Monday, October 6, 2014



Desikan Narayanan review on Parthiban Kanavu 


பார்த்திபன் கனவு ஒலிப் புத்தகத்தை இரண்டு வாரம் முன் காரில் கேட்டு முடித்தேன். பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் ஒலிப்புத்தகத்தை உருவாக்கியவருக்கு பார்த்திபன் கனவு பெரிய விஷயம் இல்லை.
ஒலிப் புத்தகம் என்றால் ஒருவர் புத்தகத்தை நமக்கு படித்து காண்பிப்பார். ஆனால் பாம்பே கண்ணன் செய்வது ஒலிப்புத்தகம் அல்ல, ஒலிச்சித்திரம். பலரின் உழைப்பு அதில் அடங்கியுள்ளது. எல்லா இடங்களிலும் நண்பர் பாம்பே கண்ணன் உழைப்பு தனியாக தெரிகிறது. அவருக்கு என் வாழ்த்துகள்.
சிவகாமியின் சபதம் ஒலிப்புத்தகத்தில் என்னை கவர்ந்தவர் மகேந்திரபல்லவர் SK ஜெயகுமார் இதில் சிவனடியாராக பலம் சேர்த்துள்ளார். அனுபவித்து பேசியுள்ளார். நரசிம்ம பல்லவராக இவரை பேசவிடாமல், நேதாஜியை தேர்வு செய்தது புத்திசாலித்தனம்.
அடுத்து இந்த புத்தகத்துக்கு பலம் சேர்ப்பவர் வள்ளியாக ஸ்ரீவித்யா பத்மநாபான் ( பொன்னியின் செல்வனில் பூங்குழலி இவர் தான் ). உச்சரிப்பு, மாடுலேஷன் எல்லாம் பிறவியில் வர வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டு. முக்கிய பார்த்திரமான குந்தவை பாத்திரத்தில் Ananya Mahadevan அனன்யா மகாதேவன் (ஆரம்பத்தில் கொஞ்சம் ஸ்டார்டிங் டிரபிள் இருந்தாலும்:-) ) அருமையாக செய்துள்ளார். பாராட்டுக்கள். அடுத்த ஒலிப்புத்தகத்தில் இவர் வேறு லெவலுக்கு போய்விடுவார் என்று நினைக்கிறேன்.
அருள்மொழியாக பேசியவரின் உச்சரிப்பும், பார்த்திபன் கனவு அட்டைப்படமும் இன்னும் நன்றாக இருந்திருக்கலாம் என்பது என் தாழ்மையான அபிப்பிராயம்.
200ரூ ஒரு மாய உலகிற்கு அழைத்துச் சென்ற பாம்பே கண்ணன் குழுவிற்கு பாராட்டுக்களும் நன்றிகளும். வெளிநாடுகளில் ( ஏன் சென்னையில் கூட ) தமிழ் படிக்க தெரியாத குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் இதை சிபாரிசு செய்கிறேன்.
பிகு: மற்றவர்களை பற்றி எழுதவில்லை என்பதால் அவர்கள் நன்றாக செய்யவில்லை என்று அர்த்தம் இல்லை. ஒலிப்புத்தகம் நன்றாக வந்ததற்கு காரணம் Team Work !.

No comments:

Post a Comment