Monday, September 1, 2014

நாடக அனுபவங்கள் பகுதி 4

அந்நாளில் guindy இன்ஜினியரிங் கல்லூரியில் வருடா வருடம் கல்லுரிகளுக்கிடையேயான நாடக போட்டி நடைபெறும்

தற்சமயம் இப்படி ஒரு போட்டி நடக்கிறதா என்று எனக்கு தெரியவில்லை அப்படி நடந்தால் தமிழ் நாடக மேடைக்கும் திரைபடங்களுக்கும் நிறைய புது எழுத்தாளர்கள் வந்திருக்க வேண்டுமே

ஆனால் வரவில்லை என்ன காரணம் என்று தெரியவில்லை

அந்நாளில் எல்லா வருடமும் A/C COLLEGE OF TECHNOLOGY பல பரிசுகளை தட்டி செல்லும் காரணம் அந்த சமயத்தில் Mouli அங்கே LEATHER TECHNOLOGY படித்துவந்தார். YG மகேந்திரன் CHEMICAL ENGINEERING படித்துவந்தார்

இவர்களுடன் மற்ற கல்லூரி நாடக குழுக்களும் போட்டியிட்டன. பரிசுகளை வென்றன அது ஒரு ஆரோக்கியமான போட்டியாக மாணவர்கிடையே இருந்தது. படிப்புக்கிடையே இப்படிப்பட்ட கலாசார விழாக்கள் எங்கள் வாழ்வில் ஒரு வசந்தம்

இந்தகால மாணவர்களை நினைக்கும் பொது எனக்கு கொஞ்சம் பரிதாபமாகத்தான் இருக்கிறது

சரி நாம் நம் நாடகத்திற்கு வருவோம்

ஒத்திகை முடிந்து அரங்கேற்ற நாள் வந்தது என்று சொன்னேன் அல்லவா நாராயணசாமீ சாருக்கு சினிமா உலகில் நிறைய பேரை தெரிந்து இருந்ததால் அவர் CINEMA MAKEUP MAN COSTUMER எல்லோரையும் ஏற்பாடு செய்து விட்டார்

இந்த ஒப்பனை கலைஞர்களுக்கு ஒரு பழக்கம் உண்டு யாராவது முதன்முறையாக மேக்கப் போடவந்தால் அவர்களை உசுப்பேத்தி விடுவது கை வந்த கலை

நான் அந்த நாற்காலியி உட்கார்ந்தவுடன் அதுவும் பெண் வேஷம் என்று சொன்னவுடன் அவர் வேலையை காண்பிக்க ஆரம்பித்தார்

“சிவாஜி கணேசன் கூட முதன் முதல்லே பொம்பளை வேஷம்தான் நாடகத்துலே போட்டாரு அப்பவே சொன்னேன் பெரிய நடிகனா வருவென்னு உனக்கு தம்பி அவரை மாதிறேயே கண்ணு ஓஹோன்னு வரப்போறே பாரு””
என்று சொல்லி என் நடிப்பு வெறிக்கு தூபம் போட நான் மானசிகமாக சரோஜாதேவியுடனும் தேவிகாவுடனும் டூயட் பாட ஆரம்பித்தேன்

கண்ணுக்கு ஸ்பெஷல் MAKEUP போட்டு கன்னங்களுக்களுக்கெல்லாம் ROUGE போட்டு ஆப்பிள் போல சிவக்க வைத்து..... நல்ல வேளை அந்த கால கட்டத்தில் நான் அப்போதுதான் ஷேவிங் பண்ண ஆரம்பித்திருந்தேன் கொஞ்சம் கரடு முரடு குறைவாக இருந்தது இல்லையானால் ஒரு ரெண்டாங்கட்டான் முகம் வந்திருக்கும்

பின்னர் WIG வைத்து பின்னலிட்டு பூ வைத்து அலங்காரம் செய்தார்கள் முகம் மட்டும் கிட்டத்தட்ட ஒரு பெண் வடிவம் வந்து விட்டது

இனிமேல்தான் முக்கியமானது விஷயமே

நான் COSTUMER இடம் சென்று என்னை ஒப்டைத்துகொண்டேன்
சட சட என்று என் PANT ஐ உறுவி போட்டு விட்டு ஒரு பாவாடையை மாட்டி விட்டார்

அதன் பின்னர் எதோ ரெண்டு கொட்டாங்குச்சி போல இருந்த பாத்திரத்தை கவிழ்த்து என் மார்பில் கட்ட கொஞ்சம் எரிந்தது
அதன் பின்னர் ஒரு ரவிக்கை அணிவித்து மட மடவென்று ஒரு புடவையை சுற்றி கட்டிவிட்டார் பாருங்கள !!

நான் அவரிடம்......
“ஏன் சார் உங்க விட்டுலே மனைவிக்கு நீங்கதான் புடவைர் கட்டி விடுவிங்களா?” ன்னு கேட்க நினைத்து வாயை அடக்கிக் கொண்டேன்
ஆஹா!! அந்த புடவை மடிப்புகள் என்ன.. அதை அவர் நிவிவிட்ட அழகு என்ன....

பின்னர் மேலே கொசுவம் வைத்து அதை இடுப்பு பாவடையில் சொருகும் பொது கொஞ்சம் கூச்சத்தால் நெளிந்தேன்

பெண்களுக்கான ஒரு HIGH HEEL செருப்பையும் அணிந்தபிறகு முழுமையான பெண்ணாக தோற்றமளித்த என்னை பார்த்தவுடன் நாராயணசாமி ஒரு சின்ன திருஷ்டி பொட்டு வைத்துக்கொள் என்றார்

நாடகம் துவங்க போகிறது கூட்டம் அலை மோதுகிறது (நிஜம்!)

அந்நாளில் நாடகத்திற்கு நல்ல கூட்டம் வரும்
இந்த கல்லூரியில் நாடகத்தை கிழிப்பதற்கென்றே கூட்டம் வரும்

கதாநாயகி அறிமுக காட்சி நான் உள்ளே வந்தவுடனேயே விசில் பறந்தது ஏதேதோ COMMENTS,PAPER ROCKETS எல்லாம் பறந்தது

ஒரு நல்ல கதை அம்சம் கொண்ட நாடகம் ( முதல் நாடகம்) அப்படியே நின்று விடுமோ??

ரொம்ப கலக்கமாக இருந்தது.

ஆனால் ஒரு விஷயம்
எனக்கு என்றுமே இந்த STAGE FEAR பெரிதாக பாதிக்காது

நான் தொடர்ந்து எல்லா தெய்வங்களையும வேண்டிக்கொண்டு என் வசனங்களை ஒழுங்காக பேசி நடித்து கொண்டிருந்தேன்

கொஞ்சம் கொஞ்சமாக விசில்கள் குறைந்தன
கூச்சல் அடங்க துவங்கியது

45 நிமிட நாடகதில் கடைசி 3௦ நிமிடங்கள் எந்த கலாட்டாவும் இல்லாமல் நடந்து முடிந்தது

இந்த திடீர் மாற்றத்திற்கு என்ன காரணம்
ஷர்மாவின் நடிப்பா கதையா அல்லது என்னை நிஜப் பெண்ணென்று நினைத்து பரிதாபமா
யாமறியோம்!!!

நாடகம் முடிந்து எல்லோரும் MAKEUP அறையில் கூடினோம்

நாராயணசாமி சார் வெகுவாக பாராட்டினார்

ஷர்மாவுக்கு சந்தோஷம் பிடிபடவில்லை

மேக்கப் அறையில் தெரிந்தவர்கள் கூட்டம்

வெளியே கதவு ஜன்னல்களில் தலைகள். எட்டி எட்டி பார்த்துகொண்டிருந்தார்கள்.

யாரோ ஒருவர் வந்து என்னை பார்க்கவேண்டும் என்று வெளியே சிலர் காத்திருப்பதாக கூறினார் நான் அப்படியே வெளியே வந்தேன்

பத்து பத்னைந்து மாணவர்கள் என் முன்னால் நின்று கொண்டு உங்கள் நடிப்பு பிரமாதம் என்றார்கள்

நான் நன்றி என்று சொல்லி கை குலுக்குவார்கள் என கை நீட்டினேன்

வணக்கம் சொன்னார்கள்

ஒருவன் ரொம்ப கூச்சப்பட்டு மெல்ல கை விரல்களை நிட்டினான்

கையால் தொட்டேன்

அவன் கை நடுங்கியது

இப்போது மற்றவர்களும் ஒவ்வொருவராக தயங்கி தயங்கி கை நீட்ட நான் அவர்கள் கையைப்பற்றி குலுக்க......
ரொம்பவே மகிழ்ந்தார்கள்

விடைபெறும்போது ஒருவன் ரொம்ப தேங்க்ஸ் மேடம்!! உங்க போன் NUMBER, அட்ரஸ் என வாயெடுக்க.....

அடபாவிங்களா இதனை நேரம் என்னை பொண்ணுன்னு நினைச்சா பேசிகிட்டு இருந்தீங்க??

ஒரு நிமிஷம் இருங்க எழுதித்தறேன்னு சொல்லி உள்ளே வந்து WIG ஐ கழட்டி கையிலே எடுத்துகிட்டு போய் நின்னேன்.....

ஒரே ஆரவாரம்

“நீங்க பையனா!!!!” என அடிப்படையிலேயே சந்தேகப்பட்டு கட்டிபிடித்து சந்தொஷப்பட்டர்கள்!!

இது என் நடிப்புக்கு கிடைத்த வெற்றியா?

அல்லது MAKEUPக்கு கிடைத்த வெற்றியா??!!

இன்று வரை புரியவில்லை (இந்த சம்பவம் நடந்த ஆண்டு 1967 மாணவர்களின் கூச்சமும் தயக்கமும் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும்)

எங்களுக்கு பரிசு எதுவும் கிடைக்கவில்லை

ஆனால் என்ன??

நாராயணசாமி சார் தன்னுடைய அடுத்த நாடகத்தில் நடிக்க அழைப்பு விடுத்தார் அதுதான் பொதுமேடையில் என் முதல் நாடகம்

மீண்டும் சந்திப்போம்

No comments:

Post a Comment