Wednesday, August 17, 2016

என்னுடைய பால பருவத்தில் என் தாத்தா (அவர் ஒரு வக்கீல்) ஒரு நகைச்சுவை கதை ஒன்று சொல்லுவார்
ஒருவரை மற்றவர் செருப்பால் அடித்து விட்டார் என்பது வழக்கு
வழக்கு நீதிபதி முன்னால் விசாரணைக்கு வந்தது
...
வாதியின் வக்கீல் தனது வாதத்தை முடித்து கொண்டு நீதி வழங்க வேண்டு மென கேட்டுக்கொண்டு அமர்ந்து விட்டார் இப்போது எதிர் கட்சி பிரதிவாதியின் வக்கீலுக்கு விசாரணையை ஆரம்பிக்க வேண்டிய நேரம்
செருப்படிபட்ட வாதியிடம் சில கேள்விகள் கேட்க விரும்பினார் நீதிபதியும் அனுமதிக்கவே அவர் நேரடியாக அவரிடம் விசாரணை தொடங்கினார்
வக்கீல்
உங்களை இவர் செருப்பால் அடித்தார் என்று சொன்னிர்களே எத்தனை முறை செருப்பால் அடித்தார் என்று சொல்லமுடியுமா
வாதி
ஒரு முறை
வக்கீல்
வலது பக்கத்துலே செருப்பால அடித்தார இடது பக்கத்துலே செருப்பால அடித்தரா
வாதி
வலதுபக்கம்
வக்கீல்
அவர் செருப்பால அடிச்சது புது செருப்பாலயா பழைய செருப்பாலயா
வாதி
பழையது
வக்கீல்
பழைய செருப்புன்னா பிஞ்ச செருப்பால அடிச்சாரா இல்லை பிய்யாத செருப்பால அடிச்சாரா
வாதி
பிய்யாதது
வாக்கில்
அவர் உங்களைசெருப்பாலஅடிச்சபோது மணி எத்தனை இருக்கும்
வாதி
ஆறு இருக்கும்
வக்கீல்
காலை ஆறு மணிக்கு செருப்பால அடிச்சாரா இல்ல மாலை ஆறு மணிக்கு செருப்பால அடிச்சாரா
வாதி
மாலை
வக்கீல்
பொம்பளை செருப்பால அடிச்சார அல்லதுஆம்பளை செருப்பால அடிசாரா
வாதி
அது அது பொம்பளை செருப்புன்னுதான் நினைக்கிறேன்
வக்கீல்
அவர் உங்களை செருப்பால அடிச்சாபொது ரொம்ப வலிச்சுதா இல்லை பொறுத்துகற மாதிரி வலிச்சுதா
வாதி
பொறுதுக்கற மாதிரித்தான் இருந்தது
வக்கீல்
அவர் உங்களை செருப்பால அடிச்சபோது......
வாதி
(கை எடுத்து கும்பிட்டு)
ஐயா ஜட்ஜ் ஐயா உங்களை கை எடுத்து கும்பிட்டு இந்த வழக்கை வாபஸ் வாங்கிக்கறேன் அவன் என்னை ஒருதரம்தான் செரூப்.......(வேண்டாம்) அடிச்சான் ஆனா இந்த வக்கீல் இத்தனை.பேருக்கு முன்னாலே இத்தனை தடவை செருப்பாலேஅடிச்சானா அடிச்சானா எனக்கேட்டு ரொம்ப அசிங்க படுத்திட்டாரு அந்த அடியைவிட இது ரொம்ப வலிக்குது என்னைவிட்டிடுங்க
என்று காலில் விழ ஜட்ஜ் வழக்கை தள்ளுபடி செய்தார்
இந்த கதை இப்போது ஏன் ஞாபகம் வந்தது என்று தெரியவில்லை

No comments:

Post a Comment