Tuesday, October 14, 2014



பார்த்திபன் கனவு ஒலிப்புத்தக விழா இனிதே நடை பெற்றது எல்லோரும் விழாவைபற்றி எழுதி நெகிழ வைத்துவிட்டார்கள் குறிப்பாக அனன்யா RVS சார் JR சார் போன்றவர்கள்
மேடையில் எனக்கும் பேச சந்தர்பம் கிடைத்தது ஆனால் நேரமின்மை காரனமாக என்னால் பேச நினைத்ததெல்லாம் பேச முடியாமல் போயிற்று குறிப்பாக என் ரெகார்டிங் அனுபவங்கள் மற்றும் பங்குக் பெற்ற குரல் வித்தககர்களைப் பற்றி.....
எனக்கு கொடுக்க பட்ட தலைப்பு நன்றி நவிலல் மற்றும் ஒலிப்புத்தகம் அறிமுகம் எல்லாவற்றையும் அசுர வேகத்தில் செய்து விட்டு சரியாக 9 மணிக்கு முடித்துக்கொண்டேன்
இப்போது நேரம் கிடைக்க விலாவாரியாக கலைஞர்களைப்ப்றி பேசி நன்றி தெரிவிக்கலாமென்று எண்ணுகிறேன் வந்திருந்த கூட்டத்தை விட எனக்கு முகநூல் நண்பர்கள் அதிகம்
ஆகையால் இது சரியான முறையாக இருக்கும் என்று எனக்கு தோன்றுகிறது முதலில் குரல் தேடல்
6௦ க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பொன்னியின் செல்வன் ஒலிப்புத்தகத்தில் பங்கு பெற்றிருந்தாலும் அவர்களை இந்த முறை தவிர்த்து புதியவர்களை கொண்டுப் வரவேண்டும் என்று நினைத்தேன்
ஆனால் என்னால் அதை முழுமையாக செய்ய முடியாமற் போனது
சிலரை பயன்படுத்த வேண்டி இருந்தது
புதியவர்களை முக்கியமான பாத்திரங்களில் அறிமுகப்படுத்தினேன்
பின்னால் இவர்களையும் என் மற்ற ஒலிப்புத்தகங்களில் பயன்படுத்திகொள்ளலாம், மற்றும ஒரு VOICEBANK உருவாக்கலாம் என்ற எண்ணத்தில்தான்
இவர்களுக்கு இது முதல் முயற்சி
ஒலிப்புத்தகங்களில் பங்கு பெறுபவர்கள் குறிப்பாக கவனிக்க வேண்டுபவை சில
ஒன்று அவர்களின் உச்சிரிப்பு
நாடகமேடையில் உச்சரிப்பு கொஞ்சம் சரியாக இல்லை என்றால் கூட நடிப்பும் காட்சியும் அதை சமாளித்துவிடும் இங்கு அப்படி அல்ல உங்கள் முன்னால் இருக்கும் மைக் என்ற கருவி கம்ப்யூட்டர் போல மிகவும் SENSITIVE
அது உங்கள் ஒவ்வொரு எழுத்தின் உச்சரிப்பையும் காட்டிகொடுத்துவிடும்.
அடுத்தது உங்கள் கையில் உள்ள புத்தகம் கொஞ்சம் அலட்சியமாக இருந்தால்அது மைக் மேல் பட்டு ஓசை எழுப்பும்
அடுத்து உங்கள் நாக்கு
ஒவ்வொரு வார்த்தைக்கும் இடையில் அது ஏற்படுத்தும் சத்தம் உங்களுக்கு சாதரணமாக கேட்காது
ஆனால் மைக்குக்கு கேட்கும்
அது உங்கள் குரலை கேட்கும் பொது பல சந்தர்பங்களில் உங்கள் நிழல் போல வந்து உங்களை பாடாய் படுத்தும்
கொஞ்சம் தன்ணீர் குடித்து கொள்ளவேண்டும்
நாக்கு உலர்வதை தடுத்து கொள்ள வேண்டும் ஒவ்வொரு முறையும் வாயை மூடி திறப்பதை விட முடிந்தவரையில் திறந்த வாயாக உதடுகளை முடி திறக்காமல் அந்தந்த TAKE களை முடிப்பது நீங்கள் TAKE வாங்காமல் இருக்க உதவும்
அடுத்து ரெகார்டிங் போது அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தைகள் PAPER NOISE BLOW என்பவை கையில் இருக்கும் ஸ்க்ரிப்டை TAKEன் போது மைக்கில் கேட்கும்படியாக திருப்பக்கூடாது
இது சரித்திர நாடகங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியவை
அடுத்து இந்த BLOW இதற்கு எவ்வளவு பெரிய நடிகரும்ம் விதிவிலக்கல்ல யாரையும் பாரபட்சமில்லாமல் தாக்ககூடியது.
இதன் முக்கிய காரணகர்த்தா தமிழில் உள்ள ப என்ற எழுத்து மற்றும் சில
இப்படிப்பட்ட வார்த்தைகள் வரும் பொது MIKE லிருந்து சற்றே விலகி நடித்திர்களானால் இந்தத் தவறு ஏற்படாது இதற்கு கொஞ்சம் அனுபவம் முக்கியம்
ஒலிப்புத்தகத்டில் நடிக்கும் போது நீங்கள் வசனங்களி படிக்க வில்லை நடிக்கிரிர்கள் என்பதை தெளிவாக புரிந்து கொண்டு நடித்துக்கொண்டே உணர்சிபூர்வமாக படித்திர்களானால் நீங்கள் அந்த பாத்திரத்திற்குள் போவிர்கள் இல்லையென்றால்..... பாவம் நீங்கள்?!!
சமுக கதைகளுக்கும் சரித்திரகதைகளுக்கும் வசனத்தில் தான் வித்தியாசமே தவிர உணர்வுகளில் இல்லை
அடுத்து என்னிடம் நிறைய செய்தி வாசிப்பாளர்கள் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் வருகிறார்கள் அவர்களில் சிலருக்கு உச்சரிப்பு மிக நன்றாக உள்ளது ஆனால் படிக்கும் பொது அவர்கள் செய்தி வசிப்பிலிருந்தோ நிகழ்ச்சி தொகுப்பிலிருந்தோ வெளிவருவதில்லை
நரசிம்ம பல்லவரும வந்தியதேவனும் குந்தவையும் பழுவேட்டரையர்களும் செய்தி வாசித்தால் எப்படி இருக்கும்
அப்படி இருந்தது அவர்கள் MODULATION
இதை சரி செய்வதற்கு எனக்கு நேரமில்லை
அவர்கள் கொஞ்சம் HOMEWORK செய்து கொண்டு வந்தால் நிச்சயம் அவர்களை மாற்றி பயன்படுத்திக்கொள்வேன்
அடுத்து இந்த நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் இவர்கள் வேகத்துக்கும் இவர்கள் தமிழுக்கும் என்னால் ஈடு கொடுக்க முடியவில்லை
அதனால் பெரும்பாலனவர்களை என்னால் பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை இருந்தும் நல்ல குரல்களை அவர்களிடமும் தேடிக்கொண்டிருக்கிறேன்
அவர்கள் என்னிடம் கொஞ்சம் ள ல ழ ஸ ஷ போன்றவற்றின் உச்சரிப்பை ஒரு வகுப்பாக கற்றுக்கொண்டால் நலம்
இது என் அனுபவங்கள் மற்றும் கற்றுக்கொண்ட பாடம்
கொஞ்சம் வறட்சியாக இருந்தாலும் அன்ன பட்சிபோல தேவையானவர்ரை மட்டும் எடுத்துகொள்ளுங்கள்
இனி அடுத்த பதிவில் ஒவ்வொரு நடிக நடிகரைப்பற்றி அறிமுகப்படுத்தி நன்றி நவிலலாம் என எண்ணுகிறேன்
தொடரும்

No comments:

Post a Comment