Thursday, September 18, 2014

பொன்னியின் செல்வன் ஒலிப்புத்தக விமர்சனங்கள் 


MR Anandasubramanian Cp

Finished listening to 78 hours of Ponniyin Selvan.
I was crying listening to Karikala cholan's death, manimekalai's insanity and sad death.
This novel was very good, but what made it great was the wonderful, wonderful narration, the awesome background score, each actor sooo natural and so good and had such expressions...
Kudos to the team. Each word narrated is etched in my memory.



Sir, Thanks for bringing out the audio book of Ponniyin Selvan. I listened to it in Nov'13 and my wife & daughter (who can't read Tamil) & my brother listened to it in Dec'13 and all of us were literally spell bound when we finished it. I have read the novel in Tamil 3 or 4 times since my school days. In spite of that, the audio book kept me hooked as if I am listening to the story for the first time. All the actors have given their soul 100% in dialogue delivery & BGM is a definite plus. Overall, an enjoyable period drama and it took more than a fortnight for us to completely come out of the characters' impact. Hats off to you & your team. Arunachalam, Bangalore.

When I was young I used to read serial stories in the weekly magazines for the old people in our house. I have not thought anything about it except that they used to declare that my reading was lovely and my modulation was enjoyable.
Today only I recollect the greatness in me. How? wait. I will tell you.
I am fortunate to receive a copy of Ponniyin selvan audio book from the creator himself.
the first seven chapters took me to a tour of 1960s.
PONNIYIN SELVAN Audio book by Sri.Bombay Kannan is the best and premier effort to Tamil literature.
Words fail me when I look for them to praise SriBombay Kannan Kannan. I salute to you. I bow to you ; i adore you Bombay Kannan sir.
I am sure all the fans of Ponniyin selvan will enjoy every word of this audio book.
Sri Bombay Kannan deserve the highest accolade that is available for work to Tamil Literature. Whether he gets any or not , according to me He is standing tall in service to Tamil readers

Rengaswamy Santhanam

பொன்னியின் செல்வன் மற்றும் சிவகாமியின் சபதம் இரண்டு நாவல்களும் தமிழில் ஒலிக் கோப்பாக கொண்டு வந்திருக்கிறார் திரு பாம்பே கண்ணன் அவர்கள். Bombay Kannan Kannan. மிக அருமையாக இருக்கிறது. என்னைப் போன்று பொன்னியின் செல்வன் மற்றும் சிவகாமியின் சபதம் ஆர்வலர்களுக்கு மிகப்பெரிய விருந்து. நன்றி கண்ணன் சார்.Iyappan Krishnan  



Dear Sir
I recently purchased the audio book from giri trading agency and I wish to congratulate and thank you for producing an above excellent audio book.
I have recommended it in our corporate forum and many have approached the Connexions shop in our mahindra city campus to buy the same.
you have taken painstaking efforts to recreate the period, songs, music and the thrilling suspense at the end of each chapter. The songs were really excellent.
Iam halfway through the book and am still hearing the sword clashes, songs and characters.
Thanks
Anandasubramanian





மதிப்பிற்குரிய திரு பாம்பே கண்ணன் அவர்களுக்கு,
அனேக வணக்கத்துடன் அடியேன் எழுதுவது. அவர்களின் பொஅமரர் கல்கி ன்னியின் செல்வன் நாவலை இதுவரை 3000 பக்கங்களுக்கும் மேலான புத்தகமாய் மட்டுமே படிக்க முடியும் என்ற நிலையை

மாற்றி, ஒலி வடிவமாக, ஒரு திரைப்படத்தின் ஒலி வர்ணனை போல் 78 மணி நேரம் கேட்டு மகிழும் ஒரு அற்புத ஒலித்தகடாக இந்த தமிழ் கூறும் நல்லுலகிற்கு பரிசளித்தமைக்கு என் மனமார்ந்த கோடானு கோடி நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.

அமர் கல்கி அவர்களின் வரலாற்று படைப்புகளை படிப்பவர்கள் தமிழ் வரலாற்று பித்துபிடித்து அலையும் கிறுக்கர்களாவது நிச்சயம். அப்படி பட்டவர்களுள் நானும் ஒருவன். என் கல்லூரி நாட்களில் எனக்கு கிடைத்த தேர்வு விடுமுறைகளை எல்லாம் கல்கிக்கே அர்ப்பணித்து அத்தனை வரலாற்று நாவல்களையும் படித்து ஆர்வம் தீராமல் பிற ஆசிரியர்களின் வரலாற்று நாவல்களையும் தேடி தேடி படித்து என் வரலாற்று பசியை தீர்க்க முயன்றேன். ஆனால் எவ்வளவு படித்தாலும், கல்கி அவர்களின் படைப்பு மனதில் நின்றது போல் எதுவும் நிற்கவில்லை. அப்படி பட்ட நாவல்களான பொன்னியின் செல்வனையும் சிவகாமியின் சபதத்தையும் மீண்டும் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் மட்டும் நீங்காமல் இருந்தது. அனால் மின்னல் வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கும் அலுவலக வாழ்கையில், அவ்வளவு பெரிய புத்தகத்தை மீண்டும் படிப்பது இயலாத காரியம். ஒரு நாள் எதேர்ச்சையாக தங்கள் படைப்பான பொன்னியின் செல்வன் ஒலி புத்தகத்தை இணையக்கடையில் (nammabooks .com ) பார்த்தேன். உள்ளத்தில் எழுந்த தாங்க முடியாத ஆர்வத்தில் உடனே வாங்கிவிட்டேன்.
உண்மையில் நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை அது இதனை அருமையாக உருவாக்கப்பட்டிருக்கும் என்று. தயவு கூர்ந்து மண்ணிக்கவும் எனக்கு இதற்கு முன் உங்களை தெரியாது, உங்கள் முந்தைய படைப்புகளை நான் அறிந்திருக்கவும் இல்லை. அதனால் தான் நான் எதிர்பார்கவில்லை என்று கூறுகிறேன். ஆனால் இந்த படைப்பின் அட்டையில் பதித்த ஓவியமே எனது ஆர்வத்தை பல மடங்கு கூட்டியது. முதல் பாகம் முழுவதையும் எனது ஐபோன்-இல் ஏற்றி முன்னுரையை கேட்க தொடங்கியதுமே நான் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சோழ சாம்ராஜியத்தில் மீண்டும் ஒருமுறை, ஆனந்தமாக நீந்தபோகிறேன் என்பதை உணர்ந்து கொண்டேன். படிக்கும் பொழுது கதையில் இருக்கும் ஆர்வத்தில், தொய்வு ஏற்படும் என தோன்றும் சில பகுதிகளை படித்தும் படிக்காமல் வேகமாக நகர்ந்து செல்வது தவிர்கமுடியததாக இருந்தது. அந்த பகுதிகளையும் கேட்கும் பொழுது தவறவிடாமல் கவனிக்க வேண்டும் என்று தீர்மானித்துக்கொண்டேன்.

முதலில் நான் கூற விரும்புவது தங்கள் வர்ணனையை பற்றி. இத்தனை அருமையாகவும் தெளிவாகவும் சிறு பிதற்றல் கூட இல்லாமலும் தமிழை உச்சரிக்க கேட்டு உண்மையில் பல வருடங்கள் ஆகின்றன. எனக்கு என் பள்ளி காலத்து முதிர்ந்த தமிழாசிரியர் நினைவு வந்தது. அதிலும் கல்கி அவர்களே என் காதருகே வந்து கதை சொல்வது போல் உணர்வு ஏற்பட்டது. நீங்கள் கல்கி அவர்களின் படைப்புக்கு மட்டும் ஒலி வடிவம் கொடுக்கவில்லை, கல்கி அவர்களை புகைபடத்தில் மட்டுமே காணும் பாக்கியம் பெற்ற இன்றைய மற்றும் நாளைய தழில் குடிமக்களுக்கும் கல்கி இப்படித்தான் பேசியிருப்பார் என்று குரல்வடிவமும் கொடுத்துவிட்டீர்கள். உச்சரிப்பு மட்டும் இன்றி கதையின் சூழ்நிலைக்கு ஏற்ப அதன் இயல் நிலை மாறுபாடுகளை (mood) கச்சிதமாய் வெளிக்கொண்டு வந்துள்ளீர்கள். கனிவாய் பேச வேண்டிய இடத்தில கனிவாகவும், ஆக்ரோஷமாய் பேச வேண்டிய இடத்தில ஆக்ரோஷமாகவும் பேசி, மயிர்கால்களை சிலிர்ப்படைய செய்துள்ளீர்கள்.
அடுத்து, பின்னணி இசை. இந்த மாபெரும் படைப்புக்கு பின்னணி இசை சேர்த்திருக்கும் அந்த இசையமைப்பாளர், ஆயிரம் கோடி வணக்கங்களுக்கு உரித்தானவர். ஒரு திரைப்படம் பார்ப்பதுபோல் ஒரு பிரமிப்பை பின்னணியில் எழும் துல்லியமான ஓசைகளும் இசைக்கருவிகளின் இனிய நாதமும், காட்டு விலங்குகளின் சப்தங்களும், குதிரைகளின் கனைப்பும், பறவைகளின் கானமும், இடி, மழை, காற்று போன்ற இயற்கை ஒலிகளும், ஒவ்வொரு கதாபதிரதிற்குமான தனிப்பட்ட இசையும், சொல்லியடங்கா வியப்பையும் ஆர்வத்தையும் உண்டாக்குகின்றன.

அடுத்ததாக, நான் மிகவும் ரசித்த சில கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்தோரை குறிப்பிட விரும்புகிறேன். இதை அவர்களிடம் சேர்க்கும்படியும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
நந்தினி (பாத்திமா பாபு) - எனை மிகவும் கவர்ந்த பாத்திரம். கதையின் மிகவும் சக்திவாய்ந்த மங்கை. படிக்கும் பொழுது ஒவ்வொருவரும் இவளை பற்றி கற்பனை செய்துவைத்திருக்கும் வடிவத்தை குரலின் மூலம் கண்முன்னால் கொண்டுவந்து நிறுத்துவது என்றால் நினைத்து பார்க்கக் கூடிய காரியமா அது? அதை அப்பழுக்கின்றி செய்திருக்கிறார் பாத்திமா பாபு. இவருக்கு அறிமுகம் தேவையில்லை. குரலை கேட்டவுடனேயே கண்டுபிடிக்க முடிந்தது. நந்தினிக்கு வேண்டிய , மிடுக்கும், தைரியமும், கோபமும், சூழ்ச்சியும், காதலும், நகைப்பும், அப்படியே தனது காந்தக்குரலில் பிரதிபலிக்கிறார்.

ஆதித்த கரிகாலன் (வெற்றி விக்னேஷ்) - சினிமாவாக பொன்னியின் செல்வனை எடுத்தால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை தவிர வேறு யாரும் இதற்கு பொருத்தமில்லாதவர்கள் எனபது என் கருத்து. அவ்வளவு சக்திவாய்ந்த ஒரு வேங்கையாக சித்தரிக்கப்படும் இளவரசனுக்கு குரல் கொடுக்க துணிவதே ஒரு தைரியம் தான். என்னை அப்படியே தன் குரலுக்கு அடிமையாக்கி விட்டார் வெற்றி விக்னேஷ். ஆதித்த கரிகாலன் வரும் இடமெல்லாம் என் ஆர்வம் பலமடங்கு கூடுவதற்கு அந்த பாத்திரத்தின் வலிமையை போலவே இவரது வலிமையான குரலும் ஒரு காரணம். கடம்பூர் சம்புவரையர் மாளிகையில் அவர் பெரியோர் சிறியோர் என பாராமல் அனைவரையும் திக்கு முக்காட செய்யும் கட்சியில் ஒட்டுமொத்தமாக அத்தனை கைதட்டல்களையும் பெறுகிறார். அதுவும் அந்த 'இடி இடி என சிரிக்கும்' இடத்தில் அப்பப்பா....பிரமாதம்.
வந்தியத்தேவன் (இளங்கோ) - கதையின் நாயகன், மிகவும் சாந்தமாகவும் இல்லாமல், எப்போதும் கோபமாகவும் இல்லாமல், சீராக அதே நேரம் நையண்டியுடனும் பவனி வரும் ஒரு இளம் காளை. இளங்கோ அட்டகாசமாய் செய்திருக்கிறார். அந்த கதாபாத்திரத்தின் வரம்பு அறிந்து அதன் உடல் மொழிகள் அறிந்து கேட்போரின் என்ன ஓட்டத்தை அறிந்து, கச்சிதமாக குரல் கொடுத்திருக்கிறார். பாராட்டுக்கள்.
பெரிய பழுவேட்டரையர் – (வேலுசாமி). அடடா. இவரை தமிழ் திரையுலகம் இன்னும் கண்டுகொள்ளவில்லையா? என்ன ஒரு கம்பீரமான குரல். என்ன ஒரு அட்டகாசமான உச்சரிப்பு. கடைசி பாகத்தில் ஆற்றில் தத்தளிக்கும் பொழுது அவர் பேசும் வசனமும் அதற்கு அவர் தந்திருக்கும் உயிரும் நம்மையும் அந்த வெள்ளத்திலேயே மிதக்க வைக்கிறது. திரைப்படமாக எடுத்தால் கூட இவ்வளவு துல்லியமாக அந்த காட்சியை உருவாக்க முடியாது. இவருக்கு எனது பணிவான வணக்கங்கள்.

வானதி (வித்யா) - இந்தனை இனிமையான கனிவான குரலில் வானதி அருள்மொழி வர்மருடன் பேசியிருந்தால் குரலை கேட்ட முதல் வினாடியே அவர் காதலில் விழுந்திருந்தாலும் ஆச்சரியமில்லை. வெட்கம், அச்சம், கனிவு, மேன்மை, சற்றும் எல்லை தாண்டாத கோவம் என இவர் காட்டும் குணாதிசயங்கள் கேட்கும் காதுகளுக்கு தேனமுதை ஊற்றுகிறது.
பூங்குழலி (ஸ்ரீவித்யா) - பளிங்குக்குரல். ஒரு சமயம் சாமர்த்தியத்தின் திருவுருவாகவும் மறு சமயம் விரக்தியின் உச்சத்துக்கும் செல்லும் ஆண்மைமிக்க பெண். குரலின் கம்பீரம் வீரத்தையும் சாமர்த்தியத்தையும் கண் முன் கொண்டு வர அதே சமயம், அந்த குரலின் கனிவு அவள் ஆழ்மனதின் சோகத்தையும் அதில் படிந்திருக்கும் அப்பழுக்கற்ற ஈரத்தையும் வலிமையாக உணர்த்துகிறது. மிகவும் கடினமான வேலையாக இருந்திருக்கும். சபாஷ் ஸ்ரீவித்யா.
குந்தவை (கீர்த்தி) - ஒரு அறிவுக்கூர்மை மிக்க அரசிளங்குமரி, தமையனை அகிலம் போற்றும் மாவீரனாக்க துடிக்கும் வீரமிகு தமக்கை - இதை அப்படியே தன் குரலால் பிரதிபலித்து பாத்திரத்திற்கு கௌரவம் சேர்த்திருக்கிறார்.
மேலும் ஆழ்வார்கடியான் (ரமேஷ்) , சுந்தர சோழர் (ஜெயக்குமார்), மணிமேகலை (மித்ரா) , அநிருத்த பிரம்மராயர் (கல்யாண்ஜி), சின்ன பழுவேட்டரையர் (ராஜேஷ் கண்ணா), பார்த்திபேந்திர பல்லவன் (TMC கிருஷ்ணா), கந்தமாறன் (ஜெய்), சம்புவரையர் (பூங்குன்றன்) , சேந்தன் அமுதன் (முத்துக்குமார்), மதுராந்தகன் (சதீஷ்), ரவிதாசன் (நேதாஜி), மலையமான் (போத்திலிங்கம்), மற்றும் பிறரும் மிகவும் அருமையாக செய்திருக்கிறார்கள்.
மொத்தத்தில், இந்த படைப்பு, ஒரு வரலாற்று சிறப்பு மிக்கது. இதை அனுபவித்தோர், பிரவிப்பயனில் ஒரு முக்கிய பயனை அடைந்துவிட்டோராவர். இதன் புகழ் தமிழுள்ள மட்டும் இறவாது நிலைத்திருப்பது திண்ணம். எனது கவலையெல்லாம், இன்னும் நூற்றுக்கு தொண்ணுற்றொன்பது பேர் தமிழ் வரலாற்றுக்கு அதனை முக்கியத்துவம் தருவதில்லை. அதனால் அமுதம் கண்ணருகே இருந்தும், அதை அவர்கள் பருக முடியாத நிலை. நீங்கள் அதை கிண்ணத்தில் ஊற்றி கண்ணுக்கு முன் நீட்டி உள்ளீர்கள். சுவைக்க மனம் வருகிறதா பார்போம்!!!
தங்களது அடுத்த படைப்பான பார்த்திபன் கனவிற்காக ஆவலுடன் காடிருக்கிறேன்.

இப்படிக்கு, பணிவுடன், 

பிரேம் ஆனந்த் (கோயம்புத்தூர்).




(மேலும் விமர்சனங்கள் அடுத்த பதிவில்)



No comments:

Post a Comment