்லாம் சொல்லி பொறுமையை சொதிப்பார்
அப்பா அந்த காலம் வேற இந்த காலம் வேற என்றால் ஒப்புகொள்ள மாட்டார்
இன்று எனக்கு 64 வயசு
பால்கனியில் நின்றிருக்கிறேன்
என் மகன் அவன் குழந்தைகளை நான் ரொம்ப செல்லம் கொடுத்து கெடுப்பதாக கோபப் படுகிறான்
அடேடே மணி நாலாச்சு இன்னும் குழந்தை ஸ்கூல் லேந்து வரலை ஆடடோ ரிக்ஷா வரலியே என்னாச்சு என் பையன் வெளியூர் பொய் நாலு நாள் ஆச்சு இன்னும் ஒரு போன் வரலை பொறுப்பில்லாம இருக்கான்
DINING டேபிள் மேலே SARAVANA BHAVAN பிளாஸ்டிக் டப்பாவிலே 75 ரூபாய் கொடுத்து ஒரு ரவா தோசை வாங்கி வச்சிருக்காங்க ரொம்ப அநியாயம் அப்பெல்லாம் ஒரு தோசை விலை வெறும் பத்து ரூபாய்
ஏம்மா வசந்தி எதாவது போன் வந்ததாம்மா என்று என் மருமகளை அழைக்கப் போகிறேன்
என் மனைவி என் இப்படி முறைக்கிறா;ள்???
என் அப்பா நினைவு வந்தது

No comments:

Post a Comment