Thursday, August 18, 2016

என்னுடைய நண்பர்களில் சிலர் மதம் மாறி விட்டார்கள் கிறிஸ்தவ மதத்திற்கு போய் விட்டார்கள்
இவர்கள் பெரும்பாலும் கலை உலகத்தைசேர்ந்தவர்கள்
வாழ்க்கையில் எதோ பெரிதும் எதிர்பார்த்து் அது கிடைக்காமல் போனதால் மதம் மாறிவிட்டார்கள்
...
ஒருவர் அம்மன் பக்தர்
வெள்ளிக்கிழமை தோறும் அம்மன் கோவிலுக்கு போவதும் வீட்டிலேயே அம்மன் விக்ரகத்தை வைத்து அபிஷேக ஆராதனை செய்வதும் இவர் வழக்கம் இவர் நன்கு வசதியாக வாழ்ந்தவர்தான்
திடிரென வாழ்க்கையில் ஒரு பின்னடைவு இதற்காக இவர் போகாத கோவில் இல்லை செய்யாத பரிகாரம் இல்லை
எல்லாவற்றையும் செய்து விட்டு எந்த பலனும் இல்லாததால் நம் கடவுள் மிது கோபம் கொண்டு விக்ரங்களை தூக்கி எறிந்து விட்டு அந்த அணிக்கு தாவி விட்டார்
அதோடு நில்லாமல் ஒரு மத பிரசாரகராகவும் மாறி விட்டார் ரொம்ப வசதியாக இருப்பதாகவும் எல்லாவற்றிற்கும் காரணம் யேசுப்பாதான் தான் என்று அடிக்கடி கூறுவார்
நம்ம சாமி என்ன செஞ்சுதுன்னு குறை பட்டுக்கொள்வார்
சமிபத்தில் சந்தித்த போது மறுபடியும் வாழ்க்கையில் கொஞ்சம் பின்னடைவு என்று சொல்லிக் கொண்டார்
மற்றறொரு நண்பர் இவரும் கலை உலகை சேர்ந்தவர்தான் நெற்றியில் குங்குமமும் விபூதியும் இல்லாவிட்டால் நிர்வாணமாக நடப்பது போல் இருப்பதாக சொல்லிக்கொள்வார்
சமிபத்தில் கேள்விப்பட்டேன் இவரும் மதம் மாறிவிட்டதாக அவரது பிரச்சனைகளுக்கு அது ஒரு புகலிடம் என்று தோன்றி இருக்கும்
இவர்களிடம் நான் சொல்ல நினைப்பது ஒன்றுதான்
நீங்கள் மதம் மாறாவிட்டாலும் உங்களுக்கு நல்லது நடக்க வேண்டிய கால கட்டத்தில் அது நடந்தே திரும் அது நீங்கள் எந்த மதத்தில் இருக்கிறிர்கள் என்று பார்த்து நடப்பதில்லை
நீங்கள் எந்த மதத்தில் இருந்தாலும் உங்களுக்கு நல்லது நடக்க கூடாது என்று இருந்தால் நிச்சயம் நடக்க போவதில்லை
அதை எதற்காக உங்கள் மதத்தை மாற்றி சோதித்து பார்க்கிறிர்கள்?
இந்த இடத்தில என் அனுபவம் ஒன்றையும் குறிப்பிட ஆசைபடுகிறேன்
ஒரு நாடக நடிகர் வட நாட்டிலிருந்து வந்தார் தமிழர்தான்
ஒரு ஒலி நாடகத்தில் நடிக்க வேண்டுமென என்னை அழைத்தார் இவரை எனக்கு ஒரு பிரபலமான நண்பர் அறிமுக படுத்தியதால் ஒப்புக்கொண்டு போனேன்
இவர் பெயர் கூட ஹிந்து பெயராக இருந்ததால் இவர் ஒரு தீவிர கிறிஸ்தவர் என்று எனக்கு முன்பே தெரியவில்லை
காலையில் ஒலிப்பதிவிற்கு சென்ற போது இவர் கொடுத்த ஸ்க்ரிப்ட்டை வாங்கி படித்தேன்
அப்போதுதான் புரிந்தது இவர் ஒரு தீவிரமான கிறிஸ்தவர் என்று
அவர் எழுதிய கதையில் பிராமணர்கள் கிறிஸ்தவராக வாழ்வது போலவும் ராமர் christ க்கு பிறகு வந்த அவருடைய அவதாரம் என்றும் அவரும் ஒரு கிறிஸ்தவர் தான் என்றும் கதை போனது
ஸ்க்ரிப்ட்டை அவரிடம் திருப்பி கொடுத்து விட்டு என் மனம் ஒப்புக்கொள்ளத ஒரு கதையில் நான் நடிக்க தயாரில்லை என்று கூறிட்டு வெளியேறிவிட்டேன்
கொஞ்சம் காசு பாத்திருக்கலாம் நடிப்புதானே என்று யோசித்து இருந்தால்
இருந்தும் மனசாட்சி இடம் தரவில்லை வந்து விட்டேன்
ஒருமுறை இப்படி கதையை கேட்காமல் ஒரு டிவி நாடகம் ஒன்றில் நடித்து ( ஒரு தனியார் சேனலில் வந்தது) நான் பட்ட அவஸ்தைகளை வேறு ஒரு சந்தர்பத்தில் எழுதுகிறேன் அந்த நேரத்து ஆர்வ கோளாறுதான் காரணம்

No comments:

Post a Comment