Saturday, August 23, 2014

நான் ஒலிப்புத்தகம் தயாரிப்பதற்கு எனக்கு முதன் முதலில் பெரிதும் ஊக்க மளித்தவர் திரு பூரம் சத்தியமுர்த்தி அவர்கள் தான். சில வருடங்களுக்கு முன்னால் ஒரே குரலில் வெளிவந்துகொண்டிருந்த சில ஒலிப்புத்தகங்களை கேட்டுவிட்டு அதில் எதோ மிஸ்ஸிங் என்று எனக்கு தோன்றியது

ஒவ்வொரு கதையிலும் அந்த கதாசிரியனின் உணர்வுகள் எழுத்தில் புதைந்து இருப்பாதாக பட்டது ஒவ்வொரு வசனமும் அந்தந்த கதாபத்திரங்களின் உணர்சிகளுக்கு ஏற்ப ஏற்ற இறக்கங்களுடன் Modulation னுடன் இருந்தால் நன்றாக இருக்கும் என எண்ணினேன் சாய்பாபா வாழ்க்கை சரித்திரம் ஒலிப்புத்தகமாக கொண்டு வந்தபோது இதற்கு அவ்வளவு கவனம் செலுத்தவில்லை

என்னுடைய படைப்புகளைப்பற்றி கேள்விப்பட்ட அவர் திரு PV என அழைக்கப்படும் P வெங்கடராமன் மூலமாக என்னை அழைத்தார். தன்னுடைய சிறுகதைகளை ஒலிப்புத்தகங்களாக தயாரிக்க வேண்டுமென்றார் அவரை முதன்முதலில் அப்போது தான் சந்திக்கின்றேன்.... திருவல்லிகேனியில் அவரது சிறிய குடிலில் அழைப்பு மணி அடித்தவுடன் ஒரு வயதானவர் வந்து என் கையை பற்றி அழைத்து சென்றார் அவரது புத்தகங்களை தேடி எடுத்து கொடுத்து படிக்க சொல்லி எந்த கதைகளை தேர்ந்து எடுக்க வேண்டுமென்ற பொறுப்பையும் என்னிடமே அளித்தார்

நான் தேர்ந்து எடுத்த ஒவ்வொரு கதையை பற்றியும் அவர் அலசி அதை எப்படி எப்போது எழுதினேன் என்று கூறியபோது ஒரு இலக்கியவாதியின் அனுபவங்கள் என்னுள்ளும் பாய்ந்தன

முதல் தொகுப்புக்கான கதைகள் தயாராகி "நலம் தரும் சொல்" என்ற தலைப்பில் பல கலைஞர்களின் குரல்களிள் இசை மற்றும் சிறப்பு சப்தங்களுடன் வெளியானபோது பூரம் சொன்ன வார்த்தைகள் இன்றும் என் காதுகளின் எதிரொலிக்கின்றன

"எதிர்காலத்தில் தொழில் நுட்பங்களுடன் நாமும் வளர வேண்டும் இனி கொஞ்ச நாட்களில் காகிதத்தில் அச்சிடப்படுவதைவிட ELECTRONIC மீடியாவில் படிப்பதும் கேட்பதும் தான் நிலைக்க போகிறது என்னுடைய கதைகளை நானே படித்து ரசிப்பதைவிட கேட்டு கேட்டு இன்புறுகிறேன் என் கதாப்பாத்திரங்கள் என் கண் முன்னால் நடமாடுகின்றனர்" என்று கூறி ஆசிர்வதித்தார் அது மட்டுமல்ல மேலும் இரண்டு தொகுப்புகளை கொண்டு வரவும் அனுமதி தந்தார்

இதுவரை இந்த 75 வயது இலக்கியவாதியின் 21 கதைகளை 3 தொகுப்புகளாக வெளியிட்டுள்ளேன் ஒவ்வொரு கதையையும் கேட்டுவிட்டு அவர் கண்களில் நீர் ததும்ப கையை பிடித்துகொண்டு பாராட்டியதை நினைக்கும் போது இந்த பதிவு எழுதும் கண்கள் மறைக்கின்றன இவர் கொடுத்த ஊக்கமும் ஆசியும் என் நெடுநாள் கனவான சிவகாமியின் சபதம் ஒலிப்புத்தகம் உருவாக காரணம்மாக அமைந்தது (இந்த புதினத்தை நான் ஒரு தொலைக்காட்சி தொடராகவோ TELEFILM ஆகவோ தயாரிக்க விரும்புவது தனி விஷயம்)

பின்னர் பொன்னியின் செல்வன் எனக்கு பாராட்டுகளை அளித்தது.. இதற்கெல்லாம் பின்புலமாக இருந்தது திரு பூரம் அவர்கள் போட்ட பிள்ளையார் சுழிதான்.. என்றும் இவருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்

திரு பூரம் அவர்கள் PORT TRUST ல் வேலைபார்த்து ஓய்வுபெற்றவர் திரு PV அவர்களின் நெருங்கிய நண்பர் பல வருடங்களுக்கு முன்னர் பிரபல பத்திரிக்கைகளான கண்ணன் கலைமகள் சுதேசமித்திரன் இவற்றில் பல கதைகளை எழுதி பரிசுகளைப் பெற்றவர் சிறந்த இலக்கியவாதி வேதம் கற்றவர் இவரைப்பற்றி இரண்டு கொசுறு செய்திகள்

கணிதமேதை ராமனுஜம் வேலைபார்த்த அதே நாற்காலியில் வேலைபார்த்தவர் அவரைப்பற்றி நாடகம் எழுதி தயாரித்து நடத்தியவர் மற்றொரு முக்கியமான விஷயம்..........
;
;
;
இந்த சிறந்த எழுத்தாளருக்கு கடந்த 2௦ வருடங்களாக கண்பார்வை முழுவதுமாக கிடையாது........


No comments:

Post a Comment