Friday, August 19, 2016

காதல் 2016
சிறு கதை

வழக்கம் போல சாப்பாடு டப்பாக்கள் கை மாறின
ஷில்பா, திலீப்பின் வட்ட டப்பாவை திறந்து தயிர்சாதத்தையும் எலுமிச்சை ஊறுகாயையும் பார்த்து நாக்கில் எச்சில் ஊற “வாவ்” என்று கத்தினாள்
சமயத்தில் இந்த பெண்கள் என் இப்படி வாவ் என்று வாவ் என்று குலைக்கிறார்கள் என்று புரியாமல் திலிப் விழித்தான்
அவளது மூன்றடுக்கு கேரியரில் இருந்த சப்பாத்தியும் புலவும் பன்னீர் மசாலாவும் ஒரு PIZZA வும் திலிப்பிற்கு சொந்தமாகின (PIZZA என்றாலே அவனுக்கு கொஞ்சம் பயம் தான் அந்த படம் வெளி வருவதற்கு முன்பிருந்தே)
நம்ம ரெண்டு டிபன் டப்பாவிலேயே இவ்வளவு அந்தஸ்து வித்தியாசம் தெரியுதே நம்ம கல்யாணம் நடக்கும்னு நினைக்கிறே?
என்றான் ஒரு ஏக்க பெருமூச்சுடன் அவளைப்பார்த்து
அப்பா.....ஆரம்பிசிட்டயா? VELLENTINE DAY ம் அதுவுமா காதலை பத்தி மட்டும் பேசு கல்யாணத்தை பத்தி அப்புறமா பேசலாம்
என்று கண் சிமிட்டினால் அவள்
திலீப் எதுவும் பேசாமல் இருக்கவே அவன் கையை மெல்ல அவளது கன்னத்தில் வைத்து கொண்டு
திலீப் நான் உன்னை லவ் பண்ணறேன் எந்த சக்தியினாலும் நம்மை பிரிக்க முடியாது
என்று சொல்லி செல்லமாக அவன் தலையை வலது கையால் கோதி விட்டாள்
திலீப்பிற்கு திடீரென 10 வயது கூடி விட்டது போல முடி வெள்ளை ஆனது
எல்லாம் அவனால் வந்த வினை தான் அவன் கொண்டு வந்த தயிர்சாதம் தான் காரணம்
என்ன இவள் பேசறதும் அந்தகால சினிமா மாதிரி பேசறா ACTION ம் அப்படியே இருக்கே என்று நினைத்து கொண்டான் திலீப்
இந்த இடத்தில நாம் கொஞ்சம் இவர்களைப்பற்றி சுருக்கமாக தெரிந்து கொள்வது அவசியம்
திலீப் சுமாரான மிடில் கிளாஸ் ரகம்
ஷில்பா மேல்தட்டு மக்கள் என விமர்சிக்கப்படும் ஒரு தொழிலதிபரின் மகள்
இவர்களுக்குள் காதல் வந்தது எப்படி என்று நாம் யோசிக்க வேண்டியதில்லை
தமிழ் திரைப்படங்களை பார்த்தால் போதும்
கொஞ்ச நேரம் அங்கே அமைதி நிலவியது
அவள் அவன் ஏதும் பேசவில்லை
அவரவர் கவலை அவரவர்களுக்கு
திடீரென ஷில்பா
“ஏன்திலீப் உங்களை மாதிரி குடும்பங்கள் எல்லாம் எத்தனை தலைமுறை ஆனாலும் எப்படி அப்படியே மிடில் கிளாசாவே இருக்கீங்க MIDDLE கிளாஸ்ங்கிறது நீங்க வாங்கின பட்டமா
என்று பாலு தேவரை அண்ட சிறுவன் கேட்டது போல கேட்டு விட்டு ஒரு கிளு கிளு சிரிப்பை உதிர்த்து விட்டு தொடர்ந்தாள்
உங்கப்பா எதுவும் பிசினஸ் பண்ணலையா?
ம் பண்ணாரு ஆன பிசிநெஸ்லே “BIG MONEY MAKES BIG MONEY SMALL MONEY MAKES NO MONEY” இதை எங்கப்பாவுக்கு யாரும் சொல்லித்தரலை அதனாலே ஒவ்வொண்ணா முயற்சி பண்ணிட்டு அங்கியே புறப்பட்ட இடத்துலயே ஏன் கொஞ்சம் பின்னாடியே தங்கிட்டாரு
என்று சொல்லி அவன் பங்கிற்கு அவனும் அசட்டுதனமாக் சிரித்து விட்டு தொடர்ந்தான்
ஆனா ஒண்ணு ஷில்பா எங்கப்பாவோட தம்பி....என் சித்தப்பா அவரு இப்பவும் பெரிய BUSINESSMAN அவருக்கு விதிச்சது அப்படி கல்யாணமே பண்ணிக்காமே வியாபாரம் வியாபாரம்......ஒரு நாளைக்கு 25 மணி நேரம் உழைச்சு கோடிக்கணக்குலே சொத்து சேத்திட்டாரு
(ஒரு நாளக்கி 24 மணி நேரம் தானேன்னு கேக்கபடாது அவ்வளவு உழைச்சாருன்னு புரிஞ்சிக்கணும்)
எங்களோட எல்லாம் அதிகமா பேச கூட மாட்டாரு எங்க விட்டுக்கெல்லாம் வரமாட்டாரு......
அப்படியா என்ன பிசினஸ்?
LEATHER EXPORT வயசு கூட அதிகமில்லை
35 க்குள்ளதான் இந்த வயசிலேயே 100 கோடி ரூபாய் bank கடன் இருக்குன்னா பார்த்துக்கயேன்
பேரு?
சிவானந்தம்.
அதன் பிறகு மறுபடியும் சற்று நேரம் அவர்கள் இடையே மௌனம் நிலவியது கொஞ்சநேரம்கழித்து பிரியா விடைபெற்றார்கள்
சில நாட்கள் ஷில்பாவை பார்க்க முடியாமல் போய்விட்டது திலீப்பிற்கு
அவளும் எதோ பரீட்சைக்கு படித்துகொண்டிருக்கிறாள் என்று நினைத்தான் அவன்
அவனுக்கும் வெட்டியாக பொழுது போக்க கொஞ்சம் அலுப்பாக இருந்தது
ஷில்பா ஒரு நாள் போனில் அழைத்தாள்
வழக்கமான இடத்தில சந்திப்பதாக சொன்னாள்
திலீப் அவளுக்காக காத்திருந்தான்
கார் வந்து நின்றது
கார் கண்ணாடி தடங்கலே இல்லாமல் வழுக்கிக்கொண்டு கிழே இறங்கியது
பட்டன் சிஸ்டமாமே
கொஞ்சம் கொஞ்சமாக ஒரு CLOSEUP SHOT ல் முகம் தெரிய ஆரம்பித்தது
முதலில் கண்கள் அப்புறம் அழகிய முக்கு அப்புறம் அவளது உதடுகள் புன்முறுவல் காட்ட.......
திலீப் கார் அருகே சென்றான்
ஹாய் திலீப்
ஹாய் ஷில்பா
நீண்ட நாள் கழித்து சந்திப்பதில் அவனுக்கு ரொம்பவே மகிழ்ச்சி அது அவன் முகத்திலே பிரதிபலிக்க அவளருகே சென்று கார் கதவை அவனே வேகமா திறந்தான்
ஷில்பாவும் கிழே இறங்கி அவனுடன் நடந்தாள்
ரொம்பவும் அழகாக சூட் அணிந்த ஒருவர் காரை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு வெளியே வந்து அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தார்
நான் மனசை மாத்திகிட்டேன் திலீப் இவர்தான் என் WOULD BE அடுத்த மாசம் எங்க கல்யாணம்....
.
அவள் பேசுவதை கவனிக்காமல் வருபவரையே
உற்று நோக்கிக் கொண்டிருந்தான் திலீப்
சித்தப்பா!!!!!!!
SWITZERLAND லே HONEMOON......
இவர் பேரு சிவானந்தம்.....
என்று ஷில்பா சொல்லிக்கொண்டே போக......
அருகில் வந்த சிவானந்தம்
டேய் உங்க சித்தியை மீட் பண்ணுடா!!
என்று ஷில்பாவை அறிமுகம் செய்து வைத்தார்

No comments:

Post a Comment