Tuesday, August 26, 2014

  • என் நாடக அனுபவங்கள்

    நான் முதன் முதலில் மேடை ஏறியது நாகையில் தான். அது 1964 ம் ஆண்டு(வயது13) என்று நினைவு நண்பர்கள் எல்லாம் சேர்ந்து நாடகம் போடுவது என முடி வு செய்தோம்

    நாகைப்பட்டினத்தில் கோடையிடி வாத்தியார் என்று ஒரு drillmastder அவருக்கும் நாடகம் என்றால் உயிர் அவர் எழுதி இயக்கிய ஒரு சரித்திர நாடகத்தில் எனக்கு ஒரு முக்கியமான பாத்திரம் பக்கம் பக்கமாக வசனம், ஏற்கனவே நாடகம் நடிப்பு கனவுகளோடு இருந்த நான் ஆனந்த கூத்தாடினேன் இதற்கு முன்னால் சகோதரியுடன் “தாயே யசோதா” பாட்டிற்கு புகளுரில் கிருஷ்ணனாக வேஷமிட்டு நடனமாடிய அனுபவம் வேறு (வயது 8)

    இதைத்தவிர எல்லோரும் விரும்பி கேட்கும்போதெல்லாம் “அழகான பொண்ணுதான் அதுக்கேற்ற கண்ணுதான்” பாட்டுக்கு அடிக்கடி அபிநயம் பிடிப்பேன்


    அப்போதெல்லாம் நாகைபட்டினத்திடில் வீடு வீடு ஆக சென்று நாங்கள் சிறுவர்கள் பணம் வசூல் செய்து நாடகம் போடுவோம்
    ஒரு 4௦ பக்க நோட்டு புத்தகத்தில் எல்லோரும் தங்கள் தங்கள் அன்பளிப்பை எழுதி கையெழுத்து இடுவார்கள் எவ்வளவு என்கிறிர்களா எல்லாம் ஒரு ரூபாய் எட்டணா நாலணா தான் அதுவே 1௦௦ ரூபாய்க்கு மேல் வசுலாகிவிடும் அதிலும் என் தாத்தா வக்கீல் வெங்கடசாரியர் முதல் பெயர் எழுதி விட்டால் போதும் எல்லோரும் கொடுத்துவிடுவார்கள்

    தாத்தா தர்மம் செயவதர்கேன்றே ஒரு சுருக்குபையில் ஒரு பைசா ரெண்டு பைசா அஞ்சு பைசா என மாற்றி வைத்திருப்பார் வாசலில் தர்மம் என்று வந்தால் இல்லை என்று சொல்லாமல் கொடுத்து வந்தவர் அவர்.
    இப்போது கூட பல சமயங்களில் நான் ஆபத்துகளில் இருந்து தப்புவதற்கு காரணம் அவர் செய்த தர்மம் தான் என நினைப்பேன்

    நாடகம் அதுவும் பேரன் நாடகம் என்றால் சும்மாவா தத்தா 5 ரூபாய் என எழுதி கொடுக்க வசூல் களை கட்டியது
    தினமும் rehearsal, வசூல் வேட்டை, பக்கம் பக்கமாக வசனம்.
    எனக்கு இந்த வேஷம் என் நடிப்பு திறமைக்கு கொடுக்கப்பட்டதா அல்லது தாத்தவின் அன்பளிப்புக்குய் கொடுக்கப்பட்டதா என நினைவு இல்லை..

    ஆனால் நாடக தேவதை என்னை அவள் பிடிக்குள் கொண்டு வந்த விட்டாள்

    நாடக தினம் சௌந்திரராஜ பெருமாள் கோவில் பிரகாரத்தில் நாடகம் கூட்டம் அலை மோதியது (நாகை கடற்கரைக்கு அருகில் அல்லவா)

    மதியம் 2 மணியிலிருந்து ஒப்பனை நடந்து கொண்டிருந்தது
    Rosepowder டப்பா வாங்கி அதை தேங்காய் எண்ணையில் குழைத்து முகத்தில் அப்பியவுடனே தொண்டையில் லேசாக கிச் கிச் அடுத்து மிசை ஓட்டுவதற்கு punture ஓட்டும் பசை வாங்கி வந்து மீசை முளைக்காத உதட்டில் தடவி ஓட்டவும் கிச் கிச்....கீச் கீச் ஆனது லேசாக கனைத்துக்கொண்டே உடை மாற்றி கொண்டு மேடை ஏறவும் கோடை இடி வாத்தியார் கை குலுக்கி அனுப்பிவைத்தார்

    அவ்வளவுதான் தெரியும்

    மேடை பயமெல்லாம் துளியும் எனக்கு இல்லை ஆனால் என் குரலுக்கு இருந்தது போலிருகிறது எங்கியோ மக்களுக்கு பயந்து காணாமல் போய்விட ஒரு வசனம் கூட மறக்காமல், நான் யாருக்குமே கேட்காமல் வெறும் காற்றாக வசனம் பேசியது நிஜம்.

    முதல் மேடை நாடகம் இப்படி என்னை பொறுத்தவரை ஊமை நாடகமாக அமைந்துவிட்டது

    Rosepowder தேங்காய் எண்ணை puncture பசை இதெல்லாம் காரணம் என சிலர் கூற கண் த்ரிஷ்டிதான் என பாட்டி சுத்திப்போட அழுதுகொண்டே உறங்கிப்போனேன்

    அதுக்கப்புறம் கோடை இடி வாத்தியார் நான் நாகையில் இருந்தவரை நாடகம் போடவில்லை

    நாடக அனுபவங்கள் தொடரும்.......

  • 2 comments: