Saturday, September 6, 2014

நாடக அனுபவங்கள் பகுதி 7



Hostel நாடகத்திற்காக நண்பன் வெங்கடராமனை தேடி ஓடினேன் என்று எழுதினேன் அல்லவா.... நானும் அவனும் வழக்கம் போல சோமசுந்தரம் பார்க்கில் சந்தித்து கதை பற்றி பேசினோம்

அந்த காலகட்டத்தில் வெங்கடராமன் பல வினோதமான கதைகளை சொல்லுவான் வாய் பிளந்து கேட்டுக் கொண்டிருப்பேன் எதோ அமரிக்கா ரஷ்ய இங்கிலாந்து தேசத்தில் THAMES நதிக்கரையில் அமர்ந்து கதை கேட்;பது போல இருக்கும்

உதாரணமாக ஒரு கதை

ஒரு குழந்தை கர்ப்பபையில் பத்து மாதம் வளருகிறது அது பத்து மாதம் எப்படி வளருகிறது என்று சோதனை செய்து அறிந்துகொள்ள ஒரு விஞ்ஞானி ஆசைப் படுகிறான் அதற்காக அவன் ஒரு கர்ப்பபைபோல ஒரு இருட்டு அறையை உருவாக்கி அதற்குள் சென்று அப்படிப்பட்ட குழந்தைபோல காலை மடக்கிக்கொண்டு அமர்ந்து கொள்கிறான் அவனுக்கு அதற்குள்ளேயே திரவ உணவு வழங்கப்படுகிறது அவன் இந்த உணவில் காலம் கழித்து பத்துமாதம் கழித்து வெளி உலகம் பார்க்க வரும்போது அவன் குழந்தையாக தவழ்ந்து வெளியே வருகிறான் இப்படி ஒரு கதை---நாடகத்திற்கு!!!!

அடுத்த கதை ஒருவனுக்கு சிறை வாழ்க்கை போல விட்டிலேயே ஒரு அறையில் வெளி உலகமே பாராமல் அடைத்து வைக்கப்பட்டால் பத்து வருடங்களோ இருபது வருடங்களோ கழித்து வெளியே வந்தால் அவன் மனநிலை எப்படி இருக்கும்?

இப்படி பல கதைகள் அவன் சொல்ல நான் கேட்பேன்
இறுதியில் இந்த கதையெல்லாம் மேடைக்கு ஒத்துவராது
எனக்கு hostel மாணவர்கள் ரசிக்குமே படியாக ஒரு comedy கதை கேட்டு வாங்கினேன்.

“ஓஹோ எந்தன் பேபி” என்ற தலைப்பில் ஒரு நாடகம் தயார்
அதில் எல்லா நகைச்சுவை துணுக்குகளும் இணைக்கப் பட்டு ஒரு மணி நேர தோரணம் தயார்

கல்லுரி முடிந்தவுடன் ஒத்திகை ஆரம்பமாகும்
இதிலும் ஒரு கதாநாயகி பாத்திரம் இருந்தது
அதை நான் செய்ய வில்லை

ஏனென்றால் நான் தயாரிப்பாளர் கம் டைரக்டர் ஆயிற்றே!!
ஆனாலும் நான் கதாநாயகன் வேஷமும் எடுத்துக்கொள்ளவில்லை

எப்பவுமே comedy நாடகங்களில் கதாநாயகனுக்கு பெரிய வேலை இருக்காது வெங்கடராமன் எழுதிய ஜோக்குகளெல்லாம் ஒரு வயதான கிழவனுக்கே அமைந்திருந்தது

ஆகையால் 18 வயதிலே நான் எடுத்துக்கொண்ட பாத்திரம் ஒரு 6௦ வயது கிழவன் பாத்திரம் தான்

ஒல்லியாக அந்தகாலத்து friend ராமசாமி மாதிரி எனது உருவம்

கதாநாயகிக்கு hostel ஜூனியர் ஒரு பையன் மாட்டினான்
கதாநாயகன் மற்றொரு மாணவன்

இப்படியாக எல்லோரையும் தேத்தி விட்டு ஒத்திகை ஆரம்பமாயிற்று வெங்கடராமனுக்கு இது அனேகமாக இரண்டாவது மேடை நாடகம்

ஒத்திகை துவங்கியவுடன் வெங்கடராமனுக்கு என் direction ல் நம்பிக்கை போய்விட்டதா என்று தெரியவில்லை...
தனது நண்பர் ஒருவர் இயக்குவார் என்று கூறினான் நானும் அந்த நேரத்தில் எந்த பிடிவாதமும் பிடிக்காமல் ஒப்புக்கொண்டேன்

மறுநாள் வெங்கடராமனின் நண்பர்கள் என்று இருவர் bullet MOTORCYCLEல் வந்து இறங்கினர்

ஒருவர் பெயர் நடராஜன்
மற்றவர் பெயர் எனக்கு நினைவில் இல்லை

இருவருமே இரட்டையர்களாக இயக்கப்போவதாக கூறினர்

அட என்னடா இது நாம் அதிர்ஷ்டம் ஒரு college நாடகத்திற்கு கிருஷ்ணன்- பஞ்சு போல இரட்டை இயக்குனர்களா என்று வியந்தேன்

இருவரும் அப்போது CTO எனப்படும் CENTRAL TELEGRAPH OFFICE ல் வேலை பார்த்தர்கள்

தினமும் வருவார்கள் நான் நடித்து கொண்டிருப்பேன் மற்றவர்களும் நான் சொன்னபடி வசனம் பேசி நடிப்பார்கள்
இவர்கள் இருவரும் அமர்ந்து ரசிப்பார்கள்

இப்படியே ஒத்திகை 5 நாட்கள் நடந்தது நாடகத்திற்கு முதல் நாள் அவர்கள் வந்து போன செலவிற்காக ஒரு நாளைக்கு 5 ரூபாய் என பணம் கொடுக்கும்படி வெங்கடராமன் சொல்ல அப்பா கொடுத்து பாக்கெட் மணியில் பெரிய துண்டு விழுந்தது

ஒரு இயக்குனருக்கு SORRY ரெட்டை இயக்குனர்களுக்கு PAYMENT கொடுத்து ஒரு hostel நாடகம் தயாரித்த முதல் தயாரிப்பாளர் நானாகத்தான் இருக்கு,ம்

நாடகம் சிறப்பாக அமைந்து கொண்டு வந்தது

நாடக அரங்கேற்ற நாள் இரவு முழுவதும் நாடக சிந்தனைதான்

காலையில் எழுந்ததும் காபி அருந்துவதற்காக HOSTEL MESS க்கு சென்ற எனக்கு பெரும் அதிர்ச்சி HOSTEL NOTICE BOARD ல் இன்று கண்ணன் நாடகம் யாரும் போகவேண்டாம் எல்லோரும் BOYCOTT செய்வோம் என ஒரு எதிர்ப்பு குரல் NOTICE ஆக என் கண் முன்னால் தெரிய படிக்க முடியாமல் கண்கள் மறைத்தது

எழுதியது வேறு யாருமல்ல

சிறுவயதிலிருந்தே--3ம் வகுப்பிலிருந்து கல்லுரி வகுப்பு வரையில் என் கூடவே படித்து வரும் என் நண்பன்தான்

எனக்கு இந்த அறிக்கையின் காரணமும் தெரியவில்லை
அவர்களுக்கும் தெரிந்ததா என்றும் தெரியவில்லை

நண்பனிடம் ஓடினேன் பேச மறுத்தான்

கெஞ்சினேன்....

அழுதேவிட்டேன் என்றும் சொல்லாலாம்

இறுதியில் பெரிய மனது பண்ணி நாடகம் நடத்துவதற்கு சம்மதம் அளிப்பதுபோல தன் போராட்டத்தை விலக்கிக்கொண்டான்

போராட்டத்தை தொடர்ந்திருந்தால் எத்தனைபேர் அவன் பின்னால் போய் இருப்பார்களோ தெரியாது ஆனால் நான் எந்த RISK ம் எடுக்க தயாரில்லை மிகுந்த TENSION உடன் நாடகம் ஆரம்பிக்க காத்திருந்தேன்

வயதானவர் வேடம்

நகைச்சுவைப்பாத்திரம்

மனதில் TS பாலையா RANGARAO போன்றவர்கள் ஓட நாடகத்தில் பாலையா அந்த பாத்திரத்தை எப்படி செய்திருப்பாரோ.....குறிப்பாக அவருடைய MANNERISM முதலியவற்றை மனதில் வைத்துக்கொண்டு என் பாணியில் செய்ய ஆரம்பித்தேன் காட்சிக்கு காட்சி APPLAUSE ம் சிரிப்பும் தான்

நாடகம் மிகப் பெரிய வெற்றி என்று சொல்ல வேண்டியதில்லை

நண்பன் உள்ளே வந்தான்
கட்டி அணைத்துக்கொண்டான்
என்னை மன்னித்துவிடு என்றான்
நீதான் hostel நடிகர் திலகம் என்று உணர்ச்சி மேலிட்டு ஓவராக புகழ்ந்தான்

எப்படியோ முதல் நாடகம் தயாரித்து வெற்றிகரமாக அரங்கேற்றி விட்டேன்

அன்றையிலிருந்து HOSTEL லில் என் மதிப்பு உயர்ந்ததோ என்னவோ தெரியாது ஆனால் நடிப்பு ஆசை இன்னும் வெறியாக என் மனதில் வேருன்றியது..

விவேகானந்தா கல்லூரியி ல் ஒரு அருமையான திறந்த வெளி அரங்கம் உண்டு அதில்தான் நான் படிக்கும் காலத்தில் TKS குழுவினரின் ராஜ ராஜ சோழன் சோ வின் MIND IS MONKEY போன்ற நாடகங்களைப் பார்த்திருக்கிறேன்.

இந்த மேடையில் ஜெய்ஷங்கர் போன்ற கலைஞர்கள் நடித்து இருக்கிறார்கள் இப்போது அந்த மேடை நாடகத்திற்கு பயன்படவில்லை என பார்க்கும்போது மிகவும் வருத்தமாக இருக்கிறது

கல்லூரியில் படிக்கும் கால கட்டத்தில் வருடம் முழுவதும் காமதேனுவிலும் கபாலியிலும் படங்களாக பார்த்து தள்ளியதால் பாடத்தில் நிறையவே பின்தங்கி விடுவேன்

இதற்காக STUDY HOLIDAYS போல ஜனவரியிலிருந்து HOSTEL அறையை காலி செய்துவிட்டு T நகரில் MADLEY தெருவில் இருந்த என் அக்கா விட்டிற்கு படிப்பதற்கு போய்விடுவேன்

அப்போதெல்லாம் மாலை வேளையில் நண்பர்கள் கூடும் இடம் உஸ்மான் ரோட்டில் இருந்த நேஷனல் டீ கடை

அந்த கால கட்டத்தில் உஸ்மான் ரோடு இப்போதுபோல ஒளிந்து கொண்டிருப்பதில்லை

இதே சாலை விசாலமாக தெரியும் இரண்டு பக்கமும் பஸ்கள் போகும் WALKING போகலாம் அழகான பெண்களைப் பார்க்கலாம்

டிபன் சாப்பிட நாதன்ஸ் கபே இருந்தது

இதைத்தவிர INDIA COFFEE HOUSE என ஒரு பெரிய சொர்க்க பூமி அது
இங்குதான் நான் முதன் முதலில் நான் பட்டாபி ரமணி முரளி மற்றும் பலரை சந்தித்தேன்

ஒரு நாள் பேச்சு வாக்கில் பட்டாபியும் YG மகேந்திராவும் AC COLLEGEOF TECHNOLOGYல் ஒரே வகுப்பு என தெரிந்து கொண்டேன்

அன்றையிலிருந்து பட்டாபியுடன் ஒட்டிக்கொண்டேன் அவன் விட்டிற்கு போக ஆரம்பித்தேன்
பட்டாபி ஒரு நாள் என்னை மகேந்திராவுக்கு அறிமுகம் செய்து வைத்தான்
மெல்ல UAA ல் சேரவேண்டும் என்கிற என் விருப்பத்தை அவனிடம் சொல்லி மகேந்திராவிடம் சொல்ல வைத்து அவர்களுடன் சென்று THE GREAT YGP அவர்களை சந்தித்தேன்.

தொடரும்

அன்றையிலிருந்து பட்டாபியுடன் ஒட்டிக்கொண்டேன் அவன் விட்டிற்கு போக ஆரம்பித்தேன் பட்டாபி ஒரு நாள் என்னை மகேந்திராவுக்கு அறிமுகம் செய்து வைத்தான் மெல்ல UAA ல் சேரவேண்டும் என்கிற என் விருப்பத்தை அவனிடம் சொல்லி மகேந்திராவிடம் சொல்ல வைத்து அவர்களுடன் சென்று THE GREAT YGP அவர்களை சந்தித்தேன்.



1 comment:

  1. கண்ணன் ஜி - முகநூலில் உங்க பெயருக்கு நண்பர்கள் கூறிய சில புத்தகங்கள் ஒலி வடிவத்திற்கு - பரிந்துரை செய்தது டாக் செய்துள்ளேன். பார்க்கவும்!

    ReplyDelete