Tuesday, September 16, 2014


நாடக அனுபவங்கள் பகுதி 8




நானும் வெங்கடராமனும் ஓஹோ எந்தன் பேபி நாடக அனுபவத்திற்கு பிறகு ரொம்பவே மகிழ்ச்சிய்டன் அடுத்து அடுத்து நாடகங்கள் பற்றி யோசிக்க ஆரம்பித்தோம் நாங்கள் இருவரும் சேர்ந்து பாரத்த இரண்டு ஆங்கிலப்படங்கள் எங்களை பெரிதும் மனம் கவர்ந்தது ஒன்று Irma la douze மற்றொன்று To Sir with Love
முதலில் Toi Sir with love படத்தை நாடகமாக்குவது என்று முடிவு செய்து அதைப்பற்றி பேச ஆரம்பித்தோம்.

ஏனென்றால் அப்போது HOSTELல் தங்கி படித்து வந்ததால் அதில் வரும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர் எல்லோருமே நாங்கள் நெருங்கிப் பழகினவர்கள் போலவே இருததுதான் காரணம் என் hostel லில் நடந்த பல சம்பவங்கள் இதில் இடம்பெற்றன

உதாரணத்திற்கு என் அறைக்கு அடுத்த அறையில் ஒரு தெலுங்கு மாணவன் இருந்தான் அவனுக்கு தமிழ் சுத்தமாக வராது ஏன் அசுத்தமாகக் கூட வராது அவனுக்கு நாங்கள் தமிழ் சொல்லிக்கொடுத்தோம்

எப்படி??

hostel வார்டன் rounds வரும் பொது வணக்கம் எப்படி தமிழில் சொல்ல வேண்டும் என்று அவனுக்கு முதல் பாடம் சொல்லிக்கொடுத்தோம்
“வாடா முட்டாள்” என்றால் வணக்கம் என்று அர்த்தம் என்று முதல் பாடம்
அடுத்து சௌக்கியமா என்று கேட்க
“மடையா எப்படி இருக்கே” என்று இரண்டாவது பாடம்

அடுத்து உள்ளே வாங்க என்று சொல்ல உள்ளே வாடா என்று முன்றாவது பாடத்தையும் சொல்லி மனப்பாடம் செய்ய வைத்தோம்

அவனும் மிகவும் சிரத்தையாக அதை மனப்பாடம் செய்து கொண்டு வார்டன் வந்தபோது இவற்றை பிரயோகித்து எல்லோரையும் சிரிக்க வைத்தது பெரிய விபத்து
இதை அப்படியே ஒரு காட்சியாக்கி இதை ஒரு சர்தார்ஜி மாணவனை வைத்து பேச வைக்கலாமென்று காட்சி எழுதினோம்

இது பின் நாளில் எதாவது ஒரு படத்தில் பயன்பட்டிருந்தால் அந்த நேரத்தில் அந்த இயக்குனரோ கதாசிரியரோ அதே கல்லூரியில் படித்துக் கொன்டிருக்க வேண்டுமே தவிர வேறு காரணமில்லை

அடுத்த காட்சியில் வார்டனுக்கும் மெஸ்ஸில் தகராறு செய்யும் ஒரு மாணவனுக்கும் இடையிலான ஒரு சம்பவம்

ஒரு முறை மாணவர்கள் மெஸ்ஸில் சாப்பாடு நன்றாக இல்லை எனறு strike பண்ணினார்கள் அவர்கள் எல்லோரையுமே வீட்டுக்கு அனுப்பிவிட்டு hostel மூடப்பட்டது
அபோது இருந்த எங்கள் கல்லுரி மாணவர்கள் வன்முறையெல்லாம் ஈடுபட மாட்டார்கள்

மாணவர்கள் அடுத்த வருடம் ADMISSIONக்கு வந்தபோது ஒவ்வொருவரையும் INTERVIEW வைத்தே HOSTELல் சேர்த்துகொண்டார்கள் ஒவ்வொருவரையும் வார்டன் பல கேள்விகள் கேட்டார் அதில் ஒரு மாணவனிடம் கேட்க்கப்பட்ட கேள்வி
வடையில் முடி இருந்த என்ன பண்ணுவே
துக்கி எறிவேன் சார்
என்னது!!!~ எதை?
முடிய.
YOU ARE ADMITTED

இது உண்மையில் நடந்த சம்பவம் இதுவும் ஒரு நாடக காட்சியாக அமைந்தது

இப்படி HOSTEL நடந்த பல சம்பவங்களை கொண்டு ஒரு நாடகத்தின் பல காட்சிகள் உருவாகின வெங்கடராமனின் நகைச்சுவை வசனங்களுடன்

இது இப்படி இருக்கட்டும் இந்த நாடக SCRIPT ற்கு பின்னால் வருவோம் இப்போது HOSTELல் நடந்த வேறு சில சம்பவங்களைப் பார்ப்போம்

முக்கியமாக நான் சினிமாவில் நடித்த கதை!!!!

அப்போது வீனஸ் PICTURES சேர்ந்த வேங்கடேஸ்வரனும் அவர் தம்பியும் எங்கள் கல்லூரியில் படித்து வந்தார்கள் ஒரு நாள் hostel மாணவர்களில் பலர் ஒரு சினிமா SHOOTING ற்கு தேவைபடுகிறார்கள் என்று HOSTEL ல் வந்து சொல்ல நாங்கள் பலரும் தயாரானோம் காலை 5 மணிக்கெல்லாம் BUS வந்து விட்டது

என்னைப் பற்றி சொல்ல வேண்டுமா?
சினிமாவில் நடிக்கப் போகிறோம் என்று நான் இரவு முழுவதும் தூங்க வில்லை

என் நடிப்பை பார்த்து அப்படியே ஸ்டுடியோவிலேயே வேறு படத்திற்கு BOOK ஆகி அங்கேயே இருந்து விடும்படி ஆகி விட்டால் என்ன செய்வது? படிப்பு என்னாவது அப்பாவிற்கு என்ன பதில் சொல்வது? T நகரில் எங்கே விடு வாங்கலாம்? எந்த பாங்கில் account ஓபன் பண்ணுவது?
ரசிகர் மன்றம் தேவையா இல்லையா?
போன்ற பல் கற்பனைகள்

வாகினி studio விற்குள் நுழைந்தோம்
நான் கலைத்தாயின் மடிமீது தவழ்ந்து விளையாட தயாராகிவிட்டேன்

மற்ற மாணவர்கள் எல்லோரும் எதோ ஜாலியாக PICNIC வந்தது போல இருக்க நான் மட்டும் கொஞ்ச சீரியஸ் ஆக வசனம் எவ்வளவு பக்கம் இருக்கும் என்ற சிந்தனையில் இருந்தேன்
பட்டணத்தில் பூதம் அந்த படம் அதில் பாஸ்கட் BALL மேட்ச் வரும் அதில் நாங்கள் மாணவர்கள் SPECTATORS

அதனாலென்ன கமெராவில் முகம் தெரிந்தால் ஏதாவது ஒரு இயக்குனர் பார்த்து என்னை கொத்திக்கொண்டு போய்விட மாட்டாரோ???

எல்லோரும் சென்று காலை உணவருந்திவிட்டு வந்தோம்
ஒரு தென்னை மரத்தடியில் மொட்டை தலையுடன் மனோகர் சார் சுருட்டு பிடித்துக் கொண்டிருந்தார் அவரிடம் கொஞ்சம் நேரம் பேசிவிட்டு திரும்பினால் ஒரு காரின் அருகே நாகேஷும் KR விஜயாவும் சீட்டு ஆடிக்கொண்டிருந்தார்கள்

எல்லாவற்றையும் சென்னைக்கு புதிதாக வந்தவன் வண்டலுர் ஜூவில் திரிவதுபோல பார்த்துக்கொண்டே நகர்ந்தோம்
எங்களை FLOOR என சொல்லப்படும் ஒரு படப்பிடிப்பு அரங்கத்துக்குள் அழைத்து சென்றார்கள்

அதற்குள் நுழைய ஒரு பெரிய கதவு இருந்த போதிலும் எல்லோரும் சிறைக்குள் நுழைவதுபோல ஒரு சிறிய கதவு வழியாக புகுந்து சென்றார்கள் உள்ளே போனால் “அட நம்ம COLLEGE BASKET BALL GROUND போலவே இருக்கே” என்று ஆச்சர்யப்பட்டுப்போனோம்

இரண்டு பக்கமும் கூடை மேலே இருக்க தரை சுத்தமாக இருந்தது இந்த விளையாடு மைதானத்திற்கு ஒரு பக்கம்தான் GALLERY இரண்டு பக்கமும் ஒரு பெரிய கம்பியில் இடுப்பில் அணியும் பெல்ட் போல எதையோ கடடி அதில் எடைகளை கட்டி மேலே மேலே துக்கி பார்த்துக்கொண்டிருந்தார்கள் சரி காமெராவை கட்டி துக்கபோகிரார்கள் என என்னுள் இருந்த camera கண் சொல்லியது

நாங்கள் எல்லோரும் சென்று GALLERY ல் அமர்ந்தோம்
ஒரு சிறு சல சலப்பு

ஜெய்ஷங்கர் சார் எங்களில் ஒருவர் போல ஹாய் என்று உரக்க கத்திக்கொண்டு வேகமாக உள்ளே வந்து எங்கள் எல்லோரையும் பார்த்து ஹாய் ஹாய் என்று கை ஆட்டினார்
என்ன ஒரு எளிமையான மனிதர் இவர் என எண்ணினோம்
அடுத்து நாகேஷ் வந்து ஜெய்ஷங்கரிடாம எதோ ஜோக்கடித்தர்
அடுத்து KR விஜயா வர ஜெய் ஷங்கரும் நாகேஷும் அவரிடம் எதோ ஜோக்கடித்தனர்

அடுத்து ஜவர் சீதாராமன் வந்து முன்வரிசையில் ரமாப்ரபாவுடன் அமர்ந்தார் அடுத்து மனோகர் சார் வந்தார்
டைரக்டர் வந்ததும் எங்கள் எல்லோரையும் பார்த்து நான் ACTION என்று சொன்னதும் எல்லோரும் எழுந்து நின்று சந்தோஷமாக கைதட்டி ஆரவாரம் செய்ய வேண்டுமென்றார் இதை பலமுறை எடுத்தார்கள்

இது மொத்தமாக எடுக்கப்பட்ட LONGSHOT ஆனதால் கூட்டத்தில் நான் எங்கிருக்கிறேன் என்று இன்று வரை பட்டினத்தில் பூதம் TV ல் போடும்போதேல்ல்லாம் தேடிக்கொண்டிருக்கிறேன்

இன்றுவரை கண்ணில் படவில்லை

பின்னர் ஜெய்ஷங்கரையும் நாகேஷையும் தொங்கிக்கொண்டிருந்த பெல்டில் கட்டி மேலே துக்கி பந்தை குடைக்குள் போட வைத்து பலமுறை எடுத்துகொண்டார்கள்
கருப்பு கம்பியை பிடித்து ஒவ்வொரு பக்கமும் ஆறு பேர் தூக்கினார்கள் இவர்கள் மேலே பறந்து போய் பந்தை போட்டார்கள்

என்னுடைய camera theory தப்பானதில் என் நண்பன் ஒருவன் என்னைப்பார்க்க நான் முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கொண்டேன்

இப்போது camera கோணம் மாறி எங்கள் பக்கம் மறுபடி திரும்பியது

நாகேஷ் ஜாவர் சீதாராமன் காலடியில் வந்து உட்கார்ந்து ஜிபும்பா விடம் பந்து எந்த பக்கம் விழவேண்டும் என்று சொல்லும் காட்சி

நான் ஜாவர் சார் பின்னால் உயரத்தில் அமர்ந்திருந்தேன் ஆஹா நாம் இந்த காட்சியில் உணர்ச்சியை கொட்டி முக பாவத்தை காட்டிவிடவேண்டும் என்று தீர்மானித்துக்கொண்டு தயாரானேன்

அப்போது உணவு இடைவேளை வந்தது எல்லோரும் சாப்பிட்டு விட்டு வந்தோம்

எங்களுக்காக பிரத்யேகமாக KR விஜயா நீச்சல் உடை அணிந்து நடித்த காட்சின் RUSHES போட்டு காட்டினார்கள்
கல்லுரி மாணவர்கள் PSYCHOLOGY தெரிந்தவர்கள் போலிருக்கிறது

பின்னர் இடைவேளைக்குப்பிறகு எல்லோரும் மறுமடியும் BASKET BALL மைதானத்தில் கூடினோம் யார் யார் எங்கே அமர வேண்டுமென்று அவர்கள் ஒன்றும் தீவிரமாக யோசிக்கவில்லை

நான் கிட்டத்தட்ட ஜாவர் சார் அவர்களின் பின்புறம் கொஞ்சம் தள்ளி இடம் பிடித்து அமர்ந்தேன் இந்தமுறை இன்னும் கொஞ்சம் உயரமான தட்டில் இடம் கிடைத்தது நாகேஷ் சார் ஜாவர் முன்னால் உட்கார்ந்து பேசுவதை முன்று நான்கு முறை ஒத்திகை பார்த்து கொண்டார்கள் இப்போது TAKE போகிறோம் என்று டைரக்டர் ராமன் சார் சொன்னவுடன் நான் நடிக்க தயாரானேன்

திடிரென தடதட வென சத்தம் நான் அந்த உயரத்திலிருந்து கிழே வந்திருந்தேன் என்னுடன் சிலரும் வந்திருந்தார்கள் GALLERY அப்படியே சரிந்து போய் கிழே இறங்கிவிட்டிருந்தது மற்றவர்கள் சமாளித்துக்கொண்டு இறங்கிவிட என்னால் மட்டும் முடியவில்லை

என் இரண்டு கால்களும் இரண்டு பலகைகளுக்கிடையே மாட்டிக்கொண்டு என்னால் கால்களை விடுவித்துக்கொள்ள முடியவில்லை ஒரே அல்லோல கல்லோலம் தான்
எப்படியோ பலகையை எடுத்துவிட்டுத் என்னையும் என் கால்களையும் விடுவித்தார்கள்

TV NEWS பாஷையில் சொல்லப்போனால் ஒரே பரபரபப்பு
ஒருத்தர் ஐஸ் பெட்டி எடுத்து வந்து என் காலில் வைத்தார்
ஒருத்தர் எதோ களிம்பு தடவ முயற்சி செய்தார்
ஒருவர் எலும்பு முறி வு ஏறபட்டிருக்குமோ என சோதனை செய்தார்
வலியைப் பொறுத்துக்கொண்டு மெல்ல எழுந்தேன்
நொண்டிக்கொண்டே நடக்க ஆரம்பித்தேன்
நல்ல வேளை FRACTURE எதுவும் இல்லை ஒரு புறம் பலகைகளை மிண்டும் அடுக்கி கட்டுவதற்கு ஆசாரிகள் ஓடி வந்தார்கள்

என் நண்பன் ராமமூர்த்தியின் தோள்களை பிடித்துக்கொண்டு மெல்ல நடந்து FLOOR க்கு வெளியே வந்து ஒரு மரத்தடியில் அமர்ந்து காலை நீவி விட்டுக்கொண்டேன் வலி கொஞ்சம் அதிகமாகத்தான் இருந்தது

உள்ளேயிருந்து START சவுண்ட் START CAMERA ACTION என்ற வார்த்தைகள் என் காதில் மெல்ல ஒலித்தன கால் வலியைவிட மன வலி இன்னும் கொஞ்கம் அதிகமாகத்தான் இருந்தது

மறு நாள் மீண்டும் எல்லோரும் போன BASKET BALL ஷூட்டிங்கிற்கு நான் மட்டும் போகவில்லை...............
என்னால் போக முடியவிlல்லை

No comments:

Post a Comment