Wednesday, August 17, 2016

1995 ம் வருடம் தொலை காட்சி தொடர்கள் பிரபலமாக இருந்த நேரம் இப்போதும்தான்
ஆனால் அப்போது newbroom
ஒரு சில நாடகங்கள் தவிர மீதி நாடகங்களுக்கு மக்கள் வருவது வெகுவாக குறைந்து போய் விட்டது
யாரை கேட்டாலும் தொலை காட்சி நிகழ்சிகள் தான் காரணம் என்று சொன்னார்கள்
ஆனால் இந்த நிலைமைக்கு நாங்களும் ஒரு காரணம் என்று பலர் உணரவே இல்லை
சபாக்கள் எல்லாம் ஒன்றொன்றாக விடை பெற்றுக் கொள்ளத் துவங்கிவிட்டன நாடக அரங்குகளில் கொஞ்சம் வரும் மக்கள் கூட 50 வயதை தாண்டிய பழைய ரசிகர்களாகவே இருந்தனர் இப்பொது அவர்களுக்கு 60 க்கு மேல் ஆகிவிட்டது
70 களில் 130 ஆக இருந்த சபாக்கள் 20 ஐ எட்டிக் கொண்டிருந்தன
நமது மக்களுக்கோ நாடகங்களுக்கு டிக்கெட் வங்கி பார்க்கும்பழக்கம்அறவே போய்விட்டது நான் இந்த இடத்தில சில வர்த்தக ரீதியான குழுக்களையோ சபாக்களையோ பற்றி பேசவில்லை
நாடகம் நடத்தினால் ஒரு சில சபாக்கள்தவிர மற்றவர்கள் நாடக் குழுக்களிடம் பேரம் பேசினார்கள் சில இடங்களில் இலவசமாக நாடகம் போடாவேண்டிய அவலம் வேறு
நடிகர்கள் வேண்டுமானால் இலவசமாக நடிக்கலாம்
ஆனல் தொழில் கலைஞகள் தங்கள் சேவைக்கான தொகையை அதிகப்படுத்திக் கொண்டே போனார்கள்
இந்தநிலைமையில் நாடகம் போடுவது எ௩ந்பது வீட்டில் விவாகரத்துக்கான ஒரு காரணம் போலவே உருவாகிப் போனது
அப்போது ஒவ்வொரு தொலைகாட்சி தொடரும் [பணத்தை அள்ளிக்குவித்தன
ஆனால் அதில் காட்டப்படும் தொடர்கள் (ஓரிரண்டை தவிர) camera முன்னால்நடதப்படும் நாடகமாகவே இருந்தனவே ஒழிய பெரிய வித்தியாசம் இல்லை இதனாலேயே அந்த நிகழ்சிகள் நாடகங்கள் என்று அழைக்கப்பட்டன
ரசிகர்கள் இலவசமாக கிடைக்ககூடிய அந்த நாடகங்களின் பால்தங்கள் கவனத்தை திருப்பினர் அதே நடிகர்கள்
அதே துணுக்குகள் அதேபோல மடிசார் மாமிக்களும் ஹிந்துபேப்பர் படித்துக் கொண்டு காபியில் பினாயில் வாடைஅடிப்பதாக ஜோக்அடிக்கும் மாமாக்களும் மருமகளுடன் சண்டை போடும் மாமியார்களும் அத்திம்பேர்களும் பாசமழைகளும் பழிவாங்குதலும் பட்டி மன்ற தலைப்பு போன்ற விவாதங்கள் அடங்கிய நாடகங்களும் பெரிய மேடைகளிருந்து சிறிய பெட்டிக்குள் சுருங்கி போயின
இதே விவகாரத்தை ஆட்டோ பெட்ரோள் செலவு செய்து நகரின் புறநகர்களுக்கு குடிபெயர்ந்த மயிலாப்பூர் மாம்பலம் வாசிகளும் எதற்கு வீண் செலவு என்று வாரம் ஒரு முறை சரவணா பவனில் சாப்பிட்டு விட்டு தங்கள் OUTING ஐ முடித்து கொண்டனர்
பலர் 6 மாதம் அமெரிக்கா 6 மாதம் இந்தியா என்பதால் தங்கள் சபா MEMBERSHIP ஐ ரத்து செய்து விட்டு டிசம்பரில் மட்டும் கச்சேரி கேட்டு ரசிக்க பர்முடாஸ் டி ஷர்ட் போட்டுகொண்டு வலம் வர ஆரம்பித்தனர்
இதெல்லாம் என்ன பீடிகை என்கிறிர்களா?
நாம எப்படி நாடகம் போட்டு இவர்களை அரங்கிற்கு வரவழைப்பது என யோசித்தேன்
அதன் விளைவுதான் என்னுடைய இறுதி முயற்சிதான் இது
இவர்கள் பார்க்கும் டிவி பெட்டியை பிரியாமல் இருக்க அந்த டிவி பெட்டியையே அரங்கிற்கு கொண்டு வந்து விட்டால் ஒருவேளை மனம் மாறி அந்த மயக்கத்தில் இங்கு வந்து விடுவார்களோ என யோசித்தேன் அதற்காக உருவாக்கப்பட்டதுதான் இந்த டிவி பெட்டி (இதைப்பற்றிய ஒரு குறிப்பு இணைப்பில் உள்ளது)
மேடையில் டிவி பெட்டி போல செட் போட்டால அதை டிவி காட்சி என்று நம்பி விடுவார்களா என்ன என்று சிலர் என்னை கேட்டார்கள்
படுதா ஆடும் பாற்கடலையும் பறந்து வரும் புஷ்பக விமானங்களையும் பாய்ந்து செல்லும் அம்புகளையும் பிளிரும் யானைகளையும் நம்பும் இவர்கள் நிச்சயமாக இதையும் ஒரு டிவி தொடர் என்று நம்பி விடுவார்கள் என்ற அசட்டு துணிச்சல் எனக்கு
சரி இன்னும் என்னென்ன செய்யலாம் என்று யோசித்தேன் டிவி தொடர்களில் என்னென்ன வருகிறது என்று பார்த்து..........ர்த்தக இடைவேளை எனப்படும் பூஸ்ட் ஹோர்லிக்ஸ் சோப்பு விளம்பரங்களுக்கான நேரம் ஒன்று இருக்கிறதல்லவா (இந்த நேரத்தில் பெரும்பாலும் பெண்கள் நறுக்கிய காய்களுக்கு தாளித்து கொட்டுவார்கள்) அந்த பகுதியை சேக்கலாம் என்று எண்ணினேன்
அதற்கு முன்னால் நாடகத்தை 20 நிமிட பகுதிகளாக பிரித்து கொண்டேன் நாடகம் என்பது உயிரோட்டமுள்ள ஒரு நிகழ்வு பிம்பமல்ல அல்லவா
அதனால் இந்த விளம்பரங்களும் மேடையில் நடிகர்களால் உண்மையாகவே நடத்தபடவேண்டுமேன்று தீர்மானித்து அதற்காக ஒத்திகை தனியாக நடந்தது
இதற்கான அரங்க அமைப்பிற்கு மட்டும் 95 ல் 25000 வரை செலவு
இவ்வளவு செய்தபின் இதையே கொஞ்சம் வர்த்தக ரீதியாக செய்தால் என்ன என்று தோன்றியது உண்மையிலேயே விளம்பரங்கள் வெளியிட்டால் பணமும் கிடைக்கும் நாடக காட்சிகளும் அதிகரிக்குமே என்று எண்ணி ஒரு மாதம் விடுமுறை எடுத்துக்கொண்டு ஏறி இறங்காத கம்பெனி இல்லை விளம்பர AGENCY கள் இல்லை
5 நிமிட நேர விளம்பரத்திற்கு நான் கேட்ட தொகை வெறும் 500 மட்டுமே
ஆனால் வங்கியில் நாடகமா வேலையா என்று முடிவெடுத்தால் நன்றாக இருக்கு மென என் காது பட பேசிக்கொண்டது தவிர வேறு பலன் எதுவும் இல்லை
நாடகத்தில் விளம்பரங்கள் இடம்பெற வேண்டுமே என்பதற்காக ஒரு கம்பனி வியாம்பதையும் எங்கள் வங்கியும் விளம்பரத்தை மட்டும் சேர்த்து கொண்டேன்
இதில் இன்னொரு இடைஞ்சலும் ஏற்பட்டது
நாடகக்காரர்கள் கொஞ்சம் சம்பாதிப்பது வெளியூர்களில் நாட்டகம் நடத்தும் போது மட்டும்தான் உள்ளூர் நஷ்டத்தை ஈடு கட்டுவது அங்கேதான்
ஆனால் 70 கள் போல மனோகர் போல நாங்கள் அரங்க பொருட்களை லாரியில் ஏற்றி செல்ல வசதிகள் இல்லை ஆகையால் விட்டையும் காட்டையும் அலுவலகத்தையும் பூங்காவையும் துணியாக மடித்து எடுத்து சென்றால்தான் அவர்கள் கொடுக்கும் பணத்திற்கு நஷ்டமில்லாமல் நாடகம் நடத்த முடியும்
இந்த டிவி பெட்டியோ படுதாவினாலோ சட்டங்களாலோ செய்யப்பட்டது அல்ல இவை ஆபீஸ் PARTITION செய்ய பயன்படும் HARDBOARD செய்யப்பட்டது அப்படியேதான் லாரியிலேயோ VAN லேயோ கொண்டு போக வேண்டும்
அதற்கு செலவு செய்யும் தொகையில் சென்னையில் மூன்று காட்சிகள் நடத்தி விக்டலாம்
ஆகையால் பெரும்பாலான நகரங்களில் இந்த நாடகம் நடத்த முடியாமல் போய் விட்டது எனக்கு அந்த நாளில் ஆதரவு தந்தவர் பெங்களூர் கிருஷ்ணன் மட்டுமே என நாடகத்தை பார்த்து விட்டு எவ்வளவு செலவானாலு பரவயில்ளை செட் எடுத்துக்கொண்டு வா என சொல்லி தனியாக பணம், கொடுத்தவர்
அமரர் ஆகிவிட்ட அவருக்கு இங்கிருந்து உரக்க நன்றி சொக்ல்கிறேன்
ஆகையால் இந்த நாடகம் 25 முறை சென்னையில்; மட்டும் நடந்தது
மேலும் சுவாரசியம் கூட்ட இதில் ஒரு போட்டியும் வைத்து பரிசுகளும் உண்டு என்று நானே அறிவிப்பும் மேடையிலேயே செய்வேன்
இதைதவிரே நாடகம் ஆரம்பிப்பதற்கு முன்னால் ஒரு எதிரொலி நிகழ்ச்சி நடத்தி இந்த நாடகத்தை பற்றி வந்துள்ள விமர்சனகளையும் கடிதங்களையும் பற்றி விவாதிக்கும் ஒரு நிகழ்ச்சியும் உண்டு
நாடகத்தில் நடிப்பவர்கள் பெயர்கள் SCROLLING ல் செல்லும்
இப்படி உருவானதுதான் எ னுடைய SHERLUCK சர்மாஜி என்ற துப்பறியும் நான்கு எபிசொட் நாடகம்
Bombay Kannan Kannan's photo.
இன்னும் கலைப்பூர்வமாக சொல்லப்போனால் இதில் CLOSE UP காட்சிகள் உண்டு MIDSHOT உண்டு LONGSHOT உண்டு அவற்றிற்காக பார்வையாளர்களின் கற்பனைக்கு விட்டு விடும்படி உல் அரங்கை நிர்மானித்தது மட்டுமில்லாமல் ஒத்திகையும் நடந்தது
இந்த உழைப்பிற்கு எனக்கு கிடைத்த ஒரே ஆறுதல் பரிசு MYULAPORE அகாடமி வழங்கிய BEST ALL ROUNDER விருதுதான்
இந்த திட்டத்தை யாரவது பயன்படுத்த விரும்பினால் என்னிடம் COPYRIGHT இல்லை என்றாலும் ஒரு வார்த்தை சொல்லி கலந்து ஆலோசித்தல் நலம்

No comments:

Post a Comment