Wednesday, August 27, 2014

  • நாடக அனுபவங்கள் பகுதி 2

    அது என்னவோ என்னுடடைய நடிப்பு ஆர்வம் என்பது பூர்வ ஜன்ம பந்தமா அல்லது ஏதாவது genetic கோளாறா தெரியவில்லை

    ஏனென்றால் இது தொட்டில் பழக்கம் போல மிக சிறிய வயதிலேயே என்னை பற்றிக்கொண்டது இது எந்த அளவுக்கு பரவியது என்றால்.......

    எனக்கு தெரிந்தது இரண்டே விளையாட்டுகள்தான்:
    ஒன்று ஒரு கிருஷ்ணர் விக்ரகத்தை வைத்துக்கொண்டு வீட்டிலிருக்கும் பால் தயிர் சந்தனம் முதலியவற்றை வைத்து அபிஷகம் செய்து மூன்று கட்டு வீட்டைசுற்றி ஊர்வலமாக தூக்கி செல்வது......

    .மற்றொன்று கையில் கிடைத்த பவுடர் எடுத்து பூசிக்கொண்டு கட்டபொம்மன் வசனம் பேசுவது

    என் நடிப்பு ஆசை எந்த அளவுக்கு முற்றி போனது என்றால் அவ்வப்போது சென்னைக்கு விடுமுறைக்கு வரும்போது என் சித்தப்பா விட்டில் தங்குவது வழக்கம் எல்லோரும் சென்னை வந்தால் MARINA போவர்கள் MUSEUM போவர்கள் ஆனால் நான் என் அண்ணன்மார்களை தொணப்பி எடுத்து எங்கே கூட்டிபோகசொல்வேன் தெரியுமா??

    அவர்கள் சைக்கிள் ஓட்ட நான் பின் சீடடில் அமர்ந்து மாம்பலத்தில் உள்ள ஒவ்வொரு சினிமா நடிகன் வீடாக சென்று அந்தந்த GATE களைப் பார்த்து விட்டு மகிழ்ச்சியாக திரும்புவேன்.....
    1965 ம் வருடம்

    சென்னையில் விவேகானந்தா கல்லுரி
    பல நடிகர்கள் படித்த கல்லுரி
    அங்கே எனக்கு PUC ல் இடம் கிடைத்தது அப்பாவுக்கு ஆந்திராவில் வேலை என்பதால் HOSTEL வாழ்க்கை..

    மயிலாப்பூர் வாசம்

    அருகிலேயே காமதேனு கபாலி திரை அரங்குகள் கேட்கவேண்டுமா?

    PUC ல் MINIMUM MARK வாங்கி பாஸ் செய்து அங்கேயே BOTANY மாணவனாக தொடர்ந்தேன்
    நான் படித்த அதே நேரத்தில் தான் எங்கள் கல்லுரியில் GV ANANDA PICTURES SURESH போன்றவர்கள் படித்தனர்

    ‘சோ’ வின் VIVEKA FINE ARTS உருவானது இங்கேதான்
    எங்கள் HOSTEL க்கு எதிரில் அமைந்துள்ளது MFAC அரங்கம்
    ஒவ்வொரு முறை நாடக அரங்கேறும்போதும் முதல் நாள் GRAND REHEARSAL நடைபெறும்,

    அதற்கு AUDIENCE யார் தெரியுமா
    விடுதி மாணவர்களாகிய நாங்கள்தான்
    யார் வருகிறார்களோ இல்லையோ நான் சாப்பாடு முடிந்தவுடன் அங்கே போய் விடுவேன்

    அப்போதெல்லாம் இந்த இறுதி ஒத்திகைக்கு அரங்கம் நிறைந்து இருக்கும் இப்போ தெல்லாம் இந்த ஒத்திகைக்கு நடிப்பவர்களை விட குறைவாகத்தான் அரங்கில் ஆட்களைப்பார்க்க முடியும்
    ஏன் சில சமயம் நாடத்திற்கே அந்த நிலைமைதான்!!

    சோ வின் நாடகங்களுக்கு குறிப்பாக எங்களை HOSTEL ல் வந்து மாணவர்களை அழைப்பார்கள்
    கூட்டமாக செல்வோம்
    என் உள்ளே நாமும் இப்படி ஒரு நாள் சென்னையில் மேடை ஏற மாட்டோமா என்ற ஏக்கம் துளிர் விட்டது

    இதைத் தவிர சென்னையில் பிரபலமான குழுக்களாக ராகினி RECREATION. UAA, நேஷனல் THEATRES, என்று பல குழுக்கள் இருந்தன

    எனக்கென்னவோ அன்றையிலிருந்தே UAA (UNITED AMATEUR ARTISTE) எனப்படும் YGP குழுவின் மேல் ஒரு கண்

    சென்னையில் நடக்கும் நாடகங்களைப் பார்த்து மேடை ஏற மாட்டோமா என்று இருத்த எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது
    எங்கள் கல்லூரியிலேயே கிடைத்தது

    கிடைத்தது என்று சொல்வதை விட நான் ஓடிப்போய் பறித்துக் கொண்டேன் என சொல்லலாம்
    சென்னை கல்லுரிகளுக்கிடையேயான நாடகப் போட்டி கிண்டி பொறியியல் கல்லூரியில் நடக்கும்
    இந்த போட்டி நாடகத்திற்கு முதலில் எழுதி உருவானவர்கள்தான் மௌலி, crazy mohan போன்றவர்கள்

    எங்கள் கல்லூரியும் அதில் பங்கெடுத்துக்கொள்ளும்..
    நான் என் நடிப்பு ஆர்வத்தை பற்றி நண்பர்களிடம் அடிக்கடி சொல்வதுண்டு அதனால் என் நண்பன் ஒருவன் ஒருநாள், நாடக போட்டிக்கு கல்லூரியில் நாடகம் தயாராகிறது என்றும் ஒத்திகை நடக்கிறதென்றும் சொன்னான்

    யாரோ sharma எண்ணும் மாணவன்தான் அதற்கான ஏற்பாடுகளை செய்வதாக கூறினான்

    ஓடிபோய் ஷர்மாவைப்பார்த்தேன் எல்லா பாத்திரங்களுக்கும் ஆட்கள் வந்துவிட்டதாகவும் நாடகத்திற்கு இன்னும் இரண்டே நாள்தான் இருக்கும் நிலைமையில் ஒரே ஒரு பாத்திரத்திற்கு யாருமே நடிக்க தயாராக இல்லாததால் நாடகமே நின்று போய்விடும் நிலைமை என்று கண்ணிர் மல்க தெரிவித்த போது நான் தயார் என்று (கூறினேன்) கூவினேன்

    எனக்குதான் எப்படியாவது நடித்தால் போதுமே!!!
    Sharma என்னைக் கட்டித்தழுவி Script ஐ கையில் கொடுக்க

    கால் கிழே பாவாமல் ஆனந்தத்தில் மிதந்தேன்.

    எல்லோரும் செய்ய மாட்டேன் என்று ஒதுங்கிய பாத்திரம் என்ன தெரியுமா...?

    நான் சென்னையில் போட்ட முதல் வேடம் என்ன தெரியுமா??

    என் முதல் மேடை நாடகம் சென்னையில் நடந்த போது ஏற்பட்ட சுவையான அனுபவத்தை அப்புறம் சொல்கிறேனே
  • 1 comment: