Monday, September 1, 2014

நாடக அனுபவங்கள் 5ம் பகுதி


1968 ம் ஆண்டு நான் hostel ல் தங்கி படித்து வந்த காலம் மிக மகிழ்ச்சியான காலம் 


என் அறை தோழர் ஒரு வினோதமான பிறவி தன வயதையும் மீறி பக்தி பழமாக விளங்கியவர் அறையில் அவருடைய அலமாரி முழுவதும் சாமி படங்களாக நிரம்பி இருக்கும்

அவர் நின்று, உட்கார்ந்து பார்த்ததைவிட அவரை நான் நமஸ்கரித்த கோத்தில் பார்த்தது தான் அதிகம்

கல்லூரியில் நுழைந்த நேரம் அது hostel வாழ்கை மிக இனிமையாக இருக்கப்போகும் கனவுகளோடு வந்த எனக்கு இப்படி ஒரு சாமியார் அறை தோழராக கிடைத்தது ஒரு பெரும் ஏமாற்றமே
அவருடன் சேர்ந்து நானும் ஒரு கேலிப்பொருளாக சக மாணவர்களால் ஆக்கப்பட்டேன்
அதனால் நான் என் அறையிளிருந்ததை விட மற்றவர்களின் அறையில் இருந்த நேரம் தான் அதிகம் என் அறை தோழர் வைத்திருந்த படங்களில் அதிகமாக இருந்தவை புட்டபர்த்தி பாபாவின் படம்தான்

எனக்கு அவரிடம் நம்பிக்கை கிடையாது அதனால் நானும் அவரை நிறைய கிண்டல் செய்து நிந்தித்து வந்தேன்

இப்படி ஒரு காலகட்டத்தில் தான் நான் நாராயணசாமி சார் அழைத்து அவர் வீட்டிற்கு சென்றேன்
அது வீடு மட்டுமல்ல ஒரு TUTORIAL COLLEGE ம் கூட என்னை தன குடும்பத்தோடு வரவேற்றார்

அவர் குடும்பம் கொஞ்சம் பெரிசு மனைவி மாமியார் மாமனார் சின்ன சின்ன குழைந்தைகள் என பலர். என் பெண் வேடத்தை சிலாகித்து பேசிவிட்டு உன் நடிப்பு ரொம்ப நல்லா இருந்தது என்றார்
பின்னர் அவர் மஹாபரத்தில் கிருஷ்ணர் பங்கு பெரும் காட்சிகளாக தொகுத்து ஸ்ரீ கிருஷ்ணா விஜயம் என்னும்ம் நாடகம் எழுதி இருப்பதாகவும் அதில் நான் நடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார் 1

சரி! ருக்மணி வேஷமா? சத்யா பாமாவா? என்று ஆவலுடன் SCRIPT ஐ வாங்கினேன்

அவரும் உன்னை முதலில் முகத்தைப் பார்த்து ருக்மணியாகத்தான் போடுவதாக இருந்தேன் ஆனல் உன் நடிப்பை பார்த்து என் நாடகத்தின் கதாநாயகன் கிருஷ்ணனாக நீதான் நடிக்க போகிறாய் என்றார்

எனக்கு கூரைக்கும் தரைக்கும் வித்தியாசம் புரியவில்லை
6௦ பக்க SCRIPT ல் என் PORTION மட்டும் கிட்டத்தட்ட 4௦ பக்கம்

ஒரு மாதத்தில் நாடகம்.. ராயபேட்டைல் LLOYDS ROAD சந்திப்பில் உள்ள ஒரு சிறிய கல்யாண மண்டபம் தான் அரங்கம்

இப்பவும் அந்த பக்கம் போகும்போதெல்லாம் அந்த அரங்கை அரங்கனை சேவிப்பது போல சேவித்து விட்டுதான் போவேன் மற்ற நடிகர்கள் எல்லாம் அவர் மாணவர்கள்

அங்கே அறிமுக மாணவர்கள் தான் இப்போது பிரபலமாக பாடிவரும் வினாயாவின் தந்தை கோபால், RAGHU என்கிற ஜூனியர் பாலையா, வாசு போன்றவர்கள் நாடகம் ஓத்திகை ஆரம்ப மாயிற்று

இப்போதுதான் எனக்கு சமஸ்கிரிதம் படிக்காததன் வருத்தம் ஏற்பட்டது நிஜம் பல இடங்களில் வசனங்களை ஸ்லோகமாக எழுதியிருந்தார்

போதததற்கு கீதை உபதேசம் காட்சியில் அந்த வரிகளே நான் சில இடங்களில் பேசவேண்டும்
எப்படியோ தமிழில் எழுதி நடிகன் என்கின்ற முறையில் உச்சரிப்புகளை மனப்பாடம் செய்து கொண்டு பேசி நடித்து விட்டேன்

அந்த ஸ்லோகங்கள் இன்றும் என் நினைவில் நிற்கின்றன நாடக தினமன்று என் உடல் முழுவது நீல பெயிண்ட் அடித்து....முகத்துக்கு மேக்கப் போடமாட்டேனா என்று ஏங்கியவனுக்கு உடம்பு பூரா பெயிண்ட் அடிச்சா எப்படி இருக்கும்

மோர் சாதம் கிடைக்காத என ஏங்கியவனுக்கு விருந்து சாப்பாடா!! உடம்பு பூரா நகை கட்டி விட்டு..... அங்கங்கே ரத்த காயம் வேறு

கோவிலிருந்து பிரத்யேகமாக தருவிக்கப்பட்ட ஆண்டாள் மாலை போட்ட வுடன் என்னை நான் NTR போல உணர்ந்தேன்

நிறைய பேர் என்னை பக்தியுடன் பார்ப்பது போல இருந்தது
நாடகத்தில் ஒரு வசனம் விடாமல் பேசி நடித்து பெரும் பாராட்டுகளை பெற்றவுடன் எனக்கு மிகவும் பெருமையாக இருந்ததது

அன்றிலிருந்து நாராயண சாமீ என்னை கிருஷ்ணா என்று அழைக்க ஆரம்பித்தார்

இந்த நாடகத்திற்கு அடுத்த ஷோ உடனடியாக நிர்ணயிக்கப்பட்டது
எங்கே தெரியுமா

புட்டபர்த்தியில் பாபா முன்னிலையில்

அவர் பிறந்த நாளன்று......

எனக்கு அப்போது அடுத்த நாடகம் என்ற உணர்வு தான் இருந்ததே தவிற வேறு எதுவும் தோன்ற வில்லை அனால் இப்போது இதை எழுதும் போது கொஞ்சம் vibrations உணர முடிகிறது என்பதை என்னால் மறைக்க முடியவில்லை
நாராயணசாமி சாருக்கு அவருடைய திருமணத்தை நடத்தி வைத்தவரே பாபாதானம்
அவர் தாலி எடுத்துக் கொடுததுதான் இவரே மாமியை கைபிடித்தாராம்

எனக்கு நாடகம் நடிக்க வேண்டும்

அது எங்கிருந்தால் என்ன...

நாங்கள் நாடகம் போட புறப்படும் நாளும் வந்தது

என்னைப் போலவே இந்த பாபா விஷயத்தில் நம்பிக்கை இல்லாதவர் இருவர்

ஒருவன் JUNIOR BAALIAH

இன்னொருவன் வாசு

நாங்கள், எல்லோரும் MOUNT ROAD ல் உள்ள ஒரு போட்டோ STUDIOல் குழுமினோம்

எங்களுக்கு BUS ஏற்பாடு செய்தவர்கள் DAWN ENVELOPES உரிமையாளர்கள் நான் வாசு ரகு மூவரும் பின் இருக்கையில் இடம் பிடித்து கொண்டோம்

எல்லோரும் பாபா பஜன் பாடல்களை பாடி பயணத்தை துவக்க நாங்கள் மட்டும் வேறு கதைகளை பேசி எல்லோரையும் கிண்டலடித்துகொண்டு பயணித்தோம்

வழி நெடுக எங்களை எதோ மாமிச பட்சிணிகளை பார்ப்பது போல பார்த்துகொண்டு வந்தார்கள்

நாங்கள் முவரும் அடித்த கொட்டத்தை பார்த்து நாராயண சாமீ சார் வேறு கிருஷ்ணன் கிடைத்திருந்தால் என்னை அன்றே மாற்றி இருப்பார்!

பாவம் அவர்!!

புட்டபர்த்தியை அடைந்தோம் அங்கே நிலவிய அமைதி ஊரில் யாருமே இல்லை என்ற உணர்வை ஏற்படுத்தியது ஆனால் விசாரித்தபோது அந்த வருடம் அந்த ஊரில் அந்த நேரத்தில் 5 லட்சம் பேர் வந்துள்ளார்கள் என அறிந்து ஆச்சர்யப்பட்டேன் கூடையில் குப்பை அள்ளும் ஒருவர் ஒரு கம்பெனி MD யாம் மற்றொருவர் பெரிய தொழிலதிபராம்

சரி இப்போது அதெல்லாம் எதற்கு??

மதியம் மேடைக்கு சென்றவுடன் பாபா வருவதாக சொன்னார்கள்

அவர் வந்தார்

எங்களை எல்லோரையும் பார்த்து புன்னகைத்தார்

நான்தான் அவர் காலில் விழமாட்டேனே நாரயணசாமி சார் அறிமுகம் செய்து நான்தான் கிருஷ்ணன் என்றார்

பாபா கையிலிருந்து விபுதி கொட்டியது கை நீட்டி பெற்றுக்கொண்டேன்

எதோ மந்திரிக்கப்பட்டவன் போல அவர் காலில் விழுந்து எழுந்தேன் ரகு மிகவும் குறும்புக்காரன்

அவர் அருகிலே சென்று அவர் தலை முடியை தடவிக்கொடுப்பது போல பற்றி லேசாக இழுத்தான்

பாபா சிரித்தார்

அவன் கைகளில் பாம்பு நெளிவது போல இருந்தது என்று பின்னால் சொன்னான் பாபா செல்லமாக அவனை தெலுங்கில் கடிந்தார்

அன்று மாலை நாடகம்

மேக் UP முடிந்து நாடகம் ஆரம்பிக்க வேண்டும்

பாபா முதல் வரிசையில் அமர்ந்ததும் நாடகம் ஆரம்பமாகியது
முதல் காட்சிளிருந்து நான் பேச வேண்டும் பேசுகிறேன் நடிக்கிறேன்

ஆனால் என் ஒவ்வொரு அசைவின் போதும் என் தலையில் இருந்த கிரிடம் கிழிறங்கி என் கண்களை மறைத்துக்கொண்டே இருந்தது

அதை சரி செய்து நடிப்பதா அல்லது கழட்டிவிடுவதா??
கழட்டலாமா?? கிருஷ்ணர் கிரிடத்தை கழட்டி இருப்பாரா??
என்று யோசிப்பதற்குள் தட்டு தடுமாறி இடைவேளை வரை வந்து விட்டேன்

பாபா உள்ளே வந்தார்

என்னை கிருஷ்ணா என்று அழைத்தார்
அருகில் சென்றேன் தலையை தடவினார் என் கண்களில் நீர் முட்டிற்று

என்ன கிரிடம் படுத்துகிறதா என்றார்

ஆமாம்

இடைவேளைக்கப்புறம் படுத்தாது என்றார்

போய்விட்டார்

இடைவேளைக்குப் பிறகு எதுவுமே செய்யாமல் என் கிரிடம் தலையில் பொருத்திய இடத்தில் அசையாமல் அலங்காமல் அப்படியே நின்றது

மீதி நாடகத்தை முடித்தேன்

நாராயணசாமி என் தலை கர்வம் போய்விட்டது என்றார்

மறுநாள் கலையில் எங்கள் எல்லோரையும் பாபா தனிமையில் சந்திக்க அழைத்தார்.

No comments:

Post a Comment