Saturday, September 20, 2014



 நாடக அனுபவங்கள் பகுதி 9


சமிபத்தில் என்னுடைய JUST A SECOND PLEASE என்ற நாடகத்தின் YOU TUBE LINK FACEBOOK ல் பதிவு இட்டிருந்தேன் அதற்கு ஒரே ஒரு LIKE வந்திருந்தது எனக்கு சட்டென்று கோவில்பட்டியில் என் நாடகம் நடந்த போது ஏற்பட்ட அனுபவம்வ் நினைவிற்கு வந்தது 



1992 ல் ஒரு முறை கோவில்பட்டி பொருட்காட்சியில் எனது இரு வீடு ஒரு வாசல் நாடகம் நடத்த வாய்ப்பு வந்தது அந்த நாளில் கோவில்பட்டி விருதுநகர் இங்கெல்லாம் பொருட்காட்சியில் நல்ல கூட்டம் நாடகத்திற்கு வரும் நன்றாகவே ரசிப்பார்கள் இதனால் மிக உற்சாகத்துடன் ஒப்புக்கொண்டேன்

நாடக நாளும் வந்தது.காலையிலேயே கோவில்பட்டி சென்று அடைந்து விட்டோம் மாலைதான் நாடகம் மதிய உணவிற்கு பிறகு நாடகம் நடத்தும் இடத்திற்கு சென்றேன் நாடக மேடையும் பார்வையாளர் களுக்கான இடமும் மிகப்பெரியது திறந்த வெளி அரங்கம் மக்கள் அமர்ந்தால் 3௦௦௦ பேருக்கு மேல் அமரலாம் எனக்கோ மகிழ்ச்சிக்கு அளவே இல்லை இன்றுமாலை வரப்போகும் கூட்டத்தை கற்பனை செய்து மகிழ்ந்தேன் தங்கும் இடத்திற்கு வந்து எல்லோரையும் மறுபடியும் ஒரு முறை நாடகத்த்திற்கு ஒத்திகை பார்க்க சொன்னேன்

இரவு உணவிற்குப்பிறகு நாடக மேடையை அடைந்தோம் இரவு 1௦ மணிக்குதான் நாடகம் பொருட்காட்சி சப்தங்கள் எல்லாம் அடங்கிய பிறகு நாடகம் ஆரம்பமாகும் என்றார்கள்

அதனால் பொருட்காட்சி மைதானத்தை சுற்றி வரப்போனோம் பல இடங்களில் ஸ்டால்கள் உருவாகிக்கொண்டிருந்தன முதல் நாள் ஆனதால் முழுமை பெறவில்லை

எங்கள் நாடகந்தான் துவக்க விழா நாடகம்
இரவு மணி 1௦ சிறிது சிறிதாக பொருட்காட்சியை காணவரும் அன்பர்களை ஓயாமல் அழைத்த குரலும் ஓயத்தொடங்கியது மக்கள் அவரவர் வேலைகளைகளை முடித்துக்கொண்டு வந்துகொண்டிருக்கிறார்கள் என ஆவலுடன் காத்திருந்தோம்

ஆனால் யாரும் முதல் நாள் வரத் தயாராக இல்லை என தெரிந்தது கொஞ்சம் படுதாவை நிக்கி விட்டு வெளியே பார்த்தேன்

திறந்த வெளி அரங்கம் மதியம் பார்த்தது போலவே வெறுமையாக இருந்தது மணி 1௦ 3௦ நாடகம் ஆரம்பிக்க சொல்லி தகவல் வந்தது

முதல் மணி அடித்து பார்போம் கூட்டம் வந்து விடும் என்ற நப்பாசையுடன் முதல் மணி இரண்டாம் மணி எல்லாம் அடித்து விட்டோம்

யாரும் அரங்கத்தினுள் வருவதாக தெரியவில்லை அங்கங்கே பொருட்காட்சி மைதானத்தில் சிலர் நின்று கொண்டிருந்தார்கள்

அவர்களிடம் நாடகம் ஆரம்பிக்கப்போகிறது என ஸ்பீக்கரில் அலறினார்கள்

எங்கே அதை ஒரு எச்சரிக்கை யாக கொண்டு வெளியேறிவிடுவார்களோ என்று கூட நான் பயந்தேன்!!

இறுதியாக நாடகம் ஆரம்பித்தே ஆக வேண்டுமென்ற நிலைமை ஏற்பட்டு விட்டது எங்கள் நடிகர்களுக்குக் சோகம் ஒருபுறம் மறுபுறம் ஆகா ஜாலியாக எதை வேண்டுமானாலும் பேசி நமக்குள் ரசிக்கலாம் என்ற எண்ணம் மறுபுறம்

நாடகத்தை ரத்து செய்து விடலாமென்று நினைத்தேன் நாடக ஏற்பாடு செய்தவர்கள் நாடகத்திற்கு ticket விற்றிருப்பதால் நடத்தியே ஆக வேண்டுமென்றார்கள்!!

காலி அரங்கமென நினைத்து படுதாவை உயர்த்தினால் ஒரே ஒருவர் மணற்படுக்கை அமைத்து நாடகம் பார்க்க தயாராக சாய்ந்து படுத்திருந்தார்!!!

ஓ!! இவர்தான் அந்த ticket வாங்கியவரா என நினைத்துகொண்டு (சபித்துக்கொண்டு) நாடகத்தை துவக்கினேன்

அவ்வப்போது எங்கள் குழுவை சேர்ந்தவர்களை வேலை இல்லாதபோது அரங்கத்தில் சென்று அமரும்படி சொல்லி வைத்தேன் அதன்படி அவர்களும் முறை போட்டுக்கொண்டு நாற்காலிகளை கொஞ்சம் நிரப்பினார்கள்

ஆனால் அந்தே ஒரே ஒருவர் நாடகத்தை ரசித்த விதம் எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது

சிரிக்க வேண்டிய இடத்தில் சிரித்து ரசிக்க வேண்டிய இடத்தில் ரசித்து என் கடமை உணர்வை தூண்டிவிட்டார்

அந்த ஒரு ரசிகனுக்காக நான் நாடகத்தில் எந்த ஒரு பகுதியையும் சுருக்காமல் 1௦௦௦ பேருக்கு எப்படி நடிப்போமோ அப்படியே உண்மையாக நடித்து முடித்தோம்

என்ன இருந்தாலும் அந்த ஒரு ரசிகர் காசு கொடுத்து நாடகம் பார்க்க வந்தவர் அல்லவா? ஒரே ஒரு ரசிகர் பார்க்க நாடகம் போட்டவன் என்று guinness world ரெகார்ட் எதாவது இருக்கிறதா???

நாடகம் இடைவேளை வரை வந்து விட்டது ஆனால் பணம் வந்து சேரவில்லை கேட்டு அனுப்பினேன்

collection ஆகவில்லை ஆனவுடன் தந்து விடுகிறோம் என்றார்கள்

தொடர்ந்து நம்பிக்கையுடன் நாடகத்தை நடத்தி முடித்தோம் அப்போதும் பணம் வந்து சேரவில்லை நான் நேராக பொருட்காட்சி அலுவலகம் சென்றேன்

உங்க பணம்தான் தயார் செய்து கொண்டிருக்கிறோம் என்றார்கள்

மேஜை மேல் ஒரு ரூபாய் ரெண்டு ருபாய் 5 ரூபாய் என நோட்டுகளும் காசுகளும் குவிந்து கிடந்தன

பக்கத்தில் ஒரு சிறிய மூட்டை அதனுள் காசுகள் கட்டி வைக்கப்பட்டிருந்தன அந்த பொற்கிழியை எடுத்து என்னிடம் கொடுத்து உங்கள் பணம் 1ரூபாய் 2 ரூபாய் காசுகளாக இந்த பையில் இருக்கிறது எண்ணிக்கொள்ளுங்கள் என்றார்கள்

அதனுள் கொஞ்சம் 1௦ ரூபாய் 2௦ ரூபாய் நோட்டுகள் இருந்தது கொஞ்சம் ஆறுதல்.

நாடகத்திற்கு இந்த 2௦ நுற்றாண்டில் மூட்டையில் 3௦௦௦ ரூபாய் பெற்ற முதல் நாடகக்காரன் நானாகத்தான் இருப்பேன்

எல்லாம் கவுன்டரில் டிக்கெட்விற்ற காசு போலும்
கோவில்பட்டி அல்லவா கொஞ்சம் கடலைமிட்டாய்வாசனை அடித்தது

தூரத்தே சிலர் அப்பளம் சாப்பிட்டுகொண்டிருந்தார்கள் இரவு மணி 2.


No comments:

Post a Comment