Friday, October 3, 2014

பார்த்திபன் கனவு ஒலிப்புத்தகம் பற்றி பாலாஜி நாகராஜன் அவர்கள் எழுதிய விமர்சனம் 





சென்ற வாரம் சனிக்கிழமை பார்த்திபன் கனவு ஒலிப் புத்தகம் வந்து சேர்ந்தது, அதற்கு சில நேரத்திற்கு முன்பு தான் ஆஸ்பத்திரியில் இருந்து திரும்பியிருந்தேன், புட் பாய்சன் மற்றும் குளிர் காய்ச்சல் ... இருந்தாலும் கொஞ்சம் கேட்கலாம்னு போட்டேன்.. மொத்தம் மூன்று பாகம், 78 ஒலிப் பேழைகள். கேட்க கேட்க கேட்டுக்கொண்டே இருக்க வைக்கும் சுவாரஸ்யம். முழுவதுமாக கேட்டு முடித்தது ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிக்கு. உடல் உபாதையையும் இந்த ஒலிப்பேழையின் சுவாரஸ்யமும் முழுவதுமாக கேட்டு முடித்துவிட்டேன்
எனக்கு பார்த்திபன் கனவில் மிகவும் பிடித்த கதாப்பாத்திரம் நரஸிமஹ பல்லவரும், பொன்னரும், வள்ளியும். இந்த ஒலிப்புத்தகத்தில் பங்குபெற்ற அனைவரது பங்களிப்பும் மிகவும் பாராட்டுக்குரியது. இதிலும் என்னுடைய ஆத்ம கதாபாத்திரங்களின் பங்களிப்பும் நன்றாக இருந்தது. இந்த ஒலிப்புத்தகம் மூலமாக மேலும் சில கதாப்பாத்திரம் எனக்கு பிடிக்க ஆரம்பித்தது, விக்கிரமசோழன் மற்றும் குந்தவி.
குந்தவிக்காக குரல் கொடுத்த Ananya Mahadevan குரலில் எப்போதும் ஓர் மழழை சாயல் இருப்பதாக எனக்குத் தோன்றும், இந்த கதாப்பாத்திரத்திற்கு அது அவருக்கு மிகவும் பொருத்தமாகவே இருந்தது. Bombay Kannan Kannan அவர்களுடைய திறமையான இயக்கம் மற்றும் குரல் தேர்வு, பார்த்திபன் கனவு படிப்பதை விட கேட்பதற்கு உங்கள் கற்பனைக் குதிரை இன்னமும் வேகமாக ஓட வைக்கும்.
மொத்ததில் மிகவும் அற்புதமான படைப்பு இன்னமும் மிக அற்புதமாக மெரூகட்டப்பட்டுள்ளது

No comments:

Post a Comment