Wednesday, August 17, 2016

அப்பா கொடுத்த சீதனம்

சிறுகதை

எங்கப்பா எனக்காக விட்டுப்போன ஒரே சீதனத்தை பற்றி தெரிந்து கொள்வதற்காக மாம்பலத்திலிருந்து நுங்கம்பாக்கம் நோக்கி போய்க் கொண்டிருந்தேன் என் மனம் பல வருடங்கள் பின்னோக்கி நகர்ந்து flashback கொட்டியது
எங்கப்பா ஒண்ணும் அவ்வளவு பெரிய பணக்காரர் இல்லைதான் அவர் பெரிதும் எந்த சொத்தும் சேர்த்து வைக்கவில்லை
அவர் வேலைபார்த்த காலத்தில் அவருக்கு கிடைத்த சொற்ப பணத்தில் மாதம் காசு மிச்சம் பண்ணுவது என்றாலே பிச்சைகாரர்களுக்கு போடக்கூட காணாது
இருந்தும் மற்ற அப்பா மார்களை கவனிக்கும் போது.......
எப்படியோ கடனை வாங்கி அங்கே இங்கே என எதோ ஒரு நிலத்தை வாங்கி போட்டு மறந்து விடுகிறார்கள்
அது பல வருடம் கழித்து தான உயிர்பெறும்
அங்கே ஒரு நாள் போய் பார்த்தால் சுத்தி வீடுகள் வந்திருக்கும் ஒரு IT கம்பெனி வந்திருக்கும்
சென்னை சில்க்ஸ் சரவணா ஸ்டோர்ஸ் இல்லைன்னா குறைந்த பட்சம் ஒரு PIZZA HUT ஆவது வந்திருக்கும்
அங்கே நிலத்தோட விலை எக்க சக்கமாக ஏறிப்போயிருக்கும்
அந்த மாதிரி கூட இவர் எதுவும்ம் வாங்கி போடவில்லை
இத்தனைக்கும் அவருக்கு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது கொஞ்சம் வெத்திலை பாக்கு புகையில போடுவாரு கொஞ்சம் சிகரெட் பிடிப்பாரு கொஞ்சம் தண்ணி போடுவாரு அவ்வளவுதான்
அந்த காலத்து ஸ்டான்டர்ட்க்கு இதெல்லாம் பெரிய கெட்டப் பழக்கங்கள் அதனாலே தெரு முக்கிலே போய் நின்றுதான் அவரோட 60 வயசு வரைக்கும் தம் அடிப்பார்
எனக்கு கூட ரொம்ப வருத்தம் தான்
அப்பா நமக்குன்னு ஒண்ணும் வைக்காம போய்விட்டாரே என்று
இப்பதான் தெரிஞ்சுது அவர் எனக்குன்னு ஒரு சீதனம் வச்சிட்டு போயிருக்காருன்னு அது கூட அவர் அப்பா கொடுத்த சீதனமாம்
கொஞ்சம் கஷ்டமாதான் இருந்தது இருந்தாலும் அப்பா ஞாபகமா இருக்கட்டுமே என்று சந்தோஷமா என்னை சமாதானப்படுத்திக் கொண்டு விட்டேன்
இன்னிக்கு தான் அது சம்மந்தமான PAPERS வாங்கதான் போறேன்
அப்புறம் எப்படி பராமரிக்கணும்னு சொல்லுவாங்களாம்
இறங்க வேண்டிய ஸ்டாப்[ வந்து விட்டது
இறங்கி நடந்தேன்
பெரிய கட்டிடம்தான்
என்னை போலவே அப்பா கொடுத்த சீதனத்தை வாங்கிக்க பலர் உக்காந்து கிட்டு இருந்தாங்க
அழகா இருந்த அந்த பொண்ணுகிட்ட என் நம்பரை கொடுத்திட்டு உக்கார்ந்தேன்
அப்படியே கொஞ்சம் அயர்வா கண்ணசந்து விட்டேன்
திடிர்னு என் பேரை சொல்லி கூப்பிட்டாங்க
உள்ளே போங்கன்னு சொன்னாங்க
மெல்ல அறை கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தேன்
பெரிய மேஜை பின்னாலே இருந்தவர்
உக்காருங்க
என்று சொன்னார்
ரொம்ப TENSION ஆ இருக்கீங்க போலிருக்கு கவலைப்படாதிங்க இப்ப எல்லாம் ரொம்ப சகஜம் இனிமே இது இல்லாமே நீங்க இருக்க முடியாது என்ன..... எல்லா சொத்தையும் போல இதையும் நீங்க சரியாய் பராமரிச்சிங்கன்னா போதும் சந்தோஷமா ஆரோக்கியமா இருக்கலாம்
எனக்கு எப்படி இது?
இதென்ன மலேரியாவா டெங்குவா கொசு கடிச்சு வரதுக்கு இது பரம்பரை சொத்து சார் உங்கப்பா தாத்தா பாட்டி யார் கொடுத்ததோ
எங்கப்பா தான.... இப்ப இன்னிக்கு என்ன VALUE ன்னு தெரிஞ்சிக்கலாமா
VALUE என்ன சார் VALUE லட்சமா கோடியா ரொம்ப ஒண்ணும் அதிக மில்லை சப்பாட்டுக்கப்புறம் 300 இருக்கு மருந்து சாப்பிட்டா போதும் உங்க SUGAR LEVEL ஐ CONTROL க்கு கொண்டு வந்து விடலாம் அப்புறம் கொஞ்சம் உடற்பயிற்சி அப்புறம் சாப்பாட்டுலே என்னென்ன.............
என்று டாக்டர் பராமரிப்பு பற்றி அடுக்கி கொண்டே போனார்
நான் மெல்ல என் அப்பா கொடுத்த சீதனம் பற்றி யோசித்தவாரே.......
அந்த டாக்டரிடமிருந்துவிடைபெற்றுக்கொண்டேன்

No comments:

Post a Comment