Saturday, October 18, 2014





பார்த்திபன் கனவு ஒலிப்புத்தகம் வெளியிட்டு விழா பேச நினைத்ததும் பேச முடியாமல் போனதும் நன்றி நவிலல் 

பகுதி இரண்டு

இப்போது இதில் நடித்தவர்கள் ஒவ்வொருவரைப்பற்றியும் நான் அவசியம் கூறியே ஆகவேண்டும் யாரிலிருந்து ஆரம்பிப்பது
மேடையாக இருந்தால் வெளிச்சம் இருந்தால் ஒவ்வொருவராக பார்த்து பேசிவிடுவேன்
இங்கே என் முன்னால் இருப்பது ஒரு சிறிய திரை
முதலில் நான் ஆசிர்வாதம் வாங்குவதாக ஆரம்பித்தால் நலம்
எனக்கும் இவருக்கும் முதல் சந்திப்பே ஒரு வெளிவராத படத்தின் படப்பிடிப்பில் காரைக்காலில் அமைந்தது
அப்புறம் இபோதுதான் சந்திக்கின்றேன
பார்த்திபன் கனவு ஒலிப்புத்தகத்திற்கு நடிகர்கள் தவை என்றதும் முதல் விண்ணப்பமாக வந்தது இவரிடமிருந்துதான்
என்ன பாக்கியம்
எந்த சின்ன வேடமானாலும் பரவாயில்லை நான் அதில் இருக்க வேண்டுமென்றார்
எந்த திறமையான கலைஞன் இதை சொல்லுவான்?
அதுவும் நான் தயாரிப்பது ஒலிப்புத்தகம்தான் முகம் கூட காட்ட முடியாது
நாவலில் ஒரு வீரக்கிழவன் (வயது >7௦) பாத்திரம் வரும் அருமையான கதாப்பத்திரம் நிறைய வசனங்கள் அந்த வயதுக்கு ஆள் கண்டுபிடிப்பது மிகவும் கஷ்டம்
வயதும் தெரிய வேண்டும்
உச்சரிப்பு நடிப்பு இரண்டும் வேண்டும்
வீரமும் இருக்க வேண்டும்
நாவல் படித்தவர்களுக்கு அது புரியும்
தேடிக்கொண்டிருக்கும்போது கல்கி அவர்கள் இதோ இருக்கிறார் என்றார்
அவர்பாத்திரம் வருவதற்கு சற்று கால தாமதம் ஆனது
அவர் சுஜாதாவின் நாடகம் ஒன்றில் BUSY ஆக இருந்தார்
ஒரு நாள் STUDIO போட்டுவிட்டு சார் தேதி என்றேன்
பாண்டிச்சேரியில் நாடகம் என்றார்
அன்று மற்ற எல்லோரும் வந்துவிடுகிறார்கள் வேறு ARTISTE போடலாமே என்பதுதான் ஒரு தயாரிப்பாளரின் அடுத்த சிந்தனை
அதன் பிறகு 15 நாட்களுக்கு வேலை இல்லை
நல்ல வேளை நான் அந்த தவறை செய்ய வில்லை
காத்திருக்க முடிவு செய்தேன் ஒரு மாதம் சென்றது எல்லா வேலைகளையும் முடித்துகொண்டு
அவருடைய அத்தியாயம் ஒரு நாள் ஏற்பாடு செய்துகொண்டு அழைத்தேன்
காத்திருந்தது வீண்போகவில்லை
வந்தது பார்த்தோம்
மைக் முன்னால் அம்ர்த்தது பார்த்தோம்
நான்கு அத்த்தியயங்கள் முடிந்தது உணர்ந்தோம்
அவ்வளவுதான்
RETAKE இல்லை BLOW இல்லை MODULATION சொல்லித்தரவேண்டிய அவசியம் இல்லை
சார் HATS OFF TO YOU
என் ASSISTANT க்கும் எடிடருக்கும் அதிர்ச்சி
ஒரு வயதானவரைக் கொண்டு வந்து மைக் முன்னால் உட்காரவைத்து ரெகார்டிங் போகும் என்னை ஒரு மாதிரி பார்த்தவர்கள் ஆயிற்றே
வீரபத்திர ஆசாரியை கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்திய இவரிடம் நான் ஆசீர்வாதம் வாங்குவதை விட எப்படி நன்றி என்று ஒரு வார்த்தையுடன் முடித்துக்கொள்வது
அது நியாயமாகுமா??? ரெகார்டிங் முடிந்தவுடன் காசோலை நீட்டினேன் வாங்க மறுத்துவிட்டார்
கல்கியின் படைப்புக்கு என் சிறிய காணிக்கை என்றார் இன்னும் அந்த காசோலையை பத்திரமாக வைத்திருக்கிறேன்
ஒரு வேளை அதை கொடுத்திருந்தால் அவர் செய்த உதவியை ரொம்பவே கொச்சை படுத்டியிருப்பெனோ தெரியவில்லை
ஐயா பாரதி மணி அவர்களே உங்கள் பாதங்களில் நமஸ்கரித்து எழுகிறேன்
ஆசி கூறுங்கள்
நன்றி நன்றி நன்றி
அடுத்து இவர் ஒரு பண்பட்ட நாடக நடிகர்
அவரை கேளுங்கள் நாடக நடிகன் புன்பட்டவனாகத்தன் இருப்பான்
பண்பட்ட என்பதெல்லாம் வெத்து பேச்சு என்பார்
எனக்கும் இதில் உடன்பாடு உண்டு இருந்தாலும் இப்போதைல்க்கு பண்பட்ட என்றே வைத்துக்கொள்வோம்
இவர் முதன் முதலில் எனது சிவகாமியின் சபதம் ஒலிப்புத்தகத்தில் நடித்தார்
அப்போதே இவர் கறிகாய் வாங்க கடைக்குப்போனால் ஒரு கிலோ கத்திரிக்காய் என்றதும் இவரது குரலைகேட்டு ஒரு பெண் ஐயா மகேந்திரபல்லவரே என்றது நிஜம்
எனக்கே ஆச்சர்யம் ஒரு ஒலிப்புத்தகத்தின் குரலைக்கேட்டு கூட மக்கள் அடையாளம் கண்டு கொள்வார்களா
கண்டு கொண்டார்கள் அது நிஜம்
பொன்னியின் செல்வனில் இவர் சுந்தர சோழராக வந்த போது மன்னிக்கவும் வாழ்ந்தபோது இவர் குரலை எங்கே கேட்டாலும் சுந்தரசோழர் என அழைத்தவர்கள் உண்டு
அப்படிப்பட்ட குரலுக்கு சொந்தக்காரர்
என் இனிய நண்பர்
அவரை முதலில் வேண்டாமென்று ஒதுக்கிவைத்தவன்
பின்னர் அழைத்தேன் ஐயா நீர்தான் சிவனாடியார் என்றேன்
சிவனடியாரை கண் முன்னால் கொண்டுவந்து நிறுந்த்துங்கள் என்றேன்
செய்து காட்டிவிட்டார் என் இனிய நண்பர் SK ஜெயகுமார்
அவர்கள்
மிக்க நன்றி SKJ
எனது மூன்று ஒலிப்புத்தகங்களிலும் பங்கு கொண்ட ஒரே நடிகர் இவர் தான்

No comments:

Post a Comment