Wednesday, August 27, 2014

நாடக அனுபவங்கள் 3 ம் பகுதி

நான் நாகப்பட்டினத்தை விட்டு பள்ளிப்படிப்பு முடிந்து புறப்பட்ட போது நான் இழந்தவை 3 விஷயங்கள்

ஒன்று சமஸ்க்ரிதம்

என் தாத்தா நான் சமஸ்க்ரிதம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று எவ்வளவோ பிரயத்தனப்பட்டார் அதற்காக என்னை மகாதேவா சர்மா என்னும் சமஸ்க்ரத பண்டிதரிடம் டியூஷனுக்கு அனுப்பினார் எனக்கு ராம சப்தம் வரவில்லை என்பதால் அவர் முகம் மூஞ்சுருபோல் இருக்கிறது என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன்

அடுத்தது ஹிந்தி....

1965 ம் வருடம் அது hindi எதிர்ப்பு தீவிரமாக நடந்து கொண்டிருந்த காலகட்டம் இந்த அரசியல் வாதிகளின் வார்த்தைகளில் மயங்கி ஹிந்தி எதோ தீண்டத்தகாத மொழி என்று நினைத்து அதையும் படிக்காமல் விட்டேன்! இந்த நேரத்தில் தமிழை ப்பற்றி வேறு ஏதாவது ஒரு அரசியல்வாதி அப்படி சொல்லியிருந்தால் இளம் மாணவர்கள் அதற்கும் மயங்கி இருப்பார்களோ என்னவோ யார் கண்டது?

மூன்றாவது சரித்திரம்

இதற்கு நானே தான் பொறுப்பு

சரித்திர காலநிகழ்வுகளை நினைவில் வைத்துக்கொள்ள சோம்பல் பட்டு சரித்திரம் சமுகம் பூகோளம் எதுவும் வேண்டாமென்று பத்தாம் வகுப்பில் பொறியியல் பிரிவு எடுத்து படித்து பின்னால் அதையும் தொடராமல் தாவரயியல் படித்தவன் நான்

சரி இதற்கும் நாடக அனுபவங்களுக்கும் என்ன சம்மந்தம் என்றுதானே கேட்கிறிர்கள்?
பின்னால் ஒரு காலகட்டத்தில் இவற்றின் அருமையை நான் நடிப்பில் கற்றுக்கொண்டது பற்றி சில காலம் கழித்துவரும் பகுதிகளில் விளக்கமாக கூறுகிறேன்

இப்போது

நாகை விட்டு வந்து கல்லூரியில் நாடகம் பற்றி சொல்லிக்கொண்டிருந்தேன் அல்லவா

அங்கே மீன்டும் வருவோம்

sharma விடம் நான் அந்த வேடத்தில் நடிக்கிறேன் என்று சொன்னவுடன் அவர் மகிழ்ச்சியுடன் என்னை ராயப்பேட்டையில் உள்ள கௌடியா மடத்துக்கருகே ஒரு வீட்டிற்கு அழைத்துசென்றார்.

அங்கே ஒரு தாடி வைத்த ஒரு இளைஞர் எங்களை வரவேற்றார்

அவர் என்னை உற்றுப்பார்த்தார்

அவர் பெயர் நாராயண சாமீ என்றும் அவர் சைதன்யா டியூஷன் சென்டர் நடத்தி வரும் ஒரு ஆசிரியர் என்றும் அவர்தான் நாங்கள் போடப்போகும் நாடகத்திற்கு கதாசிரியர் இயக்குனர் என்றும் அறிந்து கொண்டேன்

அவருடைய வலது கையில் ஆள்காட்டி விரல் மட்டும் எப்போதும் யாரையோ சுட்டிக்காட்டி கொண்டிருந்தது!!

மற்ற விரல்கள் மடங்குவது போல அது மடங்கவில்லை.
எனக்கென்னவோ ஒழுங்கா நடிக்கலைன்னா கொன்னுடுவேன்னு சொல்லற மாத்ரி இருந்தது

அவர் என்னைப்பார்த்துவிட்டு குறிப்பாக என் கண்களைப்பார்த்துவிட்டு மிகப்பொருத்தம் என்றார்
ஒத்திகை துவங்கி விட்டது

ஷர்மாவிற்கு ஒரு விஞ்ஞானி வேடம் மிக உணர்ச்சிகரமாக நடிக்க வேண்டிய பாத்திரம் அது

இந்த பாத்திரத்தில் நடிக்கும் போதுதான் நாரயணசாமி சார் உணர்ச்சிவசப்பட்டு மேஜையை குத்த மேஜைமேல் இருந்த சில கண்ணாடி குடுவைகள் உடைந்து அவர் கையில் கண்ணாடி துண்டுகள் புகுந்து கைவிரலின் நரம்பு வெட்டப்பட்டு இந்த எச்சரிக்கை முத்திரையில் நிரந்தரமாக தங்கிவிட்டது என கேள்விப்பட்டேன்

(இவர்தான் பின்னாளில் ஒரு விரல் நாராயணசாமி என்றும் தாடி நாராயணசாமி என்றும் எதிரொலி நாராயணசாமி என்றும் சென்னை தொலைக்காட்சியில் வெகு பிரபலமாக விளங்கி ய திரு T S NARAYANASWAMY அவர்கள்)

ஓஹோ!! இன்னும் எனக்கு என்ன வேடம் என்ற suspense விஷயத்தை உடைக்கவில்லை இல்லையா?

நீங்களெல்லாம் எதிர்பார்த்த அளவிற்கு ஒண்ணும் பெரிய மர்மம் இல்லை

அந்த நாடகத்தின் கதாநாயகி நான்!!!!

அவ்வளவுதான்!!

கிண்டி பொறியியல் கல்லுரி மாணவர்கள் நாடகங்கள் நடக்கும்போது விசிலடித்து ஆர்பாடம் செய்து கிண்டலடித்து மகிழ்வதில பெயர் போனவர்கள்

பெண்கள் கல்லூரியிலிருந்து வரும் நாடகம் என்றால் கேட்க வேண்டாம் ஒரு பெண் மேடையில் தோன்றி நடித்துவிட்டு எல்லா வசனத்தையும் பேசிவிட்டு உள்ளே வந்து விட்டாளானால் அவளுக்கு oscar பரிசே கொடுக்கலாம்

அப்படிப்பட்ட இடத்திற்கு ஒரு நாடகத்த்தில் பெண்வேடம் ஒரு ஆண் என்றால் யோசித்துபாருங்கள்

அதை செய்யவும் ஒருவன் துணிந்து விட்டால் அவனை என்னவென்று சொல்வது என்ன செய்வது??

விவேகானந்தா கல்லூரியில் பெண்களுக்கு அப்போது நோ entry
ஒப்புக்கொண்ட என்ன விட ஷர்மாவுக்கு அவனே புடவை அணிந்து நடிக்க போவதுபோல....ஒத்திகையின் பொது அடிக்கடி பாத்ரூம் போய் வந்தான்

அடிக்கடி என்னை பரிதாபமாக பார்த்தான்

மீண்டும் ஒருமுறை நாடகத்தை cancel செய்து விடலாமா என யோசித்தான்

ஆனால் நாராயணசாமிக்கு என்ன பதில் சொல்வது என்று புரியவில்லை

அவன் என்னைப்பார்க்கும் போதேல்லாம் டாக்டரால் கைவிடப்பட்ட நோயாளியை பார்பதுபோலவே இருக்கும்

ஆனால் எனக்கு இதெல்லாம் எதுவுமே தோன்றவில்லை நாம் நடிக்கப்போகிறோம்

அதுவும் சென்னை மேடையில்

அதுவும் guindy engineering college ல்

நான் ஒத்திகையில் கலந்துகொண்டு வசனம் பேசி பெண் போல நடிக்க ஆரம்பித்தேன் அந்த நாளும் வந்தது.........
(மறுபடியும் சந்திப்போம்)

1 comment:

  1. சஸ்பென்சாக நிறுத்தி விட்டீர்களே...

    ReplyDelete